திருமாவளவன்-அடங்கமறு, அத்துமீறு…அப்படியே மறக்காமல் ஒரு அன்டிராயர் வாங்கு.


தமிழ்மக்கள் எளிதில் ஏமாறுபவர்கள் என உலகிற்கு உணர்த்த பிறந்த மஹா புருஷர்களில் இவர் பிரதானமானவர். பள்ளிப்பிராயத்திலிருந்தே செய்திகளைப் படிக்கும் பழக்கம் இருப்பததாலும் தேவையில்லாத செய்திகளை மட்டும் நினைவில் வைத்திருக்கும் வியாதி இருப்பதாலும் நான் நியாயமாக இவரை நம்பியிருக்கக்கூடாது. ஆனாலும் நான் தமிழன் என்பதால் நம்பித்தொலைத்தேன். போர்நிறுத்தம் செய் என ராஜபக்ஷ சொன்னாலும் உணர்வுபூர்வமாக நம்பிவிடும் இனத்தில் பிறந்தவன் இதுகூட செய்யாவிட்டால் எப்படி?
தனிக்குவளையும பொதுகிணற்றில் தண்ணீர் மறுப்பும் மென்மையாக வழியில் சொன்னால் தீராதாம், திமிறி எழுந்து திருப்பி அடித்தால்தான் தலித் விடுதலை கிடக்குமென முழங்குகிறார் இந்த சிங்கிள் சிறுத்தை ( அட பிரம்மச்சாரிங்குறத சொன்னேனுங்க ). கேட்கும்போதே உங்கள் மேனி சிலிர்க்கவில்லை? அம்பேத்கர் ஒரு ஐம்பது வருஷம் கழித்து இறந்திருக்கலாமே என்றுகூட பலருக்கு தோண்றியிருக்கும். ஆனால் இவர் தொண்டர்கள் திமிறி எழுந்தது திருமாவின் உண்ணாவிரதத்தின்போது மட்டும்தான். தாமிரபரணி ஆற்றில் காவல்துறையால் அடித்துக்கொல்லப்பட்டவர்கள் என்ன ஐயரா அல்லது அந்த வழக்கில் நீதிகிடைத்துவிட்டதா, அதுமாதிரி விஷயங்களில் உங்கள் சத்தமே கேட்பதில்லையே என்று நீங்கள் கேட்கக்கூடாது. ஆளும்வர்கத்திற்கு அடங்கிப்போவது என்பது ஒரு தந்திரோபாய பின்நகர்வு. போராளி வேஷத்தில் போஸ்டரில் சிரிப்பவருக்கு இந்த போர்தந்திரம்கூட தெரியாவிட்டால் எப்படி?
மூப்பனாரின் கையைப்பிடித்து அரசியலுக்கு வந்தவர் இவர். ஜெயா மற்றும் கருணா விடம் மாறி மாறி கூட்டணி வைத்தவர், ஈழக்கொள்கையில் மட்டும் மாறாத கொள்கையை கொண்டிருப்பார் என நம்பியது நம் தவறு அல்லவா ? தனிக்குவளையை ஒழிக்க இவர்களை விட சிறிய இயக்கமான பெரியார் தி.க அளவுக்குக்கூட வி.சி போராடவில்லை என்பதுதான் நிஜம். மார்க்சிஸ்டுகள்கூட தீண்டாமைக்கெதிராக கொஞ்சம் போராடுகிறார்கள் (அதனால கேரளாவுக்கு எந்த பாதிப்பும் வராது பாருங்க அதான்) ஆனால் இவரது அடிப்படைக் கொள்கையான தலித் மக்கள் உரிமைக்கென இவர் செய்த அல்லது செய்துகொண்டிருக்கும் பங்களிப்பு என்ன என நாம் யோசித்துப்பார்க்கவில்லை. ஈழம் என முழங்கியவுடன் எதையும் சிந்திக்காமல் ஆஹா ஒரு தலைவன் சிக்கிட்டான் என ஆதரவை அள்ளி வழங்கினோம். அவரோ ஒரு தெளிவான கொள்கையை வைத்திருந்தார், கனடா, ஐரோப்பா பயணத்திற்கு ஈழ ஆதரவு.. பாராளுமன்ற பயணத்திற்கு சோனியா ஆதரவு. அவரது உண்மையான கொள்கை விளக்கம்தான் “யார் ஆட்சியில் இருந்தாலும் ஈழப்படுகொலையை தடுத்திருக்க முடியாது” எனும் வாக்கியம் ( காங்கிரஸ் ஆதரவு குறித்த கேள்விக்கு அவரது பதில் ஒன்று இவ்வாறு இருந்தது ). இதே வாசகத்தை வேறுமாதிரி மத்திய அரசு சொன்னது “நாம் ஆயுதம் தராவிட்டால் சீனா தந்துவிடும்”.
ஏன் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தீர்கள் என கேள்வி எழுப்பியபோது அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் “தோல்வியடைந்தாலும் சரி, ஈழ ஆதரவு சக்திகள் எல்லோரும் ஒரணியில் நின்று தேர்தலை சந்திக்கலாம் என மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள் உடன்படவில்லை. எனவே நான் திமுக கூட்டணியில் நீடிக்கவேண்டியதாகிவிட்டது”. அதாவது எல்லோரும் சேர்ந்து தோற்கலாம் ஆனால் நான் மட்டும் ஏன் தோற்கவேண்டும் என்று நேரடியாகவே நம்மை பார்த்து கேள்வி எழுப்பினார். அப்படியும் சில அப்பாவி தமிழர்கள் அவர் சோனியாவிடம் இருந்தாலும் தன் போர்குரலை எழுப்புவார் என சோனியா கந்தியின் சென்னை பொதுக்கூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்தனர். அவரோ தங்கபாலுவே கூச்சப்படுமளவு அன்னை சோனியா அன்னை சோனியா என வார்த்தைகளாலேயே காலில் விழுந்தார். நேரடியாக காலில் விழுந்தால் பாதுகாப்பு படையினர் இடையூறு செய்யலாம் இல்லையா ?
கொலைகாரனிடம் என்னை விட்டுவிடு என பலவீனமானவர்கள் கெஞ்சலாம். வீரர்கள் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தாலும் போராடிச் சாவார்கள். இந்த ஃபிளக்ஸ் பேனர் போராளியோ கொலைகாரர்களிடமே காப்பாற்று என கெஞ்சினார். புரட்சி என்னவோ புது வடிவத்தில்தான் இருந்தது. ஆனால் சர்வாதிகாரம்தான் தன் வடிவத்தை மாற்றிக்கொள்ளாமல் முசோலினி காலத்து பழைய மாடலிலேயே இருந்தது, அது ஒன்றும் திருமாவின் தவறு இல்லையே,
நாம் ஒரு உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உள்ளூரில் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் தில்லுமுல்லு செய்பவரை வேட்பாளராக்கும் ஒரு கட்சித்தலைவர் உலகத்தமிழனுக்கு சேவை செய்பவராக இருக்கமுடியாது. இயக்க வளர்ச்சிக்கு தலித்துக்கள் பிரச்சினையை விட்டுக்கொடுப்பவர் ஈழத்தமிழர் விசயத்தில் உறுதியான கொள்கை உடையவராக இருக்கமுடியாது. சுயநலம், விளம்பர மோகம் இரண்டும் ஒரு தலைவனை அசிங்கமான சமரசவாதியாகவே வைத்திருக்கும்.
இந்தப்பதிவு இந்தியாவின் பாராளுமன்றத்தேர்தலின்போதோ அல்லது ஈழப்போரின் முடிவிலோ எழுதப்பட்டிருந்தால் இந்தமட்டோடு பூர்த்தியாகியிருக்கும். திருமாவின் இலங்கைப்பயணம் இன்னும் இரண்டு பத்தி எழுது என்கிறது.
எல்லா மட்டத்திலும் அம்பலப்பட்டபோதும் இங்கிருந்தவரை அவரிடம் ஒரு கிழிந்த டவுசராவது இருந்தது. நம்ம கூட சேர்ந்ததுக்கு அப்புறம் இப்படியெல்லாம் இருக்கப்படாதே என்று கருணாநிதி கவலைப்பட்டாரோ என்னவோ, அவருக்கும் இலங்கைக்கு  ஒரு  டிக்கெட் போடச்சொன்னார். ராஜபக்ஷே மிச்சமிருந்த டவுசரையும் உருவிக்கொண்டு அனுப்பிவிட்டான்.
பிரபாகரனேடு இல்லாததால் இப்போது நீ உயிரோடு இருக்கிறாய் என்று ராஜபக்ஷே சொன்னானாம், இவரும் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாராம். தமிழன் மாதிரி வேஷம் போட்டவருக்கே இந்தப்பாடு என்றால்.. அங்குள்ள நிஜமான தமிழர்களின் கதி எப்படியிருக்கும் என நாமே யூகித்துக்கொள்வதற்குத்தான் திருமா இந்த பயணத்தை ஒத்துக்கொண்டாரோ ?
தமிழ்மக்கள் எளிதில் ஏமாறுபவர்கள் என உலகிற்கு உணர்த்த பிறந்த மஹா புருஷர்களில் இவர் பிரதானமானவர். பள்ளிப்பிராயத்திலிருந்தே செய்திகளைப் படிக்கும் பழக்கம் இருப்பததாலும் தேவையில்லாத செய்திகளை மட்டும் நினைவில் வைத்திருக்கும் வியாதி இருப்பதாலும் நான் நியாயமாக இவரை நம்பியிருக்கக்கூடாது. ஆனாலும் நான் தமிழன் என்பதால் நம்பித்தொலைத்தேன். போர்நிறுத்தம் செய் என ராஜபக்ஷ சொன்னாலும் உணர்வுபூர்வமாக நம்பிவிடும் இனத்தில் பிறந்தவன் இதுகூட செய்யாவிட்டால் எப்படி?
தனிக்குவளையும பொதுகிணற்றில் தண்ணீர் மறுப்பும் மென்மையாக வழியில் சொன்னால் தீராதாம், திமிறி எழுந்து திருப்பி அடித்தால்தான் தலித் விடுதலை கிடக்குமென முழங்குகிறார் இந்த சிங்கிள் சிறுத்தை ( அட பிரம்மச்சாரிங்குறத சொன்னேனுங்க ). கேட்கும்போதே உங்கள் மேனி சிலிர்க்கவில்லை? அம்பேத்கர் ஒரு ஐம்பது வருஷம் கழித்து இறந்திருக்கலாமே என்றுகூட பலருக்கு தோண்றியிருக்கும். ஆனால் இவர் தொண்டர்கள் திமிறி எழுந்தது திருமாவின் உண்ணாவிரதத்தின்போது மட்டும்தான். தாமிரபரணி ஆற்றில் காவல்துறையால் அடித்துக்கொல்லப்பட்டவர்கள் என்ன ஐயரா அல்லது அந்த வழக்கில் நீதி கிடைத்துவிட்டதா, அதுமாதிரி விஷயங்களில் உங்கள் சத்தமே கேட்பதில்லையே என்று நீங்கள் கேட்கக்கூடாது. ஆளும்வர்கத்திற்கு அடங்கிப்போவது என்பது ஒரு தந்திரோபாய பின்நகர்வு. போராளி வேஷத்தில் போஸ்டரில் சிரிப்பவருக்கு இந்த போர்தந்திரம்கூட தெரியாவிட்டால் எப்படி?
மூப்பனாரின் கையைப்பிடித்து அரசியலுக்கு வந்தவர், ஜெயா மற்றும் கருணா விடம் மாறி மாறி கூட்டணி வைத்தவர், ஈழக்கொள்கையில் மட்டும் மாறாத கொள்கையை கொண்டிருப்பார் என நம்பியது நம் தவறு அல்லவா ? தனிக்குவளையை ஒழிக்க இவர்களை விட சிறிய இயக்கமான பெரியார் தி.க அளவுக்குக்கூட வி.சி போராடவில்லை என்பதுதான் நிஜம். மார்க்சிஸ்டுகள்கூட தீண்டாமைக்கெதிராக கொஞ்சம் போராடுகிறார்கள் (அதனால கேரளாவுக்கு எந்த பாதிப்பும் வராது பாருங்க அதான்)அல்லது அப்படி செய்தி வரும்படியாவது பார்த்துக்கொள்கிறார்கள்.
இவரது அடிப்படைக் கொள்கையான தலித் மக்கள் உரிமைக்கென இவர் செய்த அல்லது செய்துகொண்டிருக்கும் பங்களிப்பு என்ன என நாம் யோசித்துப்பார்க்கவில்லை. ஈழம் என முழங்கியவுடன் எதையும் சிந்திக்காமல் ஆஹா ஒரு தலைவன் சிக்கிட்டான் என ஆதரவை அள்ளி வழங்கினோம். அவரோ ஒரு தெளிவான கொள்கையை வைத்திருந்தார், கனடா, ஐரோப்பா பயணத்திற்கு ஈழ ஆதரவு.. பாராளுமன்ற பயணத்திற்கு சோனியா ஆதரவு. அவரது உண்மையான கொள்கை விளக்கம்தான் “யார் ஆட்சியில் இருந்தாலும் ஈழப்படுகொலையை தடுத்திருக்க முடியாது” எனும் வாக்கியம் ( காங்கிரஸ் ஆதரவு குறித்த கேள்விக்கு அவரது பதில் ஒன்று இவ்வாறு இருந்தது ). இதே வாசகத்தை வேறுமாதிரி மத்திய அரசு சொன்னது “நாம் ஆயுதம் தராவிட்டால் சீனா தந்துவிடும்”.
ஏன் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தீர்கள் என கேள்வி எழுப்பியபோது அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் “தோல்வியடைந்தாலும் சரி, ஈழ ஆதரவு சக்திகள் எல்லோரும் ஒரணியில் நின்று தேர்தலை சந்திக்கலாம் என மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள் உடன்படவில்லை. எனவே நான் திமுக கூட்டணியில் நீடிக்கவேண்டியதாகிவிட்டது”. அதாவது எல்லோரும் சேர்ந்து தோற்கலாம் ஆனால் நான் மட்டும் ஏன் தோற்கவேண்டும் என்று நேரடியாகவே நம்மை பார்த்து கேள்வி எழுப்பினார். அப்படியும் சில அப்பாவி தமிழர்கள் அவர் சோனியாவிடம் இருந்தாலும் தன் போர்குரலை எழுப்புவார் என சோனியா கந்தியின் சென்னை பொதுக்கூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்தனர். அவரோ தங்கபாலுவே கூச்சப்படுமளவு அன்னை சோனியா அன்னை சோனியா என வார்த்தைகளாலேயே காலில் விழுந்தார். நேரடியாக காலில் விழுந்தால் பாதுகாப்பு படையினர் இடையூறு செய்யலாம் இல்லையா ?
கொலைகாரனிடம் என்னை விட்டுவிடு என பலவீனமானவர்கள் கெஞ்சலாம். வீரர்கள் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தாலும் போராடிச் சாகலாம். இந்த ஃபிளக்ஸ் பேனர் போராளியோ கொலைகாரர்களிடமே காப்பாற்று என கெஞ்சினார். புரட்சி என்னவோ புது வடிவத்தில்தான் இருந்தது. ஆனால் சர்வாதிகாரம்தான் தன் வடிவத்தை மாற்றிக்கொள்ளாமல் முசோலினி காலத்து பழைய மாடலிலேயே இருந்தது, அது ஒன்றும் திருமாவின் தவறு இல்லையே,
நாம் ஒரு உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உள்ளூரில் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் தில்லுமுல்லு செய்பவரை வேட்பாளராக்கும் ஒரு கட்சித்தலைவர் உலகத்தமிழனுக்கு சேவை செய்பவராக இருக்கமுடியாது. சுயநலம், விளம்பர மோகம் இரண்டும் ஒரு தலைவனை அசிங்கமான சமரசவாதியாகவே வைத்திருக்கும்.
இந்தப்பதிவு இந்தியாவின் பாராளுமன்றத்தேர்தலின்போதோ அல்லது ஈழப்போரின் முடிவிலோ எழுதப்பட்டிருந்தால் இந்தமட்டோடு பூர்த்தியாகியிருக்கும். திருமாவின் இலங்கைப்பயணம் இன்னும் இரண்டு பத்தி எழுது என்கிறது.
எல்லா மட்டத்திலும் அம்பலப்பட்டபோதும் இங்கிருந்தவரை அவரிடம் ஒரு கிழிந்த டவுசராவது இருந்தது. நம்ம கூட சேர்ந்ததுக்கு அப்புறம் இப்படியெல்லாம் இருக்கப்படாதே என்று கருணாநிதி கவலைப்பட்டாரோ என்னவோ, அவருக்கும் இலங்கைக்கு  ஒரு  டிக்கெட் போடச்சொன்னார். திருமாவிடம் மிச்சமிருந்த டவுசரையும் உருவிக்கொண்டு அனுப்பிவிட்டான் ராஜபக்ஷே. கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்தியதை இதைவிட நாகரீகமாக வாக்கியமாக்க முடியாது என நினைக்கிறேன்.
பிரபாகரனோடு இல்லாததால் இப்போது நீ உயிரோடு இருக்கிறாய் என்று ராஜபக்ஷே சொன்னானாம் ( யார் கண்டது இதை சொன்னதற்காகவே மகிந்தாவுக்கு ஒரு ஊக்கத்தொகை கொடுத்திருப்பார் சோனியா) , இவரும் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாராம். தமிழன் மாதிரி வேஷம் போட்டவருக்கே இந்தப்பாடு என்றால்.. அங்குள்ள நிஜமான தமிழர்களின் கதி எப்படியிருக்கும் என நாமே யூகித்துக்கொள்வதற்குத்தான் திருமா இந்த பயணத்தை ஒத்துக்கொண்டாரோ ?
Advertisements

“திருமாவளவன்-அடங்கமறு, அத்துமீறு…அப்படியே மறக்காமல் ஒரு அன்டிராயர் வாங்கு.” இல் 8 கருத்துகள் உள்ளன

 1. rajapakshe kettatharkku, pathilaaka, “appadi iranthan ikavum santhosham kondiruppen enru solliirukkalam.”arasiyalvaathiyaka irunthum pesa theriyamal seruppadi vanki vanthu athai comedy enru veru vetkam illamal koorukiraar.

 2. தமிழின வரலாற்றில் எத்தனையோ துரோகிகள் இடம்பெற்றிருக்கிறார்கள். அத்தனை துரோகிகளையும் சேர்த்து செய்த உருவம்தான் “கருணாநிதி”. அவனை அண்டிப்பிழைப்பவர்கள் வேறு எப்படி நடந்துகொள்வர்கள்.

  திரு “மா”-வை நம்பி ஏமாந்த தமிழன்

 3. நன்றாகச் சொன்னீர்கள் !
  நானும் எழுதினேன் – இதைப்பற்றி !
  ஆனால் இந்த அளவிற்கு உரைக்கும்படி எழுத வரவில்லை !

  இதன் மூலம் இந்த போலி வேடதாரிகளைப்பற்றி ஒரு பத்து பேராவது
  புரிந்து கொண்டால் போதும்.

  உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள் !

  அன்புடன் – காவிரிமைந்தன்

  http://www.vimarisanam.wordpress.com

 4. thiruma ,jegath gaspar have similarities.thiruma uses the dalits issus and jegath gaspar uses his religion (reverend) as a plank to further their political brokering.They could have stopped with tamilnadu politics for their profiteering and not used the poor sril lankan tamils issue to bolster their careers.It is unfortunate that both these characters for whom i had high regards are highly oppurtunistic and immoral.They are both immoral people and thiruma is after actresses and jegath is after young boys.these rascals are a shame to the dalits and christian community respectively.thiruma claims himself as tamilnadu prabakaran and becomes an MP thru sonia .jegath proclaims himself as a messiah for the sri lankan tamils but profits from deals with ruling party (opinion polls), govt sponsored tamil maiyam programs(he has made huge money in the annual chennai culturals jointly hosted by the govt and his tamil maiyam.jegath had cheated ILLAYARAJA of crores of money in his symphony programme. he is a sri lankan secret agent who often is in contact with hindu ram. this bastard calls himself a reverend.

 5. ஈழ அங்கீகார மாநாடு நடத்திய போதும், முத்துக்குமாரின் பிணம் எரிந்துகொண்டிருந்து சுடுகாட்டில் நின்று பேசிய உணர்ச்சிகர பேச்சின் போதும் நான் திருமா தமிழகத்திற்கு கிடைக்கப்போகும் புதிய தலைவன் என்று நம்பி விட்டேன்.
  அவருடைய தனிப்பட்ட வாழ்வில் அவர் எப்படி இருக்கிறார் என்பது இரண்டாம் பட்சம் தான். ஆனால் கொள்கையில்… தனது வாழ்வில் தமிழர்களின் ஒரு நல்ல தலைவனாய் வளரும் வாய்ப்பு அவருக்கு ஈழப் போரின் போது கிடைத்தது. அதை நழுவ விட்டுவிட்டார் திருமா..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s