எஸ்.எஸ்.மியூசிக் + எனிதிங் ஃபார் விஜய் – ஊடகத்திமிரா? திமுகவின் சகுனித்தனமா??


இன்னொரு சினிமா பதிவா என ஆயாசமாக இருக்கிறது. இதை எழுதத்தான் வேண்டுமா எனும் குழப்பம் இருபத்து நான்கு மணிநேரமாக இருந்தது. ஆனாலும் சனிக்கிழமை மாலை எஸ்.எஸ்.மியூசிக்கில் ஒளிபரப்பான அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி (எனிதிங் ஃபார் விஜய்)  எத்தனை அநாகரீகமானது அதில் போட்டியாளர்கள் நடத்தப்பட்ட விதம் எத்தகைய மனித உரிமை மீறல் என்பது நிச்சயம் பதிவு செய்யப்படவேண்டியது அவசியம் என கருதுகிறேன்.

கடந்த சில நாட்களாக மேற்கூறிய இந்த தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் தொடர்ச்சியாக வந்ததை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். விஜயை சந்திக்க இவர் என்ன செய்யப்போகிறார் என்ற வாசகத்துடன் ஒரு டப்பா விஷம், ஒரு ஹீட்டர் மற்றும் தலையை மழிக்க ஒரு கத்தி ஆகியவை காட்டப்பட்டன. அப்போதே இது ஏதோ ஏடாகூடமான நிகழ்ச்சி என்பது புரிந்தது. ஆனாலும் முதலில் ஒளிபரப்பானபோது இதைப் பார்க்க இயலவில்லை (நன்றி: ஆற்காடு வீராசாமி).  நேற்று மாலை அந்த நிகழ்ச்சி மறுஒளிபரப்பானபோது எதேச்சையாக காண நேர்ந்தது. சந்தேகமில்லை இதைவிட மட்டமான ஒரு நிகழ்ச்சி இதுவரை வந்திருக்க முடியாது.

அந்த நிகழ்ச்சியில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இருவரும் ஒவ்வொரு செயலாக செய்கிறார்கள் (மன்னிக்கவும் இதை திறமை என சொல்வதற்கில்லை). அது குறித்து நடுவராக இருக்கும் அந்த டிவி பெண் தொகுப்பாளர் கருத்து தெரிவிக்கிறார். மற்றொரு நடுவர் முகத்தை மலச்சிக்கல் வந்த மாதிரி வைத்துக்கொண்டு கருத்து இல்லை என்று சொல்கிறார். கடைசியாக முடிவு அறிவிக்க வேண்டிய நேரத்தில் அவரது கருத்து கேட்கப்பட, அவர் போட்டியாளர்களை நோக்கி கேள்விகளை எழுப்புகிறார். அந்த கேள்விகள் யாவும் அவரை சிறைவைக்கும் அளவுக்கு அநாகரீகமானவை, மன்னிக்க இயலாதவை மற்றும் மனிதத்தன்மையற்றவை.

வா போ என்கிற ஏகவசனங்கள், வெளியே போ எனும் அதட்டல்கள் (கெட் அவுட் என இருமுறை கத்துகிறார்), நீ போட்டிக்கு தகுதியில்லாதவன் எனும் நேரடி அவமானங்கள் என அவரது ஒவ்வொரு வாக்கியமும் மனித உரிமை மீறலாகவே இருந்தது. இவை முன்பே திட்டமிடப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. ஒரு நிறுவனத்தில் அதன் ஊழியருக்கு இதில் எதையாவது ஒன்றை செய்தாலும் அது குற்றம். அந்த குற்றங்கள் எதுவும் நடப்பதில்லை என நாம் சொல்லவில்லை. ஆனால் அப்படியொரு செய்கை நடைபெற்றதாக செய்தி வந்தாலே அந்த நிறுவனம் அதை நாங்கள் செய்யவில்லை என மறுக்கும். ஆனால் இங்கு இப்படியான ஒரு குற்றச்செயலை பட்டவர்த்தனமாக அதுவும் நாளுக்கு நூறு விளம்பரம் போட்டு ஒளிபரப்புகிறார்களே என்பதுதான் நம் பொறுமையை சோதிப்பதாக இருக்கிறது.

இதற்குப் பிறகு ஒரு போட்டி இருந்தது. அந்த கான்ஸ்டிபேஷன் நடுவர் இருவரையும் தகுதியவற்றவர்கள் என சொல்லி இறுதிவாய்ப்பாக ஒரு ஒரு போட்டிவைக்கிறார் (இதுவரையான போட்டிகளில் நீங்கள் ஜெயிக்கவில்லை, உங்களுக்கு எதிராக போட்டியிட்டவர்கள் தோற்றுவிட்டார்கள் என அதற்கு ஒரு விளக்கம் வேறு). விஜயை சந்திக்க மூன்று வாய்ப்புக்கள் தரப்படுகிறது. ஒன்று- விஷமருந்துவது, இரண்டு- ஹீட்டரில் கைவைப்பது(அது இயங்கும்போது) , மூன்று- தலையை மழித்துக்கொள்வது. இதில் ஏதேனுமொன்றை செய்தால் நீங்கள் அவரை சந்திக்கலாம் என்றால் எதை செய்வீர்கள் என கேட்கிறார்கள். அப்பெண் விஷமருந்துவேன் என்கிறார், அந்த இளைஞன் தலையை மொட்டை அடித்துக்கொள்வேன் என்கிறார்.

நீங்கள் இதை பார்த்திருந்தால் அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என சொல்லுங்கள்.. பார்க்கவில்லை எனில் இதைப் படிக்கையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என சொல்லுங்கள். மொட்டை அடிக்க கத்தியை தலையில் வைத்தபிறகு நடுவர்கள் ஞானோபதேசம் செய்கிறார்கள், “இதை நீங்கள் விரும்பும் விஜய் விரும்புவாரா?”. பிறகு மற்றொரு நடுவர் சொல்கிறார் “உங்களது இண்டலிஜென்சை சோதிக்கவே இந்த சுற்று வைக்கப்பட்டது”.  சோனியா அகிம்சையைப் பற்றி பேசியதை கேட்ட செவிகள் மன்மோகன் ஊழல் ஒழிப்பை பற்றி பேசியதை பார்த்த கண்கள் நம்முடையது, ஆகவே இந்த காட்சி ஒன்றும் நம்மை திகைக்க வைக்காது. ஆனால் இவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.

விஜயை பார்க்கவேண்டும் என்பதற்காக ஒரு போட்டியில் கலந்துகொள்பவன் ஒரு முழுக்கேனையனாகத்தான் இருப்பான். ஒரு நடிகனைக் காண டான்ஸ் ஆடி ஜெயிப்பதே கேவலம், அதையே செய்தவன் மயிரை சிரைக்க மாட்டானா?  அட மூதேவிகளே இண்டலிஜென்சை சோதிக்க இதுவா வழி? எனக்குகூட விஜய் முகத்தில் காறித்துப்பி அவரது இண்டலிஜென்சை சோதிக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனாலும் நாம் மனிதர்கள் என்பது நினைவுக்கு வந்து அமைதிகொள்கிறோமா இல்லையா.. டிஆர்பிக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா ?

இன்று மாலை (13/02/11) ஒரு நண்பருடன் இதுகுறித்து பேசுகையில் இது ஒருவேளை அந்த நடிகரது பெயரைக்கெடுக்க செய்யப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என்றார். இது நிச்சயம் பரிசீலிக்க வேண்டியதே. எஸ் எஸ் மியூசிக் டிவி லாட்டரி மார்ட்டீனால் நடத்தப்படுவது, அவர் கருணா சொன்னால் யார் வேட்டியை வேண்டுமானாலும் உருவத்தயங்க மாட்டார், அவர் இதை செய்திருக்க நிச்சயம் வாய்ப்பிருக்கிறது. அவர் விஜய் என்கிற நடிகரை வலுவிழக்க செய்தாலும் அதனால் அவரே அம்பலப்பட்டுப்போனாலும் தமிழ்நாட்டுக்கு லாபமே. ஆனால் இதில் அவமானப்படுத்தப்படுவது விஜய் ரசிகர்கள், அதனை ஒளிபரப்புவதன் வாயிலாக ஒட்டுமொத்த சமூகமும் மானங்கெட்டவர்களாக சித்தரிக்கப்படுவதுதான் கண்டணத்துக்குரியது.

விஜய்க்காக எதையும் செய்யத்துணிபவன் நிச்சயம் ஒரு மனநோயாளியாகவே இருப்பான். ஆனாலும் ஒரு மனநோயாளியின் மான அவமானங்களைப்பற்றியும் மனித உரிமையப்பற்றியும் கவலைப்படுவது நம் கடமை. கேள்விப்பட்டவரை பல தொலைக்காட்சிப் போட்டிகளில் இப்படி கலந்துகொள்வோரை அவமானப்படுத்தி அவர்களை அழவைத்து அதன்வாயிலாக வருமானம் பார்ப்பது என்பது பொது இயல்பாக இருக்கிறது. ராக்கி சாவந்த் நடத்தும் நிகழ்ச்சியொன்றில் இழிவுபடுத்தப்பட்ட ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். ஒரு டிவி போட்டியில் கலந்துகொண்டபோது மோசமாக திட்டி வெளியேற்றப்பட்ட ஒரு மேற்குவங்க மாணவி மனநிலை சிதைந்து கோமாவில் இருக்கிறார்.

ஆகவே நண்பர்களே இதுமாதிரியான நிகழ்ச்சிகளை முற்றாக புறக்கணியுங்கள் (இதுவரை நான் பார்த்த ஒரேயொரு டி.வி போட்டி இதுதான்).  உங்கள் சுற்றத்தில் யாராவது இப்படியான போட்டிக்கு போனால் தலையில் தட்டி தடுத்து நிறுத்துங்கள், அங்கு போய் அவமானப்படுத்தப்படுவதற்கு பதில் இதுவே எவ்வளவோ மேல். உலகக்கோப்பையை புறக்கணிக்கச் சொல்லி செய்யப்படும் பிரச்சாரம் போல தெரிந்தவர்களிடமெல்லாம் இவற்றையும் புறக்கணிக்கச் வலியுறுத்துங்கள். நடுவர்கள் சோனியா போல மற்றவர்களை அவமானப்படுத்தி காயப்படுத்துவதையும் போட்டியாளர்கள் கருணாநிதி போல அழுதே சாதிப்பதையும் இன்னும் எத்தனை நாள்தான் சகித்துக்கொண்டிருப்பது?????????

ஒரு நற்செய்தி: இனி சத்தியமாக விஜய் பற்றி பதிவு எழுதப்போவதில்லை.

Advertisements

“எஸ்.எஸ்.மியூசிக் + எனிதிங் ஃபார் விஜய் – ஊடகத்திமிரா? திமுகவின் சகுனித்தனமா??” இல் 6 கருத்துகள் உள்ளன

 1. தமிழகத்தின் சாபக்கேடுகளில் சினிமா மோகம் முதல் இடத்தை பிடிக்கின்றது. முதல்வரே மானாட மயிலாட வை ரசித்துப் பார்ப்பதாக செய்திகளைப் படிக்கும்போது எரிகிறது…வயிறுதான் நித்தில்

 2. சோனியா அகிம்சையைப் பற்றி பேசியதை கேட்ட செவிகள் மன்மோகன் ஊழல் ஒழிப்பை பற்றி பேசியதை பார்த்த கண்கள் நம்முடையது, ஆகவே இந்த காட்சி ஒன்றும் நம்மை திகைக்க வைக்காது!

  உண்மை தொடர்க உங்கள் பணி

 3. முதல்வரே மானாட மயிலாட வை ரசித்துப் பார்ப்பதாக//

  இதெல்லாம் சாதாரண சமாச்சாரங்க., அவரை பொறுத்தவரை சினிமாவுக்கு போக மிச்ச நேரம்தான் மத்தவுங்களுக்கு..

 4. பெரும்பாலும் எல்லா ரியாலிட்டி ஷோக்களிலும் இதுதான் நடக்கிறது.
  அதிலும் , கேண்டிட் கேமரா போன்ற நிகழ்ச்சிகளில் இப்போதெல்லாம் ரொம்பவே ஓவராகப் போகிறார்கள்.

 5. இந்த நிகழ்ச்சியை ஏற்கனவே முன்பொருமுறை பார்த்திருக்கிறேன்…. நல்ல வேளை குறிப்பிட்ட நிகழ்ச்சியை பாக்கல…..கலந்துக்குறவங்களையும், நடத்துறவங்களையும் செருப்பால அடிக்கணும் போல இருக்கு…..

  நாய்களா…..பெத்த அப்பன் ஆத்தாவுக்கு இதுக ஒரு வேளை சோறு போட்டுருக்குமா…..

  மனிதத் தன்மையற்ற இது போன்ற நிகழ்ச்சிகளை (so called reality shows) தடை செய்ய முடியுமா…..ஹ்ம்ம்ம்ம்….பெருத்த ஏமாற்றமே மிஞ்சும்.

 6. //ஒரு நற்செய்தி: இனி சத்தியமாக விஜய் பற்றி பதிவு எழுதப்போவதில்லை.//- வரவேற்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s