ஈழ அகதிகளுக்கு 12 கோடி ஒதுக்கீடு- ஓய்வறியா துரோகத்தின் அடுத்த பரிமாணம்


மரம் ஓய்வை நாடினாலும் காற்று விடுவதில்லை என்றார் மாவோ. தமிழர்கள் எத்தனை அமைதியாக இருந்தாலும் தன் வால் வேலையை கருணாநிதி விடமாட்டார் என்பது மீண்டும் ஊர்ஜிதமாகியிருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழ அகதிகளின் துயரத்தைப்பற்றி எதுவுமே தெரியாமல் இருந்துவிட்டார் போலிருக்கிறது கருணாநிதி. அவர் கண்ணை திறப்பதற்காக ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது ஒரு ஆங்கில வார ஏட்டின் தமிழ் பதிப்பு. வாழ்த்துக்கூட்டமோ பிரிவ்யூ காட்சியோ இல்லாத ஒரு நல்ல நாளில்  அவசரக்கூட்டமொன்றை நடத்தியிருக்கிறார் கலைஞர்.

கருணாநிதிக்கான வாழ்த்துப்பா ஒன்றுடன் இணைக்கப்பட்ட அறிக்கை ஒன்று சாத்தூர் ராமச்சந்திரனால் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் தமிழக அரசால் பனிரெண்டு கோடி பணம் அகதிகள் நலனுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய குழு  பத்து நாட்களுக்குள்  அகதிகள் முகாம்களின் நிலைமை பற்றி அறிக்கை தர பணிக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வறிக்கை  கூறுகிறது. என்னதான் நடக்கிறது இங்கு ? ஈழ அகதிகளின் நிலையைப் பற்றி இப்போதுதான் செய்தி வருகிறதா ? இரண்டு ஆண்டுகளுக்கு முன்புகூட ஒரு அகதிக்குடும்பம் தற்கொலை செய்துகொண்டது, காரணம் வாழ்கைக்கான குறைந்தபட்ச தேவைகள்கூட அவர்களுக்கு கிடைக்காததுதான். கடைசி கடிதத்திலும் அவர்கள் நம்மை குறைகூறவில்லை, தங்கள் தலைவிதியை நொந்துகொண்டு செத்துப்போனார்கள்.

தினசரிகள் அத்தனை தூரம்  அகதிகள் பற்றி கவலைப்படாவிட்டாலும் வார இதழ்களிலும் வாரமிருமுறை வரும் இதழ்களிலும் இது பற்றி செய்திகள் அடிக்கடி வந்ததாக ஞாபகம். சென்ற வாரம் ஜூனியர் விகடனில்கூட இது தொடர்பாக செய்தி வந்தது. அதெல்லாம் இவருடைய பார்வைக்கு எட்டவில்லை, எப்படியோ கருணாவின் கண்ணை திறக்க ஆங்கில இதழின் தமிழ்ப்பதிப்பால் முடிந்திருக்கிறது. உடனடியாக ஒரு செண்டிமெண்ட் அறிக்கையை வெளியிட்டு அவசரக்கூட்டத்தை அறிவித்தார் அவர்.

எம்ஜிஆரைவிட எஸ்.வி.ரங்காராவ் அதிக சம்பளம் வாங்கியதாக நீங்கள் கேள்விப்பட்டது உண்டா??  ஆனால் தமிழக அரசியலில் வெறும் செண்டிமெண்ட் பேசியே காலத்தை ஓட்டும் கருணாநிதிக்குத்தான் பெரும் வருமானம் கொட்டுகிறது. அது கிடக்கட்டும், இவர் ஒதுக்கிய பனிரெண்டு கோடிக்கு வரலாம். தமிழ் நாட்டில் வசிக்கும் ஒரு லட்சம் ஈழத்தமிழர்களுக்கு அந்த 12 கோடியைப் பிரித்தால் ஆயிரத்து இருநூறு ரூபாய் கிடைக்கும். இதை வைத்துத்தான் அவர்கள் துயரை துடைக்கப்போகிறார்களாம். திமுகவின் முன்னாள் ஈரோடு மாவட்ட செயலாளர் N.K.K.P.ராஜாவுடைய சின்ன வீட்டின் சொத்துமதிப்பு இதைவிட பலமடங்கு அதிகம்.

எல்லா சிக்கல்களையும் பணத்தோடு தொடர்புபடுத்தியே பேசுவது கலைஞரின் வழக்கம். உயர் நீதிமன்றத்தில் காவல்துறை நடத்திய வெறியாட்டத்திற்கு பிறகு வழக்கறிஞர்களின் தொடர் போராட்டங்கள் நடந்தது. போராட்டத்தின்போது வெளியிட்ட அறிக்கையில் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட சேதத்திற்கான தொகையை வழங்க அரசு தயாராக இருந்தும் போராட்டம் நடத்துவது நியாயமா என கேள்வியை எழுப்பினார், தன்னை கைது செய்தபோது கையைப்பிடித்து இழுத்ததற்காக  ஊரையே ரெண்டாக்கிய அதே கருணாநிதிதான் இதையும் சொன்னார். தமிழகமெங்கும் இலங்கை இனப்படுகொலைகளுக்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது அவரை துரோகி என பலரும் குறிப்பிட்டார்கள். உடனே ஒரு அறிக்கை வெளியிட்டார் அதில் இலங்கை தமிழர்களுக்காக ஐந்நூறு கோடி ஒதுக்கியிருப்பதாக தெரிவித்தார்.  அவரைப்பொருத்தவரை சூடு சொரணை, உரிமை மற்றும் உயிர் உட்பட அத்தனைக்கும் மாற்று பணம்தான். ஈழத்தமிழ் அகதிகளின் மற்ற பிரச்சனைகள் மேலும் அம்பலத்திற்கு வராமல் தடுக்க மேற்கொள்ளப்படும் ஒரு உத்திதான் இந்த 12 கோடி.

தமிழக முகாம்களில் உள்ள தமிழர்கள் வாழ்வது கிட்டத்தட்ட ஒரு சிறை வாழ்கை. வெளியூருக்கு போக வேண்டுமெனில் அவர்கள் அரசின் அனுமதி பெறவேண்டும். தினமும் மாலை ஆறு மணிக்குள் திரும்பவேண்டும். சோனியா காந்தி வீட்டு குப்பை  தமிழ்நாட்டுக்கு வந்தாலும் அவர்களால் முகாமைவிட்டு இரண்டு நாட்கள் வெளியே வரமுடியாது. கையூட்டு கொடுக்காமல் அவர்கள் சிகிச்சை பெறக்கூட வெளியே போக முடியாது. மண்டபம் முகாமை விட்டு வேறு முகாமுக்கு அனுப்பாமல் இருக்கவே ஈழத்தமிழர்கள் பணம் கொடுக்கவேண்டும். இத்தனை கட்டுப்பாடுகளோடு நாம் ஆயிரக்கணக்கான மக்களை அடைத்துவைத்துவிட்டு அடைக்கலம் கொடுத்ததாக  நினைத்துக்கொண்டிருக்கிறோம், இந்த கட்டுப்பாடுகளும் அநியாயங்களும் நம்மை நம்பி வந்த ஒரே தவறுக்கான தண்டனை எனபதை உணராமல்.

மானமா சோறா என்கிற சூழ்நிலை வந்தால் தமிழன் மானம்தான் முக்கியம் என்பான் தமிழன்- இது அண்ணாதுரை சொன்னது ( ஒரு உதாரண கதை மூலம் இதை சொன்னதாக தகவல்). இதை கருணநிதி கடைபிடிக்கவேண்டும் என நாம் எதிர்பார்ப்பது நியாயமில்லை. அதேபோல நாமும் கருணாநிதி போலவே இருக்கவேண்டும் என அவர் எதிர்பார்ப்பதும் நியாயமில்லை. இந்த ஒரு விசயத்தில் தன்னைபோல் பிறரை நினை எனும் முதுமொழியை கலைஞர் பின்பற்றாமல் இருப்பது நல்லது. முகாம் தமிழர்களுக்கு முதல் தேவை சுதந்திரமும் கவுரவமும். அதை எத்தனை கோடி பிச்சை போட்டாலும் ஈடுகட்டமுடியாது. அவரால் பிச்சையைத்தவிர வேறு எதையும் தரமுடியாது என்பதுதான் யதார்த்தம். அதனால்தான் செங்கல்பட்டு முகாமில் உள்ள தமிழர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி எனக்கு தெரியாது, அது காவல்துறையின் நடவடிக்கை என சாத்தூர் ராமச்சந்திரன் ஒதுங்கிக்கொள்கிறார்.

விடுதலையும் சம உரிமையும் ஆள்பவனின் கருணையால் கிடைக்காது. எல்லா தானங்களும் ஒரு பெரிய பலனை எதிர்நோக்கித்தான் தரப்படுகின்றன. விவசாயியின் சுயசார்புடைய வாழ்வு பறிக்கப்பட்டபோதுதான் அவர்களுக்கு கடன் தள்ளுபடி எனும் பிச்சை போடப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களின் மீதான ஆதிக்கம் பெருமுதலாளிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டபோதுதான் நமக்கு ரேஷனில் மலிவு விலை பருப்பும் மளிகை சாமானும் தரப்பட்டது. இலவச சைக்கிள் தரும் அரசுதான் அரசுப்பள்ளிகளையும் சத்தமில்லாமல் மூடுகிறது.
பாகிஸ்தானுக்கு விழும் அடி சம்மட்டி அடியாக இருக்கும் என பகிரங்கமாக சவால் விடும் ப.சிதம்பரம் நானூறு தமிழக மீனவர்களை படுகொலை செய்த இலங்கை அரசு விசயத்தில் பொத்திக்கொண்டு போவது ஏன் என்ற கேள்வி  உங்களுக்கு எழவில்லையா ? அகதிகள் வீட்டு வசதிக்காக தமிழக அரசு கேட்ட பதினாறு கோடி பணத்தை இன்னமும் தராத மத்திய அரசு, உலக வங்கி தராவிட்டால் 2.6 பில்லியன் டாலர் நிதியை இலங்கைக்கு நாங்கள் தருவோம் என  சொன்னதன் பொருள் உங்களுக்கு விளங்கவில்லையா ? இந்த அயோக்கியர்களிடம் கையேந்தினால் எந்தகாலத்திலும் ஈழத்தமிழனுக்கு நல்லது நடக்காது, ஈழத்தமிழனுக்கு மட்டுமல்ல நமக்கும்தான்.

வன்னி தமிழனை கைவிட்ட பாவத்திற்க்கு பல காலம் முன்பே நாம் நம்மை நம்பி வந்த தமிழர்களை சிறைபடுத்திய பாவத்தை செய்துவிட்டோம்.  இனியாவது சூழ்நிலைமீது பழிபோடாமல் உள்ளூரில் உள்ள அகதிகளுக்கு குரல் கொடுப்போம். அதுதான் நம் பாவங்களுக்கான குறைந்தபட்ச பரிகாரம். கட்டபொம்மனுக்கும் எட்டப்பனுக்கும் இருந்த வாய்ப்புக்களும் சூழ்நிலையும் வேறு வேறல்ல, அவர்கள் யார் என நமக்கு அடையாளப்படுத்தியது அவர்கள் தேர்ந்தெடுத்த பாதைதான், இது நமக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்…

Advertisements

“ஈழ அகதிகளுக்கு 12 கோடி ஒதுக்கீடு- ஓய்வறியா துரோகத்தின் அடுத்த பரிமாணம்” இல் 9 கருத்துகள் உள்ளன

 1. அருமையாய் சொல்லிருக்கேறீர்கள்…..கண்டிப்பாக எட்டப்பனும் கட்டபொம்மனும் அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையையே நிறுபித்தது அவர்கள் யாரென்பதை. நம்மக்களுக்கும் இது கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டிருக்கிறது. பெரியவருக்கு வரலாற்றில் எட்டப்பனுக்கு அடுத்த இடம் கண்டிப்பாக உண்டு. மாற்றுக்கருத்துக்கள் கிடையாது. நீங்கள் சொன்னதைப் போல் இங்கிருக்கும் அகதி தமிழர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் முதலில்.

 2. வணக்கம்,
  உங்கள் பதிவுகள் அணைத்தையும் படித்தேன். நெருப்பாக உள்ளது, அருமை! சரியான பார்வை, தெளிவான சொற்கள். குறிப்பாக பிரிக்கால் நிகழ்வு, ஈழ அகதிகள் தொடர்பாக முதல்வரின் நிதி நாடகங்கள் குறித்த பதிவுகள். மிகச்சிறப்பாக எழுதுகிறீர்கள்! வாழ்க.

 3. எட்டப்பனையும் மிஞ்சிவிட்டார்னு சொல்லுங்க
  ஒரு கட்டபொம்மனை காட்டி குடுத்துட்டார்னு எட்டப்பனை சொல்றோம் ஏன் என்றால் கட்டபொம்மனின் மதிப்பு நமக்கு தெரிகிறது.

  இவர் காட்டி குடுத்து இருப்பவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள் ஆனாலும் வரலாறு மன்னர்களை மட்டுமே ஞாபகம் வைத்து கொள்கிறது. மக்களை மறக்கிறது..

  பிற்காலத்தில் இவர் தான் ஈழ விடுதலையை முன்னின்று நடத்தியவர் என்று நம் குழந்தைகளின் பாட புத்தகங்களில் வரலாம்.

 4. dear sir,

  All ur articles are nice……..

  All r 100% happening here……..

  We r useless in this situation to help the Tmil eelam peoples….

  There will be a big end for this M.K & Co …….

  Time is More Powerful than any other……

 5. தமிழனுக்கும், ஈழத்தமிழனுக்கும் யாருமே இல்லை வழிநடத்த. இது தொடர்ந்தால் தமிழினம் கேடாய்ப் போகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s