இரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி?


ல்லூரி அட்மிஷன் கனஜோராக நடக்கும் இந்த சூழலில் உலகின் உள்ள எல்லா துறைகளைப் பற்றியும், அதில் எப்படி விற்பன்னராவது என்பது பற்றியும் பெரும் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றிய ஆலோசனைகள் யாராலும் தரப்படுவதில்லை.

அவர்களும் ஏசி ரூமில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும். அவர்களும் தென்னகத்து அர்னாபாக, பர்கா தத்தாக மாற வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்தோடு இந்த பயிற்சிக் கையேடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம் தற்சமயத்துக்கு பைசா இருக்காது என்பதால் இந்த பயிற்சியை இலவசமாகவே தருகிறோம்.முன்னேறும் வழி தெரியாமல் ஆண்டுக் கணக்கில் சென்னை வீதிகளை ஓட்டை டூவீலரில் சுற்றி சைனஸ் வந்து அல்லலுறும் பத்திரிகையாளர்கள், வாடகை கட்டுப்படியாகாமல் வீட்டை வருடா வருடம் மாற்றிக் களைத்துப் போகும் பத்திரிகையாளர்கள் என ஒரு கூட்டம் துன்பப்படுவதைப் பார்த்து கண்களில் ரத்தக்கண்ணீர் வருகிறது. எதேச்சையாக சந்தித்த பிழைக்கத் தெரியாத ஓரிரு பத்திரிக்கையாளர்களுக்கு டீயும் பன்னும்கூட வாங்கித்தராத குற்ற உணர்வு இன்றைக்குவரை என்னை வாட்டுகிறது.

முதலில் உறுதிமொழி,

1. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், காக்கி டவுசருக்கு எதிராக ஒரு போதும் சிந்திக்க மாட்டேன். கருப்பு சட்டைக்கு ஒரு போதும் துணைபோக மாட்டேன்.

ரங்கராஜ் பாண்டே

2. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், சிறுபான்மை மக்களையும் தலித் மக்களையும் முடிந்தவரை இழிவுபடுத்துவேன்.

3.  ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், ஆர்.எஸ்.எஸ்-ன் அபான வாயுவாக மாறி எட்டுத்திசைக்கும் அதன் ’கொல்’கைகளைப் பரப்புவேன். தேவைப்பட்டால் ஆர்.எஸ்.எஸ்சின் ஆயுதமாக மாறி ஒரு தரப்பை மட்டும்கூட தாக்குவேன்.

4. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், அதிகாரத்துக்கும் மக்களுக்கும் இடையேயான முரண்பாடுகளில் அதிகாரத்தின் பக்கம் மட்டுமே நிற்பேன்.

5. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், அதிகாரத்துக்கும் ஆர்.எஸ்.எஸ்சுக்குமான முரண்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ் பக்கம் மட்டுமே நிற்பேன்.

வளர்த்துக் கொள்ள வேண்டிய சில தகுதிகள் :

1. பா.ஜ.ககாரனிடம் பேட்டி எடுக்கையில் ஒரு பா.ஜ.க.காரனைப் போலவே பேச வேண்டும்.

2. எதிர்கட்சிகளிடம் கேள்வி கேட்கையிலும் ஒரு பா.ஜ.க.காரனைப்போலவே கேள்வி கேட்கவேண்டும், நீ மட்டும் யோக்கியமா வகை கேள்விகள் சாலச்சிறந்தது.

3. இது மிக முக்கியமானது, உடல்மொழி ஒரு ஆகப்பெரும் தகுதி. நீங்கள் உரையாடுகையில் வெறும் 7 சதவிகித செய்தியை மட்டுமே வார்த்தைகள் மூலம் புரியவைக்கிறீர்கள். மீதமுள்ள 93 சதம் செய்தியும் உங்கள் உடல்மொழி வாயிலாகவே எதிராளிக்கு சென்று சேர்கிறது ஆகவே பா.ஜ.க.வுக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் எதிராக யார் பேசினாலும் அவர்களிடம் மிக சாதாரண கேள்விகளையும் ஒரு நக்கலான, மட்டம் தட்டும் வகையிலான உடல் மொழியில் கேட்கப் பழக வேண்டும்.

இதனால் எதிராளி உங்கள் உடல்மொழிக்கு பதிலளிக்க முயல்வார், பதற்றமடைவார்.

இதன்மூலம் விவாதத்தை திசை திருப்பலாம், பா.ஜ.க.வுக்கு எதிரான குற்றச்சாட்டை வலுவிழக்க வைக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக உங்களை ஒரு மேதாவியாக எல்லோரையும் மடக்கும் வாதத் திறமையுள்ளவனாக உலகம் நம்பும்.

5.   மனிதாபிமானம், நியாய உணர்வு ஆகியவை அரை பர்செண்ட் கூட இருக்கக் கூடாது. இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு உங்கள் மனைவிக்கு ஒரு ஹேர்பின்கூட வாங்க முடியாது. பிறகெதற்கு இந்தக் கருமங்களை கட்டி சுமக்க வேண்டும்? (சுஷ்மா ஸ்வராஜுக்கு உள்ள மனிதாபிமானம் இந்த லிஸ்டில் வராது).4.   இந்துத்துவ பரிவாரங்கள் செய்யும் எந்த கலவரத்தையும் நினைவில் வைத்திருக்கவே கூடாது. ஐ.எஸ், அல்கொய்தா ஆகிய இயக்கங்கள் நடத்திய தாக்குதல்களில் 5 செய்திகளையாவது தினமும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அதனை சமையல் நிகழ்ச்சி நடத்தினாலும் குறிப்பிட மறக்கக் கூடாது.

பாண்டேயாவதற்கான தொழில் நுட்பங்கள் (உதாரணங்களுடன்) :

1.  விவாதத்துக்கான தலைப்பு பிரச்சனையின் தீவிரத் தன்மையை கணிசமாக குறைப்பதாக இருக்க வேண்டும். தந்தி பேப்பரின் தலைப்புச் செய்திக்காகவா அது விற்பனையாகிறது? மூன்றாம் பக்க கள்ளக்காதல் செய்திதான் பேப்பரின் பலம். அதுபோல விவாதத்தின் தலைப்பும் செய்தியை சுட்டிக் காட்டவேண்டும், ஆனால் அதன் பொருள் எதிர்த்தரப்பை குற்றம் சாட்டுவதாக அமைய வேண்டும்.

உதாரணம். ஆர்.கே நகர் தேர்தல் விதிமீறல்கள் பற்றிய விவாதங்களின் தலைப்பு இப்படி இருக்கலாம்…

ஆர்.கே நகரில் தேர்தல் விதிமீறல் இருப்பதாக எதிர்கட்சிகள் சொல்வது, வழக்கமான அரசியலா அல்லது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டா?

ஆர்.கே நகர் தேர்தலை எதிர்கட்சிகள் புறக்கணிக்கக் காரணம், தோல்வி பயமா அல்லது அக்கறையின்மையா?

2. நீங்கள் ஆய் போக ஆகும் நேரம் பத்து நிமிடமாக இருக்கலாம். ஆனால் அதற்காக உங்கள் வயிறு நாளெல்லாம் உழைக்கிறது. அதுபோலவே காவி சேவைக்கான காலம் ஒன்றிரண்டு மணிநேரமாக இருக்கலாம். ஆனால் அதற்காக நம்  மூளை நாளெல்லாம் உழைக்கவேண்டும். ஆகவே இந்துத்துவாவை ஒரு வேலையை காப்பாற்றிக் கொள்ளும் உத்தியாக கருதாமல் ஒரு வாழ்க்கை நெறியாக கொள்ள வேண்டும். இந்துத்துவா என்றதும் ஏதோ பெரிய ஃபார்முலாவோ என நினைத்து பயப்படவேண்டாம். வலியவனின் காலை நக்கு, எளியவனை எட்டி உதை என்பதுதான் அதன் ஒட்டுமொத்த சாரம்சம். இது தெரியாமல்தான் பச்சமுத்து ஃபவுண்டேஷன் டிவி தொகுப்பாளர்கள் சிலர் மஹா சந்நிதானத்தின் சீற்றத்துக்கு ஆளானார்கள்இத்தகைய தலைப்புக்கள் எதிர்தரப்பை பெருமளவு தடுப்பாட்டம் ஆட வைக்கும். அதன்மூலம் ஆளும் தரப்பின் வேலையை எளிதாக்கலாம்.

உதாரணம் : ஆர்.எஸ்.எஸ்சை ஏன் எதிர்க்கிறீர்கள் எனும் கேள்வியை இப்படி கேட்கலாம்,

சுப்ரீம் கோர்ட்டே ஆர்.எஸ்.எஸ் ஒரு தீவிரவாத இயக்கமல்ல என்று சொல்லிவிட்ட பிறகும் நீங்கள் ஏன் அந்த இயக்கத்தை எதிர்க்கிறீர்கள்? உங்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கையில்லையா? இல்லையேல் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயுமே?

நைஜீரியாவில் தாக்குதல் நடத்தும் போகோ ஹாரம் இயக்கத்தை எதிர்க்காத நீங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை மட்டும் எதிர்ப்பதன் மர்மம் என்ன?

3. ஒருத்தனையும் முழுசாக பேசவிடாதீர்கள். பாஜக ஆட்கள் முழுசாக பேசிவிட்டால் நம் கொள்கைகள் அம்பலமாகி நாறிவிடும். அந்த மேன்ஹோல்கள் முழுசாச திறக்கப்பட்டுவிட்டால் அது எந்த செண்ட்டுக்கும் அடங்கமறுக்கும். எதிர்த்தரப்பை முழுமையாக பேசவிட்டாலும் இதுதான் கதி. அவர்களும் நம் சுயரூபத்தை அம்பலப்படுத்த முனைவார்கள்.

ஒரு விவாதம் என்பது நாம் சொல்ல விரும்பிய கருத்தை மக்களுக்கு கொண்டுசேர்க்கும் வழியேயன்றி அரங்கத்தில் பேசுபவர்கள் கருத்தை கொண்டுசேர்க்கும் நிகழ்ச்சியல்ல..அப்போ பணக்கார முஸ்லீம்கள் கொல்லப்பட்டால் பரவாயில்லையா? இவ்வளவு மனிதாபிமானம் பேசும் நீங்கள் சிரியாவில் ஐ.எஸ் இயக்கம் கிருஸ்தவர்களை கொல்லும்போது எங்கே போயிருந்தீர்கள்?முசாபர் நகர் கலவரத்தில் ஏழை முஸ்லீம்கள் கொல்லப்பட்டு அகதிகளாக விரட்டப்படக் காரணம் என ஒருவர் பேசும்போது இடை மறித்து,

என கேட்கலாம்.

4.  ஓரளவுக்கு தரவுகளையும், நியாயத்தையும் முன்வைத்து பேசுவோருக்கு எதிராக கோமாளித்தனமும் திமிரும் கலந்து பேசும் ஆர்.எஸ்.எஸ் கல்யாணராமன் போன்ற சல்லி கிராக்கிகளை அமர வையுங்கள். இதன்மூலம் ஐன்ஸ்டீனையே தெருச்சண்டைக்காரனாக மாற்றிவிடமுடியும். ஒரு திமிர் பிடித்த முட்டாளுடன் யாராலும் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நடத்த முடியாது.

மேலும் இப்படியான கோளாறான விவாத அமைப்பின் மூலம் நல்ல முறையில் விவாதம் செய்பவர்கள் எனும் பெயரைப் பெற்ற நபர்களின் நன்மதிப்பை கணிசமாக சிதைக்க முடியும். அப்படிப்பட்ட ஆட்கள் பா.ஜ.க கூடாரத்தில் இருக்க மாட்டார்கள் என்பதால் நம் நாக்பூர் நாதாரிகள் சங்கத்துக்கு எந்த சங்கடமும் வராது. ஆரோக்யமான விவாதத்தில் ஒரு தொகுப்பாளரால் தனது மேதாவித்தனத்தை நிரூபிக்க முடியாது, விவாதத்தில் இருக்கும் எல்லோரையும் முட்டாளாக காட்டினால்தான் தொகுப்பாளனால் புத்திசாலியாக முடியும் என்கிறது பாண்டேயிசம்.

5. விவாதம் ஒரு சரியான முடிவை நோக்கி செல்லாமலிருப்பதை உறுதி செய்யுங்கள். விவாதத்தைப் பார்க்கும் பல ஆண்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே (பெண்களுக்கு சீரியலைப் போல). அதனை கெடுக்கக்கூடாது. ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அவசியமில்லை, அதனை பழக்கப்படுத்தினால் போதும். முடிவற்ற விவாதங்கள் எப்போதும் மக்களை பிரச்சனைக்கு பழக்கப்படுத்தும் கருவியாக மட்டுமே இருக்கும். நாய்க்கு எதிர்ப்புணர்வு என்றால் என்னவென்று தெரியாது அதனால்தான் அது கொடுமைக்கார எஜமானனுக்கும் வாலாட்டுகிறது. மக்களையும் அப்படிப்பட்ட நாயாகத்தான் பாண்டேயாக விரும்புபவன் கருத வேண்டும்.

ரங்கராஜ் பாண்டே

மேலும் சரியான விவாதம் ஒரு முடிவை நோக்கி செல்லும். அந்த முடிவு செயலாக மாறும. செயல் புரட்சியை நோக்கிச் செல்லும் வாய்ப்பிருக்கிறது. கலாச்சாரம் பேசும் பாண்டேயிசத்தில் புரட்சி என்பது விலக்கப்பட்ட வார்த்தை என்பதை நினைவில் வையுங்கள்.

6. கூமுட்டைகளையும், அறிவுபூர்வமான விவாதம் எப்படியிருக்கவேண்டும் என்பதை தெரிந்து கொள்ளக் கூட அக்கறையற்ற ஆஃப்பாயில்களையும் ஊக்குவியுங்கள். இதன் மூலம் பா.ஜ.க கூடாரத்து நபர்களின் தாழ்வு மனப்பான்மையை நீக்க முடியும். ஆதாரங்களோடு பேசமுடியா விட்டாலும் நாமும் அறிவுஜீவியாகலாம் எனும் நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும். அதனைக் கொண்டு ஒரிஜினல் அறிவுஜீவிகளுக்கு பழிப்பு காட்ட முடியும்.

7. விவாதத்தில் ஒரு பொதுப் பிரச்சனையை தனிப்பட்ட பிரச்சினையாகவும், தனிப்பட்ட பிரச்சினையை பொதுப் பிரச்சினையாகவும் மாற்ற வேண்டும். இரண்டுக்குமான வெவ்வேறு அளவீடுகள் மக்களிடையே உண்டு. அதனால் பேசுவோரிடையே ஒரு குழப்பம் உருவாகும். அந்த கேப்பில் நான் ஒரு மீடியா டான் என பெயர் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கலாம்.

 • குஜராத் கலவரம் ஒரு பொதுப்பிரச்சினை. அதனை இரண்டு தரப்புக்கு இடையேயான கலவரமாக சித்தரித்து கேள்வி கேளுங்கள்.
 • மாட்டுக்கறி தின்பதும் திங்காததும் ஒருவனது தனிப்பட்ட பிரச்சினை. ஆனால் மாட்டுக்கறி தின்றால் காயப்படப்போகும் கோடிக்கணக்கான இந்துக்களுக்கு என்ன பதில் என கேட்கலாம். இதனால் இந்துன்னா மாட்டுக்கறி தின்பதை எதிர்க்க  வேண்டும் எனும் செய்தி பார்க்கும் வாசகன் மனதில் உருவாகும்.

ரங்கராஜ் பாண்டே

8. விவாதத்தின் இடையே ஆர்.எஸ்.எஸ் ஒரு பண்பாட்டு அமைப்பு, அதற்கும் காந்தி கொலைக்கும் சம்பந்தம் இல்லை, பெரும்பான்மை இந்துக்கள் கோபப்பட்டால் சிறுபான்மையோர் கதி என்னாகும் தெரியுமா, மதம் மாறிய தலித் மக்கள் இசுலாம் கிருஸ்துவ மதங்களில் மோசமாக நடத்தப்படுகிறார்கள் தெரியுமா என்பன போன்ற கருத்துக்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தாலே அவன் பிச்சைக்காரன் என்பது தெரிந்துபோகும். ஆனாலும் அவன் அம்மா தாயே என இறைஞ்சிக் கொண்டே இருக்கிறான், ஏன்? பிழைக்க வேண்டுமானால் உங்கள் இருப்பை உலகத்துக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் தட்டில் தட்சணை விழும்.

9. எதிரணியானாலும் ஆள் பார்த்து பேசவேண்டும். குடியாத்தம் குமார், ஜெயராஜ் போன்ற ஆட்கள் சிக்கினால் அவர்களிடம் தி.மு.க மீதான மொத்த கடுப்பையும் இறக்கலாம். ஆனால் ஸ்டாலினிடம் பேசுகையில் அந்த சாயலே தெரியக்கூடாது.

ஒரு பாண்டேயிச மாணவனுக்கு இந்துத்துவ சிந்தனை ஜட்டி போன்றதென்றால் ஆளும்வர்க்க ஆதரவு வேட்டி போன்றது. வெறும் ஜட்டியோடு நீங்கள் ஒருக்காலும் பணியாற்ற முடியாது. ஆகவே தராதரம் பார்த்து வாலைக்காட்டவோ அல்லது நூலைக் காட்டவோ செய்யலாம்.

10. அனைத்துக்கும் மேலாக கர்மா என்றொன்று இருக்கிறது என்பதை நம்ப வேண்டும். நீங்கள் என்னதான் மல்லாக்கப் படுத்து குட்டிக்கரணம் போட்டாலும் மீடியாவில் பிராமணன் அடையக்கூடிய உயரம் என்றொன்று உண்டு, பிற்படுத்தப்பட்டவன் அடையக்கூடிய உயரம் என்றொன்று உண்டு. அவ்வாறே தாழ்த்தப்பட்டவன் அடையக் கூடிய உயரம் என்றொன்று உண்டு. அந்த விதிப்படி உங்கள் குலத்துக்கு உண்டான உயரத்துக்கு மட்டுமே நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

ரங்கராஜ் பாண்டே

இதற்கு மேலும் உங்கள் மனதில் தொழில் தர்மம்னு ஒன்னு இருக்கில்லையா எனும் எண்ணம் எழுந்தால் உடனடியாக பயிற்சியை விட்டு வெளியேறுங்கள். உங்களுக்கெல்லாம் பாண்டேவின் பெயரை உச்சரிக்கும் தகுதி கூட கிடையாது.

Advertisements

“இரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி?” இல் 6 கருத்துகள் உள்ளன

 1. All are perverted and indecent comments.
  All your articles are full of negative comments and you will never give good ideas. And only poke others.
  All i could infer is, you will give only your nasty comments on anything and anybody and you will never find a good thing about anybody.All human beings have both good and bad nature and only the ratio may be different.
  Next time onwards write something good about any person and post your comments decently not in filthy language.

 2. உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன் அனாமதேய வாசகரே. எனது எல்லா கட்டுரையிலும் எதிர்மறை கருத்து மட்டுமே இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள், ஆக நீங்கள் பல கட்டுரைகளை வாசித்திருப்பது தெரிகிறது நன்றி…

  எதிர்மறையாக எழுத வேண்டிய விடயங்களை எதிர்மறையாகத்தான் எழுத முடியும். ஹிட்லரைப் பற்றியும் இடி அமீனைப்பற்றியும்கூட நேர்மறையாக எழுத முடியும். ஆனால் அது அவசியமற்றது என நான் கருதுகிறேன். அநாகரீகமான விமர்சனங்கள் இருப்பதாக சொல்கிறீர்கள். உங்கள் பார்வையில் எது நாகரீகம் என்பதில் இருந்துதான் அநாகரீகம் எனும் வார்த்தையின் பொருளை கட்டமைக்கிறீர்கள்.

  பார்ப்பனர் வீட்டு தமிழ் உயர்வானது என கருதுவோருக்கு சென்னைத் தமிழ அநாகரீகமானது, ஷிட் எனும் வார்த்தை சரளமாக புழங்கும் ”நாகரீக” மக்கள் மத்தியில் பீ எனும் வார்த்தை அநாகரீகமானது. ஆகவே ”நீங்கள் விரும்பும் வடிவத்திலான” நாகரீக விமர்சனங்களை என்னால் வைக்க முடியாது.

  நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s