பிரணாப் கொழும்புவுக்கு அவசரப்பயணம்- வேறஒன்னுமில்லீங்க.. மகிந்தா வீட்டு பிளம்பர் திடீர்ன்னு லீவுல போயிட்டாராம்.


சரத் ஃபொன்சேகா ராஜினாமா செய்தவுடன் உள்ள வேலை எல்லவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு கொழும்புவுக்கு பறந்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. நிதியமைச்சருக்கு அயல்நாட்டு விவகாரங்களில் என்ன வேலை இருக்கமுடியும் என கேட்பது அனாவசியம். தரகர் வேலை என்பதற்கு கட்டுப்பாடுகள் கிடையாது. தரகனுக்கு இருதரப்பின் தேவைகளும் தெரிந்திருந்தால் போதும். அந்தவகையில் பிரணாப் இந்த பயணத்திற்கு தகுதியானவரே. ஏற்கனவே ராஜபக்சே சகோதரர்களுக்கு கை கால் அமுக்கிவிடவில்லையே தவிர மற்ற எல்லா உபகாரங்களும் செய்த அனுபவம் அவருக்கு இருக்கிறது.

நாற்பது எம்பி சீட்டும் போய்விடுமோ என அஞ்சிய வேளையிலும் தமிழகத்திலிருந்து பலமான அழுத்தம் வந்தபோதும் மிக நிதானமாக கொழும்பு பயணத்தை திட்டமிட்ட மத்திய அரசு இலங்கையில் ஒரு ராணுவத்தளபதி அரசியலுக்கு வருகிறான் என்ற செய்தி வந்த உடன் பதறியடித்துக்கொண்டு இலங்கைக்கு ஆளனுப்புகிறது. விட்டால் மகிந்தாவுக்கு சிறுநீர் மஞ்சளாய் போனால்கூட ஆளனுப்புவார்கள் போல, இந்த தேசம்தான் இரண்டாயிரத்து இருபதில் வல்லரசாகப்போகிறதாம். போர் உச்சத்திலிருந்தபோது பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணத்திற்கு முன்பிருந்த சூழலை நினைவுபடுத்திப்பாருங்கள், தாமதமின்றி ஒரு அமைச்சரை இலங்கைக்கு அனுப்பு என கோரிக்கை எல்லா தரப்பிலிருந்தும் எழுந்தது. அப்போது காங்கிரசின் தலைகள் முதல் வால் வரை சொன்னதென்ன ??  இன்னொரு நாட்டிற்கு போவது அவ்வளவு சுலபமான காரியமல்ல.. அதற்கு ஏகப்பட்ட நடைமுறைகள் இருக்கின்றன என்றார்கள். இப்போது மட்டும் அந்த நடைமுறைகள் எப்படி இத்தனை சீக்கரமாக முடிந்தன ? கொஞ்சம் சொரனையும் அறிவும் இருப்பவனுக்கு இந்த கேள்வி எழும்.. தாமதமாக போனாலும் விரைவாகப் போனாலும் இந்தியா செய்யப்போவது ஒரே காரியாம்தான் என்பது அறிவு கொஞ்சம் கூடுதலாக இருப்பவனுக்கு புரியும்.

அறிவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் காங்கிரசுக்காரனுக்கு இந்த கேள்வி பொருந்தாது. காங்கிரஸ் கட்சியென்பதே வெள்ளையர்களால் வெள்ளையனுக்காக துவங்கப்பட்டது. அதன் நீட்சிதான் மன்மோகன் சிங், சாதாரண வயிற்றுப்போக்கிற்கு வைத்தியம் பார்க்க முடியாமல் இறந்துபோகும் இந்தியர்கள் ஆண்டொன்றுக்கு ஐந்து லட்சம் பேர். இதைப்பற்றி ஒருமுறையாவது மன்மோகன் பேசியதுண்டா ? ஆனால் அமெரிக்காவாலேயே குட்டிச்சுவரான அமெரிக்கவின் பொருளாதாரத்தை  காப்பாற்றுவது உலகின் கடமை என வெட்கமில்லாமல் பேசுகிறார் இவர், நன்கொடை புத்தகம் அச்சடித்து வசூல் செய்வது ஒன்றுதான் பாக்கி ( அதான் அடமானம் வைக்க இந்தியா இருக்கே ).  கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் வாங்கித்தந்தார் காந்தி என பள்ளியில் படித்திருக்கிறேன். அப்போது ஜாலியன் வாலாபாக்கில் சிந்தியது என்ன பினாயிலா எனும் கேள்வி எனக்கு பள்ளிப் படிப்பு முடியும்வரை எழவில்லை. மக்களின் தியாகத்தை மறைத்துவிட்டு அதையும் சாதனையாக சொல்வது காங்கிரசுக்கே உரிய வெற்றிகரமான பாணி. இல்லாவிட்டால் கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் சவரம்கூட செய்யமுடியாது எனும் எளிமையான உண்மையை தேசிய அளவில் மறைத்திருக்கமுடியாது. ஆக்கிரமிப்பு செய்த நாட்டின் கடனையும் சுதந்திரத்துடன் இலவச இணைப்பாக பெற்றுகொடுத்தது காங்கிரசுதான் ( பிரிட்டனின் இரண்டாம் உலகப்போருக்கான  கடன் வெறுமனே போரை வேடிக்கை மட்டும் பார்த்த இந்தியாமீதும் திணிக்கப்பட்டது ).

மேலே இருப்பது தலைவர்களின் பாணி என்றால் தொண்டர்களும் கடைபிடிக்கும் உபாயம் வேறு, அதாவது எந்த கேள்வி கேட்டாலும் ராஜீவ் காந்தி சாவை பதிலாக்குவது. மீனவர் படுகொலை பற்றி கேட்டால் , நாங்கள் எங்கள் தலைவரையே பலிகொடுத்தோம் என்பார்கள். ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் இதே பல்லவிதான். இவர்களை பொருத்தவரை ராஜீவுக்குப் பிறகு இந்தியாவில் யாருமே சாகவில்லை. இருபது வருடமாக ஒரு இழவை மட்டும் வைத்து கட்சி நடத்துவது இவர்கள்தான். கணவனை பறிகொடுத்த துயரம் சோனியாவுக்கு ஒரு மாதிரியும் ராமேசுவரம் மீனவனின் மனைவிக்கு ஒரு மாதிரியாகவும் இருக்குமா ? அமைதிப்படையால் பெற்றோரை இழந்த யாழ்பாணக் குழந்தைகளுக்கு என்ன இழப்பீடு கிடைத்தது கண்ணீரைத்தவிர.. ஆனால் ஒரு குடும்ப உறுப்பினரை மட்டும் இழந்த சோனியாவின் குடும்பமோ ஒரு நாட்டையே இழப்பீடாக பெற்றுவிட்டது. தேவையான சாவை மட்டும் நினைவில் வைத்திருக்கும் அயோக்கியர்களின் கூடாரம்தான் காங்கிரஸ். இந்திரா பலியானபோது கொல்லப்பட்ட சீக்கியர்களைப்பற்றி கவலைப்பட்ட ஒரு காங்கிரஸ்காரனையாவது நீங்கள் பார்த்ததுண்டா ?

மன்னிக்கவும் எனது சொந்தப்புலம்பல் குறுக்கிட்டுவிட்டது. ஃபொன்சேகாவின் ராஜினாமா இந்திய அரசு உடனடியாக கவனம் செலுத்தவேண்டிய விசயம்தான். ஏனெனில் கூலிப்படை ஒற்றுமையாக இருக்கும்வரைதான் ஏவியவனுக்கு லாபம், அடியாட்களுக்குள் அடித்துக்கொண்டால் ஒன்று யாரோ ஒருவரின் உயிருக்கு ஆபத்து வரலாம் இல்லாவிட்டால் ஒன்றாக சேர்ந்து செய்த ரவுடித்தங்கள் அம்பலத்திற்கு வரலாம். சோனியாவின் தளபதிகள் பயப்படுவது இரண்டாவது சாத்தியத்திற்குத்தான். சில ரகசியங்கள் அம்பலத்திற்கு வரலாம் என்பதற்கான அறிகுறிகள் ஃபொன்சேகாவின் ராஜினாமா கடிதத்தில் தெரிகிறது. இந்தியாவின் ராணுவ உதவி கோரல் மற்றும் முகாம் தமிழர்களின் அவல நிலை பற்றி ஃபொன்சேகாவின் கடிதம் குறிப்பிடும் தகவல்கள் ஒரு ட்ரையலர் போல இருப்பதை கவனித்தால் புரியும் ( வர வர எவன்தான் முகாம் தமிழர்களைப்பற்றி கவலைப்படுவது என விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது ).

ஃபொன்சேகா அப்பட்டமான சீனாவின் ஆதரவாளர் அதனால் அவர் அரசியல் ரீதியாக வலுவடைவதை இந்தியா விரும்பாது என ஆரூடம் கூறுகிறது ஜூனியர் விகடன். இது ஒரு சப்பை வாதமே, இப்போதும் சீனாவின் ஆதிக்கத்தின் கீழ்தான் இலங்கை இருக்கிறது. இது மன்மோகன் கோஷ்டியாருக்கும் தெரியும், மேலும் சீனா இலங்கையின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவிரும்பினால் அதை இந்தியாவால் தடுக்கமுடியாது. வலியவனுடன் மோத அரை சதவீதமாவது வீரம் வேண்டும், அது அப்பாவிகளைக் கொல்பவனுக்கும் கொல்வதற்கு திருட்டுத்தனமாக ஆயுதம் தருபவனுக்கும் இருக்கவே முடியாது.
பிரணாப் முகர்ஜியின் இந்த பயணம் இந்தியாவின் பலவீனத்தை மீண்டுமொரு முறை வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டது. இலங்கை அதிபருடனான சந்திப்பும் முகர்ஜியின் மற்ற நடவடிக்கைகளும் ஒரு அரசுமுறை பயணத்திற்குரிய மரியாதையை பெறவில்லை. அவரது பேச்சு குறித்த தகவல்களும்  இலங்கை அரசால் அதிகாரபூர்வமாகத் தரப்படவில்லை. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து பிரணாப் பேசுவார் என கலைஞர் டிவியும் சன் டிவியும் நாள் முழுக்க கூவின. ஆனால் அவர் அது குறித்து மகிந்தாவுடன் எதுவும் பேசியதாக  தெரியவில்லை. ஒருவேளை அவர் பயணம் செய்த கண்டி ஸ்ரீ தலாடா மலிகவா கோவிலில் அது குறித்து பிரார்த்தனை செய்தாரா என்பது கருணாநிதியின் அடுத்த கேள்வி பதில் அறிக்கையில் தெரிந்துவிடும். மீள்குடியேற்றம், சம உரிமை, அதிகாரப்பகிர்வு போன்ற வழமையான கருத்துக்களை வலியுறுத்தியதாக தமிழ் ஊடகங்கள் ( மட்டும் ) சொல்லியிருக்கின்றன. மகிந்தாவோ இது ஒரு (அவ)மரியாதை நிமிர்தமான சந்திப்பு என சுருக்கமாக முடித்துக்கொண்டுவிட்டார்.எங்கள் கடல் பிராந்தியத்தில் இருப்பதால் அந்தமான் எங்களுக்கு சொந்தம் என்று ஒரு இலங்கை அமைச்சரே சொல்லும்மளவுக்கு இலங்கையின் கொழுப்பு கூடிப்போயிருக்கிறது (கச்சத்தீவின் கதி ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுவதால்தான் இவர்கள் கொழும்பு போகும்போது பொண்டாட்டி பிள்ளைகளைக்கூட தன்னுடன் கூட்டிபோவதில்லை..).

எத்தனை அவமானங்கள் வந்தாலும் இந்தியா இலங்கைக்கு உதவியே தீரும். இலங்கையின் முழுமையான பரப்பளவும் அரசியல் நிலைத்தன்மையும் அங்கு தொழில் நடத்தும் இந்திய முதலாளிகளுக்கு மிக அவசியம்.  காங்கிரசுக்கும் மன்மோகனுக்கும் படியளக்கும் அவர்களுக்காக எத்தகைய அவமானங்களையும் தாங்க  மத்திய அரசு தயங்காது.

Advertisements

“பிரணாப் கொழும்புவுக்கு அவசரப்பயணம்- வேறஒன்னுமில்லீங்க.. மகிந்தா வீட்டு பிளம்பர் திடீர்ன்னு லீவுல போயிட்டாராம்.” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. உங்கள் கணிப்புகள் மிகச் சரி. துணிச்சலான கருத்துக்கள். ‘இறையாண்மை’ ச் சட்டங்கள் எதையும் பாய விடப் போகிறார்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.
    ஒரு பின்னூட்டத்தில் உங்களை தோழர் என ஒருவர் அழைத்திருந்தார். நீங்கள் இடது சாரித் தோழரா ? இல்லை என்று உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் நான் பேசியவரை இடது சாரித் தோழர்கள் எல்லாம் பிரபாகரன் வல்வெட்டித்துறை ரவுடி என்கிற ரேஞ்சில் தான் பேசியிருக்கிறார்கள். போராட்டத்தை அமெரிக்கா ஆதரிக்காது, இந்தியா ஆதரிக்காது… என்று பொருளாதார விளக்கம் கொடுக்க முடிந்த அவர்களால் தாங்கள் ஏன் ஆதரிக்கவில்லை என்று புரிய முடியவில்லை. சகோதரப் படுகொலை, குழந்தைப் போராளி, ஜனநாயக இயக்கங்களை அழித்தது… என்று அடுக்குபவர்கள் அந்தப் பக்கம் ராஜபக்சே நல்லவன் தானே என்கிற இடத்திற்குப் போய்விடுகிறார்கள். ஊறுகாய் வைத்து கஞ்சி குடித்துவிட்டு காலையில் ‘மறியல் போரு’க்குப் போய் கைதாகி சாயங்காலம் ஏழு மணிக்குள் நைட் சாப்பாட்டிற்குத் திரும்பிவிடுகிற சனநாயகமான காம்ரேட்டுகள் தான் உண்மையான போராளிகள் என்று நினைக்கிறார்கள் போலும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s