மீனவர் பாண்டியன் படுகொலை- எங்களிடம் இல்லை என்றாகிவிட்ட சொரணையை இன்னும் எத்தனை முறைதான் சோதித்துப்பார்ப்பீர்கள் சோனியா காந்தி?


மீண்டும் ஒரு மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இம்முறையும் தமிழ்நாட்டின் வழக்கமான சடங்குகளில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை. மத்திய அரசுக்கு இந்த முறை ஒரு மாறுதலுக்காக தந்தி அனுப்பியிருக்கிறார் நம் முதல்வர், எப்போது பார்த்தாலும் தந்தியும் தபாலும்தான் உங்கள் நடவடிக்கையா என்று யாராவது கேட்டால் ‘போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார் என்பார். தேர்தல் பக்கத்தில் வருவதால் இழப்பீடு ஐந்து லட்சமாகிவிட்டது, தபால் தந்தியாகிவிட்டது அவ்வளவுதான் வேறுபாடு. மற்றபடி கருணா கருணாவாகவே செயல்படுகிறார்.

ஜெயலலிதா விழித்துக்கொண்டு வந்து அறிக்கை அளிப்பதற்குள் இன்னொரு மீனவன் கொல்லப்படலாம், அப்போதும் அவர் அலட்டிக்கொள்ளாமல் பெயரை மட்டும் மாற்றி அறிக்கையை வெளியிட்டுவிடுவார். ராமதாஸ் இந்த முறை வெறும் வேண்டுகோள் வைக்கும் நிலையிலேயே இருக்கிறார். மற்ற எதிர்கட்சிகளும் அனேகமாக ஒரு கண்டன அறிக்கையோடு மற்ற எதிர் மற்றும் உதிரிக்கட்சிகள் மௌனமாகிவிடும். இது கணிப்பல்ல மீனவர் படுகொலைகளின்போது அரங்கேறும் காட்சிகளின் வரலாறு.

காலம் போன காலத்தில் வயோதிகத்தால் செத்துப்போன தன் மாமியார் சௌந்தரா கைலாசத்துக்காக கண்ணீர்விட்டு கதறி அழும் அளவுக்கு இளகிய மனம் படைத்த சிதம்பரம் இந்த படுகொலைக்கு எப்படி பதில் சொல்லப் போகிறார் என்று மட்டும் பாருங்கள். இந்தியா தன் கண்டனத்தை இலங்கையிடம் பதிவு செய்திருக்கிறது, கடந்த முறை கண்டனம் தெரிவித்த பிறகு தாக்குதல் குறைந்திருக்கிறது, கடந்த எட்டு மாதத்தில் இந்த ஒரு மரணம்தான் நிகழ்ந்திருக்கிறது என்று ஒரு சோனியா வீட்டு வேலைக்காரனுக்கான நேர்த்தியுடன் சலனமில்லாமல் பதிலளிப்பார்.

மத்திய அரசு இப்போது இலங்கைக்கு கடும் கண்டனமெல்லாம் தெரிவிக்கவில்லை. இலங்கையிடம் விளக்கம் கோரியிருக்கிறது அவ்வளவுதான். இப்போது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டிய அவசியமில்லை என்ற வரிகள் சொல்ல வருவது என்ன? இதற்கு முன் அந்த சூழல் இருந்தது என்றா இல்லை இனி அந்த தேவை வரும் என்றா? நம் செலுத்தும் வரிகளில் பாதியை விழுங்கும் ராணுவம் எதற்கு புல்கூட முளைக்காத பனிமலைகளையும் பாலைவனத்தையும் பாதுகாக்க மட்டுமா? சட்டீஸ்கர் போலீஸ்காரர்களுக்கு பாதுகாப்பளிக்கும் ரானுவம் ஏனைய்யா  இலங்கை கடற்படையுடன் பேச்சுவார்த்தை மட்டும் நடத்துகிறது?

காஷ்மீருக்கு தனி விசா தரும் நடைமுறையை நிறுத்திவிட்டுத்தான் சீன அதிபர் இந்தியாவுக்கு வரமுடிகிறது. உலகின் வல்லரசு நாட்டுக்கே இத்தகைய அழுத்தத்தை தர முடிகிற இந்தியாவால், இலங்கைக்கு அதில் நூறில் ஒரு பாகம்கூட தரமுடியாதா? அந்த அளவுக்கு வலிமையான நாடா இலங்கை? இந்த தாக்குதலின் பின்னால் சோனியாவின் தீராத பழிவெறியோ, மன்மோகனின் தொழிலதிபர்கள் விசுவாசமோ அல்லது மத்திய அரசு தமிழன் இங்கு இரண்டாம்தர குடிமகன்தான் என காட்டுவதற்கான தேவையோ ஏதோ ஒன்று அல்லது எல்லாமே இருக்கிறது.

இது ஒரு மீனவனின் மரணம் மட்டுமல்ல. தமிழக அரசியல்வாதிகளை அரசியல் கோமாளிகள் என்று சொன்ன இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான கமெண்ட்தான் இந்த தாக்குதல். உன் அரசுகள் எப்போதும் எங்கள் பக்கம்தான் என்று தமிழகத்துக்கு சொல்லாமல் சொல்லும் செயல்முறை விளக்கம்தான்  இந்த தாக்குதல். முதலில் உன் குடிமகனை காப்பாற்ற முடிகிறதா என்று பார் பிறகு ஈழத்தமிழனைப் பற்றி கவலைப்படலாம் என்று தமிழகத்துக்கு இலங்கை விடுக்கும் திமிர்த்தனமான சவால் இந்த தாக்குதல். தமிழ்நாட்டு தமிழனையே தமிழனால் காப்பாற்ற முடியாது ஆகவே நீங்கள் எப்போதும் நிராதரவானவர்கள் என்று சர்வதேச தமிழ்ச் சமூகத்துக்கு இலங்கை விடுக்கும் எச்சரிக்கை இந்த தாக்குதல். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவும் இலங்கையும் ஒரே நோக்கமுடைய நட்பு நாடுகள்தான் என்று தமிழ்நாட்டுக்கு மீண்டும் செய்தி சொல்லும் செயல்தான் இத்தாக்குதல்.

இங்கு தலைப்பில் சோனியா காந்தி பெயரை குறிப்பிட்டதன் காரணம் அவர் இந்தியாவை இப்போது ஆட்சி செய்பவர் என்பதால்தான். மற்றபடி இந்தியாவை யார் ஆட்சி செய்தாலும் இந்த தாக்குதல்கள் குறையப்போவதில்லை என்பதை நான் அறியாதவனல்ல. தமிழனின் மீதான இந்த வட இந்திய வெறுப்பு நீண்ட பாரம்பரியம் கொண்டது. இந்தியாவை மொத்தமாக கட்டி ஆளவிருந்த பார்ப்பன சாம்ராஜ்யத்தை தெற்கே மட்டும் அசைத்துப்பார்த்த திராவிட இயக்கத்தின் மீதான கோபத்தின் நீட்சிதான் இந்த தமிழர் விரோத சிந்தனை. பார்ப்பன எதிர்ப்பும் ஹிந்தி எதிர்ப்பும் தமிழகத்தின் கம்பீரமான அடையாளங்களாக இருந்ததால் அப்போதைக்கு தமிழக மக்களிடம் வட இந்திய கட்சிகளும் ஊடகங்களுக்கும் இருந்த தமிழக வெறுப்புதான் இன்றுவரை தொடர்கிறது. இதை வெறுமனே மத்திய அரசின் பாராமுகம் என்று நாம் மொன்னையான வார்த்தைகளால் அடையாளப்படுத்துவது அயோக்கியத்தனம்.

இந்திய ராணுவமாகட்டும், வெளியுறவுத்துறையாகட்டும் மீண்டும் மீண்டும் சொல்வது எல்லை தாண்டி மீன்பிடித்தாலும் சுட வேண்டாம் என்று வலியுறுத்தியிருக்கிறேம் என்பதே. இது எல்லைதாண்டி மீன் பிடிப்பது ஏதே கொலைக்குற்றம் போலான ஒரு தோற்றத்தை மக்களிடம் உருவாக்கியிருக்கிறது. வேறு ஏந்த ஒரு  நாட்டிலும் எல்லை தாண்டிய மீனவன் சுடப்பட்டதாக வரலாறே கிடையாது. அப்படியிருந்தும் இந்த அரசு எல்லை தாண்டினால் கருணை காட்டுங்கள் என்பதுபோல இலங்கைக்கு வேண்டுகோள் வைப்பது உண்மையில் மீனவனுக்கு தரப்படும் எச்சரிக்கையன்றி வேறில்லை. மீனவனை வேறுவேலைக்கு அனுப்பும் மாற்று நடவடிக்கைகள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன. ஆகவே இது இலங்கையின் தனிப்பட்ட தாக்குதல் அல்ல இந்திய இலங்கை நாடுகளின் கூட்டு நடவடிக்கை என்றே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழகம் இந்தியாவினால் முற்றாக புறந்தள்ளப்படுவதன் காரணம் தேசியக் கட்சிகள் மட்டுமல்ல. தமிழகத்தை ஆண்ட கட்சிகள் எல்லாம் மத்திய அரசை சுரண்டலுக்கும் எதிர்கட்சியின் ஆட்சியை கலைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கின்றன. உதிரிகள் எல்லாம் இவர்களுக்கு பாதைபோடும் வேலையைத்தான் செய்து வந்திருக்கிறார்கள். இப்போது ஜெயாவை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போகும் சீமானும் ஒரு தமிழின விரோதிக்கே சேவகம் செய்யப்போகிறார். ஆகவே இவர்களைப் பற்றி புலம்புவது அனாவசியம். ஆனால் நாம் ஏன் எந்த தமிழன் கொல்லப்பட்டாலும் தடித்த தோல்கொண்டவர்களாகவே நடந்துகொள்கிறோம் என்பதுதான் புலம்பவேண்டிய விசயமாயிருக்கிறது.

கும்பகோணம் சம்பவம்போல ஒட்டுமொத்தமாக தொன்னூறு பேர் செத்தால்தான் நமக்கு கோபம் வருமா? அப்போதும்கூட மெழுகுவர்த்தி ஏற்றியதைத் தவிர நாம் வேறொரு  #$&*யும் புடுங்கியிருக்கவில்லையே? இல்லை ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒருவன் தீக்குளித்தால்தான் நமக்கு உணர்வு வருமா? வைரமுத்துவைப்போல நக்கிப்பிழைப்பவர்கள் பெருகிவரும் நாட்டில் முத்துக்குமாரைப்போல உணர்வுடைய கொஞ்சநஞ்ச இளைஞர்களையும் இழந்துவிட்டால் அப்புறம் நாடு என்னாவது! அதெப்படி தமிழ் நாட்டின் பிரச்சனைக்கு மட்டும் இந்திய அறிவுஜீவிகள் குரல் கொடுப்பதில்லை என்று யோசிக்கையில்தான் உள்ளூர் அறிவுஜீவிகளும் கவிஞர்களும் கருணாநிதிக்கு முதுகுசொறிய முண்டியடிப்பது உறைக்கிறது.

நம் மாநிலம் ஒட்டுமொத்தமாக உணர்வு பெற்றாலொழிய இந்த அராஜகங்கள் முடிவுக்கு வரப்போவதில்லை. நாம் பெரியாரின் வழிவந்தவர்கள் என்பதை அவர்கள் எப்போதும் மறக்கப்போவதில்லை என்பதைதான் இந்த துரோகங்கள் காட்டுகின்றன. ஆனால் நாம் பெரியாரின் வழிவந்தவர்கள் என்பதை நாமே மறந்துவிட்டதைத்தான் இந்த சூடு சொரனையற்ற அமைதி காட்டுகிறது.

எங்கே, கைகளை உயர்த்தி அல்லேலூயா ஸ்டைலில் சொல்லுங்க பார்ப்போம்.. “ஜெய் ஹிந்த்”.

Advertisements

“மீனவர் பாண்டியன் படுகொலை- எங்களிடம் இல்லை என்றாகிவிட்ட சொரணையை இன்னும் எத்தனை முறைதான் சோதித்துப்பார்ப்பீர்கள் சோனியா காந்தி?” இல் 11 கருத்துகள் உள்ளன

 1. அப்பொழுதே தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கையைக் கை விட்டது தான் மாபெரும் தவறோ?எத்தனையோ சின்னஞ்சிறிய நாடுகளுக்கெல்லாம் வக்காலத்து வாங்கிப் பிரிவினைக்கு ஊக்கம் கொடுத்த மேற்குலகும்,அமெரிக்காவும் பிரிவினைக்கு ஆதரவளித்திருக்கக் கூடுமோ

 2. வடக்கின் கூரையேறி
  கோழி பிடிக்கும் வேலையே
  இன்னும் ‘தெர்வீசா’ முடிக்க முடியவில்லை.
  விக்கி-லீக்சின் கூற்றுப்படி
  பாகிஸ்தானின் பலம் நமக்கில்லை.
  ‘பில்டிங்க் ஸ்ட்ற்றாங்கு;
  பேஸ்மெண்டு வீக்கு’.
  ஆள் பத்தாக்குறை,
  ‘அல்லு’ இல்லாமை.
  நம்ம உளவுத்துறைக்கூற்றுப்படி
  சீனாதானாவின் இலங்கை டெண்டுக்கு
  பயப்படவேண்டும்.
  அங்கு சுற்றும் அமெரிக்க கப்பலுக்கு
  மூத்திரம் பெய்யவேண்டும்.
  நம்ம மீனவர்களின் உயிரைவிட
  நாட்டின் ‘இறையாண்மை’ முக்கியமில்லையா?
  அதனால்;
  ராஜபக்சே டெல்லி வந்து
  காரி மூஞ்சியில் துப்பினாலும்
  இந்தியாவின் கால் பக்கம்
  ராணுவம் வர வாய்ப்பேயில்லை.

 3. தனித்தமிழ்நாடு வந்திருந்தாலும் கருணாநிதி மாதிரி ஒருவர் ஆண்டால் இதையெல்லாம் கண்டுகொண்டிருக்க மாட்டார்.

  //மேற்குலகும்,அமெரிக்காவும் பிரிவினைக்கு ஆதரவளித்திருக்கக் கூடுமோ//

  அந்த அளவுக்கு இங்கு பெட்ரோல் வளம் இல்லையே…

 4. //அதெப்படி தமிழ் நாட்டின் பிரச்சனைக்கு மட்டும் இந்திய அறிவுஜீவிகள் குரல் கொடுப்பதில்லை என்று யோசிக்கையில்தான் உள்ளூர் அறிவுஜீவிகளும் கவிஞர்களும் கருணாநிதிக்கு முதுகுசொறிய முண்டியடிப்பது உறைக்கிறது//

  மிகச்சரியான பார்வை…..

  அருந்ததிராய், மேதா பட்கர் போன்றவர்களிடம் இருந்து வரும் பதிலும் இத்துதான்.

  கட்டுரையில் உங்கள் தார்மீக கோவம் தெரிகிறது தோழர்….இருந்தும் என்ன

  செய்ய…..தமிழகம் பிழைப்புவாதிகளின் கூடாரமாகிவிட்டதே……

 5. இத சம்பந்தப் பட்டவங்களும் பார்க்குமாறு விளம்பரப்படுத்துங்க அப்பவாவது உறைக்குதான்னு பார்ப்பம்

 6. இந்திய, இலங்கைக் கூட்டு முயற்சியில் தமிழினம் அழிக்கப்பட்டு, தனது அடையாளங்களை இழந்து வேறு அடையாளங்களோடு கோமாளி போல் திரியப்போகும் நாள் கொஞ்சம் தள்ளிப் போகிறது. அவ்வளவு தான்.
  நம் மக்களின் அயல் நாட்டு மோகமும், எங்கு போனாலும் தமிழனை தமிழன் எதிரியாகப் பார்ப்பதும் மாறாத வரை நமக்கு விமோசனமில்லை.

 7. நமது வெளிஉறவு கொள்கை மிக விநோதமானது . நமக்கு நேச கரம் நீட்டுபோரை உதறி தள்ளுவதும் சில சந்தர்பங்களில் தேவை இல்லாத நட்பை தேடுவதும் சென்ற ௬௩ ஆண்டுகளாக நடைபெற்று கொண்டு வருகின்றது . பதிலடி கொடுக்காது கை காட்டி வேடிக்கை பார்ப்பது நம் வழக்கம். திருப்பி அலற அலற சுட்டு தள்ளாடும் ஒரே முறை .அப்புறம் பாருங்கள் வேடிக்கையை . நீங்களும் நானும் உரத்து பேசுவதில் அர்த்தமே இல்லை

 8. நமது வெளிஉறவு கொள்கை மிக விநோதமானது . நமக்கு நேச கரம் நீட்டுபோரை உதறி தள்ளுவதும் சில சந்தர்பங்களில் தேவை இல்லாத நட்பை தேடுவதும் சென்ற ௬௩ ஆண்டுகளாக நடைபெற்று கொண்டு வருகின்றது .//

  வெளியுறவுக் கொள்கை வினோதமானதல்ல.. அது கபடத்தனமானது. சீனாவுடன் காட்டும் முரட்டுத்தனம் நம் ஆயுதக் கொள்முதலை நியாயப்படுத்த.. இலங்கையை கொஞ்சுவது அங்குள்ள வியாபாரத்தை காப்பாற்ற.

  // நீங்களும் நானும் உரத்து பேசுவதில் அர்த்தமே இல்லை//

  ஆனால் பேசாமல் இருப்பதும் நியாயமில்லையே??

 9. மிகத் துணிச்சலான பதிவு!! ஆனால் மொத்தத்தில் ஒரு நம்பிக்கையின்மை தென்படுகிறதே. ஈழத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை உள்ள தமிழர்களுக்குக் கூட , இவ்வளவுக்குப் பிறகும், அதை முன்னிட்டு இந்திய எதிர்ப்பு மனநிலை இன்னும் பிறக்கவில்லை! அதை முதலில் நாம் தூண்ட வேண்டும். தனித் தமிழ்நாடு கோரிக்கை எழுந்தால்தான் தமிழீழத் திருநாடு மலர வழி பிறக்கும். எப்பொழுது தமிழர்களுக்கு இந்தியா இப்பேர்ப்பட்ட ஒரு துரோகத்தைச் செய்ததோ அப்பொழுதே தமிழர்களை ஆளும் தகுதியை அது இழந்து விட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s