திருவாளர் ஐம்பத்தாறு அங்குலம் – சொன்னதும் சொல்லாததும்


சாத்வி ஒரு கிராமத்து பெண், முதல் முறையாக அமைச்சராகியிருக்கிறார். அவரது செயலை (தவறை அல்ல) பெருந்தன்மையாக மன்னிப்போம். – நாடாளுமன்றத்தில் மோடி.

குஜராத கலவரத்தினபோது மோடி முதல் முறை முதல்வரானவர், அமித் ஷா போலி என்கவுண்டர் வழக்கில் முதல்முறை சிக்கியவர். பிரக்யா தாகூர் மற்றும் அசிமானந்த ஆகியோர் வாழ்க்கைத்துணையும் குழந்தைகளும் இல்லாதவர்கள். உள்ளபடியே அவர்களும் முதல்முறை மாட்டியவர்களே. ஆகவே எல்லோருக்கும் சேர்த்து ஒரு பொதுமன்னிப்பை வழங்கிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நாட்டின் மற்ற பகுதி மக்களோடு இணக்கம் ஏற்பட ஏதுவாக, வடகிழக்கு மாநில மக்களுக்கு பழகுதல் திட்டத்தை அறிவித்தார் மோடி. வடகிழக்கு மாநில மக்கள் இங்கு வந்து நம்மோடு பழகவும் நம்மில் சிலர் அங்கே போய் பழகவும் ஏற்பாடு செய்யப்படும்.

மோடியின் சிந்தையில் உதித்த இந்த புரட்சிகரத் திட்டம் இன்னும் பல தளங்களில் விரிவுபடுத்தப்படும். அதாவது அம்பானி, அதானி, டாடா ஆகியோர் ஒருமாதம் குடிசையில் தங்குவார்கள். குடிசைப்பகுதி மக்கள் அவர்கள் வீட்டில் தங்குவார்கள். இதன் மூலம் ஏழை பணக்காரர்களுக்கு இடையே ஒரு இணக்கம் ஏற்படும். அப்படியே அக்ரஹாரத்து மக்கள் சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்கும், தலித் மக்கள் கோயிலில் பூஜை செய்யும் வேலைக்கும் அமர்த்தப்பட்டு சாதி இணக்கம் ஏற்படுத்தப்படும்.

பிரச்சனைக்குரிய விடயங்களை பொதுமேடைகளில் பேசக்கூடாது, மோடி தன் கட்சி எம்.பிக்களுக்கு கண்டிப்பு.

கோவம் வராதா என்ன. அவரு மனப்பாடம் பண்ணி அடுத்த ஃபாரின் டூர்ல பேச வேண்டியது எவ்வளவோ இருக்கு. இப்போ எதிர்கட்சிகளுக்கு சொல்ல வேண்டிய பதிலையும் மனப்பாடம் பண்ணனும், ஒருத்தர் எவ்வளவு வீட்டுப்பாடத்தைத்தான் செய்ய முடியும்!!! மேலும் பிரச்சனைக்குரிய விசயங்களை பேசுவதற்கென்றே பல தனித்தனி அமைப்புக்கள் இருக்கையில் எம்.பிக்களுக்கு எதற்கு இந்த வீண்வேலை??

ஒரு இரவில் ஆஸ்திரேலியா வந்துவிட முடியும். ஆனால் ஒரு இந்திய பிரதமர் இங்கே வர இருபதாண்டுகள் ஆகியிருக்கிறது.

ஒரு மணி நேரத்துல பிரஸ் மீட்கூட ஏற்பாடு பண்ணிட முடியும். ஒருசிலர் அதுக்கும் பயந்துகிட்டு ஓடுறாங்கஜி. அதையும் அட்டாக் பண்ணி ஒரு மேடையில பேசுங்க. அதுவும் உங்களாலதான் முடியும்.

கிரிக்கெட் விளையாட்டின்போது பந்துபட்டு இறந்த ஆஸ்திரேலிய வீரருக்கு மோடி ட்விட்டரில் அஞ்சலி.

கடந்த ஆறுமாதத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் பற்றி மோடி எதுவும் சொல்லவில்லையே என யாரும் சங்கடப்பட அவசியமில்லை. எதிர்கட்சியானவுடன் தனிவிமானத்தில் வந்து அவர்களுக்கான இரங்கல் செய்தி வாசிக்கப்படும்.

உலக நாடுகளுக்கெல்லாம் செல்லும் மோடியை இந்திய நாடாளுமன்றத்துக்கு வரவையுங்கள்- சீத்தாராம் யெச்சூரி.

அதுக்கு முதல்ல ஒரு இருபதாயிரம் பேரை கைதட்டவும் ஜே போடவும் பாராளுமன்றத்துக்கு வரவையுங்க. அந்த மாதிரி இடத்துல பேசிப்பேசி பழகிடுச்சு, பழக்கத்தை மாத்த முடியாது.

உலகின் சிறந்த மனிதராக மோடியை அறிவிக்கிறது அமெரிக்காவின்  டைம் இதழ். ஐ.எஸ் இயக்க தலைவர் அல் பாக்தாதி, அமெரிக்க கவர்ச்சி நடிகை கிம் கர்தாஷியன் ஆகியோரை உள்ளடக்கிய பிரபலங்கள் பட்டியலில் இணைய வாக்குகள் மூலம் முன்னிலை பெற்றார் மோடி.

பவர் ஸ்டார் சீனிவாசன் புறப்படுங்கள், நீங்கள் ஆஸ்காருக்கு முயற்சி செய்வதற்கான சிறந்த சூழல் இனி வேறெப்போதும் அமையாது.  

கேமராவை மறைத்த தனது காவல் அதிகாரியை கடிந்துகொண்டார் மோடி.

கடவுளை மறைத்தால் பக்தனுக்கு கோபம் வருவது இயற்கைதானே!!

நாகாலாந்துக்கு கடந்த பத்தாண்டுகளில் வந்த ஒரே பிரதமர் நான்தான். (2008ல் மன்மோகன் பிரதமராக நாகாலாந்து போயிருக்கிறார்)

நான் நான் என்று பேசி பழகிவிட்டது. அப்படி பேசுவது லிவருக்கு நல்லது என்று ஸௌந்தர்ய லஹரியில் சொல்லப்பட்டிருக்கிறது.  நாகாலாந்தில் ”நான்” என்று சொல்ல வேறு விஷயம் இல்லாத்தால் ஒரு ஃபுளோவில் இந்த வாக்கியம் வந்துவிட்டது. முதல்முறை நாகாலாந்து வந்தபோது இது நடந்திருப்பதால் பெருந்தன்மையாக இவ்விவகாரத்தை விட்டுவிடவும்.

இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி – ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி.

பயப்படாதீங்க மோடிஜி. எதிர்கட்சி தலைவர் எனும் ஒரு பதவியைகூட அனுமதிக்க மறுக்கும் உங்களைத்தவிர வேறு யாராலும் இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்த முடியாது.

Advertisements

One thought on “திருவாளர் ஐம்பத்தாறு அங்குலம் – சொன்னதும் சொல்லாததும்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s