காஞ்சி அர்ச்சகர் தேவநாதன்- கருவறைங்குறதை வேற மாதிரி புரிஞ்சுகிட்டாரோ ??


கடந்த சில நாட்களாக புலனாய்வு இதழ்கள் கடுமையான நெருக்கடியில் இருந்தன. ஒரு நடிகரின் அறுபதாம் கல்யாண செய்தியை பிரதான செய்தியாக போடுமளவுக்கு செய்திப் பஞ்சம் தலைவிரித்தாடியது. எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் ஒரு அவதாரம் வரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பத்திரிக்கைகளுக்கும் அதுபோன்ற தேவதூதர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிடைப்பார்கள். பிரேமானந்தா, சரவணபவன் ராஜகோபால், பத்மா நாராயணன் போன்ற ஆபத்பாந்தவர்கள் வரிசையில் இப்போது புதிதாக வந்திருப்பவர் காஞ்சிபுரம் மகசேச பெருமான் கோயில் அர்ச்சகர் தேவநாதன்.

அவர் அர்ச்சகராக இருக்கும் கோயில் கருவறையில் பெண்களுடன் உறவு கொண்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. அந்த குற்றமும் அவரே எடுத்துக்கொண்ட வீடியோக்களால் தெரிய வந்திருக்கிறது. பகவானுக்கே பதினோரு மணி காட்சியை காட்டிய குற்றம் லேசுபட்டதா என்ன? அதுவும் இந்து மதத்தின் ஹெட் ஆஃபீசான காஞ்சியிலேயே.. அதனால் முன் ஜாமீன் பின் ஜாமீன் உட்பட எல்லா ஜாமீனையும் நிராகரித்து விட்டது நீதிமன்றம். முன் ஜாமீனை நிராகரிப்பதற்கான அடிப்படை காரணங்களை யாரேனும் கொஞ்சம் விளக்கினால் புண்ணியமாய் போகும். ஒரு வீட்டை இடித்தது முதல் அதன் உரிமையாளரை கடத்தி அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது என ஒரு தொழில்முறை மாபியா கூட்டமே பிச்சை வாங்கும் அளவுக்கு காரியம் செய்த முன்னாள் அமைச்சருக்கு சுலபமாக ஜாமீன் கிடைக்கிறது. அடுத்தவனின் உடலை புண்ணாக்கியவருக்கு கிடைத்த ஜாமீன் மக்களின் உள்ளத்தை புண்ணாக்கியவருக்கு கிடைக்காமல் போனது ஏனென்று தெரியவில்லை.

போலீசாரின் கடமையுணர்வோ இன்னும் ஒருபடி மேலே போய்விட்டது. என்னதான் பிட்டுக்கு மண் சுமந்த பெருமானின் சன்னிதி என்றாலும் ஒரு புரோகிதர் இந்த அளவுக்கா  உரிமை எடுத்துக்கொள்வது? பக்தனின் பேரின்பத்திற்கு வழிகாட்டும் இடம் ஒரு அர்ச்சகரின் சிற்றின்பங்கள் அரங்கேறும் இடமாக பயன்படுத்தப்பட்டதை காவல்துறையால் மன்னிக்க முடியவில்லை போலிருக்கிறது. சென்ற வாரம் வரை கோயிலுக்கு வந்த பெண்களுடன் கருவறையில் உறவு கொண்டது மட்டும்தான் வழக்கு, இப்போதோ இந்துக்கள் மனதைப் புண்படுத்திய வழக்கு மட்டுமில்லாமல் கற்பழிப்பு வழக்கு மிரட்டல் வழக்கு என பல வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டிருக்கின்றன. எந்தப் போராட்டம் நடத்தப்பட்டாலும் தடியடி நடத்த தயங்காத காவல்துறை தேவநாதன் மீது தாக்குதல் நடத்த வந்த பெண்கள் மீது கனிவுடன் நடந்துகொண்டது. அவர்தம் மத உணர்வு அவர்களை மௌனமாக்கியிருக்கக்கூடும். தேவநாதன் செய்ததை விட பெரிய குற்றம் அவரது வீடியோக்களை வெளியே பரப்பியது. அந்தக் குற்றவாளிகள் இன்று வரை கைது செய்யப்படவில்லை.

இதுபோன்ற பாலியல் குற்றம் தொடர்பான செய்திகள்தான் பத்திரிக்கைகளுக்கு ஜாக்பாட். அவர்கள் பெரும்பாலான செய்திகளில் பாலியல் சாயம் பூசும் வாய்ப்பையே தேடுகிறார்கள். N.K.K.P ராஜா வழக்கில் அவரது இரண்டாம் மனைவியின் தொடர்பினால்தான் அவர் இப்படிக் கெட்டுப்போனார் என்றன புலனாய்வு ஏடுகள். நல்லவேளை அவர்  உமாவை ( அவர் இரண்டாவது மனைவி) பார்க்கும் வரை செரிலாக் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்தார் என்று  சொல்லவில்லை. மக்களுக்கு அவசியமான செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் “அதிகமாக விற்பனையாகும்” செய்திகளே வெளியிடப்படுகிறன. அபிஷேக் பச்சன் திருமணத்திற்கு நூற்றுக்கணக்கான நிருபர்களை அனுப்பி இந்தியாவின் கடைக்கோடி மனிதனுக்கும் அத்திருமணச்செய்தியை கொண்டு சேர்த்தன நம் ஊடகங்கள். அதே கால கட்டத்தில் ஒரு விசாரணைக் கைதி ஐம்பது ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார் என்ற செய்தி வந்தது ( பீகாரில் என்று நினைக்கிறேன், உறுதியாக தெரியவில்லை).  எத்தனை ஊடகங்கள் அது குறித்து செய்தி வெளியிட்டன ?

கோயில்களில் நடக்கும் அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பணம் இல்லாதவனுக்கு எந்தக் கோயிலிலும் மரியாதை கிடையாது. கோதானம் தர அர்ச்சகர்களின் தரகர்கள் கொண்டு வருவது அடிமாடுகளைத்தான். புரோக்கர்கள் இல்லாத பெரிய கோயில்களே தமிழகத்தில் இல்லை. வேண்டுமானால் தஞ்சாவூரை சுற்றியுள்ள பரிகார தலங்களுக்கு போய்வந்தவர்களைக் கேட்டுப்பாருங்கள்.  கோயில் புரோகிதர்களால் செய்யப்படும் மற்ற குற்றங்களை ஒப்பிடுகையில் தேவநாதனின் செயல் பத்து பைசாவுக்கு பொறாது. ஆனால் இந்து முண்ணனியோ தேவநாதனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் செய்யச் சொல்லி மனு கொடுத்திருக்கிறது. குலோபல் வார்மிங்குக்கூட தேவநாதன் லீலைகள் காரணமாக இருக்குமோ எனும் ஆராய்ச்சியில் ராமகோபாலன் ஈடுபட்டிருப்பதாக கேள்வி.

மீண்டும் தேவநாதன் விவகாரத்திற்கு வரலாம். இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்றபடியால் அவனுக்குத் தெரியாமல் தவறு செய்துவிட முடியாது என்றாகிறது. எனவே இறைவனைத்தவிர மற்ற யாருக்கும் தெரியாத ஒரு இடத்தை அவர் தனது மேற்படி காரியங்களுக்காக தெரிவு செய்திருக்கிறார் அவ்வளவுதான்.
(தவறு நடந்தால் அன்று மாலையே உரிய பரிகாரம் செய்துவிடுவேன் என்றும் ஒரு நல்லபிள்ளை வாக்கியத்தையும் அவர் சொல்லியிருக்கிறாராம் ). மக்கள் தொலைக்காட்சியில் காட்டியிருக்கும் காட்சிகளைப் பார்க்கையில் வீடியோக்கள் அந்தப்பெண்களின் அனுமதியுடனேயே எடுக்கப்பட்டிருக்கும் என்பது தெரிகிறது. கோயிலின் புனிதத்தை களங்கப்படுத்தினார் எனும் ஒரு குற்றச்சாட்டை மட்டும் விலக்கிப்பார்த்தால் மற்ற விஷயங்கள் ஊருக்கு ஊர் நடப்பவையே. மேலும் இறைவனின் ஏஜென்சிக்களில் பாலியல் குற்றங்கள் நடப்பது ஒன்றும் புதிய செய்தியல்ல. வாடிகனில் ஒரு போப்பாண்டவர் பெண் ஊழியர் ஒருவருடன் அப்படியிப்படி இருக்கும்போது மாரடைப்பு வந்து இறந்து போனார் (அதுவும் நூறாண்டுகளுக்கு முன்பே ) . சங்கர மடத்து ஜெயேந்திர சரஸ்வதியின் மகா மட்டமான விதவை மறுவாழ்வு திட்டம் சந்திசிரித்ததும் நமக்கு மறந்திருக்காது.

ஒரு இடம் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட முடியும் எனும் விதி இருந்தால் அது தவறாக பயன்படுத்தப்படவே வாய்ப்பு அதிகம். அடுத்தவன் உள்ளே வர மாட்டான் எனும் துணிச்சல் ஒருவனை தவறு செய்யத்தூண்டாமல் வேறு என்ன செய்யும்? வெளிப்படையான நிர்வாகம் லஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் என்றால் வெளிப்படையான பிரார்த்தனை முறைதானே இதுபோன்ற குற்றங்களை கட்டுப்படுத்தும் ? ரஜினி காந்தும் ஜே.கே. ரித்தீஷும் தத்தமது படங்களில் செய்வது ஒரேமாதிரி கோமாளித்தனங்கள்தான். பிறகு ஏன் ரித்தீஷின் பில்டப் காட்சிக்கு மட்டும் நம் மக்கள் சிரிக்கிறார்கள் ? அதுபோல குற்றம் செய்வதற்கான பாதுகாப்பான இடமாக கருவறை இருக்கிறது எனும் உண்மையை மறந்துவிட்டு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திய ஒரு புரோகிதரை மட்டும் தண்டிப்பதால் ஒரு பிரயோஜனமும் கிடைக்கப்போவதில்லை. அர்ச்சகரின் சிடிக்கள் வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக விற்பனையாகலாம் அவ்வளவுதான்.

இந்த கிரகச்சாரம் குறித்து கவலைப்படும் ஆன்மீக அன்பர்கள் கருவறையில் CCTV வைக்க வேதங்கள் அனுமதிக்குமா என்றெல்லாம் சிந்தித்து மெனக்கெட வேண்டியதில்லை. அதைவிட எளிமையான வழி ஒன்று இருக்கிறது. பேசாமல் கருவறைக்குப் போய்வரும் உரிமயையை எங்களுக்குக் கொடுங்கள். ஆயிரம் ஆண்டுகாலம் இறைவனின் ஷேமத்தைப் பார்த்துக்கொண்ட மக்களால் கருவறையில் ஷேம் ஷேம் நடக்காமல் பார்த்துக்கொள்வது ஒன்றும் பெரிய சிரமமில்லை. அரசாங்கமும் அர்ச்சகர்ரை தண்டித்து பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளாகவேண்டியிருக்காது.

Advertisements

“காஞ்சி அர்ச்சகர் தேவநாதன்- கருவறைங்குறதை வேற மாதிரி புரிஞ்சுகிட்டாரோ ??” இல் 10 கருத்துகள் உள்ளன

 1. நச்சுனு நாலு வார்த்தை சொன்னீங்க பாருங்க உண்மையிலேயே சூப்பர். தொடர்ந்து எழுதவும்.

 2. கோயில் புரோகிதர்களால் செய்யப்படும் மற்ற குற்றங்களை ஒப்பிடுகையில் தேவநாதனின் செயல் கடுகு அளவு கூட கிடையாது. பேசாமல் கருவறைக்குப் போய்வரும் உரிமயையை அனைத்து ஐாதியினருக்கும் கொடுங்கள்.

 3. Villava,

  I have been checking your blog daily.. Nice witting… All are very good. I am getting angry while reading these… But when the people/political thieves are going to change?

  What is that Widow scheme?

  Regards
  Suresh

 4. தங்களின் குருன்தளம் மிக அருமையான செயடிகளைக்கொடுகிறது…இதில் மற்ற ஜாதியினரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது நல்லது தான்… ஆனால் ஜாதியே தேவை இல்லை என்பதை எடுத்துரைக்கலாமே? இன்னும் நன்றாக இருக்கும்… அதே போல், தேவநாதன் செய்தது குற்றமே… கடவுள் பெயரைச்சொல்லி நடக்கும் பல கொடுமைகளுள் இதுவும் ஒன்று… இன்னமும் மக்கள் பக்தி கடவுள் என்று நம்பிக்கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை…பெரியார் வழியைக் கை ஆளுவது தன சாலச்சிறந்தது…

 5. அது ஒன்றுமில்லை. ஜெயேந்திரர் கள்ள உறவு கொண்டிருந்த பெண்கள் எல்லோரும் விதவைகள். (அவர் தவறாக நடக்க முயன்ற அனுராதா ரமணனும் கணவனை இழந்தவரே). அதைத்தான் அப்படி குறிப்பிட்டேன்.

 6. திரு JSP,

  ஒரு கள்ள உறவு செய்திக்கு தரப்படவேண்டிய அளவு முக்கியத்துவம் மட்டுமே இந்த விவகாரத்திற்கு தரப்பட்டிருந்ததா என சொல்லுங்கள். நான்கு வாரம் தொடர்ந்து ஃபாலோ அப் செய்தி போடும் அளவுக்கான பிரச்சினை இல்லை என்பது என் கருத்து. ஒருவேளை இக்கருத்து தெளிவாக வெளிப்பட்டிருக்காவிட்டால் அது என் பிழையே. எல்லோரையும் கருவறைக்குள் அனுமதியுங்கள் எனும் கருத்திற்கு உங்கள் விமர்சனம் என்ன என்பதையும் சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

 7. நம்ம தேவ நாதாரி..Sorry.. Sorry.. நாதன்
  கடவுளுக்கே , காமத்துப் பால் சொல்லிக்கொடுக்கிறார்..
  அதை போயி பெருசா எடுத்துகிட்டு…

  போங்க சார்.. போங்க.. போயி குடும்பம் , குட்டியப் பாருங்க..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s