மீண்டும் மீண்டும் படுகொலைகள்- தமிழ்நாட்டின் மக்கள்தொகையும் சொரணை செத்தவர்கள் எண்ணிக்கையும் ஏறத்தாழ சமம்தான் போலிருக்கிறது.


இவ்வளவு கடுமையான எரிச்சல், சலிப்பு மற்றும் கோபம் கலந்த ஒரு மனோநிலையில் நான் இதுவரை பதிவெழுத அமர்ந்ததில்லை. சனிக்கிழமை இரவு தொடங்கி செவ்வாய் காலைவரை நான் பெரும்பாலான நேரத்தை பேருந்துப்பயணங்களில் செலவிட்டுக்கொண்டிருந்தேன், தொலைக்காட்சியையோ இணையத்தையோ காண அப்போது அவகாசமில்லை. திங்கள் இரவு வினோவின் பின்னூட்டமொன்றை மின்னஞ்சல் மூலம் பார்த்தபிறகே ஜெயக்குமார் எனும் மீனவர் நடுக்கடலில் கொல்லப்பட்ட தகவல் கிடைத்தது.  பயணத்தில் எங்குமே மீனவர் ஒருவர் மீண்டும் சிங்களராணுவ நாய்களால் கொல்லப்பட்ட செய்தி தலைப்புச்செய்தியாக (செய்தித்தாள் சுவரொட்டிகளில்) காணப்படவில்லை, பெங்களூரில் என்றால் பரவாயில்லை.. ஓசூரிலேயே இந்த கதி என்பதுதான் நம்மை கடுமையாக அச்சுறுத்துவதாக இருக்கிறது.

பாண்டியன் கொலையைவிட இந்த படுகொலைக்கு நம் எதிர்வினைகள் மிக கேவலமாக இருக்கிறதோ எனக் கருதவேண்டியிருக்கிறது. இது என்ன மாதிரியான சமூகம் என்பது எனக்கு புரியவில்லை. மீனவன்தானே செத்தான் நமக்கென்ன என்று பெரும்பாலானவர்கள் கருதுகிறார்களா அல்லது மீனவன் கொல்லப்படுவது சாலைவிபத்தைபோல நமக்கு வழக்கமான செய்தியாகிவிட்டதா? தமிழர் இன அழிப்பின் முன்னோடி ராஜீவ் காந்தி சிலையில் காக்கா ஆய் போனாலே மாநிலம் தழுவிய ஆர்பாட்டங்கள் நடைபெறுகின்றன. சுயமாக சிந்திக்கத் தெரியாத சொரணை என்றால் என்னவென்றே தெரியாத காங்கிரஸ்காரனுக்கு வரும் கோபம்கூட இனமானம் என்றால் என்னவென்று இந்தியாவுக்கே வகுப்பெடுத்த தமிழனுக்கு வரவில்லை என்றால், நிச்சயம் தமிழ்நாட்டின் எதிர்காலம் படுமோசமாகத்தான் இருக்கப்போகிறது.

இதற்கு மேலும் நாம் கருணாநிதியை குறை சொல்லிப் பயனில்லை. பத்து எம்பிக்கள்கூட இல்லாத கட்சி மிரட்டினாலே கால்சட்டையை நனைத்துவிடும் காங்கிரசை கண்டே பயப்படும் இவர் ஏழுகோடி மக்களைப்பார்த்து பயப்பட மறுக்கிறார் என்றால் அது யார் குற்றம்? தனியாக நின்றால் ஐந்நூறு ஓட்டுகூட வாங்க துப்பில்லாத இளங்கோவனின் கண்றாவி கோரிக்கைகள்கூட நிறைவேற்றப்படுகின்ற அரசில் லட்சக்கணக்கான ஓட்டுக்களை கொண்டிருக்கிற ஓரு சமுதாயம் வைக்கிற பிரதான கோரிக்கை அலட்சியம் செய்யப்படுகிறதென்றால் அதன் பொருள் என்ன?  கருணா கூட நம்மைப் பார்த்து பயப்படவில்லை என்பதைவிட ஒரு வரலாற்று அவமானம் தமிழனுக்கு இனி வரமுடியாது.

காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்று நாம் முனகிய காலத்தில்தான் ராகுல் காந்திக்கு தமிழகம் எங்கும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு சாதியினர் அதிகமாக வசிக்கும் தெருவில் இன்னொரு சாதியை சேர்ந்த தலைவரின் சிலையை வைக்க முடியாது. அதே தமிழ்நாட்டில்தான் ஒரு இனத்துரோக கும்பலில் பிரதிநிதி ராஜகுமாரன் போல வலம்வர முடிகிறது. இளைஞர் காங்கிரசில் பதினேழு லட்சம் பேரை சேர்த்திருக்கிறோம் என்று மார்தட்ட முடிகிறது. அந்த மகிழ்ச்சியில் உங்கள் கண்ணை குத்த உங்களிடமிருந்தே ஆளைப் பிடித்துவிட்டோம் எனும் திமிர் கலந்திருக்கிறது. ரத்த வெறியில் பாஜகவுக்கு காங்கிரஸ் சற்றும் சளைத்ததல்ல.. வானரங்கள் படுகொலைகளை நேரடியாக செய்யும், காங்கிரஸ் அதை அவுட் சோர்ஸ் செய்யும் அதுதான் இருவருக்கும் வேறுபாடு (சீக்கிய படுகொலை ஒரு விதிவிலக்கு).

மேலும் மக்களை வேட்டையாடுவது காந்தி காலம் தொட்டே காங்கிரஸ் செய்துவரும் காரியம். வெள்ளையன் நேரடியாக ஆண்ட காலத்தைக் காட்டிலும் 1946ல் வெள்ளையன் ஆசியுடன் காங். நடத்திய ஆட்சியில்தான் மக்கள் மீது மோசமான அரசு வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. பகத் சிங் காந்தியின் ஆசீவாதங்களுடன்தான் தூக்கிலிடப்பட்டார். வெள்ளை அரசுக்கு எதிராக நடந்த கப்பற்படை வேலைநிறுத்தத்தை நிலைகுலையவைக்க காங்கிரஸ் நேரடியாகவே தங்கள் ஆட்களை பம்பாய் நகருக்கு அனுப்பிய வரலாறு உண்டு. விடுதலைக்கு பிறகான தெலுங்கானா மக்கள் மீதான வன்முறைகள், கம்யூனிஸ்டுகளை வேட்டையாடியது ஆகியவை நேரு மாமாவின் கைங்கர்யமென்றால் அவரது வாரிசுகள் காலத்துக்கு ஏற்றபடி தங்களை அப்டேட் செய்துகொண்ட அரக்கர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். திருமணமாகாதவர்களுக்குகூட கட்டாய கருக்கலைப்பு செய்து தனது அதிகாரத்தை காட்டிய சஞ்ஜய் காந்தி போன்ற காலிகூலாக்களை பெற்றெடுத்த பரம்பரையால் நடத்தப்படும் நிறுவனம்தான் காங்கிரஸ்.

ஆகவே காங்கிரசும் திமுகவும் இயல்பிலேயே தமிழர் விரோதிகள்தான். இவர்கள் ஏதேனும் செய்வார்கள் என்று எதிபார்ப்பதும் செய்யவில்லையே என புலம்புவதும் நூறு சதவிகிதம் அனாவசியமானது. இவர்கள் மீதான விமர்சனத்தில் இந்த விவகாரத்தில் அதிகம் பொறுப்புடையவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள் என்பதுதான் நாம் அதிகம் கவலைப்படவேண்டிய விடயம். 2ஜி ஊழலை தொடர் பிரச்சாரம் மூலம் அம்பலப்படுத்துவேன் என்று முழங்கும் ஜெயா ஒரு அறிக்கையோடு இந்த பிரச்சனையில் இருந்து விலகிக்கொள்கிறார், நகராட்சியில் சாக்கடை அள்ள தாமதமானதற்கெல்லாம் ஆர்பாட்டம் செய்யும் மம்மி மீனவனை பற்றி அக்கறையில்லாமல் இருக்கிறாரே ஏன்? (பதிவை எழுதி முடிக்கும் தருவாயில் அவர் இதற்கு ஆர்பாட்டமொன்றை அறிவித்திருக்கிறார்). தன் கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டதற்கு இன்றுவரை ஆத்திரப்படுகிறார் விஜயகாந்த், ஐந்நூறுக்கும் மேலான மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக அதில் பாதியாவது பேசியிருப்பாரா?  மே மாதா தேர்தலுக்காக இப்போதே சீமானை சந்தித்து ஆதரவை தேடும் வைகோ மீனவர்கள் பிரச்சனைக்காக ஒரேயொரு ஒருங்கினைந்த போராட்டத்துக்குகூட அழைப்புவிடுக்க மாட்டேன் என்கிறாரே ஏன்?

ஆளும் கட்சிக்கும் எதிர் கட்சிகளுக்கும் வெறும் அறிக்கைதான் வேறுபாடு என்றால் ஜனநாயகம் என்பது வெறும் பசப்பல்தான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கருணாவுக்கு எதிராக ஜெயாவை ஆதரிப்பது முட்டாள்தனமான முடிவு என்பதை சீமான் ஒத்துக்கொள்ள வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மறக்காமல் ஓட்டு போட்டாலும் இங்கு ஒரு மயிரும் நடக்கப்போவதில்லை என்பதை ஓட்டுபோடச்சொல்லி ஆலோசனை சொல்லும் அறிவுஜீவிகள் ஒத்துக்கொள்ளவேண்டும். ராணுவம் என்பது சொந்த மக்களை கொல்ல மட்டுமே காப்பாற்ற அல்ல என்பதை தேசபக்தர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். எதற்கு மெனக்கெடுவானேன்… தமிழர்கள் எல்லோரும் தன்மானம் இல்லாதவர்கள், உயிர்வாழக்கூட உரிமையில்லாதவர்கள் என்று ஒருவரியில் ஒத்துக்கொண்டு முடித்துக்கொள்ளலாம்.

நம் சொந்த சகோதரர்களின் படுகொலையில் நாம் காட்டும் அலட்சியம் ஆளும்கட்சிக்கு இவர்கள் எதையும் தாங்குவார்கள் என்ற துணிச்சலை கொடுக்கும். நாம் கலர் டிவியில் களித்திருக்கையில் நம் கடைசி கோவணம்கூட உருவப்பட்டுவிடும். நம் சககுடிமகன் மீதான பாராமுகம் எதிர்கட்சிகளுக்கு இவை எல்லாம் போணியாகாத பிரச்சனைகள் என்ற நினைப்பை உருவாக்கும். இந்த மவுனத்தால் நாம் முற்றிலும் நிராதரவானவர்களாகிக்கொண்டிருக்கிறோம். இந்த சுபாவத்தால்தான் சிறிய இயக்கங்களின் போராட்டங்கள் யாவும் முடக்கப்படுகின்றன அல்லது ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

புத்த மடாலயத்தில் கல் விழுந்ததற்கே எல்லா சிங்கள நிறுவனங்களுக்கும் பாதுகாப்பைக் குவிக்கிறார் கருணாநிதி. அவர் ஆட்களுக்கான பாதுகாப்புக்கு அவர் எத்தனை தூரம் அக்கறைப்படுகிறார்? நம் ஆட்களுக்கு நாம் அதில் பத்தில் ஒரு பாகமாவது தரவேண்டாமா? வெறுமனே தூதரகத்தின் முன் ஆர்பாட்டம் செய்வது பிரயோஜனம் இல்லை (பூந்தொட்டி உடைந்தாலே 124A பாயலாம்), பிழைக்க வந்த சிங்களனை எதிர்ப்பதிலும் நியாயமில்லை (அம்சா மாதிரி ஆட்கள் மேல் அழுகியமுட்டைகூட வீச வக்கில்லாமல் வீரத்தை அப்பாவிகள் மீது காட்டுவது நியாயமல்ல).  தமிழ்நாட்டில்  தம்ரோ ஃப்ர்னிச்சர், சிறீலங்கன் ஏர்வேஸ் போன்ற பல இலங்கை நிறுவனங்கள் இயங்குகின்றன.

அந்த நிறுவனங்களை முடக்க முயற்சி செய்வதுதான் இலங்கைக்கு நம்மால் தரமுடிகிற குறைந்தபட்ச நெருக்கடியாக இருக்கும். அது அந்த நிறுவனங்களை வெறுமனே புறக்கணிக்கும் மென்மையான நடவடிக்கையாகவோ அவர்களை வெளியேறச்சொல்லும் கடுமையான போராட்டமாகவோ இருக்கலாம். எதுவாயினும் அது ஒரு தொடர் பிரச்சாரமாக இருப்பது அவசியம்.  தொழிலதிபர்களுக்கு வரும் நெருக்கடிதான் அரசுக்கு தரும் நேரடி எச்சரிக்கை. சும்மா பெயருக்கு நடத்தப்படும் ஆர்பாட்டங்களுக்கும் கருணாவின் கடுதாசிகளுக்கும் எந்த வேறுபாடும் இருக்கப்போவதில்லை.

நாம் பொதுவிவகாரங்களில் ஈடுபாடு இல்லாதவர்களானதன் விளைவு, இப்போது நாம் கேட்கவேண்டிய செய்தியைக்கூட சன் டிவிதான் தீர்மானிக்கும் எனும் சூழ்நிலையில் நம் (தமிழ்) நாட்டை தள்ளியிருக்கிறது.  இது இப்படியே நீண்டு, எல்லா மக்களும் ராஜாவுக்கு அடிமைகள் எனும் நிலை இருந்ததைப்போல எல்லா மக்களும் அரசுக்கு அடிமைகள்  எனும் ஆதிகாலத்துக்கு நாட்டை கொண்டு சென்றுகொண்டிருக்கிறது. இன்றைக்கு சிக்கல் மீனவனுக்கு மட்டும் என்று நாம் அலட்சியம் காட்டுகிறோம் நாளை இவர்கள் வேறுவழிகளில் நிச்சயம் நம் கழுத்தை இறுக்குவார்கள். இப்போதே தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களை கட்டாயமாக இளைஞன் படத்துக்கு அழைத்துப்போகிறார்கள். இதைவிட தெளிவாக ஒரு அரசால் மக்களுக்கு அபாய அறிவிப்பைத் தரமுடியாது…

Advertisements

“மீண்டும் மீண்டும் படுகொலைகள்- தமிழ்நாட்டின் மக்கள்தொகையும் சொரணை செத்தவர்கள் எண்ணிக்கையும் ஏறத்தாழ சமம்தான் போலிருக்கிறது.” இல் 12 கருத்துகள் உள்ளன

 1. முதல் குரலாக என் பின்னூட்டம் . வாய்ப்புக்கு மிக்க நன்றி வில்லவன் .
  தமிழ்நாட்டின் மக்கள்தொகையும் சொரணை செத்தவர்கள் எண்ணிக்கையும் ஏறத்தாழ சமம்தான் (போலிருக்கிறது??!!.) இதில் என்ன சந்தேகம்?

 2. தமிழ்நாட்டின் மக்கள்தொகையும் சொரணை செத்தவர்கள் எண்ணிக்கையும் ஏறத்தாழ சமம்தான் (போலிருக்கிறது??!!.) இதில் என்ன சந்தேகம்?
  சத்யா-ருவாண்டா

 3. கருணாவுக்கு எதிராக ஜெயாவை ஆதரிப்பது முட்டாள்தனமான முடிவு என்பதை சீமான் ஒத்துக்கொள்ள வேண்டும்.

  http://thatstamil.oneindia.in/news/2011/01/27/27-thamarai-asks-seeman-not-support-admk-aid0091.html

  காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமல்ல. திமுக, அதிமுக இரண்டும் ஒன்றுதான் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு, திரைப்படப் பாடலாசிரியை தாமரை கோரிக்கை விடுத்துள்ளார்.

  சிங்களன் தமிழ் மீனவனை நோக்கிச் சுடும் ஒவ்வொரு தோட்டாவிலும் இந்திய இறையாண்மை பொத்தலாகிக் கிழிந்து தொங்கும் நேரம் இது! இரண்டகம் செய்யும் இரட்டையர்களான திமுக வையும் அதிமுக வையும் ஒன்றாகக் கருதி, ஒரு சேர தனிமைப்படுத்த வேண்டும். பதவி அரசியலை சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலை மறுதலிக்க வேண்டும். தேர்தல் வரட்டும், போகட்டும். ஆனால் இந்த கொள்கை வழித் தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பது உங்கள் பணியாக இருக்க வேண்டும். இதை நீங்கள் செய்தால் எம்மைப் போன்ற தமிழ் உணர்வாளர்களின் ஆதரவு கிட்டும். தமிழ்த் தேசிய இயக்கங்கள் வலுவாக உங்கள் பின்னால் அணிவகுப்பார்கள். உலகத் தமிழர்கள் வலுக்கூட்டுவார்கள். நாளை அழிக்க முடியாத பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கலாம்.

  அதைவிடுத்து நீங்களும் அரசியல் சதுரங்கத்தில் பகடையாக மாறி உருண்டீர்களானால், நாங்கள் பதைபதைத்துப் பார்த்து பத்தடி தள்ளி நிற்பதைத் தவிர வேறென்ன செய்வது?

  ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று ‘நாம் தமிழர்’ கட்சி அமைப்பை வலுப்படுத்துங்கள். தமிழ்த் தேசியச் சிந்தனையை மக்களிடம் வலுவாக வளர்த்தெடுங்கள். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்யலாம்.

  இலங்கைப் புறக்கணிப்பை வலுவாக மேற்கொள்வோம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தமிழகத்தில் கொண்டு வருவோம். தமிழீழமும் தமிழ்நாடும் ஒன்றாக விடியல் காணட்டும்!

  தமிழனின் சிறை உடைப்போம்!

  என்றும் அடங்கா தமிழ்த் தாகத்தோடு என்று தாமரை தெரிவித்துள்ளார்

  சத்யா-ருவாண்டா

 4. இந்த முறை பெரியவர் கடிதம் கூட எழுதவில்லை. கையறு நிலை என்பது இதுதான். முத்துகுமரன் நினைவுநாள் நெருங்குகிறது அவன் தன்னை கொளுத்தி கொண்டு இன உணர்வு நமத்து போன ஒன்று என்பதை தெரிந்து கொள்ளாமல் இறந்து போனானே என்ற வேதனை மேலெழுகிறது. சாப்பாட்டில் உப்பை கொஞ்சம் குறைத்து கொள்வோம் வில்லவன்.நமது தோல்வியை விட இது போன்ற சூழலில் வாழ வேண்டி இருக்கிறதே என்பதே பெரிய வேதனை.

 5. மலர்தூவும் ஹெலிகாப்டரும்
  மாண்டுபோன மீனவனும்…!

  குடியரசுத் தினம்
  கொண்டாடப்படுவது – இது
  அறுபத்தியிரண்டாம் முறை.
  குறையொன்றுமில்லை
  மன்மோகன் கண்ணா!

  டெல்லி ராஜ பாட்டையில்
  இந்தியாவின் ‘டெவலப்மெண்ட்’
  குதூகலத்தோடு கொப்பளித்தது.
  ஆயினும் ஒரு குறை :
  அடிக்கடி வந்துபோகிற
  அண்டை நாட்டு விருந்தாளி
  ராஜபக்ஷே காணப்படாததால்
  ராஜபாட்டையில் ராஜகளையில்லை.
  இருந்தாலும் –
  குறையொன்றுமில்லை
  மன்மோகன் கண்ணா!

  ‘ஸ்விஸ்’ கருப்புப் பண
  முதலைகளின் பெயர்களை
  கடவுளே கேட்டுக்கொண்டாலும்
  வெளியிடவே மாட்டோம்’ என்று
  மனித உரிமைக்கு மரியாதை கொடுக்கும்
  நல்லெணம் கொண்டோரே;
  ஆயினும் ஒரு குறை :
  வயதில் மூத்த, மூத்த குடிமகள்
  ராணுவ மரியாதைக்கு
  அவ்வளவு நேரமும் ‘சல்யூட்’ அடிப்பது
  மனித உரிமை மீரல் ஆகாதா?
  அதற்குப் பதில் அடுத்தமுறை
  சோனியாவையே கொடியேற்றிக்
  கொண்டாட வைக்க
  சட்டத் திருத்தம் கொண்டுவந்தால்
  சகலருக்கும் சந்தோஷம்.
  மற்றபடி –
  குறையொன்றுமில்லை
  மன்மோகன் கண்ணா!

  இருந்தாலும் ஒரு குறை;
  சுழன்றடிக்கும் புயலுக்கும்,
  நொறுக்கிப் போடும் பூகம்பத்துக்கும்,
  நாசமாய்ப் போகும் சுனாமிக்கும்,
  புல்லுமேட்டுச் சாவுக்கும்,
  போட்டுத் தள்ளப்பட்ட மீனவனுக்கும்
  எட்டிப் பார்க்காத
  ராணுவத்து எலிகாப்டர்கள்
  உங்கள்மீது
  பூத்தூவ மட்டும்
  நேரந்தவறாமல்
  பளபளப்பு மாறாமல் வந்துவிடும்
  ராணுவத்தின் ரகசியம்தான் என்ன?
  அழகுக்காக அமைக்கப்பட்ட
  அந்த எலிகாப்டரில்
  பூகம்பத்தின் புழுதி படுமோ
  அல்லது
  சுனாமி உப்பால் துருப்பிடிக்குமோ
  அல்லது அதில்
  பிணங்களை ஏற்றினால்
  இந்த நாட்டு கவுரவம்
  பாழாய்த்தான் போகுமோ? –
  (மந்திரியின் மெர்சிடெஸ் காரில்
  முனியாண்டியையும் மூக்காத்தாளையும்
  உட்கார வைத்தால்
  மெர்சிடெஸ் மரியாதை
  மயிராய்ப் போகும் என்பதைப் போல).
  எலிகாப்டர்களை மீண்டும் துடைத்து
  பரணையில் வைத்துவிடுங்கள்.
  மற்றபடி
  குறையொன்றுமில்லை
  மன்மோகன் கண்ணா!

  ராணுவக் குதிரைகளுக்கும்
  ஒய்யார ஒட்டகங்களுக்கும்
  ராஜ பாட்டையில்
  சாணி போடக் கூடாது என்று
  எப்படிப் பழக்கி விட்டீரோ
  அது போல,
  உலா வந்த ராணுவத் தளவாடங்களுக்கும்
  வடக்கு நோக்கி மட்டும்தான்
  சுட வேண்டும் என்று
  எப்படிப் பழக்கினீர்கள்?
  இதைத் தவிர
  குறையொன்றுமில்லை
  மன்மோகன் கண்ணா!

  இந்த ராணுவ அணிவகுப்பில்
  அண்டை அயலார்
  பயந்து பேதி பிடுங்கிப் போயிருப்பார்களா
  என்பது தெரியாது.
  ஆனால் – குறைந்தபட்சம்
  குட்டி நாடு இலங்கையாவது
  பயந்து போயிருந்தால்
  அது இன்றிலிருந்து
  நம் மீனவர்களைக் கொல்லாது
  என்று கொள்ளுவோம்!.
  மற்றபடி –
  குறையொன்றுமில்லை
  மன்மோகன் கண்ணா!

  எங்கள் செந்தமிழ் நாட்டிலோ –
  முதுகு வலியால் அவதியுண்ட
  எமது முதல்வர்
  போன முறை குடியரசை
  புறந்தள்ளினார்.
  அதற்கு முன்னரும்
  வேறு பல வலிகளால்
  குடியரசு விழாக்களை
  குப்புறத் தள்ளியிருக்கிறார்.
  இந்த முறை
  வந்து, இருந்து,
  வாழ்த்திவிட்டுப் போனார்.
  ஏனென்றால் –
  இம்முறை அவருக்கு
  முதுகு வலியும் இல்லை;
  வேறெந்த வலியுமில்லை;
  அவருக்கும் –
  குறையொன்றுமில்லை.
  மன்மோகன் கண்ணா –
  எங்களுக்கும் குறையொன்றுமில்லை.
  வாழ்க குடியரசு!

  புதிய பாமரன்

 6. வில்லவன்!
  இந்த கட்டுரையில் உங்களின் எந்த வார்த்தையை உயர்த்திச் சொல்வது! எல்லா வரிகளும் புள்ளிகளும் எண்ணங்களுமே மெத்தச் சரியானது-உண்மை-மேன்மையானது! நிஜமாகவே நாம் ஒரு சொரணை இல்லாத காலத்தில் தான் வாழ்கிறோம். இனி ஒரு பெரும் புரட்சி-ஏன் ஒரு நியாயமான மூச்சு விடும் உரிமைக்குக் கூட மக்கள் கிளர்ந்து எழுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் போய் வெகு காலம் ஆகிறது. இருந்தாலும் மனம் கொதிக்கிறது, எழுதாமலும் இருக்க முடியாதே!

  சுயமாக சிந்திக்கத் தெரியாத சொரணை என்றால் என்னவென்றே தெரியாத காங்கிரஸ்காரனுக்கு வரும் கோபம்கூட இனமானம் என்றால் என்னவென்று இந்தியாவுக்கே வகுப்பெடுத்த தமிழனுக்கு வரவில்லை என்றால், நிச்சயம் தமிழ்நாட்டின் எதிர்காலம் படுமோசமாகத்தான் இருக்கப்போகிறது….கருணா கூட நம்மைப் பார்த்து பயப்படவில்லை என்பதைவிட ஒரு வரலாற்று அவமானம் தமிழனுக்கு இனி வரமுடியாது…அதே தமிழ்நாட்டில்தான் ஒரு இனத்துரோக கும்பலில் பிரதிநிதி ராஜகுமாரன் போல வலம்வர முடிகிறது. இளைஞர் காங்கிரசில் பதினேழு லட்சம் பேரை சேர்த்திருக்கிறோம் என்று மார்தட்ட முடிகிறது. அந்த மகிழ்ச்சியில் உங்கள் கண்ணை குத்த உங்களிடமிருந்தே ஆளைப் பிடித்துவிட்டோம் எனும் திமிர் கலந்திருக்கிறது…பகத் சிங் காந்தியின் ஆசீவாதங்களுடன்தான் தூக்கிலிடப்பட்டார்…விடுதலைக்கு பிறகான தெலுங்கானா மக்கள் மீதான வன்முறைகள், கம்யூனிஸ்டுகளை வேட்டையாடியது ஆகியவை நேரு மாமாவின் கைங்கர்யமென்றால் அவரது வாரிசுகள் காலத்துக்கு ஏற்றபடி தங்களை அப்டேட் செய்துகொண்ட அரக்கர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்…காங்கிரசும் திமுகவும் இயல்பிலேயே தமிழர் விரோதிகள்தான். இவர்கள் ஏதேனும் செய்வார்கள் என்று எதிபார்ப்பதும் செய்யவில்லையே என புலம்புவதும் நூறு சதவிகிதம் அனாவசியமானது. இவர்கள் மீதான விமர்சனத்தில் இந்த விவகாரத்தில் அதிகம் பொறுப்புடையவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள் என்பதுதான் நாம் அதிகம் கவலைப்படவேண்டிய விடயம்…தன் கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டதற்கு இன்றுவரை ஆத்திரப்படுகிறார் விஜயகாந்த், ஐந்நூறுக்கும் மேலான மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக அதில் பாதியாவது பேசியிருப்பாரா? மே மாதா தேர்தலுக்காக இப்போதே சீமானை சந்தித்து ஆதரவை தேடும் வைகோ மீனவர்கள் பிரச்சனைக்காக ஒரேயொரு ஒருங்கினைந்த போராட்டத்துக்குகூட அழைப்புவிடுக்க மாட்டேன் என்கிறாரே ஏன்?..ஆளும் கட்சிக்கும் எதிர் கட்சிகளுக்கும் வெறும் அறிக்கைதான் வேறுபாடு என்றால் ஜனநாயகம் என்பது வெறும் பசப்பல்தான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கருணாவுக்கு எதிராக ஜெயாவை ஆதரிப்பது முட்டாள்தனமான முடிவு என்பதை சீமான் ஒத்துக்கொள்ள வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மறக்காமல் ஓட்டு போட்டாலும் இங்கு ஒரு மயிரும் நடக்கப்போவதில்லை என்பதை ஓட்டுபோடச்சொல்லி ஆலோசனை சொல்லும் அறிவுஜீவிகள் ஒத்துக்கொள்ளவேண்டும். ராணுவம் என்பது சொந்த மக்களை கொல்ல மட்டுமே காப்பாற்ற அல்ல என்பதை தேசபக்தர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். எதற்கு மெனக்கெடுவானேன்… தமிழர்கள் எல்லோரும் தன்மானம் இல்லாதவர்கள், உயிர்வாழக்கூட உரிமையில்லாதவர்கள் என்று ஒருவரியில் ஒத்துக்கொண்டு முடித்துக்கொள்ளலாம்…நம் சொந்த சகோதரர்களின் படுகொலையில் நாம் காட்டும் அலட்சியம் ஆளும்கட்சிக்கு இவர்கள் எதையும் தாங்குவார்கள் என்ற துணிச்சலை கொடுக்கும். நாம் கலர் டிவியில் களித்திருக்கையில் நம் கடைசி கோவணம்கூட உருவப்பட்டுவிடும்… தொழிலதிபர்களுக்கு வரும் நெருக்கடிதான் அரசுக்கு தரும் நேரடி எச்சரிக்கை. சும்மா பெயருக்கு நடத்தப்படும் ஆர்பாட்டங்களுக்கும் கருணாவின் கடுதாசிகளுக்கும் எந்த வேறுபாடும் இருக்கப்போவதில்லை….இன்றைக்கு சிக்கல் மீனவனுக்கு மட்டும் என்று நாம் அலட்சியம் காட்டுகிறோம் நாளை இவர்கள் வேறுவழிகளில் நிச்சயம் நம் கழுத்தை இறுக்குவார்கள்….

  Love and regards,
  Mohan Balakrishna
  http://www.yozenmind.com

 7. மீனவனைக் கொல்வது
  இலங்கைக்கு வழக்கமான ஒன்றுதான்…!

  ‘இங்குள்ள இலங்கைத் தூதரகத்தை
  இந்த விவகாரத்தில் கவனமாக இருக்குமாறு
  அல்லது கருணைகூர்ந்து
  பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்’ –
  ப்ரணாப் அறிக்கை விடுவார்.
  வழக்கமான ஒன்றுதான்…!

  மன்மோகனுக்கு கருணாநிதியிடமிருந்து
  லெட்டர் ஏவுகணைகளும்,
  ‘தந்தித்’ தடவல்களும்
  பறந்து போகும்.
  வழக்கமான ஒன்றுதான்…!

  சிதம்பரத்தின் அன்ன நடை
  இந்த நிகழ்வுகளில்
  நிதானத்தைக் கடைப்பிடிக்கும்.
  வழக்கமான ஒன்றுதான்…!

  தினத்தந்தியில்
  ‘குடிகாரன் அம்மிக்கல்லால்
  மனைவியைக் கொன்றான்’
  என்கிற வாக்கில் இந்த செய்தியிருக்கும்.
  வழக்கமான ஒன்றுதான்…!

  இந்த புஷ்பவனத்து மீனவன்
  நடுக்கடலில் தூக்கிலிடப்பட்டும்
  எங்கோ ஒரு நகரத்து மேடையில்
  நோட்டுக்குப் பாட்டுப்பாடும்
  புஷ்பவனம் குப்புசாமியின்
  டப்பாங்குத்துப் பாட்டு
  பாடப்பட்டுக்கொண்டேதான் இருக்கும்.
  வழக்கமான ஒன்றுதான்…!

  எல்லாம் அறிந்தும்
  சுரணையற்றுத் திரியும்
  தமிழ்ப் பரம்பரை.
  வழக்கமான ஒன்றுதான்…!

 8. //தமிழ்நாட்டில் தம்ரோ (Damro) ஃப்ர்னிச்சர், சிறீலங்கன் ஏர்வேஸ் போன்ற பல இலங்கை நிறுவனங்கள் இயங்குகின்றன.

  அந்த நிறுவனங்களை முடக்க முயற்சி செய்வதுதான் இலங்கைக்கு நம்மால் தரமுடிகிற குறைந்தபட்ச நெருக்கடியாக இருக்கும். அது அந்த நிறுவனங்களை வெறுமனே புறக்கணிக்கும் மென்மையான நடவடிக்கையாகவோ அவர்களை வெளியேறச்சொல்லும் கடுமையான போராட்டமாகவோ இருக்கலாம். எதுவாயினும் அது ஒரு தொடர் பிரச்சாரமாக இருப்பது அவசியம். தொழிலதிபர்களுக்கு வரும் நெருக்கடிதான் அரசுக்கு தரும் நேரடி எச்சரிக்கை.//

  சரியாகச் சொன்னீர்கள். இந்த உலகமயமாக்கலின் தாக்குதல் ‘பிசினஸ்’ என்றால் நாம் அதற்குக் கொடுக்கும் பதிலடியும் அதன் மூலமே இருக்கும் போது தான் அது தாக்கத்தை உண்டாக்கும்.
  இன்னும் சில இலங்கை சார்ந்த கம்பெனிகளின் பட்டியல் இதோ:
  Informatics – software company.
  Kinetics – rubber manufacturing company.
  Ceylon Tea Exotica, Expolanka Teas,Ni-Cey group – Tea companies
  Anton – a srilankan brand making various domestic products
  sancta maria Coir Products
  World Polybags.

 9. Rightly said nanba
  INDIAN TAMILAN = KAI ATIKAPATA TAMILAN
  We can do one thing on this election
  Take leave for 10 days on election time and ask voters “dont vote to congress” in those MLA seats congress is a canditate.
  Give result as “WASH OUT FOR CONGRESS”
  It may work.
  If congress win seats then we finish.
  I am ready to join it.
  Dont wast time to fight against DMK and ADMK. Concentrate on congress only and give punishment by defeat.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s