அயோத்தி தீர்ப்பு- நல்லகாலம், உடன்கட்டை ஏறுதல் வெள்ளையன் காலத்திலேயே சட்டவிரோதமாக்கப்பட்டுவிட்டது.


இது இன்னமும் ஒரு மதச் சார்பற்ற தேசமா? தீர்ப்புக்கு அடிப்படை சாட்சி ஆதாரமா அல்லது நீதிபதியின் சொந்த மத நம்பிக்கையா? இந்தியாவின் காவிமயமான அரசு அமைப்பை மீண்டும் ஒருமுறை இவ்வுலகம் காண்பதற்கு வாய்ப்பளித்து இருக்கிறது அலகாபாத் தீர்ப்பு. பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பது வழக்கு. ஒரு கட்டப்பஞ்சாயத்தைப் போல இடித்தவனுக்கும் இழந்தவனுக்கும் இடத்தை பாதியாக அல்லது அதனைவிட மோசமாக பங்கிட்டுத் தந்திருக்கிறது அலகாபாத் நீதிமன்றம். ராமர் பிறந்த இடம் அதுதான் என இரண்டு நீதிபதிகள் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.  மக்கள் நம்புவதாகக் கருதும் எதையும் நீதிபதிகள் இனி தீர்ப்பாக்கலாம், மேலும் மக்கள் யார் என்பதையும் அவர்களே முடிவு செய்யலாம்.ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இனி தாராளமாக ராமனின் ஆயிரக்கணக்கான சித்திகளின் பிறந்த வீட்டைத் தேடலாம், இனிதான் அவர்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்கவும் வழியிருக்கிறதே . பாமியன் புத்தர் சிலைகளை இசுலாமுக்கு எதிரானவை என்ற தீர்ப்பை எழுதிவிட்டு இடித்தார்கள் தாலிபன்கள், இங்கு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு  இடிக்கப்பட்ட இடம் ராமன் பிறந்த இடம் என்று தீர்பாகியிருக்கிறது.

இது வேறுவழியில்லாமல் வழங்கப்பட்ட தீர்ப்பு போலத்தோன்றலாம். தேசத்தின் சட்டம் ஒழுங்கை மனதில் கொண்டு தரப்பட்ட முடிவாகவும் தோன்றலாம். ஆனால் இத்தீர்ப்பின் பின்னே இருப்பது நீதித்துறையில் வியாப்பித்திருக்கும் அப்பட்டமான காவி சிந்தனை. பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது வழக்கு. மதம் என்ற ஒன்று இல்லாதபட்சத்தில் இவ்வழக்கு அடிப்படைகூட இல்லாதது. இதற்கு முன்பு எந்த ஒரு தீர்ப்புக்கும் முன்னால் உயர் நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ சட்டம் ஒழுங்கு பற்றி கவலைப்பட்டதாக வரலாறு இருக்கிறதா? சட்டம் ஒழுங்கை காப்பது அரசின் கடமை என்றே நீதிமன்றங்கள் சொல்லியிருக்கின்றன. முடியாவிட்டால் ஆட்சியை விட்டு இறங்குங்கள் என்றுகூட ஒரு பந்த் வழக்கின்போது நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.  பொது அமைதியை காப்பாற்றும் முகமாக இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதற்கான முகாந்திரம் எவ்விடத்திலும் இருப்பதாக தெரியவில்லை. (எட்டாயிரம் பக்கமென்றாலும் தீர்ப்பின் உள்ளடக்கம் சில வாக்கியங்களுக்குள் அடங்கிவிடக்கூடியதே.. ஆகவே தீர்ப்பை படித்துவிட்டு கருத்துசொல்லலால் என்பது தள்ளிப்போட ஒரு வாய்ப்பு மட்டுமே).

மாறாக இந்நாடு இந்துக்களுக்கானதே என்று மறைமுகமாக ஊர்ஜிதப்படுத்தும் கடைசி நிகழ்வாக இத்தீர்ப்பைக் கருத பல ஆதாரங்கள் இருக்கின்றன. வழக்கு அறுபது ஆண்டுகளுக்கு மேல் தாமதிக்கப்பட்டது. மக்களிடம் இது ராமனுக்கு பாத்தியப்பட்ட இடம் என்ற பிரச்சாரத்துக்கான அதிகபட்ச காலக்கெடு. கூடுதலாக ராமன் சிலையை வைக்கவும் மற்ற ‘ஆதாரங்களை’ வானரப்படைகள் அங்கு உருவாக்கவும் இது தேவைக்கதிகமான காலமே. பாபர் மசூதி என்பது மாறி பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமாகி பிறகு எல்லா தரப்பினராலும் அது சர்ச்சைக்குரிய இடமென குறிப்பிடப்படுவதற்கும் இக்கால அவகாசம் மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  இடம் யாருக்கு என்பது பிரச்சனை, ஆனால் பாபர் மசூதியின் மையப்பகுதி ராமன் பிறந்த இடம் என்பதை ஏற்பதாக இரண்டு நீதிபதிகள் சொல்கிறார்கள். ஆதாரமெதுவுமில்லையென்றாலும் இதை நீதிபதிகள் இதை நம்புவார்களாம். எந்த பெயர் நூற்றுக்கணக்கான இசுலாமியர்களது உயிரைப் பறித்ததோ எந்த பெயர் கோடிக்கணக்கான சிறுபான்மையோரை பாதுகாப்பற்றவர்களாக்கியதோ அந்த கற்பனைக் கதாபாத்திரத்துக்கு இப்போது சட்டபூர்வமாக பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

பாபர் காலத்தில் கட்டப்பட்டது உண்மை என்பது ஏற்கப்பட்டாயிற்று. பிறகெதற்கு அங்கு தொழுகை நடந்ததற்கு ஆதாரமில்லை என்றும் அது மசூதியின் அமைப்பு மாதிரி தெரியவில்லை என்றும் தேவையில்லாத சப்பைக்கட்டு? காவி காலிகளால் இடிக்கப்பட்டது ஒரு புனிதத்தலமல்ல என்று வேறு வார்த்தைகளால் சொல்கிறார்கள், அவ்வளவுதான். ராமன் பிறந்த இடம் என்ற ஒப்புதலும் அங்கு கோயிலின் இடிபாடுகள் இருக்கின்றன் என்ற தொல்லியல் துறையின் கருத்து தீர்ப்பில் சுட்டப்படுவதும் பாபர் மசூதியிடமிருந்து வெட்டப்பட்ட புனிதத்தன்மையை ராமன் கோயிலுக்கு ஒட்ட வைக்கும் நரித்தனம். ராமர் கோயில் இருந்தது என்பது மக்கள் நம்பிக்கை என்றால் மக்கள் என்பவர்கள் யார்? ஆர்.எஸ்.எஸ்சில் உள்ள  மக்களா அல்லது ஆர்.எஸ்.எஸ்காரர்கள் மட்டும்தான் மக்களா?

இது வெறும் ஒரு இடம் தொடர்பான பிரச்சனை அல்ல. இத்தீர்ப்பின் மூலம் கரசேவைக்கு ஒரு சட்டபூர்வ அங்கீகாரம் தரப்பட்டிருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் சில ஏற்ற இறக்கங்களோடு இத்தீர்ப்பை ஆதரித்திருக்கின்றன. இசுலாமியர்களின் காவலன் என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் கருணாநிதி ஆதரித்திருக்கிறார் (அவருக்கு பேரப்பிள்ளைகளுக்கு ஆபத்தில்லாத அத்துனை சமாச்சாரமும் வரவேற்கக்கூடியதே). அயோத்தியில் இல்லாமல்  ராமனுக்கு வேறு எங்கு கோயில் கட்டுவது  என்று கேட்ட ஜெயாவோ எல்லையில்லாத மகிழ்ச்சியில் அறிக்கை தந்திருக்கிறார். அனேகமாக இந்த அறிக்கையை எழுத அவர் பூங்குன்றனை எதிபார்த்திருக்க மாட்டார்.  ராஜீவ் காந்தியால் ராமன் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டு பிறகு நரசிம்மராவால் இடிக்கப்பட அனுமதிக்கப்பட்டிருப்பதால் காங்கிரசின் நிலையும் பாரதீய ஜனதாவின் நிலையும் இவ்விவகாரத்தில் ஒன்றாகவே இருக்கும்.

தீர்ப்பு அநீதியானது என்பது முதல் பிரச்சனை என்றால் அனேக தலைவர்கள் இதை வரவேற்றிருப்பது அதைவிட பெரிய பிரச்சனை. தங்கள் மதசார்பற்ற மூகமூடி காணாமல் போவது பற்றிக்கூட கவலைகொள்ளாது கருணாநிதி போன்றோர் கருத்து சொல்வது இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகளின் பெயரளவுக்கான சிறுபான்மையோர் ஆதரவுக் குரல்களும் காலாவதியாவதற்கான அறிகுறி.  இவர்கள் சொல்ல விரும்பிய கருத்தைத்தான் நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் தீர்ப்பின் பின்னால் நின்றுகொண்டு சிறப்பான தீர்ப்பு என்றோ வரவேற்கத்தக்க தீர்ப்பு என்றோ அல்லது சாத்தியமான தீர்ப்பு என்றோ சொல்லி சிக்கலை இத்துடன் முடித்துக்கொள்ளச் சொல்கிறார்கள். கொடுப்பதை வாங்கிக்கொண்டு அமைதியாக இரு என்ற செய்தி அரசு எந்திரத்தைக் கட்டுப்படுத்தும் எல்லா அதிகாரமட்டத்தினராலும் இப்போது இசுலாமியர் யாவருக்கும் அறிவிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுவது ஊர்ஜிதமாகியிருக்கிறது என்ற ஷபனா ஆஸ்மியின் கருத்து வெறுமனே விரக்தியின் வெளிப்பாடல்ல அப்பட்டமான யதார்த்தம்.

பாபர் மசூதி இருந்த இடம் தொடர்பான வழக்கின் முடிவு பல எதிர்கால சிக்கல்களுக்கான தொடக்கமே. இனி நீதிபதிகள் தங்கள் சொந்தக் கருத்தை தீர்ப்பாக்க இயலும் என்ற ஒரு மிகமோசமான முன்னுதாரணம் இவ்வழக்கினால் கிடைத்திருக்கிறது (ஒரு சாதாரண சிவில் வழக்கில் பின்பற்றப்படும் நடைமுறைகூட இங்கு பின்பற்றப்படவில்லை). வானரங்கள் இப்போது தமது வெற்றியை அமைதியாக கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. இனி அவர்கள் காசி, மதுரா, பரங்கிமலை என இடிப்புப்பட்டியலை நீட்டிப்பார்கள். இது மிகையான அனுமானமல்ல, சங்கப் பரிவாரங்கள் எப்போதும் கலவரங்களாலேயே தங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு, காவி எப்போதுமே அப்பாவி மக்களின் ரத்தத்தால்தான் தனது நிறத்தை மங்காமல் பாதுகாக்கிறது. அதனால்தான் வினாயகர் ஊர்வலங்கள் மசூதிகள் இருக்கும் பக்கமாக செல்லும்படி வம்படியாக திட்டமிடப்படுகின்றன.

மதசார்பற்றவர்கள் மட்டுமல்ல மனிதன் என்று தன்னை நம்புகிற யாவருமே எதிர்க்க வேண்டிய தீர்ப்பு இது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது காவி பயங்கரவாதிகளால் பறிபோன நாட்டின் மானம் இப்போது சட்டத்தின் வாயிலாகவே பறிபோயிருக்கிறது. இந்த இந்துத்துவாதான் கடுமையான சாதீயப்பகுபாடுகளையும் கவுரவக்கொலைகளையும் இன்றளவும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கிறது. வெள்ளையன் காலத்தில் பிளேக் நோய் பரவியபோது எலிகளைக் ஒழிக்க வந்த ஆய்வுக்குழுவை குஜராத்தில் எரித்துக்கொன்றது இதே இந்துத்துவாதான் (ஸ்பான்சர்டு பை பால கங்காதர திலகர் ). குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏ(ற்)றுவது, விதவைகளை காசியில் கொண்டுபோய் விட்டுவிட்டு அவர்களை விபச்சாரத்தில் தள்ளியது என இந்துத்துவத்தின் நீண்ட சைக்கோத்தனத்தின் பட்டியலில் கடைசி சேர்க்கை ராமர் கோயில்.  ஒரே கோத்திரமுடையோர் திருமணம் செய்வது சட்டவிரோதமென  அறிவிக்கப்படவேண்டும்  என்று ஒரு கூட்டம் மத்திய அரசை சமீபத்தில் கேட்டுக்கொண்டது. அதேபோன்ற முட்டள்த்தனம்தான் ‘இது ராமன் அவதரித்த இடம் என்றோ ராமன் ஒன்னுக்கு போன இடம்’ என்றோ சொல்வதும்.

நாம் எதிர்க்காமல் இருக்கும்பட்சத்தில் நம்மையும் அமைதியாக இருக்கும் பங்காளிகளாகவே காவிக்கூட்டம் கருதும். நடத்தப்படும் எல்லா அரஜகங்களும் நமது பெயராலேயே நடத்தப்படும். நான் உங்களோடு இல்லை என்று சங்கப் பரிவாரங்களுக்கு  சொல்ல வேண்டிய நேரத்தில் நாம் இருக்கிறோம். அதன்பொருட்டுத்தான் எல்லோரும் அறிந்த தகவலென்றாலும்  நானும் என் பங்கிற்கு பதிவிட்டிருக்கிறேன். நீங்கள் ரவுடியில்லை என்று நிரூபிக்க விரும்பினால் நான் இந்துவெறியன் இல்லை என்று சொல்லுங்கள், ராமன் கோயில் அங்கில்லை என்று சொல்லுங்கள். நான் முட்டாள் இல்லை என்று சொல்லிக்கொள்ள விரும்பினால் நான் இந்து இல்லை என்றும் ராமன் என்றொருவன் இல்லை என்றும் உரக்க சொல்லுங்கள்.

Advertisements

“அயோத்தி தீர்ப்பு- நல்லகாலம், உடன்கட்டை ஏறுதல் வெள்ளையன் காலத்திலேயே சட்டவிரோதமாக்கப்பட்டுவிட்டது.” இல் 6 கருத்துகள் உள்ளன

 1. அருமையான பதிவு. எல்லோரும் இத்தீர்ப்பின் மடத்தனங்களை விளக்கவேண்டிய, விளங்கிக் கொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது.

 2. நான் இந்துக்கோ அல்லது முஸ்லிமுக்கோ ஆதரவானவன் இல்லை. அனைத்து மதமும் போதிப்பது அன்பு தான். நான் சில கருத்துகளை கேள்விபட்டேன். அதை உண்மையா என நான் தெரிந்து கொள்ளள விருபிகிறேன். முஸ்லிம்கள் தான் வெடிகுண்டுகல் வைகிறார்கள் அதனால் அவர்களக்கு எதிராக தீர்பளிப்பது சரியென்றும் அவர்களை அடக்கி வைப்பது சரியென்றும் இன்னும் சிலர் சொல்லுகிறார்கள். இது உண்மையா இல்லை அவர்களுக்கு எதிராக வைக்கப்படும் வாதம் மட்டுமா. இந்துக்களும் வட இந்தியாவில் செய்யும் கொடூரங்களை கேள்விபட்டுளேன். எது உண்மையென அடுத்த பதிவில் இந்த தம்பிக்கு விடையளிக்க வேண்டுகிறேன்.

 3. செல்வகுமார்,
  மதம் அன்பை போதிப்பதில்லை. மடத்தனத்தையும், பிரிவினையையும்தான் போதிக்கிறது.சிந்திக்க மறுப்பதை ஊக்குவிக்கிறது. மூடநம்பிக்கைகளை வளர்க்கிறது. குண்டுவைப்பது என்பது எல்லா மத அடிப்படைவாதியும் செய்வது, இந்து,முஸ்லிம், கிருஸ்துவன்,யூதன், புத்த மதத்தவன் என்ற வேறுபாடெல்லாம் எங்கு குண்டு வைப்பது என்பதில்தான்.

 4. இந்த நாடு ஒரு இந்து தேசம்தான் .. கம்யுனிஸ்ட் தேசமல்ல.. இந்து தேசம்ன்னா, இந்த மண்ணில் உருவான எல்லா மதங்களும் அடங்கும்.. ஜைனம், சீக்கியம், பௌத்தம்,.. இதை தவிர, எண்ணற்ற சிறு சிறு வழிபாட்டு முறைகள் எல்லாமே அடக்கம்..

  இஸ்லாம், கிறுத்துவம் வேற்று மதங்கள்.. ஆக்கிரமிப்பு மதங்கள்.. ஆக்கிரமிப்பாளர்களின் மதங்கள்..

  இவை எல்லாவற்றை விட ஒரு பயங்கரமான மதத்த சொல்லியே ஆகனும்.. அதுதான் கம்யுனிஸ்ட் மதம்.. கார்ல் மார்க்ஸ் என்ற தெய்வத்தை கொண்டு, “தாச் கேபிடல்” என்ற புனித நூலை கடைபிடிக்கும் இந்த மதம்தான் உலகத்திலேயே அதிகமான மக்களை கொன்று குவித்துள்ளது.. (ஹிட்லர் செய்ததெல்லாம் ஜுஜுபி).. இன்றும் கொன்று குவிக்கிறது..

  என்ன அதிசயம்னா.. இந்த கம்யுனிசவாதிகள் தங்கள் யோக்கியவான்களா நினச்சுகிட்ட இருக்கிற எல்லாத்தையும் திட்டறதே பொழப்பா போச்சு..

  “உண்மை” என்ற ஒரு சொல்லை நீங்கள் நம்புவராக இருந்தால், நீங்கள் எழுதியவை எல்லாம் அப்பட்டமான் பொய்.. கட்டுக்கதை.. உங்கள் வெறுப்பை உமிழ்ந்திருக்கிறீர்கள்..

 5. //இந்த நாடு ஒரு இந்து தேசம்தான் .. கம்யுனிஸ்ட் தேசமல்ல.. இந்து தேசம்ன்னா, இந்த மண்ணில் உருவான எல்லா மதங்களும் அடங்கும்.. ஜைனம், சீக்கியம், பௌத்தம்,.. இதை தவிர, எண்ணற்ற சிறு சிறு வழிபாட்டு முறைகள் எல்லாமே அடக்கம்..//
  ஆரியர்கள் வருவதற்கு முன் இந்து தேசம் என்று நீங்கள் இப்போது அழிகின்ற பூமியின் இந்த பகுதியின் பெயர் என்ன ? வந்தேறி ஆரியர்கள் இங்கு இருந்த மக்களை என்ன செய்தார்கள் ? அவர்கள் பின் பற்றிய கொள்கைகளையும் என்ன செய்தார்கள் ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s