பத்ரி – நூலின்றி அமையாது உலகு. (1)


காதல் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் கதாநாயகின் சித்தப்பா சாதியை பொருட்படுத்தாத கருணையே வடிவானவராய் காட்சியளிப்பார். கதாநாயகன் மெண்ட்டலாவதற்கு சில நிமிடங்கள் முன்னால் அவரது சாதிவெறி வெளிப்படும். பாஜகவின் பண்பாட்டு தாக்குதல்களால் நாம் எல்லோரும் மெண்ட்டலாவதற்கான காலம் கனிந்துகொண்டிருக்கிறது. கோமியத்தை தேசிய பானமாக அறிவித்தால் பைத்தியம் முற்றி முழுமை பெற்றுவிடும். சரியாக இந்த தருணத்தில்  ஜனநாயகம் வளர்ச்சி மற்றும் அறிவு ஆகியவை 30:30:40 என்ற விகிதத்தில் கலந்த பத்ரி சித்தப்பா தன் நிஜ முகத்தை எழுத்து வடிவில் காட்டியிருக்கிறார். பேய் படங்களின் ஆரம்பத்தில் பேய்கள் அவ்வப்போது சில விநாடிகள் தோன்றும். பார்ப்பவர்கள் சுதாரிப்பதற்குள் மறையும். அதைப்போல பத்ரியும் பல சமயங்களில் தனது உருவத்தை நம் போன்ற பாமரர்களுக்கு காட்டியதுண்டு. மளிகைக் கணக்கைகூட மதவெறி கலக்காமல் எழுத் தெரியாத அரவிந்த் நீலகண்டனின் புத்தகத்தை தனது தனிப்பட்ட திருப்திக்காகவே (நட்டம் என்று தெரிந்தே) வெளியிட்டதாக சொன்னபோதும், மோடியை கண்மூடித்தனமாக ஆதரித்தபோதும் பத்ரியின் விஸ்வரூப தரிசனம் நமக்கு கிட்டியது.

அப்போதெல்லாம் சாமானியர்கள் வளர்ச்சியை எதிர்நோக்கி வாய்பிளந்து நின்றுகொண்டிருந்ததாலும், முற்போக்கு அணிகள் மோடி எனும் மூலவரை கவனித்துக்கொண்டிருந்ததாலும் பத்ரி போன்ற கிங்கரர்கள் நிஜ உருவம் அவுட் ஆஃப் ஃபோகஸில் இருந்துவிட்டது, போகட்டும். பத்ரி தமது டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் பிராமணர்களின் பிரச்சனையாக பல விசயங்களை பட்டியலிடுகிறார். பிராமணாளுக்கு அரசு பதவிகள் குறைந்துவிட்டது (மேல்மட்ட வேலைகளில் குறைந்தபட்சம் 100% இருந்தால் போதுமானது), மருத்துவக்கல்லூரிகளிலும் சிறந்த பொறியியல் கல்லூரிகளிலும் படிக்கும் பிராமண மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அரசியலில் இடமில்லை, தயிர்சாதத்துக்கு ஊறுகாய் இல்லை என பல இல்லைகளை பட்டியலிட்டு பொங்கியிருக்கிறார் பத்ரி.

மற்ற சாதிகளை குறிப்பிட்டு மட்டம்தட்ட முடியாத சூழல் நிலவுவதால், அதிகம் கலப்புமணம் செய்த சாதி எங்களது என்று மெலிதாக இடித்துகாட்டியிருக்கிறார். தமிழகத்தின் சமூக சூழலை முன்னேற்றிய பெரியார் இயக்கத்தில் பங்கேற்ற பிராமணர்கள் வரலாறு லட்டு போல இருந்தும் அதை பெருந்தன்மையாக விட்டுவிட்டு (நண்பர்களான தமிழ்தேசியவாதிகள் கோபிக்கக்கூடும் என்பதற்காக இருக்கலாம்) தமிழுக்காக உழைத்த பார்ப்பனர்களின் பங்கை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார். பார்ப்பனர்கள் இந்திய அரசின் எல்லா அடுக்குகளிலும்  இடுக்குகளிலும் நிறைந்திருக்கும் சதவிகிதக் கணக்கை பலரும் ஃபேஸ்புக்கில் கொட்டிக்கொண்டிருப்பதால் நாம் வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தலாம்.

தமிழ் ஊடகங்கள் அவருக்கு கொடுத்திருக்கும் அறிவிஜீவி ஸ்டேட்டசை கேள்விக்குள்ளாக்கும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன் எனும் உறுதியை இந்த சந்தர்பத்தில் வழங்கிவிடுகிறேன். வாயாலேயே நம் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றும் பாஜக ஆதரவு நடுநிலை பிராமணர்களுக்கு மத்தியில் பத்ரி போன்ற மென்குரல் கொண்டவர்கள் அறிவுஜீவியாக இருப்பது நம் காதுகளுக்கு(மட்டும்) நல்லது. இரண்டாயிரம் வருடங்களாக அறிவுஜீவியாக இருந்த எங்களிடமிருந்து அந்த பட்டத்தை இப்போது பறித்துக்கொண்டார்கள் என இன்னொரு கட்டுரையை அவர் எழுதினால் பேஸ்புக் சர்வரே தாங்காது.

பத்ரியை இணையத்தில் பலரும் விமர்சிக்கிறார்கள் என்பதை தமது ஞான சிஷ்யர்கள் வாயிலாக அறிந்த ஹிந்துத்துவ விளக்கவுரையாளர் ஜெயமோகன், அக்ரகாரத்து காவலனாக பொறுப்பேற்றுக்கொண்டு  ”இது கொஞ்சம் ஓவராயிருக்கே” என பத்ரியே எண்ணுமளவுக்கு வார்த்தை விளையாட்டை நிகழ்த்தியிருக்கிறார். ஷேவிங் பிளேடு மொன்னையானாலே அதற்கு காரணம் ஈவெராதான் என்று கண்டுபிடிக்கும் வல்லமை கொண்ட அவர் பிராமணளாளின் கண்ணீருக்கு காரணம் கண்டுபிடிப்பதா பெரிய விஷயம்!! தமிழ்தேசிய ரத்தப் பரிசோதனை போராளிகளே அசந்துபோகுமளவுக்கு வடுகர்களுக்கு எதிரான போர்முரசு ஒலிக்கிறது அவரது கட்டுரையில் (லீனா மணிமேகலையின் பேச்சைக்கொண்டே அவர் ஒரு வடுகர் என்று கண்டுபிடித்த ஜெமோவின் மூளைக்கு முன்னால் சிஐஏகூட சும்மாதான்). பார்ப்பனர்களே சொல்லத்தயங்கும் வர்ணாசிரம தர்மத்தை சூப்பர் என்று சொல்லும் மனத்துணிவு ஜெமோவைத்தவிர யாருக்கு வரும்? பிராமணாளை தலித்துகளுக்கு நிகரானவர்களாக சித்தரித்த பாவத்துக்கு அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் எனும் மனுதர்ம ஃபத்வா உறுதி என்றாலும், இந்து ஞானமரபிப்புக்குள் புகுந்து அதன் சந்து ஞானமரபைக்கூட கற்றாய்ந்த ஜெமோவால் அதனை எளிதாக சமாளிக்க முடியும்.

இவர்களின் புலம்பலில் உள்ள உண்மைத்தன்மையை பார்த்துவிட்டு இந்த புலம்பலின் காரணத்தை பிறகு பரிசீலிக்கலாம். பார்ப்பனர்கள் உண்மையில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்களா? தமிழக அரசின் மிகமுக்கியமான நிர்வாகப்பொறுப்புக்களில் இதுவரை பிற்படுத்தப்பட்டவர்களோ தழ்த்தப்பட்டவர்களோ இருந்ததில்லை என்பதை தரவுகளோடு சுட்டிக்காட்டியிருந்தார் கிருஸ்துதாஸ் காந்தி எனும் ஐஏ.எஸ் அதிகாரி. கருணாநிதியைவிட மிகமோசமான ஆட்சியை நடத்துவது ஜெயலலிதா. ஆனாலும் ஊடகங்கள் அவருக்கு எதிராக முனகுவதுகூட இல்லை. மம்தாவையும் மாயவதியையும் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்யும் தேசிய ஊடகங்கள் ஜெயாவுக்கு எதிரான மவுனத்தை கடைபிடிக்கின்றன ஏன்?. அவர்களிடமிருந்து ஜெயா வேறுபடும் ஒரே காரணி அவரது ஜாதி மட்டும்தானே??

பிரேமானந்தா, நித்யானந்தா, ஜெயேந்திரர் இவர்கள் அத்தனை பேரும் கிரிமினல்கள், ஸ்த்ரீலோலர்கள். இவர்களில் பிரேமானந்தா சிகிச்சை கிடைக்கவே வழியில்லாமல் பரலோகம் போனார். நித்தி ஊராக ஓடினார், ஆண்டவனின் ஆண்மையே சோதிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஜெயேந்திரனுக்கு மல்லாக்கப் படுத்தவாக்கில் வாக்குமூலம் தரவும், சிறையில் சொந்த ஜாதி சமையல்காரனை வைத்துக்கொள்ளவும் சலுகை தரப்பட்டதன் காரணம் அவனது ஜாதியன்றி வேறென்னவாக இருக்க இயலும்? இவைகூட பணம் கொடுத்தால் கிடைக்கும் சலுகைகள்தான். ஆனால் ஜெயேந்திரனின் கைதின்போது மத்திய அரசு முதல் நீதிமன்றம் வரை அந்த பொறுக்கிக்காக அலறினவே ஏன்?

இந்தியாவின் சூப்பர் பிரதமாராக சூ(சாமி)தான் இருக்கிறார். பிராமணர்கள் மொழி என்பதாலேயே செத்த சமஸ்கிருதம் எல்லா மத்திய அரசுகளாலும் போஷிக்கப்படுகிறது. ஊடக முதலாளிகள், பிரதான செய்தியாளர்கள் மற்றும் லெட்டர் டு எடிட்டர் காலம் எழுதுவோர் வரை ஊடகங்களின் எல்லா பிராந்தியங்களிலும் அவர்கள் ஆதிக்கம் கோலோச்சுகிறது. தமிழக தொலைக்காட்சி விவாதங்களில் தலைப்புக்கு தொடர்பானவர்கள் அழைக்கப்படுகிறார்களோ இல்லையோ பிராமணர்களுக்கு இரண்டு இருக்கைகளேனும் ஒதுக்கப்படாமல் விவாதம் நடப்பதேயில்லை.

அதிகாரம் மட்டுமல்ல. வசதி வாய்ப்பிலும் அவர்கள் குறைந்துவிட்டதாக சொல்வதற்கில்லை. வசதி வந்த இடைசாதி மற்றும் தலித் மக்கள் தங்கள் வீட்டு (சுப)காரியங்களுக்கு ஐயரை வரவழைப்பது என்பது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. பல நிறுவனங்கள் வெள்ளிகிழமை பூஜையை அய்யரை அழைத்தே செய்கின்றன. பன்றி குட்டி போட்டதுபோல கோயில்கள் பெருகிக்கொண்டே போகின்றன. எலைட் பிராமணர்கள் சீந்தக்கூட மறுத்த கோயில் குருக்கள் வர்கத்தையே மற்ற சாதிக்காரர்களின் அரை பார்ப்பானாகிவிடும் மோகம்தான் காப்பாறுகிறது. இன்றைக்கு வரை அய்யர்கள்தான் புத்திசாலிகள் எனும் நம்பிக்கை இங்கே இருக்கிறது (விவேக்கின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து அவரை பிராமணர் என்று நினைத்தேன் – சூப்பு ஸ்டார் ரஜினி)

பார்ப்பனர்களுக்கு பிடிக்காத விளையாட்டுக்கள் அரசால் கண்டுகொள்ளப்பட்டதற்கான வரலாறே இங்கு கிடையாது. போலீஸ் ரோந்தும், சாலைவசதிகளும் பிராமணர்கள் செறிவாக வசிக்குமிடங்களில்தான் முறையாக இருக்கிறது. தஞ்சாவூர் எல்.ஐ.சி காலனியில் அய்யர்கள் பெருமளவு வசித்த காலத்தில் அங்குள்ள கிளைச்சாலைகளில் மீன் விற்பவர்கள் செல்ல முடியாது (அந்த வழியாக செல்லும்போது மீன் விற்பவர் கூவக்கூடாது என எச்சரிக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்). பிராமணர்களெல்லாம் பெரிய மனது வைத்து சென்னையிலும் அமெரிக்காவிலும் குடியேறிய பிறகே அங்கே அப்பிராமணர்கள் மீனை சாலையில் வைத்து வாங்கும் சுதந்திரம் கிடைத்தது (ஆனால் அப்போது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து ஐம்பதாண்டுகள் ஆகிவிட்டிருந்தது).

பத்ரியே எங்கள் சவுகர்யத்துக்கு யாதொருகுறையும் இல்லை என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் ஜெமோ அந்த அளவுக்கு நாசூக்காக நடந்துகொள்ள தயாரில்லை. தமிழகத்தில் தலித்துகளுக்கு நிகரான ஜாதீய வன்கொடுமைகள் பார்ப்பனர்களுக்கு நிகழ்வதாக கண்ணீர் வடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த “உண்மைகளை” தன் மகளுக்கும் சொல்லி அவரையும் அழவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார். தமிழகத்தில் பார்ப்பனர்கள் வாயில் மலம்திணிப்பது, அய்யர்களுக்கு டீக்கடையில் தனிக்குவளை, சாவுக்கு மிருதங்கம் வாசிக்க மறுத்த பிராமணரின் கட்டைவிரலை வெட்டுவது உள்ளிட்ட எண்ணற்ற கொடுமைகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் ஞானமரபின் ஆதாரத்திடமே அதற்கான ஆதாரம் கேட்பது அறமாகாது. கொஞ்சம் காத்திருந்தால் அன்னார் அடுத்த எழுதவிருக்கும் இரண்டரை லட்சம் பக்கம் கொண்ட வெள்ளைச்சொறிநாய் நாவலில் இக்கொடுமைகள் எழுதப்படும். அதனையே வருங்கால சந்ததிகள் ஆதாரமாக கொள்ளலாம்.

தன் குடும்பத்தையே கொன்றவன் நான் யாருமற்ற அநாதை ஆகவே எனக்கு கருணை காட்டுங்கள் என்றானாம். அந்தக்கதை போல பார்ப்பனர்களின் இடப்பெயர்வும் அவர்கள் மீதான வன்முறையின் விளைவாக காட்டப்படுகிறது. உண்மையில்  அந்த இடப்பெயர்வின் நோக்கம் புதிய அதிகாரத்தை கைப்பற்றுவதும் இருக்கும் அதிகாரத்தை தக்கவைப்பதும்தான். ஆரம்பத்தில் அரசனுக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள், கிராமங்களில் பெருமளவு நிலம் அவர்களுக்கு சொந்தமாக இருந்தது. அங்கே நிலஉடைமை மூலம் அதிகாரம் செலுத்தினார்கள். 1950களில் வந்த குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம் பெரும் நில உடைமயாளர்களாய் இருந்த பார்ப்பனர்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்தியது. அதுவரை எப்போது நினைத்தாலும் நிலத்தை பிடுங்கிக்கொள்ளலாம் எனும் நிலையும் எவ்வளவு குத்தகை வேண்டுமானாலும் நிர்ணயிக்கலாம் எனும் அதிகாரம் அவர்கள் வசம் இருந்தது. எழுபது சதம் விளைச்சல் குத்தகைதொகையாக நிர்ணயிக்கப்படுவதெல்லாம் கீழத்தஞ்சை கிராமங்களில் சாதாரணம். கோயில்கள் கட்டுப்பாட்டில் நிலம் இருந்தது, அந்த கோயில்கள் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. (இப்போதும் சிதம்பரம் நடராஜர் கோயிலின் அதிகாரத்தை அவர்கள் தக்கவைக்க போராடுவது அதன் திரண்ட சொத்துக்காகவே.. மணியாட்டும்போது கிடைக்கும் பரவசத்துக்காக அல்ல).

பிறகு நில உடமையாளனைவிட அதிகாரம் மிக்க பிரிட்டிஷ்காரர்களிடம் விசுவாசமாக இருப்பதன் மூலம் அதிகாரத்தை காப்பாற்றிக்கொண்டார்கள். கடந்த நூற்றாண்டில் அதிகாரம் நகரங்களில் இருந்தது, அதனை வென்றெடுக்க நகரங்களில் குடியேறினார்கள். இன்றைக்கும் இந்தியாவை கட்டுப்படுத்தும் நீதிமன்றங்கள், அரசு உயர் நிர்வாக பதவிகள், ஊடகங்கள், பெரு நிறுவன நிர்வாகிகள் என அத்தனை தரப்பும் பார்ப்பனர்களால்தான் நிறைந்திருக்கிறது, இந்த துறைகள் யாவும் நகரங்களை மையப்படுத்தியே இருக்கின்றன என்பது ஒன்றும் ரகசியமல்ல.ஜெயலலிதா வழக்குளாகட்டும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விவகாரமாகட்டும் இல்லை இடஒதுக்கீட்டு விவகாரமாகட்டும் இவை எல்லாவற்றிலும் மேற்சொன்ன துறைகளின் செயல்பாடுகளை கவனித்தால் பார்ப்பன ஆதிக்கம் எப்படி இன்றளவும் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது என்பது விளங்கும். அவர்களின் எல்லா நகர்வும் அதிகாரத்தை கைப்பற்ற நடந்த வெற்றிகரமான நடவடிக்கைகளே. இன்னும் தெளிவாக சொல்வதானால் அதிகாரத்தை விரிவுபடுத்த ராஜதந்திரம் எனும் ஆயுதம் கொண்டு நிகழ்த்தப்பட்ட போர்கள் இவை.

(தொடரும்)

Advertisements

“பத்ரி – நூலின்றி அமையாது உலகு. (1)” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு ? பிராமன ஆதிக்கம் ஒழியவேண்டும் இந்து மதம் தானாய் அழிந்துவிடும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s