இன்னொரு மீனவர் படுகொலை – சண்முகநாதா, கடுமையான நடவடிக்கை எடுத்தாகனும்., அந்த லெட்டர்பேடை எடுத்துட்டு வா…


நேற்று முன்தினம் சிங்களவனின் வேட்டைக் கணக்கில் மற்றுமொரு மீனவர் பெயர் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை அவர்கள் துப்பாக்கித் தோட்டாக்களை வீணாக்க விரும்பவில்லை. மீனவர்களது வலைகளையும் மீன்களையும் பறித்துக்கொண்டு அவர்களை நிர்வாணப்படுத்தி அடித்திருக்கிறது சிங்கள கடற்படை, தாக்கப்பட்டவர்களில் ஒருவர் இறந்துபோயிருக்கிறார். ஐந்நூறு மீனவக் குடும்பங்கள் இதுவரை நிராதரவாக்கப்பட்டிருக்கிறது. மீனவர்களை துன்புறுத்தியதன் மூலம் ஏழரை கோடி மக்களைக் கொண்ட ஒரு இனத்தையே நிர்வாணமாக்கி அவமானப்படுத்தி இருக்கிறது சிங்கள அரசு.

வழக்கம் போலவே செம்மொழி கொன்றான் கொண்டான் கருணாநிதி பிரதமருக்கு ஒரு அவசரக் கடிதம் எழுதியிருக்கிறார். இவர் தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறாராம் அவர்கள் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருக்கிறார்களம். நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு ஒப்புக்கு ஒரு கடிதம் அனுப்புகிறதாம் ஆனாலும் மீனவரது அவலம் நின்றபாடில்லையாம். இவரும் கடிதம் எழுதுகிறார் அவர்களும் கடிதம் எழுதுகிறார்கள். அனேகமாக இந்தியா கண்ட முதலமைச்சர்களிலேயே முதுகெலும்பற்ற கோழைத்தனமான முதல்வர் கருணாநிதியாகத்தான் இருக்க முடியும். எங்கள் மாநில மீனவனின் மரணத்துக்கு பதில் சொல் என்று மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்ப துப்பில்லாத இவருக்கு தமிழினத்தலைவர் என்ற பட்டம் ஒரு கேடா? மன்மோகனுக்கு டிஷ்யூ பேப்பர் அனுப்ப மட்டும்தான் முதல்வர் பதவியா?

மும்பையில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு இளைஞனின் மரணத்துக்காக முதல்வர் உள்ளிட்ட ஒட்டுமொத்த பீகார் அரசியல்வாதிகள் ஒன்றுகூடவேணும் செய்தார்கள். இங்கோ மூன்று லட்சம் நிவாரணத்தை வீசியெறிந்துவிட்டு ஒரு சப்பையான வேண்டுகோள் கடிதத்தை பிரதமருக்கு அனுப்புவதோடு வேலை  முடித்துக்கொள்கிறார் நம் முதல்வர். அதையே தான் மீனவர் நலனுக்கு செய்த நலத்திட்டங்களாக சீக்கிரமே அறிவிப்பார். முதுகுவலிக்க பத்து மணிநேரம் குத்தாட்டம் பார்க்க அவகாசம் இருக்கும் முதல்வருக்கு கடற்கரையோரம் போய் செத்துப்போன மீனவனுக்கு ஆறுதல் சொல்ல அவகாசம் இல்லையா? இலங்கைப் பிரச்சனையைப் பற்றி  பேசுபவனை தண்டிக்கத் தனிச்சட்டம் கொண்டுவருவோம் என்று கருணாநிதியின்  கொள்ளுப்பேரனுக்குக்கூட பயந்தாக வேண்டிய துரைமுருகனால் மிரட்ட முடிகிறபோது  சிங்கள கடற்படையின் தொடர் கொலைகளுக்கு வெறும் கடிதம் எழுத மட்டும்தான் முதல்வரால் முடியுமா?

எதிர்கட்சிகள் நிலை இன்னும் லட்சணம். அம்மா எப்படியும் ஒரிரு நாட்களில் தூங்கி எழுந்து ஒரு கண்டன ஆர்பட்டத்தை அறிவிப்பார். ஆகவே  ஜெயக்குமார் வேட்டி சட்டையை சலவைக்கு போட்டு தயாராக வைக்க அவகாசம் இருக்கிறது. ஒருவேளை காங்கிரஸ் நெருங்கி வந்தால் “கடற்படை அடித்தால் யாராக இருந்தாலும் சாகத்தான் வேண்டும் இதில் மீனவன் மட்டும் விதிவிலக்கா” என்று ஜெயா லாஜிக் பேசவும் வாய்ப்பிருக்கிறது. ராமதாஸ் யாரை எதிர்ப்பது யாரை தாஜா செய்வது என்ற குழப்பத்தில் இருப்பதால் அவரும் எதுவும் செய்ய இயலாதவராக இருக்கிறார். மீனவர்களது படுகொலை தொடர்பாக இதுவரை ஒரு முறைகூட  மாநிலம் தழுவிய ஆர்பாட்டங்களோ பேரணிகளோ அல்லது பிரச்சார முயற்சிகளோ எந்த ஒரு கட்சியினராலும் முன்னெடுக்கப்படவில்லை.

இங்கு காங்கிரஸ் என்றொரு கட்சி இருக்கிறது. வீட்டுக்காரியின் கையை யாராவது பிடித்து இழுத்தாலும் அவர்கள் சோனியாவைக் கேட்டுவிட்டுத்தான் இழுத்தவனைக் கண்டிப்பார்கள். இவர்களா இலங்கையை கண்டிக்கப்போகிறார்கள்?  இந்த பட்டியலில் வராத, எப்போதும் தைரியமாக பேசுபவர் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்கிற ஈ.வெ.கி.ச இளங்கோவனும் பொத்திக்கொண்டுதான் இருக்கிறார். தன்னை எத்துணை அவமானப்படுத்தினாலும் பொறுத்துக்கொள்ளும் பெரியார் இப்போது இருந்தால் இவனைத் தன் பேரன் என்று சொல்லிக்கொள்ள ரொம்பவும் அவமானப்பட்டிருப்பார்.  ராஜீவ் கந்தி சிலையை எவனாவது உடைத்துவிட்டால் குரைக்கும் இந்தக் கூட்டம் சொந்த இன மனிதன் ஒருவன் செத்துப்போனால் மட்டும் எங்காவது பொறுக்கப் போய்விடுகிறது.

இது ஒருபுறமென்னால், ராணுவம்  இந்தியாவில் குறையே சொல்லக்கூடாத அமைப்பு. தேச பக்தி என்பது ராணுவத்தை ஆராதிப்பது எனும் பாடம் தேசமெங்கும் கற்பிக்கப்பட்டிருக்கிறது. கேட்டால் அவர்கள் இந்தியாவுக்காக உழைக்கிறார்கள்  என்பார்கள். சாக்கடையில் இறங்கி வேலை செய்பவர்கள் என்ன இஸ்தான்புல்லுக்கா உழைக்கிறார்கள்? நாட்டின் பட்ஜெட்டில் பாதியை விழுங்கும் ராணுவம் இதுவரை ஒரு (தமிழக)மீனவனைக் கூட காப்பாற்றியதாக வரலாறில்லை. ஆனால் எப்போதெல்லாம் மீனவர்கள் கொல்லப்படுகிறார்களோ அப்போதெல்லாம் விழுந்தடித்துக்கொண்டு வந்து எல்லை தாண்டினார்கள் அதனால் கொல்லப்பட்டார்கள் என்று நம் மக்கள் மீதே புகார் வாசிக்கிறார்கள். இதுவரை நடந்த எல்லா மீனவர் படுகொலைக்குப் பிறகும் இந்திய ராணுவத் தளபதிகள் (கடற்படை) சிங்கள ராணுவத்துக்கு வக்கீல் வேலை மட்டுதான் பார்த்திருக்கிறார்கள்.

மத்திய அரசைப் பற்றி சொல்லவே வேண்டாம். சோனியாவின் அரசு ஏதாவது திட்டத்தை செயல்படுத்தினாலே அதில் சாதாரண மக்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறது என்பதை உறுதி செய்துகொள்ளும். அதிலும் தமிழனுக்கு பாடை கட்டுவதென்றால் நம் மத்திய ஆட்சியாளர்களுக்கு தனி பிரியம். இலங்கையில் போர் நடந்துகொண்டிருக்கையில் மீனவர்களைக் கொல்வது புலிகள் செய்யும் வேலை என்று கதை பரப்பினார்கள் (மீனவர்களை புலிகள் கடத்தியதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது, மீட்கப்பட்ட மீனவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்திக்கவிடாமல் கவனமாக பாதுகாக்கப்பட்டார்கள்). காஷ்மீரிலும் வடகிழக்கு மாகாணங்களிலும் இந்திய ராணுவத்துக்குத் தரப்படும் வானளாவிய அதிகாரம் தெற்கே இலங்கை ராணுவத்துக்குத் தரப்பட்டிருக்கிறது போலிருக்கிறது.

இலங்கை மீதான போர்குற்ற விசாரணையா அதற்கு பதில் மவுனம், தமிழக மீனவனின் படுகொலையா அதற்கும் மவுனம். தன் களவாணித்தை மறைக்க விரும்பும் போதெல்லாம் பணம் தருவது இந்திய அரசின் வழக்கம். போபால் சம்பவத்தில் ராஜீவின் இரக்கமற்ற துரோகத்தை மறைக்க வேண்டுமா, கொடு ஆயிரத்து ஐந்நூறு கோடியை. இலங்கைப் போரில் இந்தியாவின் பங்களிப்பைப் பற்றி கேள்வி வருகிறதா கொடு ஒரு ஆயிரம் கோடியை என்று காலைஞர் பாணி நடவடிக்கை எடுக்கிறது மத்திய அரசு. அந்தக் கொடுப்பினையும் தமிழக மீனவனுக்கு இல்லை. இதுவரை கொல்லப்பட்ட மீனவர் ஒருவருக்குக்கூட மத்திய அரசின் நிதியுதவி தரப்படவில்லை.

எனக்கென்னவோ இது இந்திய அரசின் ஒப்புதலோடு நடைபெறுவது போலத்தான் தெரிகிறது. மீனவனை கடலில் இருந்து அப்புறப்படுத்த மன்மோகன் அரசு துடியாய் துடிக்கிறது. மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா மற்றும் கடற்கரை மேலாண்மைத் திட்டம் ஆகியவை இந்த நோக்கத்துடனேயே திட்டமிடப்பட்டிருக்கின்றன.அந்தவேலையை சிங்கள அரசு சுலபமாக்குவதால் நம் மத்திய அரசு இதை மவுனமாக அனுமதிக்கிறது போலிருக்கிறது. பாகிஸ்தான் அரசிடம் மும்பை தாஜ் ஹோட்டலின் தாக்குதலைத் திட்டமிட்டவர்களை எங்களிடம் ஒப்படை என்று தினம் ஒருமுறையேனும் கண்டிப்புடன் நினைவுபடுத்துகிறது நம் அரசு. பாகிஸ்தானுடம் யாராவது அணு ஒப்பந்தம் போட்டால் பதறிப்போகிற இந்தியா உடனே சிவசங்கரையோ கிருஷ்ணாவையோ அங்கு அனுப்புகிறது. ஆனால் இலங்கையை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாதிருப்பதன் பொருள் வேறு என்னவாக இருக்க முடியும்?

மத்திய மாநில அரசுகள், இந்திய ராணுவம், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் என எல்லா தரப்பினராலும் புறக்கணிக்கப்படும் இனமாக தமிழினம் இருக்கிறது. இன்னும் வெளிப்படையாகச் சொல்வதானால் நாமே நம் மீனவர்களின் துன்பத்தைக் கண்டுகொள்வதில்லை. ஒப்பீட்டளவில் தமிழகத்துத் தமிழர்கள்தான் மிகவும் பரிதாபத்துக்குரியவர்களாக இருக்கிறோம். ஏனெனில் ஈழத் தமிழ் மக்களிடம் ‘நாங்கள் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப்போராடியவர்கள்’ என்று சொல்லிக்கொள்ளவாவது ஒரு வரலாறு இருக்கிறது . போகுமிடத்தில் மட்டுமல்ல இருக்குமிடத்திலும் உதை வாங்கும் நாம் சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறது ?????

Advertisements

“இன்னொரு மீனவர் படுகொலை – சண்முகநாதா, கடுமையான நடவடிக்கை எடுத்தாகனும்., அந்த லெட்டர்பேடை எடுத்துட்டு வா…” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. உலகையே நேசிக்கும் தமிழன் தன் உடன் பிறந்தோனை வெறுப்பவனாகவும், காட்டிக் கொடுப்பவனாகவும் இருப்பதால் தமிழினம் ஒற்றுமையே இல்லாத இனமாக இன்னும் பிளவுண்டு கிடக்கிறது. அதனால் தான் இனமானத் தலைவரும், அம்மாக்களும், அய்யாக்களும் இவர்களைப் பிரித்தாண்டு வாழ்கின்றனர். இந்த அடிப்படை குணத்தை மாற்ற என்ன வழி என்று யாரும் கண்டுபிடிக்காத வரை தமிழினம் ஒருவருக்கொருவர் மாற்றிக் குழி பறித்தே சீரழிந்து அழியும்.

    //இன்னும் வெளிப்படையாகச் சொல்வதானால் நாமே நம் மீனவர்களின் துன்பத்தைக் கண்டுகொள்வதில்லை//
    இதுதான் யதார்த்தம். இலங்கையில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்ட 50 ஆயிரம் தமிழ் உயிர்களைப் பற்றி இன்னும் வாய் திறக்காதவர்கள் நம் சி.பி.எம் தமிழத் தோழர்கள். அதை இனப்படுகொலை என்று கூட சொல்லாமல் தவிர்ப்பவர் பிரகாஷ் காரத். இதுதான் இந்தியாவில் தமிழனுக்கான மரியாதை.

  2. yes. Yor r right. If we support to ELAM we must support the KASHMIR people. No body rise voice against the militrat action against the KASHMIR people. Vwey shameful. INDIAN is JAIL – BIG JAIL.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s