கருணாநிதியின் ஓய்வு அறிவிப்பு – அடப்பாவமே., இனி தமிழ்நாட்டின் கதி ?


தலைப்பை பார்த்ததும் பயங்கர கோபத்தில் இருப்பீர்கள் ஆகவே நான் படித்த ஒரு கதையை  சொல்லி உங்களை சகஜநிலைக்கு கொண்டுவர முயற்சி செய்கிறேன். ஒரு ஊரில் ஒரு பண்ணையார் இருந்தாராம். பண்ணையார் என்பதால் வாழ்நாள் முழுக்க ஊர்மக்களுக்கு எதிரான காரியங்களையே செய்துவந்தாராம். துரதிருஷ்டவசமாக அவர் பிறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டமையால் முதுமையடைந்து நோய்வாய்பட்டாராம். மரணப்படுக்கையில் இருந்த அவர் ஊர் மக்களை அழைத்து என் சவ ஊர்வலம் என்போன்ற கெட்ட பண்ணையார்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும், எனவே தான் இறந்ததும் தனது சவத்தை கயிற்றில் கட்டி தெருத்தெருவாக இழுத்துச்செல்லுங்கள் என்றும் சவத்தை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு அவ்வளவு படுத்துங்கள் என்று சொல்லிவிட்டு செத்துப்போனாராம்.

ஊர் மக்களும் பரிதாபப்பட்டு அவரது விருப்பப்படியே ஏற்பாடுகளை செய்தார்களாம். அதற்கு முன்பு அந்த பண்னையார்  தன் மகனிடம் ஒரு புகார் கடிதம் எழுதி அதை போலீசில் கொடுக்கும்படி சொல்லியிருந்தாராம். அந்த கடிதம் என்னவெனில் ” ஊரில் உள்ள என் அப்பாவின் எதிரிகள் அவரது பிணத்தை கைப்பற்றி அதை அவமானப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே அவரது பிணத்தை காப்பாற்றி நல்ல முறையில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்பதுதான். ப்ண்ணையார் வீட்டு புகார் இல்லையா போலீசும் உடனடியாக உரிய படையுடன் போன போது ஊர்மக்கள் பண்ணையாரை கட்டி இழுத்துக்கொண்டு ஊர்வலம் போனார்கள். அதை பார்த்த காவலர்கள் ( உயர்நீதிமன்றம் என்று நினைத்தார்களோ என்னவோ ) தங்கள் பாணியில் அதை கையாள அன்று சில பல ஜீவன்கள் பண்ணையாருக்குத் துணையாக பரலோகம் போனார்கள். இப்படி செத்தும் பண்ணையார் பண்ணையாராகவே இருந்தார் என்று கதை முடியும்.

நிற்க, நாம் தலைப்புக்கு வரலாம். ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர், சாய்வுக்கே சாய்வு கொடுப்பவர் என்று பல புகழாரங்களுக்கு சொந்தக்காரர் என்பதால் முதலில் நம்பத்தான் முடியவில்லை. எனினும் ஓய்வு உறுதி என்று இரண்டு முறை சொல்லிவிட்டதால் அதை பற்றி யோசிக்காமல் இருக்கமுடியவில்லை. என் அறிவுக்கு எட்டியவரை கருணாநிதியின் ஓய்வுக்குக் பிறகு கீழ்காணும் சிக்கல்கள் வரலாமோ என்று பயப்படுகிறேன்.

குடும்பம் ஒன்றுக்கு மேற்பட்ட கதம்பம் : இறை நம்பிக்கையுள்ள இந்த பகுத்தறிவுக் குடும்பத்தின் கிளைகள் அவ்வளவு சுலபத்தில் எண்ணிவிட முடியாதவை. இவை கருணாநிதி எனும் ஒற்றை இழையில் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கின்றன. ஸ்டாலின் முதல்வராகும் பொழுது ஏனைய மக்கட்செல்வங்கள் உரிமைக்குரல் எழுப்புவார்கள் அவர்களுக்குள் பல உப குழுக்களும் தோண்றும். சமாதான நடவடிக்கை எடுக்கவேண்டிய மக்களைப் பெற்ற மகராசிகள் இரண்டுபேருக்குள்ளும் ஒத்துவராது என்பதால் இது இன்னும் சுவாரசியமாக இருக்கப்போகிறது. இந்திரா வங்கிகளை தேசியமயமாக்கியதைப்போல கருணாநிதி இப்போதைக்கு திமுக மாவட்ட செயலர் பதவிகளை குடும்பமயமாக்கிவிட்டு இன்னும் பத்தாண்டுகள் கழித்து எல்லா சட்டமன்ற உறுப்பினர் சீட்டையும் குடும்பமயமாக்கினால் மட்டுமே  சுமுக  நிலையை பராமரிக்கலாம் (பின்னே இப்போ பள்ளிக்கு போகும் வாரிசுகள் பிற்பாடு சும்மா இருப்பார்களா ??). வேண்டுமானால் கட்சியை சட்டீஸ்கர், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்களுக்கு விரிவுபடுத்தி அங்கே கட்சிக்காரர்களுக்கு  வாய்ப்பு கொடுத்துக்கொள்ளலாம்.

அட்டானமஸ் அழகிரி : அனேகமாக கடந்த ஆண்டு மத்தியில் கருணாநிதி தனது வாழ்நாள் சாதனையாக அழகிரி மற்றும் ஸ்டாலினுக்கான சென்ட்ரல் மற்றும் ஸ்டேட் பாகப்பிரிவினையைத்தான் எண்ணியிருப்பார். என்ன பாராட்டுவிழா நடத்த முடியவில்லையே என்ற ஒரு குறை மட்டுமே இருந்திருக்கும். அஞ்சாநெஞ்சனை ஆங்கிலம் பயமுறுத்தும் என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள். ஃபெர்டிலைசர், ஃபார்மசூட்டிகல்ஸ் என்று கடினமான வார்த்தைகளை கொண்டிருக்கும் ஒரு துறையை ஏமாற்றி அஞ்சாநெஞ்சனின் தலையில் கட்டியது தாமதமாகத்தான் அவருக்குத் தெரிந்தது. ஹிந்தி டியூசனும் வேலைக்காகவில்லை ( குறைந்தபட்சம் “தூக்குடா அவனை” ” கொஞ்சம் தட்டிவை அவனை ” போன்ற வார்த்தைகளின் ஹிந்தி மொழி பெயர்ப்புகளையாவது கற்றுக்கொண்டாரா என தெரியவில்லை  ).

இப்போது மாநில அரசியலுக்குத்தான் வருவேன் என்று சொன்னதில் துவங்கிவிட்டது முகவின் திருகுவலி. தமிழ்நாட்டின் சரிபாதி மாவட்டங்களில் திமுகவை கட்டுபடுத்தும் அதிகாரத்தைக் கேட்கிறார் அண்ணன். இப்போதே கருணாநிதியின் ஓய்வை அழகிரி விரும்பவில்லை என்பது அவரது பேச்சில் தெரிகிறது. கருணாநிதி பதவியிறங்கும் பட்சத்தில் கட்சியினர் இவ்விருவரில் ஒருவரது கோஷ்டியில் ஐக்கியமாகி நாட்டை இருமடங்கு ரணகளப்படுத்துவார்கள். கொஞ்சமேனும் கட்டுப்படுத்தும் அப்பாவும் இல்லாவிட்டால் தமிழ்நாடு அஞ்சாநெஞ்சனுக்கு அஞ்சாமல் இருக்கமுடியாது.

ஒரு பய தொழில் பண்ண முடியாது, ஒரு சோடா விக்க முடியாது.. தெரிஞ்சுக்க : முரசொலி மாறனால் அறிமுகப்படுத்தப்பட்ட கலாச்சாரமான தொழில் சாம்ராஜியத்தை அமைப்பது எனும் பழக்கம் எல்லோராலும் இப்போது பின்பற்றப்படுகிறது. இப்போதே கனிமொழி கார்த்தி சிதம்பரத்துடன் கூட்டணி போட்டு கோவை வட்டாரத்தில் நூற்பாலைகளை வாங்கிக்குவிக்கும் தகவல் கிடைக்கிறது. கருணாவின் ஓய்வுக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்கள் போட்டி போட்டு தொழிற்சாலைகளை வாங்கும் சாத்தியம் பிரகாசமாக இருக்கிறது. இவர்களுக்குள் அடித்துக்கொண்டால் இவர்களது நிறுவன ஊழியர்கள் மோட்சமடையும் சாத்தியம் இன்னும் பிரகாசமாக இருக்கிறது. ஆகவே இந்த குடும்பத்தாரது நிறுவனங்களில் வேலைசெய்வோர் உடனடியாக இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள் (தியாகம் செய்யும் ஊழியர்கள் வேலைசெய்யும் நிறுவனத்தைப் பொறுத்து ஏதேனும் ஒரு டிவியில் காடப்படும் வாய்ப்பைப் பெறுவர்..).

இங்கு சிறந்த முறையில் வாழ்த்துப்பா இயற்றப்படும் : ஒரு பரிதாபத்துக்குரிய கூட்டம் கருணாநிதியை வழ்த்திப்பாடியே வயிறு வளர்த்துவருகிறது. கருணாநிதி ஓய்வு பெற்றபின் அவரை வாழ்த்திப்பாடுவது பிரயோஜனப்படாது.  நீண்ட நாட்களாக அவருக்கு வார்த்தைகளால் சொறிந்து விட்டே வாழ்க்கையை வளமாக்கிக்கொண்டதால் வேறு வேலைக்கும் போக முடியாது. அழகிரி ஸ்டாலினிடம் ஏற்கனவே அந்த வேலைக்கான ஆட்கள் தாராளமாக இருக்கிறார்கள். இங்கு திருமணம் மற்றும் இதர சுப காரியங்களுக்கு சிறந்த முறையில் ஒளி ஒலி அமைத்துத்தரப்படும் என்ற மைக்செட் கடைக்காரர்களின் வாசகத்தைபோல இவர்களும் “இங்கு சிறந்த முறையில் வாழ்த்துப்பா இயற்றப்படும் ( டோர் டெலிவரி இலவசம் )” என ஒரு போர்டை வைத்துக்கொண்டு யாராவது வர்றாங்களா என்று காத்திருக்க வேண்டியதுதான்.

ஆஸ்கார் லட்சியம். கோல்டன் குளோப் நிச்சயம் : ( ஒன்னு எழுதுனதுக்கு கொடு, இல்லை எழுதாம இருக்குறதுக்காச்சும் கொடு) முக அவர்கள் எப்போதும் ஏதாவது வேலை செய்தே பழகியவர். அவரால் நிச்சயம் வீட்டில் ஓய்வாக இருக்கமுடியாது. திடீரென இரண்டு மாதத்திற்கு ஒரு திரைக்கதை என முறைவைத்து எழுதினால் நாம் என்ன ஆவது ?? (அது எப்படி இவரது  படத்தில் பணியாற்றுபவர்கள் பாடாவதியாகவே இருக்கிறார்கள் என்று ஒரு நண்பரிடம் கேட்டேன், உளியின் ஓசையை ஸ்பீல்பெர்க் எடுத்தாலும் இப்படித்தான் இருக்கும் என்றார்) இது மற்ற எல்லா பிரச்சனைகளையும்விட முக்கியமானது. ரகுமானோடு இணைகிறார் கருணாநிதி என்று ஒரு இணையதளம் இப்போதே பீதி கிளப்புகிறது. கலைஞர் திரையுலகிற்கு பல நன்மைகள் செய்திருக்கிறார் என்று ரஜினியும் கமலும் அடிக்கடி சொல்கிறார்கள். அதில் அவர் முழுநேரமும் திரைக்கதை எழுதாததும் ஒன்றாம். எது எப்படியோ டிரைலரையாவது கொஞ்சம் பாக்குற மாதிரி எடுங்க அய்யா.. இது அதிக நேரம் டி.வி பாக்குறவுங்க இருக்குற மாநிலம்.

இன்னும் பாராட்டுவிழாக்கள் குறைந்துபோவது, திரையுலகம் ஆதரவில்லாமல் நிற்பது என பல விசயங்கள் இருக்கின்றன. இருந்தாலும் இந்த பதிவுக்கு இது போதுமென்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

Advertisements

“கருணாநிதியின் ஓய்வு அறிவிப்பு – அடப்பாவமே., இனி தமிழ்நாட்டின் கதி ?” இல் 8 கருத்துகள் உள்ளன

 1. திரு. வினோத்,

  இந்த தலைப்புக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன் என்று நினைக்கிறேன்.

  அதனால் கொஞ்சம் பொருத்தருளுங்கள்.

  நன்றி.

  வில்லவன்

 2. //Posted by vinoth on ஜனவரி 23, 2010 at 12:22 மு.பகல்
  will you write an article about the comparision of m.k and jothibasu?//

  சார்.. சும்மா டமாசு பண்ணாதீங்க..
  மு.க – வோட யாரையும் கம்பேர் செய்ய
  முடியாது…( ஜோதி வாசு.. பாவம் .. நல்லவரு..
  அவர விட்டுருங்க..)

  தமிழ் நாட்டை , சோமாலியா
  ஆக்காம என்னோட தலைவருக்கு ஓய்வா?..

 3. இப்போது தான் பார்த்தேன். மிகவும் ரசித்தேன். வழக்கம்போல் இந்த அறிவிப்பிற்கு எல்லாரும் ‘வேண்டாம் என்று’ அலறுவார்கள். நண்பர் கூறியது போல் இருவரைக் காலி செய்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்றெல்லாம் சொல்லி ஆட்ச்சியில் இருந்தே சாவதற்கு முயற்சிப்பதுதான் மாஸ்டர் ப்ளான்.

  இல்லையென்றால் மக்களை அமரவைத்து ஆட்சி செய்யும் முறையை, அழகை(?) சொல்லிக் கொடுத்துவிட்டுத்தான் சாவது என்பதும் முடிவு.

  எது எப்படியானாலும், செத்தால் தமிழகம் உருப்படலாம். இல்லை பதவி இறக்கப்பட்டால் தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பலாம். இல்லைன்னா பிடித்திருப்பது சரியான சகடை சனிதான்.

 4. நல்லவர்களை நான் நாள்தோறும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன், அதிகாரத்தில் உள்ள யாரும் அப்படியில்லை என்பதுதான் இப்படியான கட்டுரைகளை எழுதவைக்கிறது..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s