மோடி – வாலிப வயோதிக அன்பர்களே.


முன் குறிப்பு – இந்த பதிவினால் லாட்ஜ் டாக்டர்கள் மனம் புண்பட்டாலோ அல்லது மோடி பக்தர்கள் மனம் புண்படாமல் போனாலோ அது எங்களை அறியாமல் செய்த பிழையாக கருதி மன்னிக்கவும்.

சில நாட்களாக நாம் வாசிக்கும் பெரும்பாலான பத்திரிக்கைகள் மோடி புகழ்பாடுவதையே வேலையாக வைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் மோடி அலை வீசுவதாக தந்தி டிவியில் ஒருவர் செய்தி சொல்கிறார். பஸ் ஸ்டாண்டு கக்கூசில் நாற்றம் வீசுகிறது என்பதை அந்தப் பக்கம் போன உடனே கண்டுபிடிக்கிறோம் அல்லவா. அதுபோல மோடியை திருச்சியில் பார்த்தவுடன் அந்த செய்தியாளர் மோடி அலை வீசுவதை கண்டுணர்ந்துவிட்டார்.

மோடி திருச்சிக்கு வந்த அன்று நான் தஞ்சைக்கு கிளம்பியிருக்க வேண்டும். அன்றைய தந்தி டிவி செய்தியில் மூன்று லட்சம் பேர் திருச்சிக்கு வந்திருப்பதாக சொல்லிவிட்டார்கள். அத்தனை பேர் திருச்சிக்கு வந்திருந்தால் அவர்கள் சிறுநீர் கழிக்கக் கூட அங்கு வழிகிடையாது. அதனால் ஊர் நாறியிருக்குமோ எனும் அச்சத்தில் பயணத்தை ரத்துசெய்ய வேண்டியதாகிவிட்டது. இல்லாவிட்டால் மோடி போனாலும் நாற்றம் போகவில்லை என ஃபேஸ்புக்கில் எழுதி தெய்வ நிந்தனை குற்றத்துக்கு ஆளாகியிருப்பேன்.

மோடியை உங்களுக்கு ஏன் பிடிக்கிறது என அவரது ஆதரவாளர்களிடம் கேட்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கின்றன சில துர்சக்திகள் (ஷக்தி என உச்சரித்தல் ஷேமகரமானது). வோடஃபோன் நாயைக்கூடத்தான் பலருக்கு பிடிக்கிறது, அவர்களிடத்தில் போய் உங்களுக்கு ஏன் பிடிக்கிறது என கேட்பீர்களா?

லாட்ஜ் டாக்டர்களை எதற்காக நோயாளிகள் அணுகுகிறார்கள்? வளர்ச்சி, எழுச்சி மற்றும் சக்தி ஆகியவற்றைப் பெறுவதற்காகவே. அதுபோலவே மோடியையும் வளர்ச்சி, எழுச்சி மற்றும் சக்தி ஆகிய காரணங்களுக்காவே நோயாளிகள் ச்சீசீ… பக்தர்கள் ஆதரிக்கிறார்கள். லாட்ஜ் டாக்டர்கள் வளர்ச்சியை சாதிப்போம் என கிடைக்கும் ஊடகங்களில் எல்லாம் சொந்தக் காசில் ஓயாமல்  கூவுகிறார்கள். மோடியாருக்காக வைத்தியசாலையில் முதலாளிகள் கூவவைக்கிறார்கள்.

எழுச்சியையும் சக்தியையும் எங்கனம் சாத்தியமாக்குவோம் என லாட்ஜ் டாக்டர்கள் ஒருபோதும் சொல்வதில்லை, அது ரகசியம். உங்களுக்கு சக்தி வேண்டுமென்றால் வைத்தியத்துக்கு போவதுதான் வழி. அதுபோலவே மோடியாரிடமும் எழுச்சிக்கான வழியை நீங்கள் கேட்கக்கூடாது. ஒன்று அவர் முக்திக்கு வழிகாட்டும் சாமியாராவார் அல்லது சக்திக்கு வழிகாட்டும் டாக்டராவார் என மறுபடியும் ஒரு ச்சீசீ.. தலைவராவார் என அவரது ஜாதகத்திலேயே இருக்கிறது (நன்றி – தினகரன் வசந்தம்). ஆகவே மோடியாராலும் சக்தியை மீட்டுத்தர முடியும், என்ன பாதிப்புக்கு தக்கவாறு மூன்று மாதத்தில் இருந்து ஒருவருடம்வரை ஆகலாம் (ஒரே மாதத்தில் குணமாக்குவதாக சொல்லும் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்). வெளிநாட்டில் இருப்போர் இணைய வழியாகவும் சக்தியைப் பெறலாம்.

லாட்ஜ் டாக்டர்கள் தங்களைப் பற்றி தாங்களேதான் பேசுவார்கள், தங்களது கேள்விகளை தங்கள் ஆட்கள் வாயிலாக கேட்கவைத்து பதில் சொல்வார்கள். அவர்கள் பொதுவிவாதத்துக்கு எப்போதும் தயாராக இருப்பவர்கள் அல்லர். அந்த நேரத்தில் இன்னுமிரண்டு நோயாளிகளின் தூக்கத்தில் சக்தி வீணாகும் பிரச்சனையை சரிசெய்யலாமே எனும் நல்லெண்ணம்தான் காரணம். அதுபோலத்தான் மோடியாரும்… அவர் சிங்கிளாகவே சவால் விடுவார். அவர் விரும்பும் கேள்விகளைக் கேட்கும் அர்ணாப் கோஸ்வாமியிடம் மட்டும் பேட்டி தருவதும், குஜராத் கலவரம் என ஆரம்பிக்கும் கேள்வியை கரண் தாப்பர் கேட்டால் தெறித்து ஓடுவதும் இந்த அடிப்படையில்தான். அதனை கோழைத்தனம் என கருதலாகாது.

உலகில் ஆயிரக்கணக்கான வியாதிகள் இருக்க, இந்த லாட்ஜ் டாக்டர்கள் ஆண்மைக் குறைவுக்குக்கு மட்டும் வைத்தியம் செய்வார்கள்.  சேலம் சிவராஜ் சிவக்குமார் டிவியில் அதட்டி, கெஞ்சி, அழுது மன்றாடுவது எதற்காக? இந்த பாழாய்போன மனிதப்பிறவிகள் கரப்பழக்கத்தால் தங்கள் வாழ்வை வீணாக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தானே!! அவரிடம் “நீங்கள் ஏன் மலேரியாவுக்கு வைத்தியம் செய்வதில்லை என உங்களால் கேட்க இயலுமா? அதுபோலத்தான் மோடியும், அவர் பாகிஸ்தானுக்கு சவால் விடுகிறார் என்றால் அவர்கள் அதற்காகவே பிறவியெடுத்தவர்கள். “பலன் பெற்றோர்” பாராட்டுகிறார்களா என்று மட்டும் பாருங்கள், அதை விட்டுவிட்டு அவர் ஏன் இதைப்பேசவில்லை அதைப்பேசவில்லை என குற்றம் சொல்லாதீர்கள்.

லாட்ஜ் டாக்டர்களுக்கும் மோடியாருக்கும் இவ்வளவு ஒற்றுமையிருக்கும்போது தமிழ்நாட்டில் மோடியை மட்டும் ஏன் இந்த கம்யூனிஸ்டுகள் கரித்துக் கொட்டுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. உங்களைப்பார்த்து கேட்கிறேன், உங்களில் யாராவது ஒருவர் லாட்ஜ் டாக்டர்களுக்கு எதிராக போராடியிருக்கிறீர்களா?? பேப்பரைத் திறந்தால் ஸ்ரீ மருத்துவமனை சாதனை, டாக்டர் ராஜதுரை சாதனை என தினசரி விளம்பரம் வருகிறது. அது என்ன சாதனை என ஒரு குழுவாவது ஆராய்ச்சி செய்திருக்கிறீர்களா? அந்த நியாய தர்மத்தை மோடியிடமும் காட்டவேண்டாமா… குஜராத்தில் வளர்ச்சியை சாதித்தார் என்றால் நம்பித்தொலையாமல் அதென்ன புள்ளிவிவரத்தை நோண்டும் கெட்டபழக்கம்? உள்ளூர் எழுச்சி நாயகர்களுக்கு எதிராக குரல்கொடுக்க முடியாத உங்களுக்கெல்லாம் தேசிய வளர்ச்சி நாயகனுக்கு எதிராக குரல்கொடுக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதை இந்த தருணத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.

கொஞ்சம் தமிழ் ஊடகங்களைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள்தான் பழனி டாக்டர் காளிமுத்துவை வளர்த்துவிட்டார்கள், சேலம் சிவராஜ் சிவகுமாரையும் வளர்த்துவிட்டார்கள். இப்போது மோடியை வளர்க்கப் போராடுகிறார்கள். என்ன, அப்போது  செய்தியை விளம்பரமாக வெளியிட்டார்கள். இப்போது விளம்பரத்தை செய்தியாக வெளியிடுகிறார்கள். மற்றபடி அவர்கள் கடமையில் இருந்து கடுகளவும் தவறவில்லை. அவர்கள் லாட்ஜ் டாக்டர்களுக்கு எதிரான செய்திகளை எப்படி வெளியிடாமல் இருந்தார்களோ அப்படியே மோடிக்கு எதிரான செய்தியையும் அமுக்கி வைக்கிறார்கள். அந்த நியாய உணர்வு உங்களிடம் இல்லையே?

இப்படியே இழுத்துக்கொண்டிருந்தால் மோடியாரை லேகிய டாக்டர்களுக்கு இணையானவராக நீங்கள் கருதிவிடக்கூடும். அந்த பாவம் எனக்கெதற்கு? ஆகவே அவர் அந்த டாக்டர்களைவிட எப்படி உயர்ந்தவர் என விளக்கிவிடுகிறேன். லாட்ஜ் டாக்டர்களது விளம்பரங்களைப் பாருங்கள். இருபதாண்டுகளாக அவர்களது விளம்பர ஸ்டைல் மாறவேயில்லை. தஞ்சையில் மகாலிங்கம் எனும் மூல பவுந்திர மருத்துவர் இன்னமும் சுவரெழுத்தை நம்பியே காலம் தள்ளுகிறார். நான் வார இதழ்கள் வாசிக்க துவங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை விளம்பரத்தில் சிவராஜ் சிவகுமார் படம் மாறவேயில்லை. இவ்வளவு ஏன், பேருந்து நிலையங்களில் ஒட்டப்பட்டிருக்கும் விரைவீக்க நோட்டீஸ் படமாவது கடந்த முப்பது ஆண்டுகளில் மாறியிருக்கிறதா? ஆனால் மோடியைப் பாருங்கள், காக்கி டவுசரில் ஆரம்பித்த அவரது ஆடையலங்காரம் இப்போது வந்தடைந்திருக்கும் நவீனத்தைப் பாருங்கள். தலைமுடி மாற்ற அறுவை சிகிச்சை தந்த இளமை, தாடியில் இருக்கும் தேஜஸ் இதெல்லாம் நூறு காளிமுத்து வந்தாலும் ஈடுசெய்ய முடியாதது. நூற்று முப்பத்தாறு வருடமாக வைத்தியம் செய்யும் பரம்பரை வைத்தியரால் டைம்ஸ் ஆஃப் இந்தியா லெவலுக்காவது சிந்திக்க முடியுமா? ஆனால் மோடியாரோ இந்த 63 வயதுக்குள் அமெரிக்க டைம்ஸ் பத்திரிக்கையிலேயே முகம் காட்டிவிட்டார்.

சிவராஜாவது டிவியில் அவ்வப்போது கோபப்படுகிறார். ஆனால் மோடியோ தனக்கு விசா கொடுக்காத அமெரிக்கா மீதோ இங்கிலாந்து மீதோ எப்போதாவது கோபப்பட்டதை பார்த்ததாக எவனாவது சொல்லமுடியுமா? தன் உயிர் தொண்டர் மாயா கோட்னானியின் தூக்கு தண்டனைக்கு அப்பீல் செய்து சட்டபூர்வமாகவும் இங்கிலாந்து கம்பெனிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு சலுகை கொடுத்து அகிம்சா வழியிலும்தானே தன் விசாவுக்காக அவர் போராடுகிறார்? அந்த தியாக தீபத்தை ஆதரிக்க உங்களுக்கு ஏன் மனம் வராவில்லை? உள்ளூர் லேகிய டாக்டரெல்லாம் எல்லா மாவட்டத்துக்கும் கம்பீரமாக விஜயம் செய்யும்போது தேசிய நாயகனுக்கு அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் போக வழியில்லாதிருப்பது உங்களுக்கு மனசாட்சியை உலுக்கவில்லையா?

நாயை சுருக்கு வைத்து பிடிப்பதுபோல குழந்தைகளை பிடித்து கொன்றார்கள், கர்பிணியின் வயிற்றைக் கிழித்து எடுத்த குழந்தையை  வெட்டிக்கொன்றார்கள், வீட்டுக்குள் மின்சாரம் பாய்ச்சி குடும்பத்தையே கொன்றார்கள் என இன்னமும் பத்து வருடத்துக்கு முன்னால் நடந்த கதையையே சொல்லிக்கொண்டிருக்காமல் இந்தியாவின் “எக்ஸ்ட்ரா பவருக்கு” என்ன வழி என்று பாருங்கள். வீரியத்தை விரும்புபவன் சிட்டுக்குருவிக்காக கவலைப்படலாமா? ஆகவே வாலிப வயோதிக அன்பர்களே உங்கள் ரகசிய வியாதிகளுக்கு அனுகவேண்டிய முகவரி,

டாக்டர் நமோ,

சனாதனா கிளினிக்.

(டாக்டரின் ஊர்வாரியான விஜயத்தைப் பற்றி அறிய பிரபல தினசரி மற்றும் வார இதழ்களைப் பாருங்கள். எங்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை எல்லா பிரபல டிவிக்களிலும் காணத்தவறாதீர்கள்)

Advertisements

“மோடி – வாலிப வயோதிக அன்பர்களே.” இல் 7 கருத்துகள் உள்ளன

 1. தேசியத்தையும் லேகியத்தையும் நேர் ஒப்பீடு செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது?
  திருச்சியில் மக்கள் எழுச்சி ஏற்பட்டது உண்மைதான், இதை யாராலும் மறுக்க முடியாது.. இந்திய மக்கம் இன்னும் வளர்ச்சி அடையாத நிலையில் தம் தலைவர்களாவது முன்னோக்கு பார்வை உடையவராக நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்பவராக இருக்க வேண்டும் என மக்கள் விழைகிறார்கள்… .உங்களை போன்றோர் குறை, நிறை இவற்றை பகுத்துணர்ந்து தானும் தெளிந்து … மற்றவருக்கும் வழி காட்டுங்கள்.. அவர் முன்னேற்றத்தை கண்டு எரிவதில் ஒரு புண்ணியமும் இல்லை …..

 2. குஜராத்தின் உண்மையான வளர்ச்சி பற்றி பல ஊடகங்களில் செய்தி வந்தாயிற்று. ஆனால் இன்றும் நீங்கள் அதனை நம்பத்தயாரில்லை. குறைந்தபட்ச மனசாட்சியோடு நீங்கள் இணையத்தில் தேடினால் மோடியின் ரத்தவெறியும், குஜராத் வளர்ச்சியின் நிஜ முகமும் தெரியும். அதனை ஏற்றுக்கொள்வதை தடுப்பது சாமானிய மக்கள் மீதான அக்கறையின்மையும் முஸ்லீம் வெறுப்பும்தான்.

  மோடியின் தேசியம் என்பது பாகிஸ்தானுக்கு சவால் விடுவதோடு நின்றுவிடும். நாட்டின் முன்னேற்றம் என்பது டாடா அம்பானியின் வளர்ச்சியை மையப்படுத்தியதாக மட்டும் இருக்கும். அவரால் சங்கப் பரிவாரங்கள் இன்னும் திமிர் பெற்று திரிவார்கள் என்பதைத்தவிர வேறு எந்த மாற்றமும் வரப்போவதில்லை.

 3. மோடியை மதிப்பிடுவதற்கு ஊடகங்களை பார்ப்பதை காட்டிலும் அங்குள்ள மக்களிடம் போய் கேளுங்கள். ஊட்ட சத்து குறைவு என்பது உணவு பழக்க வழக்கங்களையும் சார்ந்து உள்ளது. அங்குள்ளோர் வியாபாரத்தை அதிகம் நாடுவதால் தமிழகம் போன்று கல்வியில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. மற்றபடி ரத்தவெறி, மதவெறி என்பதெல்லாம் முன்றாம்தர மதிப்பீடுகள். எல்லாவற்றையும் பகுத்துணர்ந்தால் மட்டும் போதாது, தொகுத்துணர்ந்து நல்லது கெட்டதை தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் கருத்து சார்பு இருக்காது.

 4. மோடியின் ஆட்சியில் நடந்த கலவரத்தில் இறந்த இஸ்லாமியர்களை பற்றி பக்கம் பக்கமாக எழுத்தும் சீன எசிக்களை நாய்களான அ.மார்க்ஸ் முதல் வினைவு வரை முகநூலில் மகிழ்நன் வரை சொல்லுவது ஒன்று தான் மோடியினால் தான் பல இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள் மோடி கொலைகாரன் என்ற பாட்டை பத்து வருடங்களாக பாடி வருகிறார்கள்! போதாதற்கு இவர்கள் மனித உரிமை காவலர்கள் வேறு !

  குண்டு வைத்து இறந்த போனவர்களுக்கு இவர்களின் மனித உரிமை வெங்காயம் வேலை செய்யாது குண்டு வைதவனுக்கு தூக்கு என்று வரும் போது மனித உரிமை வெங்காயம் கண்ணை கசக்கும் ! என்ன மாதிரியான நியாய சொம்பு என்று தெரியலை !

  சரி விடையதிர்க்கு வருவோம் இந்த பொதுவுடைமை பேசும் சீன எச்சிகளைகள் வைக்கும் வாதம் மோடியின் ஆட்சியில் நடந்த கலவரத்திற்கு முழு காரணம் மோடி என்று சொல்லும் இதே நாய்கள் தங்களின் கடவுள்களான ஜோசப் ஸ்டாலின்,லெனின்,மாவோசேதுங்,போல்பாட் போன்ற கொலை இயந்திரங்களை தான் இவர்கள் பார்வையில் தலைவர்கள் கம்யூனிச கடவுள்கள் !

  ஜோசப் ஸ்டாலின் நேரடி உத்தரவு பெயரினால் கொலை செய்யப்பட மக்களின் எண்ணிக்கை இரண்டு கோடி ! இந்த நாய்கள் தான் சொல்லுது மோடி இரத்த வெறி பிடித்தவர் என்று !

  (In February 1989, two years before the fall of the Soviet Union, a research paper by Georgian historian Roy Aleksandrovich Medvedev published in the weekly tabloid Argumenti i Fakti estimated that the death toll directly attributable to Stalin’s rule amounted to some 20 million lives (on top of the estimated 20 million Soviet troops and civilians who perished in the Second World War), for a total tally of 40 million.

  ”It’s important that they published it, although the numbers themselves are horrible,” Medvedev told the New York Times at the time.

  ”Those numbers include my father.”)

  Vladimir Ilich Lenin ! லெனின் என்கிற கொலைகாரன் செய்த கொலைகள் எண்ணிக்கை முப்பது லட்சம் (மூன்று மில்லியன்) RED TERROR பற்றி இணையத்தில் உலாவி பாருங்கள் இந்த கம்யூனிச கர்த்தாவின் மனித உரிமை தெரியும் ! இந்த நாய்கள் தான் சொல்லுது மோடி இரத்த வெறி பிடித்தவர் என்று !

  இராஜீவ் காந்தியை கொன்றதால் அப்பாவி தமிழர்களை காங்கிரஸ் பழிவாங்கியது என்று கூப்பாடு போடும் இதே கம்யூனிச நாய்கள் லெனினை கொலை செய்ய திட்டமிட்ட காரணத்திற்க்காக சம்பந்தேம் இல்லாமல் விசாரணையும் இல்லாமல் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவிகளை பற்றி ஒரு வாரத்தி கூட பேச மாட்டார்கள் ! (The Red Terror was carried out in post-revolutionary Russia by the Cheka headed by Felix Dzerzhinsky along with units of the Red Army. The Red Terror started as a result of an attempt to kill Vladimir Lenin by Fanni Kaplin in August 1918 and the murder of the Cheka leader in St. Petersburg. This failed assassination attempt on Lenin was used as a rationale for the secret police and the army to round up and deal with anyone suspected of counter-revolutionary activities. From his hospital bed Lenin instructed the Cheka to “prepare for terror”.

  There was no obvious government body that could hold back the work of the Cheka. Dzerzhinsky could simply explain the organisation’s work: for example the arrest and execution of 800 people in St. Petersburg in 1918 was explained away as those executed were ‘enemies of the state’ or ‘enemies of the revolution’. Few were brave enough to argue with such an accusation in case they themselves were accused of the same crime. None of the 800 was put on trial. They were arrested and then shot. Dzerzhinsky himself said that the Cheka operated on a 24 hour basis: those who were held were usually dealt with within 24 hours. The Red Terror last from September 1918 to October 1918 though some believe that it actually lasted until the end of the Russian Civil War. The work of the Cheka during the Red Terror received the support of Lenin who argued on its behalf that the people they were dealing with were trying to re-establish into power those who had abused and exploited others in pre-revolutionary Russia. Above all else Lenin wanted to keep what had been won during the months of 1917. Therefore the Cheka was given effectively a free rein in Russia. Someone’s occupation or the size/value of their house could be enough to seal their fate.

  The work done during the Red Terror also received support from a leading Bolshevik – Gregory Zinoviev. He said that the enemies of the Bolshevik government should be “annihilated”. Lenin himself wrote to Dzerzhinsky that the opponents of the Bolshevik government should be made “to tremble”. )

  Mao Zedong மாவோ சேதுங் என்கிற சீன மாமா ஆட்சியின் நிர்வாக திறமையை சொல்லனும்னா kill the sparrows என்ற பிரச்சாரம் செய்து கம்யூனிச மூளையை கசக்கி செயல்படுத்திய திட்டம் ! குருவிகள் தானியங்களை அதிகமாக தின்னுவிடும் என்று சொல்லி குருவிகளை கொன்று குவித்தார் மாவோ என்கிற கம்யூனிச விஞ்ஞானி ! 1960 ல் தேசிய விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது தானியங்களை விட பூச்சிகளையே அதிகம் உண்ணும் உயிரினம் குருவிகள் என்று சொன்னது அதன் பிறகே அந்த அருமையான திட்டத்தை விட்டார் மாவோ ! அனால் குருவிகள் இல்லாத தேசத்தை வெட்டுக்கிளிகள் ஆர்கிரமித்தது பஞ்சம் வந்து இறந்தவர்கள் எண்ணிக்கை மூன்று கோடி கம்யூனிச விஞ்ஞானி மவோவால் கொல்லப்பட்ட எண்ணிக்கை 45 மில்லியன் அதாவது நாலரை கோடி மக்கள் !! இவரை பின்பற்றி தான் நம்ப நாட்டில் ஒரு தீவிரவாத இயக்கம் இயங்கிக்கொண்டு இருக்கு தமிழகத்தில் அந்த நாய்கள் பெயர் வினைவு,மகஇக என்ற முகதிரையில் இருக்கிறார்கள் !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s