புவி வெப்பமயமாதல் – தவணை முறையில் வரப்போகும் பேரழிவு

புவி வெப்பமயமாதல், கோபன் ஹேகன் மாநாடு, பருவநிலை மாற்றம்

Advertisements

ஒருவழியாக படுதோல்வியில் முடிந்துவிட்டது கோபன் ஹேகன் மாநாடு. இது ஓரளவு எதிர்பார்த்ததுதான். வளரும் நாடுகளும் வளர்ந்த நாடுகளும் மாநாட்டுக்கு முன்பே தங்கள் கருத்துவேறுபடுகளை உலகிற்கு தெரியப்படுத்தின. உலகின் மொத்த கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் நாற்பது சதவீதத்திற்கான உரிமையாளர்களான அமெரிக்காவும் சீனாவும் ஏற்காத எந்த ஒரு தீர்மானமும் பிரயோசனப்படப்போவதில்லை. இவ்விரு நாடுகளும் உலக மக்களின் நலனைப்பற்றி கவலைப்படுகிற நாடுகளும் அல்ல. எனவே இம்மாநாடு வெற்றிபெறாது என்பது பலராலும் அனுமானிக்கபட்டது.

ஆனால் கேள்வி என்னவெனில் பருவநிலை மாற்றம் தொடர்பான தகவல்களும் எச்சரிக்கைகளும் மக்களை சென்றடைந்ததா என்பதே. மேலோட்டமாக பார்க்கையில் புவிவெப்பமயமானால் துருவப்பகுதிகளிலும் மலைப்பிரதேசங்களிலும் உள்ள பனி உருகும், அதனால் கடல் மட்டம் உயரும். கடல் மட்டம் உயர்ந்தால் மாலத்தீவு உள்ளிட்ட தீவு தேசங்கள் கடலில் மூழ்கும். இந்த தகவல்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். கடல் மட்டம் உயர்வது புவிவெப்பமயமாவதன் ஒரு சிறு வெளிப்பாடு மட்டுமே. இது ஒரு பகுதி பிரச்சினைதான் என்றாலும் கொஞ்சம் மோசமானதே. அண்டார்டிகாவில் உள்ள பனி அடுக்குகள் உருகிவிடும்பட்சத்தில் அது கடல் மட்டத்தில் அறுபது மீட்டர் உயர்வை உண்டாக்க முடியும். ஆனால் இது குறித்து பெரிதாய் கவலைப்படுபவர்கள் யாரும் இல்லை. ஏனெனில் இதனால் இந்த நூற்றாண்டுக்குள் கடுமையாக பாதிக்கப்படப்போவது மாலத்தீவு உள்ளிட்ட சில நாடுகள்தான். மீறிப்போனால் பிரான்சும் இந்தியாவில் வங்காளமும் சிக்கலுக்கு உள்ளாகலாம்.ஏறத்தாழ புவிவெப்பமயமாதல் என்பது கடற்கரையோர பிரதேசங்களின் பிரச்சனையாக மட்டுமே அறியப்பட்டிருக்கிறது.

வடக்கின் நிலை வேறு . இமயமலையின் பனி அடுக்குகள் மிக வேகமாக உருகிவருகிறது. பெருமளவு பனி உருகிவிட்டால் இமயமலையில் உற்பத்தியாகும் ஆறுகள் வற்றிவிடலாம். இதைவிட ஒரு மோசமான சூழல் ஆசியாவிற்கு வரமுடியாது. இமயமலையையும் அதில் உற்பத்தியாகும் ஆறுகளையும் நம்பி ஆசியாவில் நூறு கோடி மக்கள் வாழ்கிறார்கள். கங்கையும் பிரம்மபுத்திராவும் வற்றிப்போனால் இவர்களின் கதி என்ன ? இந்தியாவின் மற்ற பகுதிகளின் நிலையும் அத்தனை லட்சனமாக இல்லை. குஜராத் மாநிலத்தில் மட்டும் விவசாயத்திற்கு பயன்படுத்த தகுதியற்றதாகி விட்ட நிலப்பரப்பு ஒரு கோடியே முப்பத்தைந்து லட்சம் ஹெக்டேர்,( மண் அரிமானம், நிலம் உப்புத்தன்மையாவது ஆகிய பல்வேறு காரணிகளால் ). ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு நிலம் பயனற்றதாகிக்கொண்டிருக்கிறது இந்தியாவில். நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறையும் வரும் வேளையில் மேலும் பல பகுதிகள் பாலைவனமாகும் என்பதுதான் யதார்த்தம்.

வெப்பநிலை ஒரு டிகிரி உயர்ந்ததற்கே உலகம் முழுதும் விளைபொருள் உற்பத்தி கடுமையாக சரிந்துவிட்டிருக்கிறது . ( ஆனால் விலை உயர்வுக்கு இது மட்டும் காரணமில்லை.. சரத் பவார் சொல்வதை நம்பித்தொலைக்காதீர்கள்) துருவப்பகுதிப் பனி முழுமையாக உருக பூமியின் வெப்பநிலை ஆறு டிகிரி உயர வேண்டும். ஆனால் மூன்று முதல் நான்கு டிகிரி வெப்பநிலை உயர்ந்தாலே அதன் விளைவுகளை நம்மால் சமாளிக்க முடியாது. கேத்தரீனா எனும் ஒரு புயலுக்கே “பூலோக சொர்கமான” அமெரிக்கா திக்குமுக்காடிப்போனது. கேத்தரீனாவெல்லாம் சாதாரணம் எனும் அளவுக்கு பெரும் சூறாவளிகளும் கடல் கொந்தளிப்புக்களும் பருவநிலை மாறுபாட்டினால் உருவாகும். அதை சமாளிக்க எந்த அரசுகளாலும் முடியாது. இயற்கைக்கு எதிராக சண்டையிட்டு மனிதர்களால் ஒரு நாளும் வெற்றி பெற முடியாது. காடுகள் அழிக்கப்படும் பரப்பளவு உயர உயர கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரிக்கின்றது (சம விகிதத்தில் ) என்பது ஒரு எளிமையான உதாரணம்.

ஆனால் இந்த அளவு ஆபத்துக்கள் இருக்கும் ஒரு விஷயத்தின் மீது உலக நாடுகளின் அக்கறை எப்படி இருந்தது என்பதைத்தான் நாம் கோபன் ஹேகன் மாநாட்டில் பார்த்தோம் . பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டோம் என இந்தியா தெளிவாக அறிவித்தது. இறையான்மையை பாதிக்கும் எனக்கூறி கார்பன் வெளியேற்றத்தின் மீதான கட்டுப்பாடுகளை ஏற்கமுடியாது என்றது சீனா. வளர்ந்த நாடுகளுக்கு சாதகமான தீர்மானம் ஒன்று சமர்பிக்கப்படவிருந்த விசயம் ஒரு பத்திரிக்கையில் வெளியாகி ஒரு பூகோள துரோகம் அம்பலப்பட்டது. இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் என்பது சதவீதத்தை குறைப்பது எனும் கியோட்டோ ஒப்பந்தத்தை சத்தமில்லாமல் கைகழுவிவிட்டார்கள்.

வழக்கம்போலவே இந்த விளைவுகளாலும் முதலில் பாதிக்கப்படப்போவது சாதாரண மக்கள்தான். இவர்கள் புவிவெப்பமயமாதலுக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாதவர்கள். கார்பன் வெளியேற்றத்தில் தனிநபர் பங்களிப்பு என்பது ஒரு ஏழை நாட்டின் குடிமகனைவிட ஒரு அமெரிக்க குடிமகனுக்கு இருபது மடங்கு அதிகம். ஆனால் இதனால் விளையும் ஆபத்துக்களான பஞ்சம் தொற்றுநோய் ஆகியவற்றை அனுபவிக்கப்போவது ஏழை நாடுகள்தான். எல்லை கடந்த பயங்கரவாதம், எயிட்ஸ் மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்து நமது அரசுகளும் ஊடகங்களும் பேசாத நாளே கிடையாது. ஆனால் புவி வெப்பமயமாவதன் பின்விளைவுகளைப் பற்றி இவர்களின் கவனம் எந்த அளவுக்கு இருக்கிறது ?

மரணத்தை வரவேற்பது மட்டும்தான் நாமக்கிருக்கும் ஒரே வாய்ப்பா ??

(பாகம் 2 அடுத்த பதிவில்..)

“புவி வெப்பமயமாதல் – தவணை முறையில் வரப்போகும் பேரழிவு” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. ovvaru manithanukum puvi veppamayamathal’la thani pangu iruku, athula ealai nadu panakara nadu endra vearupaadu illa. apidi paathalum naamalum valarkindra nadu, valarntha nada vida valarum naadukuthan ithula pangu athigam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s