கருணாநிதியின் மௌன வலி – அய்யகோ… நாடகம் முடிந்தும் நடிப்பு தொடர்கிறதே.


இது நடந்திருக்கக்கூடாது ஆனாலும் நடந்துவிட்டது. நேற்று எங்கள் வீட்டு கேபிள் இணைப்பு பக்கத்துவீட்டு மொட்டை மாடியை சுத்தம் செய்த ஒரு நல்ல இதயம் படைத்தவரால் துண்டிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் கிடைத்த ஒரு வாய்ப்பையும் நானே வீணாக்கிவிட்டேன். எனக்குத்தெரிந்த அறிவைக்கொண்டு அந்த இணைப்பை சரி செய்து ஒருவேளை விதி வலியதோ என சந்தேகிக்கும் நிலைக்கு ஆளானேன். டிவியை போட்டதும் அது கருணாநிதி மௌனமாக அழுவதாக அறிவித்தது. அழுவது யாருக்குமே தெரியவில்லையே என்று கூடுதல் அழுகைவேறு. அடப்பாவமே இவர் அழுதால்கூட அது எல்லோருக்கும் தெரியவேண்டும் போலிருக்கிறது.

நண்பர் ஒருவர் கருணாநிதிக்கு குற்ற உணர்வு இன்னும் இருக்கலாம், அதனால்தான் அவர் அவ்வப்போது இலங்கை தொடர்பாக அறிக்கை விடுப்பதாக சொன்னார்.  இது எத்தனை ஆபத்தான கருத்து என்பதற்காகத்தான் இப்பதிவு. குற்ற உணர்வு என்பது சாதாரண மனிதன் ஒரு செயலை செய்யத் தவறியபோது வரும் உணர்வு. குற்றம் செய்துவிட்டு அதன் பின்னால் வருவது பய உணர்ச்சி. ஆனால் கருணாநிதிக்கு இருப்பது இரண்டும் அல்ல. பிரபாகரனுக்கு எதிரான கருத்துக்களைச்சொல்லி தான் எந்த அணியில் இருக்கிறேன் என்பதை அறிவித்திருக்கிறார்.ஆதாயம் இல்லாமல் ஆண்டி ஆற்றில் இறங்க மாட்டான் என்பதுபோல  மவுனமாக அழுதாலும் மண்டி போட்டு அழுதாலும் அதில் கலைஞரின் சுயநலம் கட்டாயம் இருக்கும்.

தமிழினத்தலைவர் திடீரென இப்படிப்பேசி விட்டாரே என யாரேனும் கவலைப்படுவீராயின் உங்களுக்கு சில விசயங்களை நினைவூட்டுவது அவசியம். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, அவர் ( மட்டும்) அறிவித்த போர் நிறுத்தத்திற்கு பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதாக செய்தி வந்த போது அவர் என்ன சொன்னார் ? மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றார். அதே பேட்டியின் இறுதியில் இப்போது என்ன செய்யலாம் என்றிருக்கிறீர்கள் ( இலங்கை தொடர்பில்) என வினவியபோது நக்கலாக நாம் போய் டீ குடிக்கலாம் என்றார். ஒரு இன மக்களின் பேரழிவிற்கு பிறகு சுமுக நிலை நிலவுவதாக சொன்னார். இதன் பொருள் தான் (அல்லது தாம் ) விரும்பிய சூழல் வந்துவிட்டது என்பதுதான். எம்பிக்களின் பயணத்திற்கு பிறகு ஜெயலலிதாவின் கேள்விக்கு பதிலளிக்கும் அறிக்கையொன்றில் நாங்கள் செலவு செய்து போய்வந்தோம். நீயும் முடிந்தால் போய் வா.. யார் தடுத்தது என்றார்.” இது எனது தனிப்பட்ட பயணம் ” என்பதுதான் இதன் வெளிப்படையான அர்த்தம் .

ஆக, அவ்வப்போது அவர் தனது ரத்தம் தோய்ந்த கைகளை நமக்கு காட்டியிருக்கிறார். சரியாக பார்க்க முடியாதவர்களுக்கான ஒரு சிறப்புக்காட்சிதான் சமீபத்தைய அறிக்கை. பிரபாகரனை குற்றம் சாட்டும் அறிக்கையை இப்போது வெளியிட என்ன அவசியம் வந்தது? உடனடிக் காரணம் இதுவாக இருக்கலாம், நவம்பர் 26 பிரபாகரனின் பிறந்த நாள்,நவ. 27 மாவீரர் நாள். இவ்விரு நாட்களும் பிரபாகரன் பற்றிய கூட்டங்கள் தமிழகத்தில் நடைபெறும்,இதுவரையும்கூட பிரபாகரனை சிலாகித்துப் பேசாத ஈழ ஆதரவு கூட்டங்கள்  தமிழகத்தில் மிகக்குறைவு.( இது தொடர்பாக தினமலரும் பல நாட்கள் அரசுக்கு சிக்னல் கொடுத்துப்பார்த்துவிட்டது, முஸ்லீம் தீவிரவாதம் என ஆள்காட்டிவேலை செய்தபோது கிடைத்த வெற்றி இந்த விசயத்தில் கிடைக்கவில்லை) . எப்படி பிரபாகரனை கொன்றுவிட்டால் போரை முடிவுக்கு கொண்டுவரலாம் என இலங்கை கருதி செயல் பட்டதோ அதேபோல அவர் மீதான பெரும்பான்மை தமிழக மக்களின் அபிமானத்தை சிதைப்பதன் மூலம் ஈழ ஆதரவு இயக்கங்களை முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறார் கருணாநிதி.

நீண்ட கால திட்டமென்பது வேறு. கருணாநிதி கொஞ்சம் மானம் மரியாதையோடு வாழ்ந்தபோது செய்த சில காரியங்களால் வடக்கே அவர் ஈழத்தமிழருக்கு ஆதரவானவர் என்ற ஒரு பிம்பத்தை தோற்றுவித்துவிட்டது ( ஒரு உதரணம் அமைதிப்படையை வரவேற்கப் போகாதது). இந்த பிம்பத்தை உடைத்து நானும் உங்க ஆள்தான் என சோனியா கும்பலிடம் சரணாகதியடைவதுதான் நீண்டகால திட்டம். இப்போதைய அறிக்கையின் விளைவுகளை ஆராய்ந்து அதை பின்னால் மாலன், சுப்பிரமணியம் சாமி வகையறாக்களின் பழைய கருத்துக்களை தன் பாணியில் வெளியிடுவார். சுருக்கமாக சொல்வதானால் இன்றைய சூழலில் கருணாநிதியின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டைவிட இந்திய அரசு ஆதரவு நிலைப்பாடு அதிக பலனளிக்கக்கூடியது. எனவே தனது பழைய நிலைப்பாட்டை தூரவீச முடிவெடுத்துவிட்டார், பழைய துணியைப்போட்டு பாத்திரம் வாங்குவதுபோல ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடைக்குப்போட்டு கொஞ்சம் பரிதாபம் கிடைக்குமா என ஆழம் பார்க்கிறார்.

புலிகள் வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு விவேகத்தை பயன்படுத்தவில்லை என்கிறார். இந்தி எதிப்பு போராட்டம் தொடங்கி காவிரி, முல்லை பெரியாறு வரை  இவர் பயன்படுத்திய விவேகம்தான் இப்போது சிரிப்பாய் சிரிக்கிறது. இவர் எடுத்துவைத்த கருத்துக்களை புலிகள் அலட்சியப்படுத்திவிட்டதாக சொல்கிறார் , அதற்கென்ன செய்வது., நம் முன்னோர்கள்கூடத்தான் ஒருவனுக்கு ஒருத்தி என்றார்கள். அதை இவர் லட்சியப்படுத்தியிருந்தால் தமிழ்நாட்டின் முக்கால்வாசி பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். முடிந்ததை எண்ணி நமக்கென்ன ஆகப்போகிறது ??

புலிகள் கடந்த தேர்தலை புறக்கணித்ததால்தான் அவர்கள் அழிந்தார்கள் என்கிறார். தேர்தல் புறக்கணிப்பு என்பது வெகுஜன மக்கள் பங்கேற்ற ஒரு ஜனநாயக நடவடிக்கை. அதையும் தவறு என்கிறார், ரணில் ஒரு யோக்கிய சிகாமணி போலவும் அவர் வந்திருந்தால் எல்லாம் சரியாகியிருக்கும் என்பதுபோலவும் பேசுகிறார். ரணிலோ புலிகளை முதலில் பலவீனப்படுத்தியது தான்தான் என எப்போதோ இன்றைய இலங்கை வெற்றிக்கு சொந்தம் கொண்டாடிவிட்டார். கருணாநிதிக்கு சண்முகநாதன் குறிப்புக்களை எடுத்துத்தந்த காலம் போய் இப்போது ராவே (RAW) எடுத்துத்தருகிறது போல. ஒரு தோல்விக்கு பிறகு எதைவேண்டுமாயினும் அதற்கு காரணமாக சொல்லமுடியும். சீனாவுடனான இந்தியாவின் போரில் நாம் அடைந்தது கேவலமான தோல்வி. அப்போது நாம் சரணடைந்திருக்கவேண்டும், அதுதான் விவேகம் என இவரது முதலாளிகளான காங்கிரசிடம் சொல்ல தயாரா இந்த ஒப்பாரி நாயகன்?

பிரபாகரனை விமர்சனம் செய்யலாமா கூடாதா என்பதல்ல எனது வாதம். ஒரு குற்றச்சாட்டை வைக்கும் தகுதி கருணாநிதிக்கு இருக்கிறதா என்பதுதான் என் கேள்வி. தம் வாரிசுகளுக்காக மொத்த மக்களின் உரிமைகளையும் பலியிடத் துணிந்த கருணாநிதி போரில் தன் குடும்பத்தோடு பலியான பிரபாகரனை விமர்சிக்க எந்த காலத்திலும் தகுதியானவர் அல்ல.

பிரபாகரனின் மரணத்தை முன்பே அறிந்து அவர் கொல்லப்பட்டால் தான் வருந்துவேன் என்று சொன்ன கருணாநிதியே, அழிவை கணிக்கத்தெரியாத பிரபாகரன் விவேகமில்லதவரென்றால், அவர் முடிவை அவதானித்துவிட்டு கமுக்கமாக இருந்த நீங்கள் யார் ? பிரபாகரன் கைது செய்யப்பட்டால் அவரை போரஸ் மன்னனைப்போல நடத்து என இலங்கைக்கு ஆலோசனை சொன்னவரே.. பிரபாகரனின் பனிரெண்டு வயது மகன் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியானபோதும், அவரது பெற்றோர் கொடுமைப்படுத்தப்படுவதாக செய்திவரும்போதும் வாயை திறக்க மறுப்பதேன் ?? போரஸ் மன்னனின் பெற்றோர் மற்றும் மகனைப்பற்றி வரலாற்றில் குறிப்பு எதுவும் கிடைக்காததாலா அல்லது சோனியாவின் அனுமதி கிடைக்காததாலா ??

இன்னும் ஐந்நூறு வருடங்களுக்குள் தமிழ் மொழி அழிந்துவிடும் என கணித்திருக்கிறது யுனெஸ்கோ.. கலைஞர் இன்னும் ஐம்பது வருடம் இருந்தால் அவ்வளவு காலம் தமிழுக்கு தேவைப்படாது என நினைக்கிறேன்.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ??

Advertisements

“கருணாநிதியின் மௌன வலி – அய்யகோ… நாடகம் முடிந்தும் நடிப்பு தொடர்கிறதே.” இல் 10 கருத்துகள் உள்ளன

 1. ஐம்பது என்ன ஐந்து வருடம் இவர் இன்னும் வாழ்த்தாலே அதுக்கான வேலைகளை கச்சிதமாக செய்து முடித்துவிடுவார்.

  இவிங்க வாழும் காலத்தில் நாமும் வாழுரோமேன்னு நினைச்சா வெக்கமா இருக்கு.

 2. எழுதத்தூண்டுகிற விஷயங்களை பார்க்கும்போதோ அல்லது படிக்கும்போதோதான் பெரும்பாலும் நான் பதிவெழுதுவது நடக்கிறது. ஆகவே பெரும்பாலும் அவை யாரையேனும் விமர்சனம் செய்வதாகவே அமைகின்றன. எழுதுவதற்கு புதியவன் என்பதாலும் கிடைக்கும் நேரத்தில் மட்டும் எழுதுவதாலும் சரியான தயாரிப்போடு சமூகத்தைப்பற்றி எழுதும் திறன் இன்னும் எனக்கு கைவரவில்லை.

  உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். இனி வரும் நாட்களில் குற்றச்சாட்டுக்கள் மட்டும் அல்லாத மற்ற பொதுவான விஷயங்களைப் பற்றியும் எழுத முயற்சி செய்கிறேன்.

  உங்கள் கேள்விக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி.

  வில்லவன்.

 3. கட்டுரை நன்றாக இருந்தது. கருணாநிதி ஒரு சாணக்கியன். அதாவது எப்படி வேண்டுமானாலும் வளையும் புல். அவருடைய அந்திக் காலத்தில் அவர் குடும்பம் பார்க்க ஆரம்பித்த ஆயிரக்கணக்கிலான கோடிகள் அவரை ஒரு முதலாளியாக ஆக்கிவிட்டன. அவர் தனது சொத்துக்களுக்காகவும் அதைக் காக்கும் அதிகாரங்களுக்காகவும் தமிழன் என்ன யாரை வேண்டுமானாலும் குழி தோண்டிப் புதைக்க ரெடியாகிவிட்டார். அவருடன் திமுக அழிந்து போகும். தமிழும் தான்.

 4. தமிழைப் புதைக்க இந்தத் தறுதலையால் முடியாது. கருணாநிதியால் தான் தமிழ் வாழ்கிறது என்றால் அதைக் காட்டிலும் வேறு அபத்தம் இருக்க முடியுமா?

  இறப்பதற்கு முன்னர் தான் மிகப் பெரிய அறிவாளி, ஞானி, தமிழைக் காத்த தனயன் என்றெல்லாம் பட்டம் வாங்கி, தமிழ் வரலாற்றிலே தனக்கே கல்வெட்டிக் கொள்ளத்தான் இத்தனை முயற்சியும். தினமும் சம்பாதிக்கும் வரவு கெட்டு விடக் கூடாது என்பதற்கான திசை திருப்பும் எத்தனங்கள். தமிழக மக்களை முட்டாளாக்குவதைத் தொடர தினமும் ஒரு வெங்காயக் கவிதை, கேனாத்தனமான விளக்கம்.

  இதைப் போய் நீங்களும், நானும் இப்போது பேசவில்லையா. இத்தனை காரணங்களை அடுக்கியும், இவனது ஆட்சியைக் கலைத்து இறப்பதற்கு முன்னர் தண்டிக்கா விடில் தமிழ் நிச்சயம் ஒரு கறுப்புப் புள்ளியைத் தன் வரலாற்றில் பதிக்கத்தான் வேண்டும்.

  இப்போ ரிடயர்மெண்ட் எனும் நாடகம். சந்துகளில் பாடிய சிந்துகளுக்கு வாரிசுகளுக்கு அரசியல் பிரவேசம். செருப்பாண்ட நாடு என்று ஏசிய நாட்டில் செருப்பாய் உழைப்பேன் என எடுத்த பிச்சை, கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு அணியும் மஞ்சள் துண்டு மகிமை, எனது நண்பன் என்று சொல்லிக் கொண்டே கண்ணதாசனுக்குத் துரோகம் இழைக்க வைரமுத்துவிற்கு கவிபேரரசாம். அட வெட்கங் கெட்டவனே. திருடிய வீட்டிற்கு ரண்டகம் செய்யலாமா?

  எம்ஜிஆரைப் புதைகுழியில் இறக்கும்போது யாருக்கும் தெரியாமல் மேல்மாடி பாத்ரூமில் போய் அழுதாராம். அதை யாரறிவார்களாம். கருணாநிதி இறந்தால் எல்லோரும் அவரவர் பாத்ரூமில் போய் ஒரு டப்பாங்குத்து ஆடி விட்டு வாருங்கள். ஆத்மா சாந்தி அடையட்டும்.

  கருணாநிதி, தமிழகத்தின் சாபக் கேடு.

 5. ஆந்திராவிலிருந்து குச்சிப்புடி நடனமாடிக் கொண்டு, பிழைப்புத் தேடி நாகபட்டினத்துக்கு வந்த குடுகுடுப்பைக் கூட்டத்தைச் சேர்ந்த தெலுங்கு மொழி பேசும் முத்துவேல் அஞ்சுகம் தம்பதிகளுக்கு நாகபட்டினத்தில் திருக்குவளை என்ற ஊரில் 1924 ஜூன் மூன்றாந் திகதி பிறந்த தட்ஷணாமூர்த்தி பின்னர் தன் பெயரை கருணாநிதி என மாற்றிக் கொண்டதை மறக்க முடியுமா?

  முதன்முறையாக முத்துவேல் கருணாநிதி முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த போது, கருணாநிதிக்கு பெருமளவில் உதவி செய்த என்.கே.டி.சுபிரமணியம் வெளியிட்ட ஜவகரிஸ்ட் பத்திரிகையில் ,சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 1968 ஜனவரி முதலாந் திகதி ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு பிறந்த கனிமொழி என்ற பெண் குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் அந்த பெண் குழந்தை கனிமொழியின் தந்தையின் பெயர் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. யார் அந்த கருணாநிதி? என்ற ஒரு சிறிய செய்தியை வெளியிட்டிருந்ததை மறக்க முடியுமா?

  ராசாத்தி என்றழைக்கப்படும் தர்மாம்பாள் யார் என்றே தனக்கு தெரியாது; தனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை; என்று முதல்வர் முத்துவேல் கருணாநிதி அறிவித்தார்; நீதிமன்றத்துக்கு நீதி கேட்டு சென்றார்: பெண் குழந்தை…மகள்…என்று யாருமே தனக்கு கிடையாது என்று முழங்கினார் முதல்வர் கருணாநிதி.

  கருணாநிதிக்கான அரச வாடகைப் பணத்தில் ஒலிவர் தெருவில் உள்ள வீட்டில்தான் கனிமொழியும் தாயாரும் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்தார்கள். பின்னர் கோபாலபுரத்துக்கு அருகில் உள்ள C.I.T கொலனியில் தாயாரோடு வாழ்ந்தவர். கருணாநிதிக்கு தினமும் இரவுத் தூக்கம் C.I.T.கொலனி வீட்டில்தான். அதிகாலை எழுந்ததும் கோபாலபுரம் போவார். காலை உணவு அங்கு. முரசொலிக்கோ, தலைமைச் செயலகமோ போய்விட்டு மதிய உணவுக்கு C.I.T.கொலனி. சிறு தூக்கத்துக்குப் பிறகு, மீண்டும் கோபாலபுரம். அங்கிருந்து அறிவாலயம் செல்வார். இரவுச் சாப்பாட்டுக்கு C.I.T கொலனிக்கு போய்விடுவார்.

  எந்த பெண் குழந்தை கனிமொழியை தன் மகளே இல்லை என கருணாநிதி முழங்கினாரோ…எந்த பெண் குழந்தை கனிமொழியின் பெயரை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ…அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று அனைத்தையும் இழந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி.

  கனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில் இருப்பீர்களோ, அதே நிலையில் இருக்கிறேன் என்று முழுப்பூசணிக்காயை எப்படியாவது சோற்றில் மறைப்பதில் உறுதியாக கருணாநிதி இருக்கிறார்.

  செய்யாத குற்றத்துக்காக கருணாநிதியின் குடும்ப சண்டையில் மூன்று அப்பாவி ஊழியர்கள் தினகரன் அலுவலகத்தில் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டதை மறக்க முடியுமா?

  கருணாநிதி கல்லூரியையே மிதிக்காமல் டாக்டர் பட்டம் வாங்குவதை எதிர்த்த அண்ணாமலை பல்கலை கழக மாணவர் உதயகுமாரை கொன்றுவிட்டு போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட உதயகுமாரின் தந்தையை விட்டு ‘இறந்தது என் மகனே அல்ல‘ என்று வாக்குமூலம் கொடுக்க பண்ணியதை மறக்க முடியுமா?

  சம்பத், கண்ணதாசனை கட்சியில் இருந்து நீக்க செய்த சதிகளை மறக்க முடியுமா?
  சட்ட மன்றத்தில் அனந்தநாயகி பேசும்போது குறுக்கிட்டு பொழிந்த ஆபாச வசைககளை மறக்க முடியுமா?
  காமராஜர் மீது கிளப்பிய அவதூறுகளை மறக்க முடியுமா?
  நெடுஞ்செழியனை ஓரம் கட்ட செய்த மோசடி முயற்சிகளை மறக்க முடியுமா?
  ஜனநாயகம், முற்போக்கு என்று பேசிக்கொண்டு முகம்மது பின் துக்ளக் படம் வெளி வராது செய்ய சம்பந்தப்பட்ட கலைஞர்களை மிரட்டியதை மறக்க முடியுமா? கூலிப்படையை கொண்டு திரை அரங்கங்களில் இருக்கைகளை கிழிக்க வைத்து படம் ஓடாது தடுத்ததை மறக்க முடியுமா?
  எம்ஜியாரை திமுக விலிருந்து வெளியேற வைத்ததை மறக்க முடியுமா? எம்ஜியாரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியிடாமல் தடுக்க மறக்க முயன்றதை முடியுமா? எம்ஜியாரை ராமாவரம் பாலத்துக்கு அருகில் தாக்கிட ரௌடிகளை அமர்த்தியதை மறக்க முடியுமா?
  வை கோவை திமுக விலிருந்து வெளியேற வைத்ததை மறக்க முடியுமா?

  -நல்லையா தயாபரன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s