பிரிவோம் சந்திப்போம்- கொலைஞரின் புதிய காவியம் (எச்சரிக்கை: தன்மானமுடையோர் காணாதிருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்)


காட்சி 1.

இடம் : அடிமையாலயம்.

பாத்திரங்கள்: கொலைஞர், பண்முகநாதன், தரைமுருகன், அன்புசுமாரானவன், அரைவேக்காட்டுசாமி, தனிமொழி, கொலகிரி, ஸ்டோலன் மன்னிக்கவும் ஸ்டோலின் மற்றும் பலர்.

ஆலயத்தின் மையத்தில் நடுநாயகமாக வீற்றிருக்கிறார் கொலைஞர். சுற்றிலும் தரை, அரைவேக்காடு மற்றும் அன்புசுமாரானவன் ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள். தரைமுருகன் தலைவரை குஷிப்படுத்தும் வேலைக்காக வார மாத இதழ்களின் துணுக்குகளை மனப்பாடம் செய்துகொண்டிருக்கிறார். மற்ற குடும்பப் பாத்திரங்கள் எல்லோரும் அவரவர் வீட்டு பொதுக்குழுவில் அவர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து விவாதிப்பதால் வரத்தாமதமாகும் என பண்முகநாதனுக்கு தகவல் வருகிறது..

பண்: (சேமியா வாங்கிரசோட ஐவர் குழுவே பரவாயில்லை போலிருக்கு என சலித்துக்கொண்டே தலைவரிடம் இதை தெரிவிக்கிறார்)

கொலைஞர்: தம்பி தரை, நேற்று நான் ” ஐந்து பைசா பொறாத அறுபத்துமூவர்” எனும் தலைப்பில் ஒரு காட்சி எழுதியிருக்கிறேன் கேட்கிறாயா..

பண்: தலைவரே அது நீங்க விட்ட அறிக்கை.. (வரவர இவருக்கு வசனத்துக்கும் அறிக்கைக்கும் வித்தியாசமே தெரிய மாட்டேங்குது என அ.சாமியிடம் சொல்கிறார்)

அ.சாமி: அட சும்மாயிருய்யா… படிக்கிறவனுக்கே தெரிய மாட்டேங்குது, எழுதுறவுருக்கு மட்டும் எப்புடி தெரியும்?

அப்போது ஸ்டோலின், கொலகிரி மற்றும் தனிமொழி ஆகியோர் வருகிறார்கள். கொலகிரிக்கு எதிரே அமரும் தனிமொழி அவரை கண்டுகொள்ளாமல் அருகில் நிற்கும் ஆஃபீஸ் பையனிடம் என்ன சுப்ரமணி நல்லா இருக்கியா.. வேலையெல்லாம் எப்படி போவுது என வாஞ்சையாக விசாரிக்கிறார். அதை கடுகடுப்பான முகத்துடன் கவனிக்கிறார் கொ.கிரி.

கூட்டத்தை ஆரம்பிக்கிறார் தரை முருகன்.

த.மு: இனநலன், மாநில நலன், தன்மானம் என எல்லாவற்றையும் விட்டுத்தந்து சீட்டுவாங்கும் தலைவன் என் தலைவன் என்பதால் தன் குடும்பநலனையும் விட்டுத்தருவார் என தப்புக்கணக்கு போடுகின்றன சில தறுதலைகள்.. கூட்டணி தர்மம் தெரியாத கூமுட்டைகளுக்கு ஒன்று சொல்கிறேன்.. இரண்டு பிள்ளைகள் பெற்ற உனக்கே ஒட்டுமொத்த இந்தியாவும் தேவைப்படும்போது, தலைக்கு இரண்டு சம்சாரங்கள் வைத்திருக்கும் எங்களுக்கு நூற்று முப்பத்தைந்து இடங்களாவது வேண்டாமா? அன்னையின் புகைப்படத்தை எடுத்துவா என தலைவர் சொன்ன போது மஞ்சுகத்தாயின் படத்துக்கு பதிலாக சேமியா காந்தியின் படத்தை கொண்டுவந்தவர் எங்கள் தலைவரின் இல்லாள். அவரையா

அப்போது கொலகிரி இடைமறித்து : மனைவின்னு அழுத்தமா சொல்லுய்யா.. கிரெடிட்டு வேற வீட்டுக்கு போகப்போவுது..

த.மு: (கூட்டத்தில் மெஜாரிட்டி மூத்த வீட்டுக்கே என கணக்கிட்டு) ஆமாம் தலைவரின் மனைவி. அவருக்கே சி.பி.ஐ விசாரணை என்றால் சும்மாயிருக்க மாட்டோம், தலைவரின் அடுத்தபடத்தில் வில்லி வேடத்துக்கு உன் பெயரை வைக்கவும் தயங்க மாட்டோம். நான் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. வேணாம் எங்ககிட்ட வேணாம்., அடிதடி அரசியல் எங்களுக்கும் தெரியும். ஆனா அதை நாங்கள் காட்டமாட்டோம், காட்டத்தெரியாது எங்களுக்கு..

(அப்போது கூட்டத்தில் இருக்கும் உளவாளி ஒருவர் ரோசாத்தி அம்மாளுக்கு “மனைவி” மேட்டரை எஸ்.எம்.எஸ் பண்ணுகிறார்.)

கொலைஞர்: தம்பி தரைமுருகன் என் மனதை கண்ணாடி போல பிரதிபலித்துவிட்டார் (மனதுக்குள்: பின்னால அன்னை கோபப்பட்டா கண்ணாடி காட்சியை இடவலமாக்கி காட்டுவதுபோல தம்பியும் மாற்றி சொல்லிட்டாருன்னு சமாளிச்சுக்கலாம்- ராஜதந்திரம்டா)

உன் முகத்தில் இருப்பதுதான் ரோஸ் பவுடர்,
ஆனால் உன் ஒவ்வொரு சொல்லும் சில்லி பவுடர்..
மணி மணியாய் பேசிய மணிபர்ஸ் வாயரை வாழ்த்தி என் உரையை ஆரம்பிக்கிறேன்.

ஸ்டோலின் (மனதுக்குள்): இந்த வேலட் வாயரை தலைவர்கிட்டயிருந்து தள்ளிவைச்சாத்தான் கட்சி உருப்புடும்..

கொலைஞர் தொடர்கிறார்: தியாகம் நமக்கு புதிதல்ல., கட்சி எம்ஜிஆரை இழந்திருக்கிறது, வைகோவை இழந்திருக்கிறது. விட்டுக்கொடுத்ததும் ஏராளம்., சேமியாவுக்காக ஈழத்தமிழரை விட்டுகொடுக்கவில்லையா? இல்லை கல்மோகனுக்காக டி.ஆர்.தயிரை விட்டுத்தரவில்லையா? ஆறுமாதங்களாக கிழங்கோவன் செருப்பை சாணியில் முக்கி எங்களை அடித்தபோதும் அன்னைக்காக எங்கள் தன்மானத்தை விட்டுத்தரவில்லையா? தயாளகுணத்தையும் தர்மசிந்தனையையும் என் உள்ளத்திலே கொண்டவன் என்பதால்தான் எனக்கு மனைவியர்கூட தகத்தயாளு, தர்மாமீட்டராம்பாள் என வாய்த்திருக்கிறார்கள்.

அன்பு சுமாரானவன்: தலைவரே, பெரியார் அண்ணா கொள்கைகள் இன்னும் லிஸ்டுல வரலை..

கொலைஞர்: இதை நன்றிகெட்ட மக்கள் நினைக்காது போகலாம், நாடறிந்த சொக்கத்தங்கத்துக்கு உறைக்காது போனதெப்படி? இளைஞன் படத்துக்கு ராகுல் வராதபோதே இவர்கள் நம் கூட்டனியை விரும்பவில்லை என சந்தேகித்தோம்., இப்படியான ஒரு சூழலை நானோ கழகமோ இதுவரை சந்தித்ததில்லை.. சரி அவமானப்படுத்திட்டு போங்கடான்னு விட்டுவிட்டேன். அதன் பிறகும் சி.பி.ஐ கொண்டு தனிமொழியை கலாய்த்தால் எப்படி? சட்டத்தின் கரங்கள்  தயாளு வரை நீண்டால் நாம் பொறுமையாக இருக்க முடியுமா? பாவம் அவருக்கு “கொல பண்றாங்க” என கத்தக்கூட தெரியாதே? நடுநிசி கௌதம்மேனன்கள் படத்தில்கூட இப்படியான கொடூரக் காட்சிகள் இல்லை.

நான்தான் தமிழ் என உலகமே சொல்லிவிட்ட பிறகு என் குடும்பம்தான் தமிழகம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆகவே தமிழ்நாட்டின் நலன் கருதி நாம் மத்திய அரசில் இருந்து விலகுகிறோம்.. குடும்பத்தில் உண்டாகும் பிரச்சனையின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவு அளிப்போம் எனவும் உறுதியளிக்கிறோம். இதனால் இற்றையான்மைக்கு எதிராக பேசுவோர் மீது எடுக்கும் நடவடிக்கைகளில் எந்த தொய்வும் ஏற்படாது எனவும் அன்னைக்கு தெரிவிக்கிறோம்.

ஜெகத்து இட்சகன்: இந்தியாவிலேயே அதிகம் தியாகம் செய்த தியாகத்தலைவன் வாழ்க.. (பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுக்கிறார்)

கொலகிரி: யோவ், எதுனாச்சும் கவிதை கிவிதை படிச்ச கொண்டேபுடுவேன்.. (கேட்டவுடன் இட்ச்சகன் அவசரமாக அமர்கிறார்). (பிறகு கூட்டத்தவரை நோக்கி) தலைவர் சொல்றது சரிதான், நாம மத்திலயிருந்து விலகுறோம், நூத்தியெம்பது சீட்டுலயும் எறங்குறோம், எதிரா நிக்கிறவனை எல்லாம் வெரட்டுறோம். (அவரது கோஷ்டியை நோக்கி) யேய் கெளம்புங்கடா எல்லோரும்..

அன்பு சுமாரானவன்: தம்பி கொஞ்சம் அமைதியா இருக்கனும்.. நான் என்ன சொல்ல வர்றேன்னு தலைவருக்கு தெரியாத்தில்ல.. என் பேரன் உள்ளிட்ட இளைஞர்கள் களத்தில் இறங்கப்போகும் இந்த தேர்தலில் நாம் தனித்து நின்றே ஜெயிக்கலாம். கடந்த ஏழாண்டு காலமாக தலைவருக்கு ஒரு தேசிய விருதுதராதபோதே நாம் அவர்களது தமிழர் விரோத சிந்தனையை புரிந்துகொண்டிருக்க வேண்டும்.

தலை முடி: லேப் அசிஸ்டெண்ட் அன்பு சுமாரனார் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்..

ஸ்டோலின் : (கொஞ்சம் கலவர முகத்துடன்) யாரோ ஒருத்தர காப்பாத்த ஏன் எல்லோரையும் தொங்கல்ல விடனும்? இந்த முடிவுல எனக்கு சம்மதமில்ல.. மாத்திக்கலன்னா நான் லண்டனுக்கு போயி அங்கேருந்து ஊருக்கு வரமாட்டேன்னு போன் பண்ணுவேன் ஆமா..

தனி: என்ன யாரோ ஒருத்தருன்னு சொல்றீங்க.. கிளைஞர் டிவில உங்கம்மாவுக்கும் அறுபது சதம் பங்கிருக்கு தெரியுமில்ல..

கொலகிரி: (லேசாக ஏதோ புரிந்தவராக) சரிம்மா.. ஸ்பெக்ட்ரம் பணத்துல எங்களுக்கு இருபது சதம்கூட வரலியே..

கொலைஞர்: அதில் நமக்கு கிடைத்த மொத்த பங்கே முப்பத்தைந்து சதம்தான் என்பதை தம்பி மாஞ்சா நெஞ்சன் மனதில் நிறுத்தி முடிவெடுப்பது நல்லது..

(கொலகிரி வேட்டியை மடித்துக்கொண்டு ஏதோ பேசத்தயாராக, தனிமொழி, ஆதரவு வாபஸ்னு சொல்லாட்டி கிளைஞன் படத்தை பத்துவாட்டி பாத்து தற்கொலை பண்ணிப்பேன் என மிரட்ட)

கொலைஞர்: (அரைவேக்காட்டாரிடம் திரும்பி) இது சரிவராது.. மகாபலிபுரத்துல ரூம்போடு, நான் “வெள்ளியர் மணிரத்னம்” படத்துக்கு  வசனம் எழுதப்போறேன். (உடனே தரைமுருகனும் ஜெகத் இட்ச்சகனும் வண்டியில் இடம்பிடிக்க ஓடுகிறார்கள்)

(சகோதரர்கள் மூவரும் கூடிப்பேசி  இன்னொரு கொலைஞர் படம் வந்தால் தேர்தலில் ஒரு சீட்டுகூட கிடைக்காது என முடிவுசெய்து, தலைவர் சொல்றதுக்கு கட்டுப்படுறோம் என அறிவிக்கிறார்கள்)

பிறகு கூட்டத்தில் மத்திய அரசில் இருந்து விலகுவதாக ஒருமனதான முடிவு எடுக்கப்பட்டது என அறிவிக்கப்படுகிறது.

(சட்டைகிழிந்த மூர்த்திபவனின் ஐவர் குழு விவாதக்காட்சி மற்றும் சேமியா வீட்டு சரணாகதி காட்சிகளும் அடுத்த பதிவில்…)

Advertisements

“பிரிவோம் சந்திப்போம்- கொலைஞரின் புதிய காவியம் (எச்சரிக்கை: தன்மானமுடையோர் காணாதிருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்)” இல் 7 கருத்துகள் உள்ளன

 1. உள்மனம் :
  அப்பவே சொன்னேன்; தலைப்பே ‘வில்லங்கமா’ இருக்கு. அதை க்ளிக் செய்து, படித்து விட்டு வயிற்றில் வலியை வரவழைத்துக் கொள்ளாதே என்று!
  கேட்டியா… இப்போ, இப்படி விழுந்து விழுந்து சிரிக்கவேண்டியதாப் போச்சே…

 2. மிகவும் அருமை..
  இந்த நா….ரிகளை இப்படி நார் நாராய் கிழித்தால்தான், அல்லது கிழித்ததை படித்தால்தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது

 3. மிகவும் அருமை..
  இந்த நா….ரிகளை இப்படி நார் நாராய் கிழித்தால்தான், அல்லது கிழித்ததை படித்தால்தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது

  ரிப்பீட்டு…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s