போபால் – விழிப்பாக இல்லாவிட்டால் விற்பனை செய்யப்படுவோம்( உயிருடனோ அல்லது பிணமாகவோ).

போபால், அர்ஜுன் சிங், ராஜீவ் காந்தி, ஆண்டர்சன், யூனியன் கார்பைடு, கடலூர்

Advertisements

ஏறத்தாழ ஒரு மாதமாகிவிட்டது நான் பதிவெழுதி. அமீபியாஸிசுக்கும் அரியர் தேர்வுகளுக்கும் ஆளுக்கு இரண்டு வாரம் என கால்ஷீட் கொடுக்க வேண்டிய சூழ்நிலை, கூடுதலாக புதிய கலாச்சாரம் மற்றும் உன்னதம் இதழ்களுக்காக எழுத்தித்தர வேண்டிய கட்டுரைகளுக்கான காலக்கெடுவும் இந்த ஒரு மாதத்துக்குள்தான் இருந்தது. ஏதேனும் எழுதி வைக்கலாம் என்று சில தலைப்புக்களை யோசிக்கும் வேளையில்தான் போபால் வழக்கின் தீர்ப்பு வெளியானது.  போபால் படுகொலைகளுக்கான வழக்கின் தீர்ப்பு கொடுத்த அவமானம் ஒருபுறமிருக்க இதை ஒரு விபத்தாக மட்டும் கருதுகிற எனது சக வயதுக்கார நண்பர்கள் மற்றொருபுறமிருந்து அச்சுறுத்துகிறார்கள். தகவல் சேகரிக்க அவகாசமில்லாவிட்டாலும் ஏழுதுவது அவசியம் எனக் கருதுகிறேன், குறைந்தபட்சம் இதை ஒரு விபத்து என்று சொல்வோரின் பட்டியலில் நான் இல்லை என்பதை உரக்கச் சொல்வதற்கேனும் இதை நான் செய்யவேண்டியிருக்கிறது.

விபத்தல்ல படுகொலை : போபால் சம்பவம் ஒரு இரவில் திடீரென நடந்துவிட்ட சம்பவம் இல்லை. இதற்கு முன்பே பல விபத்துக்கள் அங்கு நடந்திருக்கின்றன. சில உயிர்கள் பலியாகியிருக்கிறது, பாதுகாப்பில்லாத பணிச்சூழலை எதிர்த்து பல தொழிலாளர் போராட்டங்கள் அங்கு நடைபெற்றிருக்கின்றன. 1982 ல் இருந்து பல பத்திரிக்கையாளர்கள் யூனியன் கார்பைடு ஆலையினால் வரப்போகும் பேரழிவுகளைப் பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். விபத்துக்கு முன்பு யூனியன் கார்பைடு நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அங்கு உள்ள மோசமான பாதுகாப்புக்குறைபாடுகள்  சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது ( இது பற்றி பல கடிதப்பரிமாற்றங்கள் ஆவணங்களாக இருக்கின்றன). அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மூன்று மடங்கு அதிகமாக மீதைல் ஐயோசயனேட் அதன் கொள்கலன்களில் சேமிக்கப்பட்டிருக்கிறது. விபத்து நடந்த நாளை ( டிசம்பர் 3, 1984) மட்டும்தான் ஆண்டர்சன் தீர்மானிக்கவில்லை, மற்றபடி  நடந்திருப்பது ஒரு பச்சைப் படுகொலை.

அர்ஜுன் சிங்- பலியிடப்பட்ட அடியாள் : தீர்ப்புக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு மீடியாக்களால் அதிகமாக தேடப்படுபவர் அர்ஜுன் சிங். ஆண்டர்சனை பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு அனுப்பியது யார் என்ற கேள்விக்கு காங்கிரசாலேயே கைகாட்டப்படும் ஆள் அர்ஜுன். அதாவது அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவுக்குத் தெரியாமல் அர்ஜுனே ஆண்டர்சனை அனுப்பிவைத்ததாகச் சொல்லி அதை நம்மை நம்பவும் சொல்கிறார் ஜெயந்தி நடராஜன். காங்கிரஸ் முதல்வர்கள் ஒன்னுக்குப் போவதைத் தவிர வேறு எதுவானாலும் தலைமையைக் கேட்டுவிட்டுத்தான் செய்வார்கள் என்பது காங்கிரஸ் கட்சியை அறிந்த எல்லோருக்கும் தெரியும். ஒரு குற்றவாளி அரசின் சுழல் விளக்கு பொருந்திய வாகனத்தில் ராஜமரியாதையோடு தனிவிமானத்தில் அனுப்பிவைக்கப்படுகின்றான். அப்போது நாட்டை ஆண்ட ராஜீவுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லையாம். இது உண்மையெனில்  குற்றவாளிக்கு உதவிய ஒரு மாநில முதல்வரை விசாரிக்கக்கூட முடியாத ராஜீவ்  தேசத்தின் மீது அக்கறையில்லாத முட்டாளாக இருக்கவேண்டும் இல்லை கண்டுகொள்ளாமல் இருக்க  அவருக்கு வேறு ஏதேனும் தரப்பட்டிருக்க வேண்டும் ( போபர்ஸ் பேரத்தைப்போல).

 இவ்வளவு களேபரத்துக்குப் பிறகும் வெறும் அடியாளான அர்ஜுன் சிங்கே இத்தனை அலட்சியமாக பதிலேதும் சொல்லாமல் இருக்கையில் அன்றைக்கு ராஜீவ் எவ்வளவு திமிருடன் ஆண்டர்சனை அனுப்பி வைத்திருப்பார் என்பதை நாம் சிரமமில்லாமல் புரிந்துகொள்ளலாம். ஆயினும் போபால் விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடு ஒன்றே ஒன்றுதான் அது லட்சக்கணக்கான மக்களுக்கான நீதியைக்காட்டிலும் ராஜீவ் காந்தியின் சமாதிக்குக் களங்கம் வராதிருப்பது முக்கியம் என்பதுதான். கடைசியாக வீரப்ப மொய்லி போபாலின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவே ஆண்டர்சன் விடுவிக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார். அதுசரி ஒன்றரை லட்சம் பேரைக் கொன்று இலங்கையின் இறையாண்மையைக் காப்பாற்றியவர்கள் ஒரு வெள்ளை நாயை சட்டம் ஒழுங்குக்காக விடுவித்திருக்க மாட்டார்களா என்ன?

முதல் குற்றவாளி – ஆண்டர்சனா ? அரசா ? : யூனியன் கார்பைடு முதலில் கனடா நாட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வர்ஜீனியாவில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் பெரும்பாலானவை போபால் ஆலையில் மேற்கொள்ளப்படவில்லை. ஆயினும் யூனியன் கார்பைடு இங்கு தைரியமாக தொழில் தொடங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான எச்சரிக்கைகள் கிடைத்தும் அலட்சியத்தைத் தவிர வேறு நடவடிக்கை அரசிடமிருந்து வரவில்லை. விபத்துக்குப் பிறகும் அரசு தன் கொடூரமான முகத்தை மாற்றிக்கொள்ளவில்லை. ஆண்டர்சனை நாடுகடத்துவதில் முனைப்பு காட்ட வேண்டாம் என்று சிபிஐ அதிகாரிகள் அறிவுருத்தப்பட்டிருக்கிறார்கள். போபாலின் விபத்தின் நீண்டகால பாதிப்புக்களைப் பற்றிய ஆய்வு அரசினால் நிறுத்தப்பட்டுவிட்டது. இன்றுவரை யூனியன் கார்பைடு ஆலையின் நச்சுக்கழிவுகள் அகற்றப்படவில்லை.

 அமெரிக்காவில் நடைபெற்ற வழக்கில் கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்துகொள்வதாக இந்தியா தன்னிச்சையாக அறிவித்தது, பாதிக்கப்பட்டவர்களுக்கோ ஏனைய இந்திய மக்களுக்கோ தெரிவிக்காமல். இந்த நட்டஈடும் 3.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு பதிலாக நானூற்று சொச்சம் மில்லியன் டாலராக தாராள மனதுடன் குறைத்துக்கொள்ளப்பட்டது ( இதுதாங்க தாராளமயம்கிறது ).  செத்தவர்களுக்கு அறுபதாயிரம் ரூபாயும் செத்துப்போயிருந்தால் நல்லது என்று என்னுமளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாயும் இந்த நட்டஈட்டின் வாயிலாக கிடைக்கும். இன்றைக்கு நிலத்தையும் வளத்தையும் விற்பனை செய்யும் தரகு புத்திக்கான பயிற்சியை அன்றே பிணத்தை விற்பனை செய்வதன் வாயிலாக இவர்கள் பெற்றுவிட்டார்கள். வில்லங்கம் இருக்கும் நிலத்தை நீங்கள் வாங்கினால் அது தொடர்பான முந்தைய பிரச்சனைகளுக்கான வழக்குகளை நீங்கள் எதிர்கொண்டாக வேண்டும். இந்த நியாயமெல்லாம் முதலாளிகளுக்குப் பொருந்தாது. யூனியன் கார்பைடை வாங்கிய டவ் கெமிக்கல்ஸ் போபால் சம்பவத்துக்கு தாம் நட்டஈடு தரத்தேவையில்லை என்று இந்தியாவிடம் எழுத்துபூர்வமாக உத்திரவாதம் பெற்றிருக்கிறது. இப்படி உதிர்ந்த ரோமத்தின் அளவுக்குக்கூட பாமர மக்களை மதிக்காத அரசு இருக்கையில் ஆண்டர்சன் எத்தனை முக்கினாலும் குற்றவாளி பட்டியலில் இரண்டாமிடம்தானே அவனுக்குக் கிடைக்கும் ?

இந்த விபத்திற்குப்பிறகு சுதாரித்துக்கொண்டது அமெரிக்காதான். அதனால்தான் போபால் விபத்து வழக்கினை ஒன்றுமில்லாமல் செய்ய நடத்தப்பட்ட திருட்டுத்தனங்களை இனி சட்டபூர்வமாக செய்ய அணுவிபத்து இழப்பீட்டு மசோதாவை மன்மோகனைக் கொண்டு ஒபாமா அறிமுகம் செய்கிறார். இதில் போபாலுக்காக போராட வேண்டிய பெரும் பொறுப்பு தமிழகத்துக்கு உண்டு. ஏனெனில் இங்குதான் தொழிற்சாலைப் பேரழிவுக்கு ஆளாகக்கூடிய ஆபத்தில் கடலூர் இருக்கிறது. புதிதாக பல அணு முதலீடுகள் தமிழகத்துக்கு வரக் காத்திருக்கும் நிலையில் போபாலுக்கு குரல் கொடுப்பது நம் எதிர்கால தேவைக்கான ஒரு பயிற்சியாகவேனும் இருக்கும். 

நமக்கு போபால் சொல்லும் பாடம் ஒன்றுதான், நாம் விழிப்பாக இல்லாவிட்டால் நிச்சயம் விற்பனை செய்யப்படுவோம் உயிருடனோ அல்லது பிணமாகவோ.

“போபால் – விழிப்பாக இல்லாவிட்டால் விற்பனை செய்யப்படுவோம்( உயிருடனோ அல்லது பிணமாகவோ).” இல் 5 கருத்துகள் உள்ளன

  1. All Indians(Including TAMILANS) worried about 28 years late tragedy. Its not planed. But the same Indians not wooried 1% about more than 50000 TAMILANS killed by well plan one year before. Why u worried about this matter. Dear VILLAVAN do write about North Indian matters in your port in future. Mathiadar Vasel Mithiada.

  2. ரொம்ப நாளா உங்கள தேடிகிட்டு இருந்தேன் (உங்க தளதுலதான்).கொஞ்சம் லேட்டாதான் வந்துருகிறீங்க சில விடயங்களை தெரிந்து கொண்டேன் 

  3. hey param we are not like our north indians and other people. even they are not ready to worry about ourself, we have to together for india and indian people. not only in india every where in the world every one is human so we have to pay attention for innocent human being. but at the same time we no need to worry for illegal racist and bad guys.

  4. hi brother wont go away like previous hard one month. for every week i check your blog for new content. by you only i knew lot of things happen over the world and accept with your each and every point and know about our worst politician. if india is be a communinst country we can develop very well like china eventhough communist not persist for long time. i am very worry about innocent people of bobal who were killed by accident and have lot of angry on anderson.

    vanakam villavan iyya(ulaga tamilar semozhli manaatai munnitu) and welcome to our coimbatore for ulaga tamilar semozhli manaatai villavan.

    and why not you write about semozhli manadu which is a strategy behind on dmk.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s