ஜெயா மட்டும் எப்படி மாறுவார்… நாம் மாறத் தயாராக இல்லாதபோது?


நல்லம்ம நாயிடு கைப்பற்றியது போக ஜெயலலிதாவிடம் இன்னும் ஏராளமான செருப்புகள் கைவசம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவற்றை விரும்பியபோதெல்லாம் தமிழக மக்கள் முகத்தை நோக்கி எறிந்துகொண்டிருக்கிறார் அவர். பண்டிகை எனும் பெயரில் புத்தகங்களை ஆற்றில் விட்டு தமிழர்களின் அறிவு மூலங்களை சிதைக்கும் ஆரிய கபடத்தனத்தின் பிரம்மாண்டமான மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறார் ஜெயா.

கருணாநிதியின் சொந்த யோசனைகள் பெரும்பாலும் கட்டிடம் கட்டுவதாகவே அல்லது ஏதாவது விழா நடத்துவதாகவோ இருக்கும். கருத்தியல் ரீதியாகவோ அல்லது செயல்பாடுகள் மூலமாகவோ அவரால் தன் பெயரை நிலைநிறுத்த முடியாது. ஆகவே அவர் ஏதாவது கட்டிடத்தை நம்புவதில் வியப்பதற்கு எதுவுமில்லை. எப்படி ஜெயாவின் அடாவடித்தனம் சு.சாமியையும் ஜெயேந்திரனையும் தட்டிவைத்தபோது (மட்டும்) மக்களுக்கு திருப்தியளிக்கும் விதமாக இருந்ததோ அப்படியே கருணாநிதியின் சுயபெருமை மோகத்தில் விளைந்த ஓரளவு உருப்படியான விசயம் அண்ணா நூலகம்தான்.

ஜெயாவையும் கருணாவையும் ஒரே புள்ளியில் இணைப்பது இந்த பெயர் மோகம்தான் (ஜெயாவின் பெயர் மோகம் கருணாநிதிக்கு சற்றும் சளைத்ததல்ல.. இவ்விடயத்தில் கருணா ஹோட்டலுக்கு போய் சாப்பிடுபவர் என்றால் ஜெயா வீட்டுக்கு பார்சல் வரவைத்து சாப்பிடுபவர்). அரசு நிதியைக்கொண்டும் தன் பெயரை வரலாறாக்க கருணாநிதி முயல்கிறார், அதே அரசு நிதியைக் கொண்டு அவரது காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களின் பயன்பாட்டை மாற்றி அவரது பெயரை காலி செய்கிறார் ஜெயா.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் இந்த முடிவு கடுமையான எதிர்வினைகளை உருவாக்கும் என்பதை அவர் உணராமல் இல்லை. அதனால்தான் குழந்தைகள் மருத்துவமனை, ஒருங்கிணைந்த அறிவுசார் வளாகம், கன்னிமாரா நூலகத்துக்கு பக்கத்திலேயே இருக்கும் என ஏராளமான பசப்பல் வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார். தலைமைச் செயலக கட்டிட விசயம் போலல்லாது இம்முறை மாற்றப்போவது எந்த கட்டிடம் என்பதை ரொம்பவும் அடக்கிவாசிக்கிறது ஜெயா டிவி.

இதை அவருடைய கருணாநிதிக்கான எதிர்நடவடிக்கையாக மட்டும் பார்க்க இயலாது. இது என் அரசு, நீங்கள் எனக்கொரு பொருட்டல்ல என மக்களை பார்த்து அவர் விடுக்கும் அறிவிப்பு. ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிமுக உறுப்பினர்களைப் போல பாவித்து, “பொத்திக்கிட்டு நான் கொடுக்குறதை வாங்கிக்க” எனும் செய்தியை அவர் நமக்கு சொல்கிறார். நம் யாவரையும் அவர் யாசகர்களாக கருதி, நம் பாத்திரம் அவர் தரும் பிச்சையில் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என கருதுகிறார்.

திமுகவினர் மீது அவர் நிலமோசடி வழக்குகளை முடுக்கிவிட்டாலும் சென்னையில் திமுக அரசால் பெருநிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து விசாரணை செய்ய “ஆணை”யிடவில்லையே ஏன்? கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர் கல்வியை மறுபரிசீலனை செய்யும் அம்மா அவர் காலத்து சாராய லைசென்ஸ்களை மட்டும் விட்டுவைப்பது ஏன்?.  ஜெயாவுக்கு கருணாநிதி மீது எத்தனை வெறுப்பு உண்டோ அவ்வளவு அலட்சியம் தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் உண்டு. அதனால்தான் அவர் கருணாவுக்கு எதிராக செய்யும் எல்லா காரியங்களும் கருணாவுக்கு பெயரிழப்பையும் நமக்கு பொருளிழப்பையும் (சமயங்களில் அறிவு) உண்டாக்குகின்றன.

மறுபுறம் கருணாநிதி, நான் ஜெயாவுக்கு கொஞ்சமும் இளைத்தவன் இல்லை என அறிவிப்பது மாதிரி நடத்துகொள்கிறார். அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டியபோதும், திறந்தபோதும், ஹிலாரி கிளிண்டன் வந்து பாராட்டியபோதும், இது தன்னுடைய முயற்சியாகவும் சாதனையாகவும் பீற்றிக்கொண்ட அவர் இப்போது மட்டும் தன்மானமுள்ள தமிழர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என ஒதுங்குகிறார். கனிமொழி ஜாமீனுக்கு கட்சித்தலைமை டெல்லியில் முகாமிடலாம், நிலமோசடி வழக்குக்கு ஆஜராகாத வழக்கறிஞர் அணியை கட்சி முடுக்கிவிடலாம் ஆனால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மட்டும் தமிழர்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டுமா? தமிழர்கள் பணத்தை உங்கள் சவுகர்யத்து எடுத்து செலவிடும்போது உள்ள தைரியம் அது வீணாக்கப்படும்போது எதிர்க்க வரவில்லை என்றால் உங்கள் இலக்கு நான்தான் கட்டினேன் எனும் பெயர் மட்டும்தானே?

துரதிருஷ்டவசமாக, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக இருக்கிறோம். கருணாநிதியை தண்டிக்க ஜெயாவை தேர்ந்தெடுப்பது, ஜெயாவை தண்டிக்க கருணாவை தேர்ந்தெடுப்பது என மாறி மாறி ஓட்டுபோட்டு இவர்களை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். தோல்வியடைய வைப்பது தண்டனை என கருதிக்கொண்டு இன்னொருவனுக்கு குற்றமிழைக்கும் வாய்ப்பை வழங்கிக்கொண்டிருக்கிறோம். கடந்த தேர்தல் கருணாவுக்கான தண்டணை என நாம் கருதுவது சரியென்றால் அது தன் திமிருக்கான அங்கீகாரமாக ஜெயா கருதுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஓட்டு ஒரு ஆயுதமல்ல என்பதை நாம் எப்போதுதான் உணரப்போகிறோம்? சமச்சீர் கல்வி பட்ட பாட்டிற்கும் நாசமான 160 கோடிக்கும் தேர்தலால் என்ன தண்டனை கொடுக்கமுடியும்? உள்ளாட்சித் தேர்தல் முடிந்த்தும் மூவர் தூக்கிற்கு முகூர்த்தம் பார்க்க ஆரம்பித்துவிட்டார் ஈழத்தாய். ரெக்கமண்டேஷன் செய்தவர் ஏமாற்றமளிக்கிறது என அறிக்கைவிட்டு அமைதியாகிவிட்டார். நாம் என்ன செய்யலாம்.. அடுத்த தேர்தல்வரை காத்திருந்து அஸ்தி கலசத்தோடு நீதி கேட்கலாமா?

ஜெயாவையும் கருணாவையும் தேர்தலால் தண்டிக்கவும் முடியாது.  தண்டிக்கப்பட்டாலன்றி இவர்களை மாற்றவும் முடியாது. வழக்கமாக ஜெயா ஆட்சியில் தன்மானம் மிக்கவர்களுக்கு கடுமையான வேலை கொடுப்பார். ஆனால் அண்ணா நூற்றாண்டு நூலக விவகாரத்தின் மூலம் அவர் தன்மானமுள்ளவர்கள் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள விரும்புகிறார். தன்மானத் தமிழர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என அறிக்கை விட்டு திமுக இதில் செய்ய ஏதுமில்லை என சொல்லிவிட்டார் கருணா.

ஆகவே இப்போது நாம் மட்டும்தான் இருக்கிறோம். காப்பாற்றப்படவேண்டியது நூலகம் மட்டுமல்ல, நம் சுயமரியாதையும்தான்.

Advertisements

“ஜெயா மட்டும் எப்படி மாறுவார்… நாம் மாறத் தயாராக இல்லாதபோது?” இல் 11 கருத்துகள் உள்ளன

 1. அன்புடையீர்,

  அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.
  .
  .
  .

  //// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////
  .
  .
  .
  இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய / உதவும்
  அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

  ஒத்துழைப்புக்கு முன்கூட்டிய‌ ந‌ன்றிக‌ள்.

 2. கருணா, ஜெயாவைப் பற்றிய அலசல் நன்றாக இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் பரவாயில்லை என்று யாரும் அவர்களுக்கு ஓட்டுப் போட்டுவிடவில்லை. விஜயகாந்த் தேர்தலுக்குப் பிறகு இன்று வரை நாட்டு நிலைமை பற்றி வாயே திறப்பதில்லை. போராட வருவதில்லை. எல்லாம் சினிமாவோடு சரி. மக்கள் இன்னும் 24சதம் அதிமுகவுக்கும், 21சதம் பேர் திமுகவுக்கும் கடமை தவறாமல் (எங்க வீட்ல எப்பவும் திமுக/அதிமுக தான்) வாக்களிக்கும் நிலைமை இன்று வரை மாறிவிடவில்லை. பின் எது உருப்படும் ?

  ஆக்குபை வால்ஸ்டிரீட், ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி, கடாபி பற்றி எழுதுங்கள்.

 3. //கருத்தியல் ரீதியாகவோ அல்லது செயல்பாடுகள் மூலமாகவோ அவரால் தன் பெயரை நிலைநிறுத்த முடியாது. ஆகவே அவர் ஏதாவது கட்டிடத்தை நம்புவதில் வியப்பதற்கு எதுவுமில்லை.
  //
  உண்மை

 4. பெயர் வெளியிட விரும்பாத, ஒரு வெட்கங்கெட்ட ஓட்டுப்போட்டவர் :

  1. வள்ளுவர் கோட்டத்தை முதியோர் இல்லமாக்கிடுங்க. புண்ணியமாப்போவும். வைய்சானா அங்க கொண்டாந்து கடாசிட்லாம்.
  2. கோபாலபுரத்துக்கு ரோடுங்கள சிமிட்டி வச்சி அடைச்சிடுங்க. அங்கயிருந்து சாக்கடத்தண்ணி வயிஞ்சி போயசுக்கு வர்றாதாப் பேசிக்கிறாங்க.
  3. தள்ளுமாடல் வீல்சேர்ல யாராவது வந்தா ‘இது இன்னா புது மாடல்னு’ கேட்டு பைன் போட்றுங்க. எங்க நிறுத்தினாலும் பார்க்கிங்க் சார்ஜ் போட்டுறுங்க.
  4. திகார தள்ளிப்போடமுடியுமான்னு பாருங்க. முடிஞ்சா அந்தமானுக்கு. அப்ப எப்புடி, அடிக்கடி பாக்கப்போறாங்கன்னு பாத்துடலாம்.
  5. கன்னியாகுமரி வள்ளுவர்சிலைமேல லைட் அவுஸ் வச்சுடுங்க. பகல்ல எரியட்டும். ராவுல கம்முனு கெடக்கட்டும்.
  6. கோயம்புத்தூர் செம்மொழி மாநாடு நடந்த இடத்துல, ‘பேய்’ உலாவுறதா பிரெஸ்சுக்கு அறிக்கை வுடுங்க. ரெண்டுக்குக்கூட ஒரு பய அந்தப்பக்கம் போகக்கூடாது.

  அம்மா போட்ட நாமம் வாழ்க!!

 5. பதிவு பட்டவர்த்தனமான உண்மை,யதார்த்தத்தை சொல்கிறது,பார்ப்போம் மக்களிடம் சுரணை உள்ளது என்று நிரூபிக்கிறார்களா என்று.

 6. சமச்சீர் கல்வி மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் இரண்டுமே நம் வருங்கால சந்ததிகளுக்கு தேவையான மற்றும் மிகவும் அவசியமான விசயம். முதலில் சமச்சீர் கல்வியில் முதல்வரின் நடவடிக்கைக்கு திமுக போராட மக்களை அழைத்தது எத்தனை பேர் திமுகவின் போராட்டத்திற்று ஆதரவு தெரிவித்தார்கள் என்பது தங்களுக்கு தெரியாதது அல்ல.
  அதையும் திமுக அரசியல் ஆதாயத்துக்குத்தான் செய்கிறது என்று நம்மக்கள் ஒதுங்கிக் கொண்டோம். அந்த போராட்டத்திற்கு சென்று திரும்பிய ஒரு மாணவன் வழியில் விபத்தில் இறந்துபோக திருவாரூர் மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டு வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது தங்களுக்கு தெரியாதது அல்ல.
  அதற்குப் பிறகும் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை முற்றிலும் உதாசீனப்படுத்தி விட்டார்கள் படித்தவர்கள் அதிகம் உள்ள மாநகர் பகுதி மக்கள். அதற்குப் பிறகுதான் முதல்வரின் இந்த அறிவிப்பு. இப்படி ஒரு நிலையில் முன்னால் முதல்வரால் என்ன செய்யமுடியும். அவர் கூறியதில் என்ன தவறு? நம் சொத்தை நம் வளங்களை காக்க நாம்தான் முயலவேண்டும்.

 7. சமச்சீர் கல்வி மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் இரண்டுமே நம் வருங்கால சந்ததிகளுக்கு தேவையான மற்றும் மிகவும் அவசியமான விசயம். முதலில் சமச்சீர் கல்வியில் முதல்வரின் நடவடிக்கைக்கு திமுக போராட மக்களை அழைத்தது எத்தனை பேர் திமுகவின் போராட்டத்திற்று ஆதரவு தெரிவித்தார்கள் என்பது தங்களுக்கு தெரியாதது அல்ல.
  அதையும் திமுக அரசியல் ஆதாயத்துக்குத்தான் செய்கிறது என்று நம்மக்கள் ஒதுங்கிக் கொண்டோம். அந்த போராட்டத்திற்கு சென்று திரும்பிய ஒரு மாணவன் வழியில் விபத்தில் இறந்துபோக திருவாரூர் மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டு வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது தங்களுக்கு தெரியாதது அல்ல.
  அதற்குப் பிறகும் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை முற்றிலும் உதாசீனப்படுத்தி விட்டார்கள் படித்தவர்கள் அதிகம் உள்ள மாநகர் பகுதி மக்கள். அதற்குப் பிறகுதான் முதல்வரின் இந்த அறிவிப்பு. இப்படி ஒரு நிலையில் முன்னால் முதல்வரால் என்ன செய்யமுடியும். அவர் கூறியதில் என்ன தவறு? நம் சொத்தை நம் வளங்களை காக்க நாம்தான் முயலவேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s