பாஜக பாணியில் அலுவலக மீட்டிங்கை எதிர்கொள்வது எப்படி?


ஒரு எச்சரிக்கை : இந்த தொழில் நுட்பங்கள் நூறாண்டுகால பாரம்பர்யம் கொண்டவை. தொலைக்காட்சியில் காணும் இதையொத்த காணொலிகள் நன்கு பயிற்சி பெற்றோரால் செய்யப்படுகின்றன. நீங்கள் உரிய வழிகாட்டலோடு சொந்தப்பொறுப்பில் மட்டுமே இவற்றை பரீட்சித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். ஒழுங்காக வேலை பார்ப்பவர்கள், மானமுள்ளோர் மற்றும் மனிதாபிமானம் உடையவர்கள் இதை மறந்தும் கடைபிடித்துவிடவேண்டாம்.

காலம் மாறிக்கொண்டிருக்கிறது, வரலாறு ஒரு சுழல் ஏணிப் பயணத்தைப்போல ஒவ்வொரு நகர்விலும் மேல்நோக்கி முன்னேறுகிறது. முன்பெல்லாம் முதலாளிகள் படித்த& புத்திசாலி காங்கிரஸ் அடிமையை விரும்பினார்கள். இப்போதோ அதிகம் படிக்காத சொந்த சிந்தனையற்ற ஒரு பாஜக அடிமையை ஆராதிக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே ஒரு அலுவலக ஊழியனாக நாம் நம் முதலாளிகள் விரும்பியவண்ணம் நடப்பதே முறை. முதலாளிகள் கட்டளைக்கு கீழ்படிவதிலும், காலடி மண்ணை எடுத்து திருநீராக இட்டுக்கொள்வதிலும் இருவகையினருக்கும் வேறுபாடில்லை என்றாலும் ஏதோ ஒருவகையில் இரண்டாமவர்கள் ஓனர்களின் டார்லிங்காகிவிட்டார்கள் என்பதுதான் மிக முக்கியம். ஆகவே காரணங்களை ஆராயாமல் அவர்களைப் போல நடந்துகொண்டு வாழ்வில் முன்னேறுவதை கற்றுக்கொள்வதே முறை. எவன் நாசாமாய்போனாலும் என்வேலையை காப்பாறிக்கொள்வது மட்டுமே என் பொறுப்பு எனும் வாழ்வியல் உத்தியை நாம் கற்றுக்கொண்டு சிறப்பாக வாழ்கிறோம் அல்லவா.. அதைப்போலவேதான் இவையும்.

பட்டையைப் போடு: குளிக்கிறீர்களோ இல்லையோ, திருத்தமாக ஆடை அணிந்து ஏதோ ஒரு நிறத்தில் அல்லது இரண்டு நிறங்களில் சரியான அளவில் விபூதி குங்குமம் வைத்துக்கொள்ளுங்கள். இது ஒரு செமி சாமியார் தோற்றத்தை அல்லது அரை ஜோசியக்காரனின் லுக்கைக் கொடுக்கும். இந்த காலத்தில் ஆத்தா அப்பனைக் காட்டிலும் சாமியாரையும் சோதிடனையும் நம்பும் மக்களே அதிகம். ஆகவே உங்கள் அதிகாரிகளும் சக ஊழியர்களும் உங்களிடம் மென்மையாக நடந்துகொள்வார்கள். உங்கள் ஓனருக்கோ உங்களை ரொம்பவும் பிடித்துப் போகும். அதோடு பேசும் பாஷையை கொஞ்சம் பட்டி பாருங்கள். ச உச்சரிக்க வேண்டிய இடங்களில் ஷ போடுங்கள். எங்கெல்லாம் ஹ, ஹி உச்சரிப்பை பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் அதனை பயன்படுத்துங்கள். ஆஃபீஸ் கலாச்சரம், கேண்டீன் பண்பாடு என்றுகூட பேசலாம்.

சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என தீர்மானமாக நம்புங்கள் : இந்த பயிற்சிக்கு நீங்கள் முட்டாளாக இருப்பது மிக அவசியம். ஆகவே அலுவலகம் தொடர்பாக எதையும் படிக்காதீர்கள். எதையாவது தெரிந்துகொண்டால் நமக்கு பலவிசயம் தெரியாது எனும் உண்மையை நாம் நம்மை அறியாமல் உணர்ந்துகொள்வோம். அது முதலுக்கே மோசத்தை ஏற்படுத்திவிடும். சுருக்கமாக சொன்னால் பாஜக பாணியை பின்பற்றுபவனுக்கு போக்கிரித்தனம் இருக்கவேண்டும், பொறுமை இருக்கக்கூடாது. அகம்பாவம் இருக்கணும் அடக்கம் இருக்கக்கூடாது. இந்த விதிகளை ஒரு மண்டலத்துக்கு பின்பற்றினால் அடுத்தவர்கள் எல்லோரையும் முட்டாள்கள் என நம்பும் பழக்கம் சுலபமாக கைவந்துவிடும்.

அருகில் இருப்பவன் குடும்பத்தை வண்டை வண்டையாக திட்டுங்கள்: மீட்டிங் உங்களுக்கு எதிராக திரும்புவது தெளிவாக தெரியும்படசத்தில், அருகில் இருக்கும் அப்புராணி சப்புராணிகள் குடும்பத்தைப் பற்றி சகட்டுமேனிக்கு திட்டுங்கள். உதாரணமாக, உங்கள் எதிரில் அரு(ன)ண் எனும் அப்பாவி இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அவரைப்பார்த்து, உன் தாத்தா ரஷ்யாவில் என்ன செய்தார் என்று தெரியாதா? உன் சித்தப்பா சீனாவில் செய்த அக்கிரமங்களை நான் சொல்லவா? என கேள்விகளை அடுக்குங்கள். வேறுவழியில்லாமல் அவர்கள் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பிப்பார்கள். உங்களை பிரச்சனையை அலசும் முன்னால் மீட்டிங் முடிந்துவிடும். பிறகு வெற்றி வெற்றி என கத்திக்கொண்டே நீங்கள் வெளியேறிவிடலாம்.

வேதம் சாத்தன் ஓதுது : மீட்டிங்கை நடத்தும் மேனேஜரை நாம் சகல வித்த்திலும் கவனித்திருப்போம் என்றாலும் வேறு சில ஆட்கள் நம்மை மடக்கும் கேள்விகளை கேட்கக்கூடும். அப்போது மறந்தும் பதில் சொல்லிவிடாதீர்கள். மாறாக கேtட்கும் கேள்வியை உல்டாவாக்கி எதிர் கேள்வியை கேளுங்கள். உதாரணமாக, கேண்டீனின் ஏன் தனி மேசையை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டால்… அப்போ கக்கூஸ்ல தனி மேஜையை பயன்படுத்தலாமா என கேளுங்கள். அப்பாவியான அந்த குஜராத்காரரை ஏன் அடித்தாய் என்று கேட்டால் அப்ப அப்பாவி ஆந்திராகாரனை அடிக்கலாம்னு சொல்றீங்களா என கேளுங்கள். இந்த நுட்பம் கேட்பவனையும் பார்ப்பவனையும் சேர்த்து குழப்பிவிடும்.

செய்ய மாட்டோம்னு சொல்லலை.. செஞ்சா நல்லாயிருக்கும்னுதான் சொல்றோம் : நீங்கள் செய்வதாக சொல்லி செய்யாமல் இருக்கும் வேலையைப் பற்றி கேட்டால் செய்வேன் என்றோ செய்ய மாட்டேன் என்றோ உத்திரவாதமாக சொல்லிவிடாதீர்கள். செய்ய வேண்டிய நேரத்தில் செய்வேன் என்றோ செய்யக்கூடாத நேரத்தில் செய்ய மாட்டேன் என்றோ குத்து மதிப்பாக பேசுங்கள். எப்பதான் செய்வ என்று அழுத்திக் கேட்டால் அதை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வேன் என்று சொல்லுங்கள். அந்த நேரம் எப்போ வரும் என்று கேட்டால் “அதை சொல்ல வேண்டிய ஆளுகிட்ட சொல்வேன்’ என்று சொல்லுங்கள். இதற்கு மேலும் மானமுள்ள எவனும் உங்களிடம் கேள்வி கேட்கமாட்டான்.

இதெல்லாம் எங்க தாத்தா காலத்துலயே செஞ்சாச்சு : அடுத்த டீம்காரர்கள் ஏதேனும் சாதனை செய்த்தாக சொன்னால் அது சாதனையே இல்லை என மறுத்துப்பாருங்கள். இல்லாவிட்டால் அதன் காரணகர்த்தாவே நாங்கள்தான் என்று சொந்தம் கொண்டாடுங்கள். உதாரணமாக, எங்கள் குழுவில் பெரியவன் சின்னவன் எனும் பாகுபாடு கிடையாது. எல்லோருக்கும் ஒரே தரத்திலான டீயும் ஒரே மாதிரியான டம்ளரும்தான் இருக்கிறது. எல்லோரும் சமமாக அமர்ந்து டீ சாப்பிடுவதால் நட்புணர்வு அதிகரிக்கிறது. அதனால் எங்கள் செயல்திறன் மேம்படுகிறது என்று ஒருவர் சொல்வதாக வையுங்கள். அப்போது நீங்கள் குறுக்கிட்டு, எல்லோருக்கும் ஒரே டீ கொடுத்தா சீனியாரிட்டிக்கும் சின்சியாரிட்டிக்கும் என்ன மரியாதை என கலாட்டா செய்யுங்கள். ஆதரவு இல்லாவிட்டால், இதெல்லாம் எங்க தாத்தா காலத்துலயே செஞ்சுட்டோம். அவரு எல்லோரும் கட்டுற சாதாரண கோவணத்தைத்தான் காலமெல்லாம் கட்டுனாரு தெரியுமா என்று சொல்லிவிடுங்கள்.

தப்பிக்க முடியாதபடி சிக்கிக்கொண்டால் :

நான் அந்த இடத்துக்குத்தான் வர்றேன் : பிரச்சனையைக்கு சம்மந்தமே இல்லாத விசயத்தில் இருந்து பேச்சை ஆரம்பியுங்கள். அது உங்கள் கம்பெனி ஆரம்பித்த கதையாகக்கூட இருக்கலாம். ஆனால் நான்ஸ்டாப்பாக பேசவேண்டும் என்பது அவசியம். யாராவது இடை மறித்து பிரச்சனையை நினைவுபடுத்தும் போதெல்லாம் நான் அதைத்தான் சொல்ல வர்றேன் என்று அலட்டிக்கொள்ளாமல் சொல்லுங்கள். களைப்பாக உணர்ந்ததும் பேச்சை நிறுத்துங்கள். நிச்சயம் அதற்குள் மற்றவர்கள் களைத்துப்போயிருப்பார்கள்.

கடவுளை கைக்கொள் : எல்லா பதிலிலும் ஒரு புராண உதாரணத்தை சேருங்கள். இப்படித்தான் ராமாயணத்துல ஒரு கட்டத்துல என்று எதையாவது இழுத்துவிட்டால் யாரவது ஒருவர் தேவையில்லாத்தை பேசாதீர்கள் என்று சொவார்கள். அதுதான் நமக்கு தேவை. உடனே ராமனை தேவையில்லைன்னு சொல்றான் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுங்கள். அந்த கேப்பில் உங்கள் மீதான குற்றச்சாட்டு வலுவிழந்துவிடும்.

ஒரு எதிரியை உருவாக்கிக்கொள்ளுங்கள் : தொடைநடுங்கிகள் வீரனாவதற்கான் ஒரே வழி, எதிர்க்க வலுவில்லாதவனை எதிரியாக்குவதுதான். ஆகவே ஆஃபீசில் உங்களுக்கான ஒரு அப்பாவி எதிரியை உருவாக்குங்கள். கரப்பான் பூச்சி முதல் கம்ப்பியூட்டர் வைரஸ்வரை எல்லாமே அவனது சதியால்தான் வருகிறது என்று வாய்கூசாமல் பேசுங்கள். இதனால் அவனால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது. அதனையும் பிரச்சனையாக்குங்கள், அவனுக்கு கிடைப்பது சம்பளமல்ல சலுகை என அரசியல் செய்யுங்கள். இதனால் கிடைக்கும் அனுகூலங்கள் இரண்டு,

  1. அலுவலகத்தில் நீங்களும் ஒரு டான் ஆகலாம்.
  2. மனம்போல பிராடுவேலை செய்து அந்தப்பழியை அவன் மீது போடலாம்.

இப்படி உருவாக்கப்பட்ட எதிரியை இக்கட்டானான தருணங்களில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பிரச்சனைக்கு உள்ளாகவிருக்கும் சமயங்களில் அந்த எதிரியிடம் வம்பிழுத்து அவன் அல்லையில் குத்துங்கள் அல்லது அவன் கேபினிற்கு அருகே சென்று கெட்டவார்த்தையில் பேசுங்கள். அவன் கையை ஓங்கிவிட்டால் இன்னும் ஷேமம். இதன் மூலம் அலுவலகத்தில் எப்போதும் ஒரு பதட்டத்தை பராமரிக்க முடியும். ஒரு பதற்றமான சூழலின் மிகப்பெரிய அனுகூலம் என்னவென்றால் உங்கள் பழைய பாவங்கள் மறக்கப்பட்டு சமகால சிக்கல் மட்டுமே சுற்றியிருப்போர் மனதில் இருக்கும். அதைவைத்து நீங்கள் அடுத்த சில ஆண்டுகளை ஒப்பேற்றிவிட முடியும்.

ஆனால் இதில் மிக முக்கியமான இரண்டு விதிகள் இருக்கின்றன. முதலாவது, நீங்கள் எக்காரணம் கொண்டும் அலுவலகத்தில் உள்ள வலுவானவர்களையோ அல்லது வசதியானவர்களையோ பகைத்துக்கொள்ளக்கூடாது. தேவைப்பட்டால் அவர்கள் காலை கழுவி சேவை செய்யும் சாணக்கியனாகவும் இருப்பது அவசியம். இரண்டாவது, சூழல் நன்றாக இருக்கும் நேரத்திலும் எதிரி பற்றிய பொய் பிரச்சாரத்தில் கவனமாக இருங்கள். நாதாரித்தனத்தை நாசூக்காக செய்த நம் முன்னோர்கள் அதைத்தான் பின்பற்றினார்கள்.

கடைசியா ஒரு பொது விதி, மேற்சொன்ன எல்லா டெக்னாலஜியும் தோற்றுபோய் நம் மானம் சிரிப்பாய் சிரித்தாலோ, உலகம் நம் மூஞ்சியில் காறித்துப்பி செருப்பால் அடித்தாலோ கொஞ்சமும் கலங்காமல் முகத்தில் அந்த சாந்தத்தை மட்டும் அப்படியே மெயிண்டெயின் செய்யுங்கள். எந்நேரமும் செல்ஃபி எடுக்க தோதான அந்த முகம்தான் நமக்கான முதலீடு என்பதை மறந்துவிடாதீர்கள்.

Advertisements

One thought on “பாஜக பாணியில் அலுவலக மீட்டிங்கை எதிர்கொள்வது எப்படி?”

  1. உங்கள் வயித்தெரிச்சல் நன்றாக தெரிகிறது …
    மேற்கொண்டு எதுவும் ஆகாமல் உடல் நலம் காக்க வேண்டி கேட்டு கொள்கிறேன் ..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s