பிரிக்கால் ராய் ஜார்ஜ் படுகொலை – சட்டத்திற்கு உட்பட்டு நடந்த தாக்குதலுக்கான சட்டவிரோத எதிர்வினை.


கடந்த 20 ம் தேதி கோவை பெரியநாயக்கன்பாளையம் பிரிக்கால் தொழிற்சாலையில் தொழிலாளர்கள்  நடத்திய தாக்குதலில் அந்த நிறுவனத்தின் துணைத்தலைவர் ராய் ஜார்ஜ் கடுமையாக தாக்கப்பட்டு மறுநாள் உயிரிழந்தார். பிரிக்கால் நிறுவனம் கடந்த 2007 ஆம் ஆண்டு துவங்கி பல காரணங்களுக்காக செய்தித்தாள்களில் இடம் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறது. இருபதாம் தேதி சம்பவம் மூலம் வாரப்பத்திரிக்கைகளுக்கும் செய்திகளை வழங்கும் அளவுக்கு இன்நிறுவனம் வளர்ந்திருக்கிறது.

ஆலையில் நடக்கும் பிரச்சினைகளின் துவக்கம் 2007 ஆம் ஆண்டு இங்கு துவக்கப்பட்ட ஒரு தொழிற்சங்கம். ( சி.பி.ஐ (எம்.எல்) இன் தொழிற்சங்கமான “பிரிக்கால் டிரேட் யூனியன் அசோசியேஷன்” ). இந்த சங்கத்தை தீவிரவாத தொழிற்சங்கம் என்று கூறி அங்கீகரிக்க மறுத்தது நிர்வாகம். அந்த இயக்கத்தை சேர்ந்த ஆறு ஊழியர்களை உத்தராஞ்சல் நிறுவனத்திற்கு பணியிட மாற்றம் செய்தது. தீவிரவாத சங்கம் என்றதும் நிர்வாகத்திடம் ஏதோ ஏ.கே 47 கேட்டார்கள் என்று எண்ணாதீர்கள், அவர்கள் கோரிக்கை இதுதான் , தங்கள் சங்கத்தை அங்கீகரிக்கவேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.  இந்த கோரிக்கைக்குத்தான் ஆறு பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்கள். அதன் பிறகு நடந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்.

மற்ற சங்கங்களுடன் தாங்கள் ‘அனுசரனையுடன்’ இருப்பதாகவும், இது பயங்கரவாரத தொழிற்சங்கம் என்பதால் இதை எதிர்ப்பதாகவும் பிரிக்கால் அப்போது தெரிவித்தது. பயங்கரவாத சங்கம் என்று எப்படி ஆரம்பத்திலேயே முடிவு செய்தார்கள் என்று சொல்லவில்லை, ஒருவேளை யாரேனும் உன்னிகிருஷ்ண பணிக்கரிடமோ அல்லது பன்னிகிருஷ்ண பணிக்கரிடமோ ஆரூடம் கேட்டிருக்கக்கூடும். ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் வழக்கம் இந்த நிறுவனத்தில் இருந்திருந்தாலோ அல்லது மற்ற தொழிற்சங்கங்கள் இதற்காக போராடியிருந்தாலோ இப்படியொரு  ‘ தீவிரவாத தொழிற்சங்கத்தை ‘ பணியாளர்கள் தேர்ந்தெடுத்திருக்கவே மாட்டார்கள்.

சரி, இப்போதைய பிரச்சனைக்கு வரலாம். ‘சர்ச்சைக்குரிய சங்க’ உறுப்பினர்களை கோர்ட் உத்தரவுக்குப்பிறகு பணியில் சேர்க்கப்பட்டார்கள். அவர்கள் மூடுவதற்கென்றே திறக்கப்பட்ட குனியமுத்தூர் பிரிவில் பணியமர்த்தப்பட்டார்கள். அந்த பிரிவை இழுத்து மூடி 43 பணியாளர்களை ‘சட்டப்படி’ டிஸ்மிஸ் செய்தது பிரிக்கால். ஹிண்டு பத்திரிக்கைக்கு தந்த அறிக்கையில் உற்பத்தித்திறன் குறைவும் தினமலரில் ஒழுங்கீனமும் காரணங்களாக சொல்லப்பட்டது. அது தொடர்பாக பேசப்போனபோதுதான் ராய் ஜார்ஜுடனான வாக்குவாதம் முற்றி அவர் மீதான தாக்குதலில் முடிந்திருக்கிறது.

இந்த படுகொலையை வனிதாமோகனே( பிரிக்காலின் செயல் இயக்குனர் ) ஆச்சரியப்படுமளவுக்கு கவரேஜ் செய்திருக்கிறது ஜுனியர் விகடன்.இனி எல்லா கோவை தொழிலாளர்களும் உருட்டுக்கட்டையோடுதான் வேலைக்கு வரப்போகிறார்களோ என எண்ணும் அளவுக்கு ” இனி என்ன ஆகும் கோவையின் எதிர்காலம்??” என்று தலைப்பிலேயே கதறியிருக்கிறது, உள்ளடக்கத்தில் கோவை தொழிலதிபர்கள் தங்களது உயிருக்கோ உடமைக்கோ ஆபத்து வந்துவிடும் என்று அஞ்சவில்லை என்றும் மாறாக கோவையின் அடையாளமாக பல ஆண்டுகள் கட்டிக்காத்த அன்பு, பணிவு மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்றுதான் கவலைப்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.

ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தபோது கோவையின் அன்பும் மரியாதையும் ஜூ.வி யின் நினைவுக்கு வரவில்லை, தொழிலாளர்களை மிரட்டுவதற்காகவே ரவுடிகளை பிரிக்கால் பணியமர்த்தியதாக செய்தி வந்தபோது கோவையின் பணிவு ஜூ.வி யின் நினைவுக்கு வரவில்லை. ராய் ஜார்ஜ் மனைவியின் கண்ணீரை பதிப்பிக்கும் ஜூ.வி, தொழிலாளர்கள் கொத்துக்கொத்தாக பணிநீக்கம் செய்யப்பட்டபோது அவர்கள் குடும்பத்தைப்பற்றி கவலைப்பட்டிருக்குமா ? கொலைசெய்ததாக கைதுசெய்யப்பட்ட ஊழியர்களுக்கும் மனைவி குழந்தைகள் இருப்பார்கள், பணிநீக்கம் செய்யப்பட்டபோது தொழிலாளியின் மனைவியும் இனி குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வேன் என்று ராய் ஜார்ஜின் மனைவியைப்போலவே கதறியிருப்பார்.

உண்மையில் கோவையின் ஆபத்து , தான் விரும்பிய சங்கங்கள் மட்டுமே செயல்படலாம் என்கிற பிரிக்கால் போன்ற நிர்வாகங்களின் திமிரில்தான் இருக்கிறது. ராய் ஜார்ஜ் வேலைநீக்கம் எனும் பெயரில் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினார் ஊழியர்கள் தாக்குதல் என்ற பெயரில் அவரை வேலைநீக்கம் செய்தார்கள். வேலைநீக்கம் சட்டபூர்வமானது, தாக்குதல் சட்டவிரோதமானது. மற்றபடி இரண்டின் விளைவுகளும் ஒன்றுதான்.

சர்வ அலட்சியமாக 43 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து வீதிக்கு அனுப்பினால், அரசும் ஊடகங்களும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டினால் தொழிலாளர்கள் என்னதான் செய்யமுடியும் ? உண்ணாவிரதம் இருக்கலாம், (அதன் பலன் எந்த லட்சனத்தில் இருக்கும் என்று தெரிந்துகொள்ளமுடியாதவர்கள் ஈழ பிரச்சனைக்கு நடந்த உண்ணாவிரதங்களினால் ஏற்பட்ட விளைவுகளை கொஞ்சம் நினைவுபடுத்திக்கொள்ளலாம்) , அல்லது கோவையின் மற்றொரு வழக்கமான சாணிப்பவுடரை தின்று சாகலாம். தாக்குதல் நடத்திய தொழிலாளர்கள் இரண்டாவது வாய்ப்பை சற்று மாற்றி செயல்படுத்தினார்கள் அவ்வளவுதான். எல்லா சந்தர்பங்களிலும் உணர்ச்சிவயப்படுபவர்கள் தற்கொலைமட்டுமே செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது மடமை அல்லவா ?

பிரிக்கால் நிறுவனம் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டிருக்கிறது, முதலில் பிரிக்கால் தனது பணியாளர்களுக்கான குறைந்தபட்ச பணிப்பாதுகாப்பை வழங்கட்டும். பிறகு அவர்களே பிரிக்காலுக்கான பாதுகாப்பையும் பார்த்துக்கொள்வார்கள். முடிந்தால் அதற்காக ஜூவி ஏதாவது எழுதட்டும், மற்றபடி கோவையின் எதிர்காலத்தைப்பற்றி ஜூவி கவலைப்படவேண்டியதில்லை. அதை கோவைவாசிகள் பார்த்துக்கொள்வார்கள்  கோவையின் கடந்தகாலத்தை உருவாக்கியவர்கள் அவர்கள், எனவே எதிர்காலத்தை பார்த்துக்கொள்வது எப்படி என்பது அவர்களுக்கு தெரியும்.

Advertisements

“பிரிக்கால் ராய் ஜார்ஜ் படுகொலை – சட்டத்திற்கு உட்பட்டு நடந்த தாக்குதலுக்கான சட்டவிரோத எதிர்வினை.” இல் 4 கருத்துகள் உள்ளன

  1. ஓர் உயிரைப் பறிப்பது என்பது எந்த விதத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியது?. தனக்கு தீங்கு விளைவிப்பவரின் உயிரை எடுத்தல் சரிதான் என்றால் இந்த உலகத்தில் ஒருவரும் உயிருடன் இருக்க முடியாது.

  2. ராய் ஜார்ஜின் கொலையும் தொழிலாலர்களில் வேலைபறிப்பும் ஒரே மாதிரியான தவறுகள்தான். முதல் தவறு இரண்டாம் தவறுக்கு காரணமானது அவ்வளவுதான். ராய் ஜார்ஜ் கொலையைப்பற்றி பக்கம் பக்கமாய் எழுதும் பத்திரிக்கைகள் வேலை பறிபோய் தற்கொலை செய்துகொண்ட பிரிக்கால் தொழிலாளி பற்றி கண்டுகொள்ளவே இல்லை. நிர்வாகம் தொடங்கி ஊடகம் வரையான அனைத்து தரப்பும் தொழிலாளியின் வாழ்வின்மீது காட்டும் இந்த அலட்சியம்தான் ராயை கொன்றது. வேலை பறிக்கப்பட்ட பணியாளர்கள் லட்சம்பேர் உண்டு இந்தியாவில், கொல்லப்பட்டது ஒரு ராய் ஜார்ஜ் மட்டும்தான்.

  3. நான் இந்தப் பிரச்சனையை நாளிதழ்களில் தொடர்ந்து வராததால் எனக்கு என்ன, எப்படி நடந்தது போன்ற விஷயங்கள் தெரியாது. இருந்தாலும் கொல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு ஊழியர்கள் அவரை தாக்கியிருப்பார்களா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. தாக்கி காயப்படுத்தி பயமுறுத்தும் எண்ணத்துடன் செயல்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால் தாக்குதலில் காயத்தின் தீவிரம் அவர் உயிரை போக்கியிருக்கக் கூடும்.
    தெரியவில்லை. கொலை செய்ய வேண்டும் என்றே சென்றார்கள் என்பது உண்மையெனில் முதலாளி, தொழிலாளி முரண் அந்த அளவு குரூரமான முனைகளை நோக்கி பயணிக்கிறது என்று அர்த்தமாகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s