2020ல் மீரா ராடியா- ஒரு சயின்ஸ்ஃபிக்ஷன் கதை.


இடம் – சௌகார் ஜானகி கம்யூனிகேசன் தலைவர் மீரா ராடியா வீடு.

காலம்- இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு. (கனவு நாயகன் குலாம் ஆசைப்பட்டபடி லஞ்சம் ஊழல் இல்லாத நாடாக இந்தியா மாறிவிட்டிருக்கிறது… அவை சேவைக்கட்டணம் என அரசால் பெயரிடப்பட்டு சட்டபூர்வமாகிவிட்டிருக்கின்றன)

(குறிப்பு: இது ஆனந்த விகடனில் வெளியாகும் லூசுப்பையன் கார்டூனின் பாணியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.)

லாட்வியா, பொலிவியா மற்றும் நார்னியா நாடுகளுக்கு அமைச்சர்களை சிபாரிசு செய்து பதவியில் அமர்த்திவிட்டு அப்போதுதான் தனிவிமானத்தில் ஊருக்கு வருகிறார் மீரா. அவரது நேரத்தின் முக்கியத்துவம் கருதி அவரது வீட்டுக்கும் விமான நிலையத்துக்கும் அரசு போட்டிருக்கும் பாலம் வழியே அதிவிரைவாக வருகிறார்.அவர் வீட்டு வாசலில் அமெரிக்கா வாழ்க என அனிச்சையாக முணுமுணுத்துக்கொண்டு ஒரு முதியவர் வாட்ச்மேன் வேடத்தில்  அமர்ந்திருக்கிறார்.  உற்றுப்பார்த்தால் நம்ம கல்மோகன் சிங்.

கதவை திறந்துவிட்டுகொண்டே மீராவை பரிதாபமாக பார்க்கிறார் கல்மோகன். யார் என்பதைக் கண்டுபிடித்து காரை நிறுத்துகிறார் மீரா.

மீரா: வாங்க கல்.. என்ன அப்பாயின்மெண்ட் இல்லாமலே வந்துட்டீங்க?!! ஏதாவது பிரச்சனையா, தயங்காம சொல்லுங்க.. யார்கிட்ட பேசனும்?

கல்மோகன்: ஒன்னா ரெண்டா சொல்றதுக்கு.. உங்களுக்கே தெரியும், அமெரிக்காக்காரன் கக்கூஸ்ல உட்கார்ந்து போற மெத்தேடுக்கு காப்புரிமை வாங்கிட்டான்.

மீரா: ம்..

கல்மோகன்: ஒருவாட்டி போன பத்து ரூபாய் ராயல்டி கட்டினா போதும்னு ஏழைகள் நலன் கருதி குறைவான கட்டணம் நிர்ணயம் பண்ணி சட்டம் போட்டா, அதை இந்த எதிர்கட்சிக எல்லாம் பார்லிமெண்டுல திட்டுறாங்கம்மா..

மீரா: அய்யய்யோ அப்போ அடிக்கடி பாத்ரூம்போற சுகேஷ் அம்பானி, முனில் மிட்டல் எல்லாம் ஏகப்பட்ட ராயல்டி கட்டனுமே?

கல்மோகன்: அப்படியெல்லாம் விட்டுடுவோமா! நம்ம நாட்டின் பொருளாதார நலன் கருதி கோடீஸ்வரர்களுக்கு மட்டும் இதுல இருந்து விலக்கு தந்திருக்கோம்மா..

மீரா: நல்லது. இப்போ நான் என்ன பண்ணனும்னு சொல்றீங்க,

கல்மோகன்: நீங்க கொஞ்சம் எதிர்கட்சிகளை வழிக்கு கொண்டுவந்தா தேவலாம். ஏற்கனவே (சொ)றிலையன்சுக்கு கொடுத்த வரிவிலக்குக்கு சாதகமா உருளைக்கிழங்கு நாயிடுவையே பேச வச்சவங்க, நீங்க நினைச்சா இதையும் முடிக்கலாம்.

மீரா: கீஜேபீ கிட்டன்னா எது வேணா பண்ணிடலாம்.. ஆனா இந்த கீரத்தையும் பீபி பரதனையும் மட்டும் பார்க்க சொல்லிடாதீங்க.

கல்மோகன்: அட அவங்கள பத்தி யாருங்க கவலைப்பட்டா.. பெங்கால் அரசாங்கத்தை காட்டி மிரட்டியே அவங்கள வழிக்கு கொண்டு வந்துடுவோம், அடுத்த வாரம் நம்ம தோட்டத்தையே சுத்ததேவ் தான் சுத்தம் பண்ணப்போறார்னா பாருங்களேன்.

மீரா : அப்படீன்னா அந்த கவலையை எங்கிட்ட விடுங்க. ஆனா அதையும் மீறி உங்க முகத்துல வேறொரு கவலை தெரியுதே?!!!

கல் : சரியா கண்டுபிடிச்சீங்க மீராம்மா.. இந்த சேமியா கந்தி அவங்க பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சு சீதனமா பிரதமர் பதவியை கொடுத்துடுவாங்க போலிருக்கு. ஏதோ இந்த கட்டை போறதுக்குள்ள ஒரு நல்ல குடிமகனா என்னோட நாட்டுக்கு இந்தியாவை முழுசா எழுதிவச்சிடலாம்னு பார்த்தா, இந்த பாவிங்க அதுல மண்ணை போட்டுடுவாங்க போலிருக்கேன்னுதான் கவலையா இருக்கு.

மீரா: இப்போ என்ன வயசாச்சுன்னு இந்த பையனுக்கு கல்யாணம் பண்ணனும்னு இந்தம்மா குதிக்கிறாங்க?? அம்பதுவயசெல்லாம் ஒரு வயசா.. சரி விடுங்க., இந்தியாவோட அடுத்த மகாராணி ஸ்பெயின்லேர்ந்துதான் வரனும்னு நம்ம தலையில எழுதியிருந்தா அதை யாரால மாத்த முடியும்?? அதுக்காக நீங்க கவலைப்படாதீங்க கல். நீங்க போனாலும் உங்க லட்சியத்த நிறைவேத்த நாங்க இருக்கோமே.!!

கல்: (என்ன இந்தம்மா மரணாப் முகர்ஜிகிட்ட பணம் வாங்கிட்ட மாதிரி பேசுது என மனதுக்குள் நினைத்தபடி) என்ன நீங்களும் இப்படி சொல்றீங்க.. நான் ஆரம்பிச்ச வேலைய நானே முடிச்ச பிறகுதான் கண்ணை மூடனும்னு நான் இந்த உயிரை கையில பிடிச்சுகிட்டு இருக்குறது உங்களுக்கு தெரியாதா?? (வாயை பொத்தியபடி அழுகிறார்)

மீரா: (சாதாரணமா பேசினாலே புரியாது.. இதுல அழுகைவேற என முனகியபடி). அழாதீங்க கல் மோகன். ஏதாவது லாபி பண்ணி நகுல் காந்தியோட கல்யாண வேலைய கொலைஞர்ஜிகிட்ட கொடுத்துடுவோம். பிறகு இந்த ஜென்மத்துல அந்த பையனுக்கு கல்யாணம் நடக்குதான்னு பார்த்துடலாம். குருமாவளவனுக்கு பதினைஞ்சு வருசமா அவரு பொண்ணு பாக்குறாரு. ஏதாவது நடந்ததா சொல்லுங்க?.

கல் மோகன்: அவருகிட்ட சொன்னா வேலை ஆகும்னாலும் கொஞ்சம் பயமா இருக்கே. அவரு ஒன்னரை லட்சம் பேரு செத்தப்பவே சேமியா  பக்கம்தான் இருந்தாரு. என் ஒரு ஆளுக்காகவா கவலைப்படப்போறாரு??

மீரா: அப்படியெல்லாம் பேசாதீங்க கல், என் முன்னால என் கஸ்டமரை பத்தி தப்பா பேசினா எனக்குக் கெட்ட கோவம் வரும் ஆமா. என்னை நம்புங்க.

கல் மோகன்: உங்கள நம்பித்தான் நான் போறேன்.. பார்த்து ஏதாவது பண்ணுங்க (கண்களை துடைத்துக்கொண்டு வெளியேறுகிறார்).

வீட்டுக்குள் போய் அக்கடா என உட்காரும் போது போனில் அழைக்கிறார் தமிழ்நாட்டின் பாராட்டுவிழாத் துறை அமைச்சர்  தனிமுழி.

தனி முழி: ஹாய் மீரா..

மீரா: ஹா(ன்)..

தனி: உங்களுக்கு இந்த நையாண்டி மேளம், கரகாட்டம் மாதிரி கிராமிய நடன கோஷ்டிங்க யாரையாவது தெரியுமா? எனக்கு அர்ஜெண்டா தேவைப்படுது,..

மீரா: (மனதுக்குள்: ஒரு நேஷனல் புரோக்கர்கிட்ட கேக்குற விஷயமா இது.. அகில இந்திய ரீதியில என்னை ஒரு மேஸ்திரி மாதிரி நடத்துறது இந்த ஒரு ஆளுதான்) இதுக்கெல்லாம் உங்கிட்டயே ஆளுங்க இருப்பங்களே தனிமுழி…

தனி: அதை ஏன் கேக்கறீங்க.. ஏற்கனவே நம்மகிட்ட லோகத்து டயாபர்னு ஒரு ஆள் இருந்தாரு. நாம ஒரு வார்த்தை சொன்னா சொந்த அம்மாவையே கேவலப்படுத்துற அளவுக்கு விசுவாசி. இப்போ அவரு இல்லாமதான் ரொம்ப சிரமமா இருக்கு.

மீரா: இப்போ அவரு எங்கே?

தனி: இப்போ பாலஸ்தீன் போராளிங்களுக்குதான் மார்கெட்டுன்னு அவங்கள பத்தி கட்டுரை எழுத ஐரோப்பா போயிட்டாரு.

மீரா: அடக்கொடுமையே., ஆனாலும் இப்போ இந்த விஷயத்துல என்னால உங்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை. சென்னையில ஏதாவது இடத்தை முடிக்கனுமா, கருமாந்திர முன்னேற்ற கழகத்து பொதுக்குழுவுல எதாவது தீர்மானம் கொண்டுவரனுமா வேற எதுவானாலும் சொல்லுங்க முடிச்சிடுவோம்.

தனி : (இனிமே சென்னையில வாங்க இடம் எங்க இருக்கு என நினைத்தபடியே) பரவாயில்லை மீரா.. நான் அப்புறம் கூப்பிடறேன்.

போனை வைத்த பின். சுவரில் பேப்பரை ஒட்டிய மாதிரி இருக்கும் அதிநவீன் டிவியை பார்க்கிறார் மீரா.. அதில் மோ.க.மொத்துவின் பேரனுக்கு இணையமைச்சர் பதவி வாங்குவதற்காக கொலைஞர் டெல்லி வந்த செய்தி ஓடுகிறது. அதில் இலங்கைத் தமிழருக்கு ஒரு இன்னல் என்றால் பதவியை தூக்கியெறியவும் தயங்க மாட்டேன் என்று சூளுரைக்கிறார் கொலைஞர். பக்கத்தில் ஏழெட்டு சக்கர நாற்காலிகளில் தரைமுருகன், அரைவேக்காட்டு சாமி,  பண்முகநாதன் மற்றும் பலர் இருக்கிறார்கள்.

கொலைஞரோட இலங்கைத் தமிழர் பேச்ச பார்த்தால்  பதவி ரொம்ப அர்ஜெண்ட் போலிருக்கு என அவர் நினைக்கையிலேயே தொலைபேசி ஒலிக்கிறது. எதிரே பேசுவது கவாஸ்கர் சிபல்.

மீரா: சொல்லுங்க கவாஸ்கர் சிபல்,

க.சி: ஒரு பர்சனல் விஷயம்…

மீரா: ((சரிதான், நீங்க எல்லாம் என்னைக்கு பொது விஷயத்துக்கு போன் பண்ணினீங்க எல்லாம் பர்சனல்தானே) அதுக்கென்ன க.சி, சொல்லுங்க.,

க.சி: ஒன்னுமில்ல.. நம்ம ஆளு ஒருத்தன் டெல்லில செயின் அறுத்து மாட்டிட்டான். அவனை எப்படி வாதாடி காப்பாத்துறதுன்னு சொல்லிட்டீங்கன்ன கொஞ்சம் சவுரியமா போகும்.

மீரா: அதுக்கென்ன சொல்லிட்டா போச்சு. அந்த செயின் அதுக்கு முன்னால பறிகொடுத்தவுங்ககிட்ட இருந்ததுக்கு எந்த ஆதாரமும் இல்லைன்னு சொல்லுங்க. பின்னால இல்லாத செயினை எப்படி எங்காளு திருடியிருக்க முடியும்னு வாதாடிடலாம்.

க.சி: பிரமாதம் மீரா. கேட்க மறந்துட்டேன். அப்படியே இந்த எய்ட் ஜி விவகாரத்தை அமுக்க என்ன செய்யலாம்ன்னு சொல்லிட்டீங்கன்னா பரவாயில்ல..

மீரா: மிஸ்டர் கவா.. நான் ரொம்ப பிசியா இருக்கேன்.. இதுல செயின் அறுப்புக்கு ஒருதரம் ஸ்பெக்ட்ரத்துக்கு ஒருதரமெல்லாம் ஆலோசனை சொல்ல முடியாது. ரெண்டுமே ஒன்னுதான்ன ரெண்டுக்கும் தீர்வும் ஒன்னுதான்.. புரிஞ்சுதா??

கவாஸ்கர் சிபல் பதறிப்போய் மன்னிப்பு கேட்டுக்கொண்டபடி போனை வைக்கிறார். அப்போது தண்ணீர் கேன் மாற்றும் ஆள் மீரா வீட்டுக்குள் வர,

மீரா: வாங்க குந்தாணி ஜி..

குந்தாணி: உங்க அறிவே அறிவுதான் மீராம்மா… எப்படி மாறுவேஷத்துல இருந்தாலும் நான்தான்னு கண்டு பிடிச்சீங்க?!!

மீரா: அதான் உள்ள போட்டிருக்குற உங்க காவி கலர் டி சர்ட் தெளிவா தெரியுதே, இத்தனை வருசமாகியும் உங்களுக்கு இந்த சின்ன அடையாளத்தை மறைக்க தெரியலையே..

குந்தாணி: (மனதுக்குள்: இவ்வளவு வேலைபார்த்தும் உள்ள இருக்குற ஆரஞ்சு பனியனை மறந்துட்டமே..) எதிர் கட்சிக்காரங்ககிட்ட நீங்க ரொம்பநேரம் பேச முடியாதுன்னு தெரியும், அதனால நான் வந்த விசயத்தை சுருக்கமா சொல்லிடறேன். நானும் பிரதமராக எல்ல வேலையும் செஞ்சு பார்த்துட்டேன். ஜின்னாவையே வாழ்த்திப் பேசியும் பார்த்துட்டேன், எதுவும் வேலைக்காவலை. உங்கள பார்த்தா உடனே வேலை ஆவுமுன்னு தெரிஞ்சுக்க இந்த மரமண்டைக்கு இவ்வளவு காலம் ஆயிருக்கு.

(கோரிக்கையை கேட்டு மீரா கொஞ்சம் யோசிக்கிறார்)

குந்தாணி: அப்படியெல்லாம் யோசிக்காதீங்கமா.. வெளக்கமாத்து மாளிகையோட மனசு கோணாம ஆட்சி நடத்துவோம்மா என்னை நம்புங்க.

மீரா: சரி ஏற்பாடு பண்றேன். அதுக்கு அட்வான்சா ஒரு அறுநூறு கோடியை கட்டிடுங்க. டிடியை சௌகார் ஜானகி கம்யூனிகேஷன் பேர்லயே எடுத்துடுங்க.

குந்தாணி: தொகை ரொம்ப ஜாஸ்திம்மா..

மீரா: தனிமுழி வீட்டு பிளம்பருக்கு இருக்குற சொத்தே ரெண்டாயிரம் கோடி தெரியுமா. என்னமோ அறுநூறுக்கே அழுவுறீங்களே..

குந்தாணி: (ஒருகாலத்துல கரசேவையையே காரசேவு மாதிரி பண்ணினவுங்க நாங்க..ம்ம் அது ஒரு காலம் என புலம்பியபடி) சரி மேடம்.. எப்படியாவது ஏற்பாடு பண்றேன்.

ஒத்தை ஆளா இந்த கவர்மெண்டை நடத்துறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுதே என்று சலித்துக்கொண்டு ட்ரெட்மில்லை நோக்கி நடக்கிறார். அப்போது பிசிகலா ஊர் முக்கில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் பாலாபிஷேகம் செய்தபடி இவருக்காக காத்திருக்கும் செய்தி குறுந்தகவலாக வருகிறது. ஒரு வருஷத்துக்கு முந்தின அப்பாயின்மெண்டாச்சே என்று விரைவாக கிளம்புகிறார்.

காரில் ஏறி புறப்படுகிறார் மீரா.. போகும் வழியில் சிக்னலில் கார் நிற்கிறது. அங்கு வயிறு வரை தாடி வளர்த்துக்கொண்டு நிற்கிறார் திருச்சி என்.ரவா. அவரது கழுத்தில் “wanted a MP seat” என்ற வாசகம் கொண்ட அட்டை தொங்குகிறது.

“அம்மா.. அவரு ஆறு மாசமா உங்களுக்காக இங்க காத்திருக்காரு. பார்த்து ஏதாவது பண்ணுங்கம்மா” என்கிறார் மீராவின் டிரைவர்.

மீரா: என் தொழிலுக்கு நான் துரோகம் செய்ய முடியாதுப்பா.. தமிழ் நாட்டுல இப்போ ரெண்டு குடும்பத்துக்கிட்டதான் மொத்த பணமும் இருக்கு. நமக்கு சர்வீஸ் சார்ஜ் கொடுக்குற அளவுக்கு வேற யாருக்கிட்டயும் வசதி கிடையாது. காசு இல்லாதவன் கடவுளானாலும் இந்த ராடியா கால் பண்ண மாட்டா.

பதிலை கேட்டு டிரைவர் அமைதியாகிறார். அப்போது அவரது போன் ஒலிக்கிறது, எதிரே பேசுவது அவரது அலுவலக செக்யூரிட்டி.

செக்யூ: மேடம், இங்க ரெண்டு பேர் உங்கள பார்த்துட்டுதான் போவேன்னு ஆபீஸ் வாசல்லயே அடமா உட்கார்ந்திருக்காங்க..

மீரா: யாரு என்னன்னு விசாரிச்சியா?

செக்யூ: கேட்டேன் மேடம். ஒருத்தரு எஸ்.ஏ.தந்திரசேகர் முன்னேற்ற கழக தலைவர் அஜயாம். ஒரு தரம் முடிவு பண்ணிட்டா அவரே சொன்னாலும் இங்கிருந்து போகமாட்டேன்னு சொல்றாரு மேடம்.

மீரா: (கஷ்டகாலம்.. தோட்டக்காரன் படத்துக்கு டாட்டர் டிவியில இருந்து பிரச்சனை வந்திருக்கும் போல என எண்ணியபடி) வேற யாரு வந்திருக்கா..

செக்யூ: ஒரு தாத்தா வந்திருக்காரும்மா.. பேரை சொல்ல மாட்டாராம். ஏதோ அவரோட கல்யாண சமாச்சாரமா உங்ககிட்ட அர்ஜெண்ட்டா பேசனுமாம். பார்க்க வெளிநாட்டுகாரர் மாதிரி இருக்காரு. என் டிபன் பாக்சுல இருந்த சப்பாத்தியெல்லாம் எடுத்து தின்னுட்டாரும்மா.. அதை ஒரு ஐம்பதுபேரை வச்சு போட்டோ வேற எடுத்தாரும்மா.. எனக்கென்னவோ ரொம்ப பயமா இருக்கு, நீங்க சீக்கிரம் வரப்பாருங்க மேடம்.

முதலில் யாரை பார்க்கப் போவது என்று தெரியாமல் குழம்பி நிற்கிறார் மீரா..

Advertisements

“2020ல் மீரா ராடியா- ஒரு சயின்ஸ்ஃபிக்ஷன் கதை.” இல் 6 கருத்துகள் உள்ளன

 1. வில்லவன், கொன்னு எடுத்துட்டீங்க. என்ன இந்த பெரிய மொள்ளமாரிகளுக்கு இணைய அஜய சேர்த்துட்டீங்களேன்னு ஒரு சின்ன வருத்தம். அருமையா இருக்கு

 2. எமது பின்னூட்டம்
  உமக்கு இப்போதைக்கு கிடையாது…!
  முடியவும் முடியாது…!
  நான் சிரித்து முடிக்க நாலு நாள்
  அப்புறம் –
  சிந்தித்து முடிக்க நாலு நாள்.
  பிற்பாடு
  சிரிப்பால் ஏற்பட்ட வயிற்று வலியும்
  சிந்தித்ததால் ஏற்பட்ட மூளை வலியும்
  சரியானால்… பார்க்கலாம்.
  சிரிப்பூட்டிக் கொல்லவா
  இதை எழுதினாய் வில்லவா…?

 3. //இடம் – சௌகார் ஜானகி கம்யூனிகேசன் தலைவர் மீரா ராடியா வீடு//

  இந்த ஒருவரியே சொல்லி விட்டது உங்களது திறனை. சூப்பர்

 4. //ஒரு தாத்தா வந்திருக்காரும்மா.. பேரை சொல்ல மாட்டாராம். ஏதோ அவரோட கல்யாண சமாச்சாரமா உங்ககிட்ட அர்ஜெண்ட்டா பேசனுமாம். பார்க்க வெளிநாட்டுகாரர் மாதிரி இருக்காரு. என் டிபன் பாக்சுல இருந்த சப்பாத்தியெல்லாம் எடுத்து தின்னுட்டாரும்மா.. அதை ஒரு ஐம்பதுபேரை வச்சு போட்டோ வேற எடுத்தாரும்மா.. எனக்கென்னவோ ரொம்ப பயமா இருக்கு, நீங்க சீக்கிரம் வரப்பாருங்க மேடம்.//

  சூப்பரு.. ராகுல் காந்தி தாத்தாவுக்கு கல்லாணம் பன்னக் கூட ராடியா தேவைப்படுது…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s