எழுத்தறிவிலாதோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் கருணாநிதியின் பேட்டி எதையும் படிப்பதில்லை.


சமீபத்தில் கொலைஞர் கருணாநிதியின் பேட்டி ஒன்று படிக்கும் நிர்பந்ததிற்கு ஆளானேன், அதில் நெடுமாறன் கோஷ்டியினர் அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு பழியை உலகத்தமிழர் மீது சுமத்த திட்டமிடுவதாக குறிப்பிட்டிருந்தார்.. இவர் பேட்டியை எப்போது படித்தாலும் சகித்துக்கொள்ள நிறைய சிரமப்படத்தான் வேண்டும். அதுசரி எத்தனை முறை நரகலை மிதித்தாலும் அறுவெருப்பாகத்தானே இருக்கும். நெடுமாறன் கோஷ்டியினர் அதிகபட்சமாக உண்ணாவிரதத்தை தாண்டி எதுவும் செய்யமுடியாது என்பது ராஜபக்ஷே உட்பட எல்லோரும் அறிந்த விஷயம்.. இதுகூடவா கருணாவுக்கு தெரியாது ?? இதைக்கூட அறியாத அளவுக்கு அவர் முட்டாளும் அல்ல.. மாறாக இந்த வகையிலான பதில்கள் மூலம் அவர் நாம் எந்த அளவு முட்டாள்கள் என்பதை சோதித்து உறுதி செய்துகொள்கிறார் அவ்வளவே.

இந்த வகை பதில்கள் ஒன்றும் அவருக்கு புதியதல்ல.. அவர் முதுகில் முக்கால் இன்ச்சுக்கு ஒரு அறுவைசிகிச்சை செய்தபோதே ஒரு பேட்டி அளித்தார், ( அவர் கேட்டு அவரே பதில் சொன்னது) தான் ஒரு உயிருக்கு ஆபத்தான சிகிச்சை பெற்று திரும்பி இருப்பதாகவும் ஆனால் சிலர் இந்த ஆட்சி போனால் சரி என்று நினைப்பதாகவும்.. ஆட்சிமட்டுமல்ல தானே போனாலும் சரி என்று நினைப்பதாக ” உருக்கமாக ” குறிப்பிட்டார். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அழகிரியை கொல்ல மார்க்சிஸ்ட் கட்சியினர் முயற்சி செய்வார்களோ என அஞ்சுவதாக புலம்பினார். அதை அழகிரியே ரசிக்கவில்லை என்பது ஒருபுறம், அறிவாலயம் போனபோது அவர் வாங்கிக்கொடுத்த காப்பி டீ ஐ பட்டியல் போட்டு சொல்வாரோ என்று பயந்துபோயிருந்த காம்ரேட்டுகள் இந்த கருத்தால் சற்று ஆறுதல் அடைந்தார்கள். கருணாநிதியின் இந்த பேட்டிக்கு பிறகு மதுரை மக்கள் சிலர் ஒரு நப்பாசையில் கம்யூனிஸ்ட்களுக்கு வாக்களித்தார்களா என்கிற கோணமும் ஆராய்ச்சிக்குரியது.

உன்மையில் மக்கள் தலைவர்கள் மரணத்திற்க்கு அஞ்சமாட்டார்கள் ( கருணாநிதி பற்றி பேசும்போது இதென்ன மக்கள் தலைவர்கள் பற்றி பேச்சு..), ஆனால் சோனியாவின் காலைக்கழுவினால்த்தான் எந்த உரிமையையும் பெற முடியும் என பட்டவர்த்தனமாக பேசுபவர், தனக்குத்தானே பட்டம் தந்து, தன்னை சொறிந்துவிடும் ஆட்களை மேடையேறி சொறியச்சொல்லி ரசிக்கும் இவர் உயிருக்கு பயப்படுவது யதார்தமானது. இவர் அந்த குற்றச்சாட்டை ஒரு பலவீனமானவர் மீது சுமத்துவதுதான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. உண்மையில் ஈழ ஆதரவு இயக்கங்களில் ஈனஸ்வரத்தில் முனகும் அளவில் மட்டுமே தமிழக இந்திய அரசுகளை விமர்சிப்பவர் நெடுமாறன் ( புலிகள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதுதான் இவரின் அதிகபட்ச வாக்கியமே. ), ஆனாலும் நெடுமாறன் இவரின் இலக்காவதற்க்கு காரணம் அவருக்கு கிடைக்கும் ஊடக கவனம்தான்.

உயிருக்கு ஆபத்து என்கிற இவரின் புலம்பல் பேட்டிகளை இதுவரை மக்கள் சாலையில் கிடக்கும் செத்த எலியை கவனிக்கும் அளவுக்குக்கூட கவனிக்கவில்லை.. இந்த முறையும் அதுதான் நடக்கும் என்பதும் அவர் அறியாதது அல்ல.. பிறகு ஏன் வேலை மெனக்கெட்டு இவர் இழவு ஒப்பாரி வைக்கவேண்டும் ? காரணம் மிக எளிமையானது. அவர் அவருடைய கட்சிக்காரர்களுக்கு ஒரு சிக்னல் கொடுத்திருக்கிறார்., அவ்வளவே. சில நாட்களுக்கு முன்னால் மானமிகு வீரமணி ஒரு அறிக்கையில் சொன்னார் ” இலங்கை பிரச்சினையில் சிலர் தொடர்ந்து கருணாநிதியை குறை சொல்கிறார்கள். இதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது “, வீரமணி குரைப்பதற்க்கு பெரியார் விருது.. தொண்டர்களை உசுப்பிவிட “உயிருக்கு ஆபத்து ” எனும் சென்டிமென்ட். இனி கழக உடன்பிறப்புகள் வீரமணியை பின் தொடர்ந்து சவாடல் அறிக்கைகளை வெளியிட்டு கருணாநிதியின் பணிச்சுமையை குறைபார்கள்,( மற்றபடி கருணாநிதிக்கு அச்சுறுத்தல் என்பது மயிர்பிடி சண்டை போடும் அவரது குடும்பத்திலிருந்துத்தான் வரமுடியும் என்பதை அவர் தொண்டர்கள் அறிவார்கள்) ஆக கருணா வின் கணக்குகள் மிக நேர்த்தியானவை. இல்லாவிட்டால் இத்தனை பெரிய, பதவி வெறியும் பொறாமையும் கொண்ட குடும்பத்தை அவரால் சமாளிக்க முடியாது.

ஒரு ஈழ ஆதரவு கூட்டத்தில் என் அருகில் நின்ற நடுத்தர வயதுக்காரர் நாம் எல்லோரும்(தமிழகத்து தமிழர்கள்) நரகத்திற்க்குத்தான் போவோம் என்றார். அன்று அவருக்கு சொல்ல என்னிடம் பதில் இருந்திருக்கவில்லை.

இப்போது அவரைப்பார்த்தால் சொல்வேன் ” மேலுலகில் உங்களை நரகத்திற்க்கு போகுமாறு கட்டளையிடும்போது அவர்களிடம், கருணாநிதி முதல்வராய் இருந்தபோது நான் தமிழகத்தில்தான் வசித்தேன் என்று சொல்லுங்கள். அவர்கள் நம் கருணை மனுவை பரிவுடன் பரிசீலிப்பார்கள். ஏனெனில் ஒரு குற்றத்திற்காக நாம் இருமுறை தண்டிக்கபடுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்”

என் சமாதானத்தை நம்பாதவர்கள் முதல்வரின் இந்த கேள்வியை படியுங்கள் ( அவரிடம் அவரே கேட்டது ) ” இலங்கை பிரச்சினை குறித்து தாங்கள் எழுதிய கடிதத்தையொட்டி மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி வந்துள்ளதே ? “

Advertisements

One thought on “எழுத்தறிவிலாதோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் கருணாநிதியின் பேட்டி எதையும் படிப்பதில்லை.”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s