குஷ்பு – இந்திய அரசியலை அலங்கரிக்கப்போகும் பாலியல் சுதந்திரத்துக்கான போராளி !!!


இந்த வார குமுதத்திலும் ஆனந்த விகடனிலும் திருமதி குஷ்பு தான் கருத்து சுதந்திரத்துக்கான ஒரு  போராட்டத்தில் பெரும் வெற்றி பெற்ற பெருமிதத்தில் பேசியிருக்கிறார்.  குஷ்புவே பரவாயில்லை எனுமளவுக்கு அவரது வெற்றி குறித்து ஆனந்தக்கூத்தாடியிருக்கிறார் பத்திரிக்கையாளர் ஞாநி. கருப்பர்கள் பேருந்தில் அமரும் உரிமைக்காக போராடி வென்ற ரோசா பார்க்கர்கூட இப்படி பேட்டி தந்திருப்பாரா என்பது சந்தேகமே. ஒற்றை ஆளாக ஏழ்மையை ஒழிக்கும் தமிழ் சினிமா கதாநாயகனைப் போல தான் மட்டுமே கருத்து சுதந்திரத்துக்காக போராடி வென்றதை போல பேசியிருக்கிறார் குஷ்பு. கூடுதலாக தனது அரசியல் பிரவேசம் பற்றியும் தெரிவித்து தமிழர்களுக்கான எதிர்கால தலைவர் தட்டுப்பாட்டுக்கும் ஒரு நம்பிக்கை ஒளியை பாய்ச்சியிருக்கிறார்.

நமக்குத் தெரிந்ததுதான் என்றாலும் அவரது கருத்து சுதந்திரம் எனும் கோணத்தை ஒருமுறை பார்த்துவிடலாம். திருமணத்துக்கு முன்பான உடலுறவு என்பது ஒன்றும் தவறல்ல, அதை இளைஞர்கள் ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ளும் அளவு பக்குவப்பட்டுவிட்டார்கள். ஆயினும் இதுபோன்ற சூழ்நிலையில் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று பொருள்படும்படிக்கு அவரது முதலாவது கருத்து அமைந்திருந்தது. இதில் அவருக்கு சில தவறான புரிதல் இருக்கிறது என்றாலும் ஒரு கருத்தாக அதை ஏற்றுக்கொள்வதில் நமக்கு பிரச்சினை இல்லை. முதல் சிக்கல் என்னவெனில் அவரால் அவரது கருத்தை சரியானது என்று  இரண்டாவது முறை சொல்லத் துணிவு இல்லாததுதான். திருமணத்துக்கு முன்பு உறவு கொள்ளாதவர்கள் எத்தனைபேர் இங்கு இருக்கிறார்கள் என்ற அவரது கேள்வி எப்படிப் பார்த்தாலும் கருத்து சுதந்திரம் எனும் எல்லைக்குள் வராது.

குஷ்புவே ஒரு டிவி நிகழ்ச்சியில் ஒரு நடிகருடனான தனது உறவு பற்றி சொல்லியிருக்கிறார் ( பல ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.வி. சேகருடனான ஒரு மேடை நிகழ்ச்சியில் ஒரு ரசிகரது கேள்விக்கு இதை பதிலாகத் தெரிவித்தார்.. அனேகமாக அது ஒளிபரப்பானது கோல்டன் ஈகிள் டிவி என்று நினைவு). ஆக அவர் இந்தியாடுடே பேட்டி குறித்த தினத்தந்தியின் கேள்விக்கு தான் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாதவள் என்று சொல்வதுதானே நியாயம் ?  ஊரறிய தான் ஒத்துக்கொண்ட ஒரு விஷயத்தை சொல்லி நான் அப்படியிருந்தேன் ஆகவே அதை சரியென்று நான் நம்புகிறேன் என்று சொல்லியிருந்தால் முற்போக்காளர்கள் மட்டுமல்ல சாதாரண மக்களும் அவருக்கு ஆதரவாக சிந்திக்க முடியும். அதைவிட்டுவிட்டு ஊரில் யார்தான் பத்தினி என்று கொழுப்பெடுத்து கேள்வி கேட்பதன் மூலம் தன்னை மட்டும் கற்பு எனும் விவாதத்தில் இருந்து விடுவித்துக்கொள்கிறார் ( “அதெல்லாம் தமிழ் பெண்கள் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வச்சுக்க மாட்டாங்க என சிலர் சொல்லலாம். அப்படி சொன்னா நம்ம கண்ணை நாமே இறுக்கமா மூடிட்டு இருக்கோம்னு அர்த்தம்” இப்படித்தான் நேற்றைய ஆனந்த விகடனிலும் சொல்லியிருக்கிறார்). இதை துணிச்சல் என்று சொல்லும் முற்போக்குவாதியாய் இருப்பதைவிட கபடத்தனம் என்று சொல்லும் சாமானியனாக இருப்பதே நல்லது என்று நான் கருதுகிறேன்.

இரண்டாவதாக, அவரது கருத்து எயிட்ஸ் விழிப்புணர்வுக்கானதா என்பதும்கூட விவாதிக்கப்படவேண்டியதே.
சாதாரண மக்களுக்கு கட்டுப்பாடில்லாத பாலுறவு என்பது மோசமான பாதிப்புக்களை உருவாக்கவல்லது, குஷ்புவும்கூட இதை எதிர்கொண்டிருக்கூடும். திருமணத்துக்கு முன்பு உறவு வைத்திருந்த ஜோடிகளில் யாரேனும் ஒருவர் சர்வநிச்சயமாக கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகிறார். காதலிக்கையில் படுக்கையை பகிர்ந்துகொண்ட எல்லா ஜோடிகளிடமும் இந்தப் பிரச்சினை பாரபட்சமில்லாமல் இருந்திருக்கிறது. (இதுதொடர்பாக வேறொரு இடுகை எழுதும் திட்டமிருப்பதால் நான் சந்தித்த உதாரணங்களைப் பற்றி குறிப்பிடவில்லை). மேலும் ஒழுக்கத்தைத்தவிர (இருபாலருக்கும்தான்)  எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் 100% சதவிகிதம் பாதுகாப்பானதல்ல. இப்போதைய மீடியாக்களின் கைங்கர்யதால் இளைஞர்களை எல்லைமீற வைக்கும் புறத்தூண்டல்கள் கணிசமாக அதிகரித்திருக்கின்றன, இந்த நிலையில் வாய்ப்புள்ள சூழ்நிலையில் அதை பயன்படுத்தும் எண்ணங்கள்தான் வலுப்படுமே தவிர பாதுகாப்பு எனும் அம்சம் பின்னுக்குத்தள்ளப்படும் வாய்ப்பே அதிகம்.  ஆக குஷ்புவின் “எயிட்ஸ் விழிப்புணர்வு” கருத்து நிச்சயம் விழிப்புணர்வைத் தராது.

போதும். இதெல்லாம் தமிழ்நாட்டில் பரவலாக விவாதிக்கப்பட்டவை என்பதால் இதை இதற்குமேல் வளர்த்துவது முறையல்ல. அதனால் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகான விவாகாரங்களுக்கு வரலாம். பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து என்றாலும் ஒருவரது கருத்து சுதந்திரத்தை தடை செய்யமுடியாது என்று தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். இந்த நீதிமன்றம்தான் அருந்ததி ராயின் ஒரு ‘கருத்துக்காக’ அவரை ஒரு நாள் சிறைவைத்தது. கருத்து சுதந்திரத்தை போற்றும் இதே நீதிமன்றம்தான் குறைந்தபட்ச சகிப்புத்தன்மைகூட இல்லாமல் டீஸ்டா செதல்வாட் கோர்ட் வளாகத்திலேயே இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டது. ஆகவே நீதிமன்றம் சொல்லிவிட்டது என்பதற்காக குஷ்பு சொன்னது சரி என்று கண்ணை மூடிக்கொண்டு ஒத்துக்கொள்வது மடத்தனம்.

இந்தத் தீர்ப்புக்கு பிறகு குஷ்பு தனது அரசியல் ஆசையை வெளியிட்டிருக்கிறார். அதில் திமுகவே அல்லது அதிமுகவோ எதில் இணைவேன் என்று எனக்கே தெரியாது என்று ஒரு வாசகமும், காங்கிரசில் இணைவேன் எனும் சூசகமும் இருக்கிறது. ரொம்பநாளைக்கு முன்பு கொஞ்சம்போல சமூகப்பணி செய்த பெண்களும் சமீபமாக வாரிசாக இருப்பவர்களும் அரசியலுக்கு வருகிறார்கள், அந்தப் பட்டியலில் புதிய புரட்சியாக பாதுகாப்பான(கட்டுப்பாடற்ற??) பாலுறவு எனும் கருத்தை முன்வைத்துப்போராடினாலும் அரசியலுக்கு வரலாம் என்று காட்டப்போகிறார் குஷ்பு. அவரைப்போல முற்போக்குவாதிகள் காங்கிரசுக்கு வருவதை தான் வரவேற்பதாக சொல்லியிருக்கிறார் ஈ.வே.கி.ச.இளங்கோவன். அதுசரி ராஜீவின் சம்சாரம் என்பதற்காகவே சோனியாவை தலைமையேற்க அழைத்த கூட்டமில்லையா காங்கிரஸ். அவர்கள் குஷ்புவை வரவேற்பதில் என்ன வியப்பு இருக்கிறது?

ஆயினும் இந்த தீர்ப்பு மற்றும் நடிகை குஷ்புவின் அரசியல் பிரவேசத்தைத் தாண்டி நாம் கவனிக்க வேண்டிய சில கருத்துக்கள் இருக்கின்றன அதை நினைவுபடுத்திக்கொள்ள மட்டுமே இந்தப் பதிவு. இவர் ஒரு பெரும் துணிச்சல்காரி எனும் கருத்து அச்சு ஊடகங்களால் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறதோ எனும் சந்தேகம் எனக்கு எழுகிறது ( கேள்வி கேட்ட நிருபர்களிடம் ரவுடித்தனமாக நடந்துகொண்ட மத்திய அமைச்சர் ராசாவைப் பற்றி ஒரு தமிழ் பத்திரிக்கையும் செய்திபோடவில்லை என்பதை இங்கு நினைவுபடுத்திக்கொள்வது நல்லது). இவ்வார குமுதம் மற்றும் ஆ.வி படித்தவர்கள் அப்படியொரு எண்ணத்தில் இருப்பதையும் பார்க்கிறேன். கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப்போல அவர் கபடதாரியே தவிர துணிச்சல்காரர் அல்ல ஏனென்றால் ஒரு தொழில்முறை விபச்சாரிகூட தன் தலைவிதியை நொந்துகொள்வாரேயன்றி ஊர்ல எவ யோக்கியம் என்ற வாசகத்தை சொல்ல மாட்டார். இவரை துணிச்சலானவர் முற்போக்கானவர் என்று சொல்வது மேதா பட்கர், ஷர்மிளாவில் தொடங்கி தினசரி வாழ்வில் தான் எதிர்கொள்ளும் பல இன்னல்களுக்கு மத்தியிலும் சமூகப் பிரச்சனைகளுக்காக வீதிக்கு வந்து போராடும் லட்சக்கணக்கான பெண்களையும் நாம் அவமானப்படுத்துவது போலாகும்.

இப்போதைய இந்த ராமதாஸ் திருமாவை எதிக்கும் தைரியமும் அவருக்கு கருணாநிதியின் ஆதரவால் வந்ததுதான். சினிமா உலகில் கடுமையான சிரமங்களை சந்திக்கும் ஒரு நடிகை என்றும்கூட நாம் இவர் மீது பரிதாபம் கொள்ள முடியாது.அவர் வெறும் நடிகை எனும் வட்டத்தைத் தாண்டி பல பரிமாணங்களை அடைந்துவிட்டர். படத்தயாரிப்பாளராக அவரும் பெண்களை போகப்பொருளாகக் காட்டும் ஒரு சதைவியாபாரியே. தொழுவத்துக்கு இன்னொரு _____  வரக் காத்திருக்கிறது என்றுதான் இவரது அரசியல் பிரவேசத்தைப் பற்றி நாம் கருத்து சொல்லலாம். இப்போதும் நம்மில் யாருக்கேனும் குஷ்பு புரட்சிப்பெண்ணாகத் தோண்றினால் அந்த நபர் புரட்சியைப் பற்றியும் பெண்களைப்பற்றியும் இன்னமும் தெரிந்துகொள்ளவில்லை என்றே பொருள்கொள்ள வேண்டியிருக்கும்.

Advertisements

“குஷ்பு – இந்திய அரசியலை அலங்கரிக்கப்போகும் பாலியல் சுதந்திரத்துக்கான போராளி !!!” இல் 6 கருத்துகள் உள்ளன

 1. //அதை சரியென்று நான் நம்புகிறேன் என்று சொல்லியிருந்தால் முற்போக்காளர்கள் மட்டுமல்ல சாதாரண மக்களும் அவருக்கு ஆதரவாக சிந்திக்க முடியும். அதைவிட்டுவிட்டு ஊரில் யார்தான் பத்தினி என்று கொழுப்பெடுத்து கேள்வி கேட்பதன் மூலம் தன்னை மட்டும் கற்பு எனும் விவாதத்தில் இருந்து விடுவித்துக்கொள்கிறார//

  அருமையான பதிவு தோழர்

  குஷ்புவின் பதில்களில் நேர்மையான முகம் தென்படவில்லை. யாரும் யோக்கியமில்லை என்று எல்லோருடைய முகத்திலும் கொஞ்சம் சாணி பூசிவிடுகிறார். சமூக அக்கறை அவருக்கு இல்லையென்பதை இது காட்டுகிறது. யாரும் யாருடனும் படுத்து வாழுங்கள் என்று தொனிக்கும் அவரது வார்த்தைகள் அவர் இந்த சுயநலம் மட்டுமே கொண்ட சமூகத்தின் மோசமான முன்மாதிரியாக வருவார் என்பதைக் காட்டுகின்றன. இவர் போன்ற போலியான மனிதர்களை மேலே ஏற்றிவிடும் மக்கள் தவறான பாதையில் போகின்றார்கள் என்பதும் நிச்சயம்.

 2. A agree with your article. Kushboo does not anything except some cheap cinema business.So don’t pay attention what she said or is saying now. But I think Kushboo knows how to manipulate some people in India (It is my personal opinion).

 3. I agree with your article. Kushboo does not know anything except some cheap cinema business.So don’t pay attention what she said or is saying now. But I think Kushboo knows how to manipulate some people in India (It is my personal opinion).

 4. other than tamil people(she belongs to mumbai) who know about our culture. not only kusboo every person in the world is dependent to situation. but every one can beat that situation by good knowledge(get from good books,get from our senior people advice).no one ready for that.
  when our world will change to good path.

 5. முன்னோர்கள் களவொழுக்கம் வேண்டுமென விதித்த விதிகளை உடைப்பதில் கொஞ்சம் சந்தோசம் இருக்கதான் செய்யும்.

  குஸ்புவின் குழந்தைகளுக்கு இன்சியலாக சுந்தர்.சி கிடைத்துவிட்டார். எல்லோருக்கும் அப்படி அமையுமோ!.

  எத்தனை தமிழ்க் குழந்தைகள் தாய் தகப்பனின் பெயர் தெரியாமல் குப்பையில் கிடக்கப் போகின்றனவோ!….

  பாலியில் இச்சைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருங்காலத்தை கேள்விக் குறியாக மாற்றப் போகின்றார்கள்.

 6. I agree with ur comments. i also read the ananda vikatan interview.

  My question(s) to kushbu
  1. Now u r a hindu or tamilan or muslim?
  2. If she allow her daughter to use her advice or she help to purchase…… in a store.

  Ask her to reply? or ask Mr……..?

  We live in a society devils give advice or judge our childrens skills like

  KUSHBU, RAMBA, LAKSHMI, DANCE MASTERS, NAMITHA, ETC

  GOD ONLY SAVE OUR PEOPLE(IF HE IS)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s