இன்னொரு பாராட்டுவிழாவாம் – என்.டி திவாரி முதல்வராக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் திரைக்’கலைஞர்களே’?


நம் நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் கட்டிட வேலை செய்கிறார்கள். அதைவிட சுலபமான ஆனால் வெளியே சொல்லிக்கொள்ள முடியாத பல வேலைகள் இருப்பது அவர்களுக்குத் தெரியும். ஆயினும் அவர்கள் அவ்வேலைகளை தேர்வு செய்வதில்லை. இவ்வாறே தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணகான மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் கவுரவமான வாழ்வையே தெரிவு செய்திருக்கிறார்கள். அதன்பொருட்டு அவர்கள் தமது வாழ்வியல் சிரமங்களை சகித்துக்கொள்ள தயங்குவதில்லை. துரதிருஷ்டவசமாக திரையுலகினர் இப்படிப்பட்ட தன்மானமுள்ளவர்கள் பட்டியலில் சேரும் தகுதியை பலியிட்டுவிட்டார்கள், அதுவும் அவர்களது துறையின் மேல்மட்டத்து ஆட்களில் நலன்களுக்காக மட்டும்.

கருணாநிதியின் கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் மிக அதிகமான சகாயங்கள் திரையுலகினருக்கு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களும் வஞ்சனை இல்லாமல் பாராட்டுவிழாக்கள் நடத்தி செம்மொழி நாயகனை முடிந்த மட்டும் குளிர்விக்கிறார்கள். தன்னைத்தானே பாராட்டிக்கொள்வதிலும் தன்னை பிறர் பாராட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என விரும்புவதிலும் கருணாநிதிக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்பது  I.Q வில் அறுபது மதிப்பென் பெற்றவர்களுக்குக்கூட தெரியும். பலரும் கருணாநிதிக்கு பாராட்டுவிழா நடத்தத் தயாராக இருந்தும் இவர் சினிமாக்காரர்களுக்கு மட்டும் தனி கரிசனம் காட்டுவது ஏன் ? ஏதோ சுவிசேஷ கூட்டத்துக்கு வருவதைப்போல நடிகர்கள் இவரிடம் வருவதும் அவர்களது பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படுவதும் எப்படி ?

உள்ளாட்சிகளின் வருவாய் சுமார் நூறு கோடி ரூபாய் திருடப்பட்டுத்தான் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு தரப்படுகிறது. திரையுலகினருக்கு வீடுகட்ட ஏராளமான நிலம் தரப்படுகிறது, ஒதுக்கீட்டில் தயாரிப்பாளர்களும் அடக்கமாம். கமலஹாசன் நடத்திய கருத்தரங்குக்கு ஐம்பது லட்சம் அரசினால் இனாமாக தரப்பட்டது. இப்போதோ ராதிகா கண்ணை கசக்கியவுடன் திருட்டு வி.சி.டி வைத்திருப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கிறார் முதல்வர். வரும் காலங்களில் நடிகர் நடிகை வீடுகளில் பித்தளை சொம்பு காணாமல் போனால்கூட நேரே கோபாலபுரத்துக்குத்தான் போவார்கள் போலிருக்கிறது. இனி ஒவ்வொருவரும் எல்லா தமிழ்ப் படங்களையும் பார்க்கவேண்டும் என்பதை கட்டாயமாக்கும் சட்டம் போட்டுவிடுவாரோ என்று வேறு பயமாக இருக்கிறது.

இப்படியான மிதமிஞ்சிய சினிமா சினேகம்தான் கருணாவை திவாரியுடன் ஒப்பிட வைக்கிறது. திவாரி மீதான குற்றச்சாட்டு என்ன? ராதிகா எனும் பெண்மணிக்கு அரசின் சலுகைகளும் சில சுரங்க ஒப்பந்தங்களும் தரப்பட்டன. அவரும் (ராதிகா ) அவரது சக ஊழியர்களும் ?? திவாரியை சுலபமாக சந்திக்க முடிந்தது. ராதிகாவை சந்தோஷப்படுத்தும் காரியங்களை திவாரி செய்தார் பதிலுக்கு திவாரியை திருப்திப்படுத்தும் ஏற்பாடுகளை ராதிகா செய்தார். இந்த செய்திகளை கலைஞர் & கலையுலக கோஷ்டியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆட்கள் வேறு, செய்கைகள் வேறு ஆனால் ‘ பெரியவரை திருப்திப்படுத்த’ வேண்டும் என்ற நோக்கம் மட்டும் ஒன்றுதான் இல்லையா ?  ஹைதராபாத் ராதிகா ஏற்பாடு செய்த சந்தோஷப்படுத்தும் விழாக்களின் தொலைக்காட்சி உரிமம் முன்கூட்டியே விற்பனை செய்யப்படவில்லை என்பது மட்டுதானே வேறுபாடு ?

இப்படி விழாக்கள் எடுத்து அவரிடம் எங்களுக்கு வேண்டியதை உரிமையுடன் கேட்கிறோம் என்று கமலஹாசன் ஒரு விழாவில் வெளிப்படையாகவே சொல்கிறார். வரும் ஆறாம் தேதி (பிப்ரவரி) இன்னொரு பாராட்டுவிழா நடத்தப்போகிறார்கள். இது இடம் ஒதுக்கியதற்கும் திருட்டு வி.சி.டி ஒழிப்பு முயற்சிக்காகவுமாம். அவ்விழாவில் என்னென்ன கேட்கப்போகிறார்களோ தெரியாது . பருப்புவிலை உயர்ந்து ஒரு வருடம் கழித்து சில்லறை விலை குறைய நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லும் சோம்பேறி அரசிடம் சினிமா பிரபலங்கள் மட்டும் எல்லா காரியங்களையும் போர்க்கால அடிப்படையில் முடித்துக்கொள்ள முடிவது ஒரு மோசமான முன்னுதாரணம்.  நடிகைகளின் நடனத்துடன் கூடிய விழா ஏற்பாடு செய்து கோரிக்கை வைத்தால்தான் காரியம் நடக்கும் என்றால் ஏழை மீனவனும் விவசாயியும் எங்கே போவார்கள்?

போகட்டும், இந்த விசயத்தில் நம்மால் ஒன்றும் செய்துவிட முடியாது. ஆயினும் இது போன்ற சொறிந்துவிடும் விழாக்களை பார்க்காமல் புறக்கணிப்பது நமக்கு சாத்தியம்தான். மேலும் நண்பர்கள் யாரும் திருட்டு விசிடி பார்ப்பதற்கு கூச்சமோ வருத்தமோ கொள்ளாதீர்கள். கதையையும் காட்சியையும் திருட இயக்குனர்கள் தயங்குவதில்லை, டிக்கெட் விலையை தாறுமாறாக உயர்த்தி ரசிகனிடம் கொள்ளையடிக்க தயாரிப்பாளர்கள் தயங்குவதில்லை, மன்றம் எனும் பெயரில் ஊரில் உள்ள இளைஞர்கள் நேரத்தைத் திருட நடிகர்களும் அவர்களது அப்பாக்களும் தயங்குவதில்லை, பிறகு ஏன் நாம் மட்டும் திருட்டு வி.சி.டிக்கு தயங்க வேண்டும் ? ஆகவே தமிழ் சினிமா பார்ப்பது என்று விபரீதமாக முடிவு எடுத்த பிறகு படத்தை குறைவான செலவிலேயே பாருங்கள். இணையத்தில் தரவிறக்கம் செய்து பார்ப்பது இன்னும் ஷேமம்.

ஏனெனில் நம் பணத்தை நாம்தான் பாதுகாக்கவேண்டும், சினிமாக்காரர்களை பாதுகாக்க கருணாநிதி இருக்கிறார்.

Advertisements

“இன்னொரு பாராட்டுவிழாவாம் – என்.டி திவாரி முதல்வராக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் திரைக்’கலைஞர்களே’?” இல் 10 கருத்துகள் உள்ளன

 1. ஜக்குபாய் எடுக்க 17 கோடி செலவானதாகவும், அது திருட்டுத்தனமாக வெளிவந்ததால்
  , அந்த 17 கோடியும் நஷ்டமாம் நம்ம ராதிகாவுக்கு..

  வாளும் வள்ளுவரே, ராதிகாவின் துயர் துடைக்க , மக்கள் வரிப் பணத்திலிருந்து….
  உங்களுக்கு பாராட்டுவிழா நடத்த சொல்லி , அப்போது கொடுத்துவிடும்…

  எங்களுக்கா…
  அட உடுங்க தலைவா.. இன்னும் ரெண்டு நாள் குடும்பத்தோடு பட்டினியிருந்துட்டுப் போறோம்..

 2. நீங்களோ நானோ சொல்லி மக்கள் அந்த முடிவை எடுக்க தேவை இல்லை ஏன்னெனில் அவர்களே ஒரு பக்கம் விலைவாசி உயர்வு மற்றும் பிறவற்றின் மூலம் மக்கள் பணத்தை திருடிக்கொண்டு மறுபக்கம் தேன் ஒழுகுது என ஆசை காட்டி ஏங்க வைத்து விட்டு , திருடாதே என சட்டம் போட்டு  இதை மாற்ற முடியுமா என்ன ?

 3. அதோடு மதுரை மாவட்டம் வடிவேல்கரையில் ௨ ரூபாய் போட்டால் குடிதனீர் வரும் கருவியை அறிமுகபடுத்தி இருக்கிறர்களாம் அது பற்றியும் எழுதவும் 

 4. நண்பர்களே,

  திரையரங்க கட்டணம் குறித்த கலைஞரின் நேற்றைய பதிலை படித்தீர்களா ?

  எப்படி நம்ம முதல்வரின் மக்கள் நல சிந்தனை ?

 5. திரு பாஸ்கர்,

  இந்த செய்தி எனக்கு புதிது. ஏதேனும் தகவலோ அல்லது இணைப்போ கொடுத்தால் நானும் தெரிந்து கொள்வேன், ( ஆனால் எழுதுவேனா என்பது தெரியவில்லை )

 6. ஒரு மொள்ளமாரி கும்பல் வைத்து இருக்கீர்களா? உங்களுக்கு அற்புதமான வாய்பு..
  தேவை
  பத்து அல்லது அதற்கு மேல் இளசான பீஸ்…
  ஒரு dozen கைக்குட்டை.( போட்டுக்கத்தான் )
  குடுக்க ஒரு பட்டம்
  பின்பாட்டுக்கு ஒரு வாத்திய கோஷ்டி. அவ்வளுதான் .
  அள்ளிக்கோ தள்ளிக்கோ offer ல ஏக்கர் கணக்குல மக்கள் சொத்த வாங்கின்னு வந்துடலாம்..
  முக்கிய குறிப்பு : மேலும் விபரங்களுக்கு நிலம் வாங்கிய “கறி வியாபாரிகளை” ( தொடை கறி மற்றும் தொப்புள் கறி விற்கும் specialist) அணுகவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s