நீங்கள் ம.ந.கூவையும் ஆதரிக்கக் கூடாது.. ஏன்?


ஒரு காலத்தில் அனுபவ் நிறுவனம் நாங்கள்தான் நியாயமான நிதிநிறுவனம் என்றது, சந்தேகமிருந்தால் எங்கள் தேக்கு மரங்களை வந்து பாருங்கள் என்று விளம்பரம் செய்தார்கள். அப்போது பல ஓய்வுபெற்ற அதிகாரிகள் அந்த நிறுவனத்தை ஆதரித்து முதலீடு செய்தனர். காரணம் அந்த நிறுவனம் அதற்கு முன்னால் எந்த முறைகேட்டிலும் சிக்கியிருக்கவில்லை (கவனிக்க, செய்திருக்கவில்லை என்று சொல்லவில்லை). இப்படித்தான் பியர்லெஸ் கும்பல் முதல் ஈமுகோழி நிறுவனங்கள் வரை எல்லாமே ஆரம்பகாலத்தில் பலராலும் நம்பத்தக்க வகையில் இயங்கியவையே. இது அரசியலிலும் நடந்திருக்கிறது.. சும்மா குஜராத் கலவரத்தையே பேசிக்கொண்டிருக்காதீர்கள், அவர் வந்தால் வளரும்னு சொல்றாங்கல்ல நம்பித்தான் பாருங்களேன் என வக்காலத்து வாங்கினார்கள் மேல்தட்டு மக்கள்.

இப்போது அந்த கும்பலில் இருந்து சிலர் விலகி ம.ந.கூவைத்தான் ஆதரித்துப் பாருங்களேன் என பரிந்துரை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அதிமுக மோசம், திமுக திருந்துகிற வழியைக் காணோம். ஆகவே இம்முறை மக்கள் நல கூட்டணியை ஆதரித்து திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பது அவர்களின் யோசனை. அந்த கூட்டணியின் கட்சிகள் இதுவரை பெரிய கொள்ளையில் ஈடுபடவில்லை என்பது அவர்களின் வாதம். இருக்கும் மோசமான வாய்ப்புக்களில் சிறந்த வாய்ப்பு இதுதான் என்றுதான் தனது ஆதரவு வாதத்தை ஆரம்பிக்கிறார் பத்ரி.

// நம்பிக்கை, தனிநபர் நாணயம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், வைகோ ஆகியோரை நான் நம்பத் தயாராக இருக்கிறேன். //

நம்பிக்கை நாணயத்தின் அடிப்படையில் இந்த நால்வர் பார்ட்னர்ஷிப்பை ஆதரிப்பதாக சொல்லியிருக்கிறார் பத்ரி. கைராசி எனும் வார்த்தையையும் சேர்த்திருக்கலாம், வைகோவின் ஜாதகம் குறுக்கே வந்து இடையூறு செய்துவிட்டது போல. எந்த அடிப்படையில் நம்புவது எனும் கேள்விகளெல்லாம் எழுப்பக்கூடாது, மற்றவர்கள் மோசம் என்று சொல்லியாகிவிட்டதில்லையா.. ஆகவே இவர்களை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். காரணம் எதுவாக இருப்பினும், இவர்களது விருப்பத்தை ஒரு மாற்று சிந்தனையாக ஏற்றுக்கொண்டாலும், அது விமர்சனத்துக்கு உரியதாகவே இருக்கும். காரணம் இதுவரை எல்லா தேர்தல்களிலும் செய்த அதே தவறின் அடிப்படையிலேயே இந்த அருள்வாக்குகளும் சொல்லப்படுகின்றன.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் நம்பகத்தன்மையை இழந்துவிட்டன. அந்த தலைவர்களோடு ஒப்பிட்டால் இந்த நால்வரும் (வைகோ, முத்தரசன், ஜி.ரா, திருமா). நம்பகமானவர்கள் என்பது இவர்கள் கருத்து இல்லை நம்பிக்கை. இந்த நால்வரது நம்பகத்தைமைக்கு என்ன ஆதாரம்?

எந்த அடிப்படையும் இல்லாமல் ஒருநாளில் தன் நிலையை மாற்றிக்கொண்டு கூட்டணி மாறிய தொடர் வரலாறு வைகோவுக்கு உண்டு. 2004க்கு பிறகு சீந்துவாரில்லாமல் இருந்த தமிழக பாஜகவை தோளில் சுமந்தவர் வைகோ. மோடி ஆட்சியைப் பிடித்த மூன்று நாளில் உறவை வெட்டிக்கொண்டால் வளர்த்த பாவம் போய்விடுமா? இப்போது அவரை ஆதரிக்கும் பலர் அப்போது பாஜக எனும் அபாயத்தை வாய்வலிக்க கத்திக்கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் உதிர்ந்த ரோமத்தைப்போல தள்ளிவிட்டுவிட்டு மோடியை பெரியாரோடு ஒப்பிட்டவர் வைகோ. இவர் ஓரிரவில் தன் நிலையை மாற்றிக்கொள்ள மாட்டர் என்பதற்கான சாத்தியம் எங்காவது இருக்கிறதா?

தமிழகமே வைகுண்டராசனின் மணல் கொள்ளைக்கு எதிரான மனநிலையில் இருந்தபோது அவரை அம்பலப்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கு எதிராக போராடியது மார்க்சிஸ்ட் கட்சி. அதற்காக போராட்ட நிதி 10 லட்சம் வைகுண்டராசனால் தரப்பட்டது என சவுக்கில் செய்தி வெளியானது. ஆறு மாதங்களுக்கு முன்புவரை திராவிட ஆட்சிகள் என மொத்தமாக குறைசொல்லி பேசாத அருணன் இப்போது திடீர் ஆசீர்வாதம் பெற்றவராக மாறி திராவிட ஆட்சிகளால் தமிழகம் சீரழிந்ததாக கொந்தளிக்கிறார், இவரது கட்சிதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயாவை பிரதமராக்கக்கூட தயாராய் இருந்தது. ஜெயாவை அதிமுககாரர்களே மதச்சார்பற்றவர் என சொன்னதில்லை. ஆனால் ஜெயாவின் பாஜக பாசம் தெரிந்திருந்தும் அவரை மதச்சார்பற்றவர் என வருடக்கணக்கில் கூவியது மா.கம்யூ கட்சி. இவையெல்லாம் தேர்தல் கூட்டணி நிர்பந்தங்களுக்குள் அடங்காத சமரசங்கள்.

இ.கம்யூ கட்சியைக் பற்றி பெரிதாக குறிப்பிட வேண்டியதில்லை. தா.பாவின் கட்டுப்பாட்டில் உள்ள கட்சி எனும் ஒற்றை வாக்கியமே அதன் நம்பகத்தன்மைக்கு வேட்டு வைக்க போதுமானது. இ.கம்யூவின் தலைமைக்கு போட்டி வந்தபோது தா.பாவின் தரப்பு எல்லா தகிடுதத்தமும் செய்துதான் மகேந்திரனை தோற்கடித்தது. தா.பாவின் செல்வாக்கு தவறாக பயன்படுத்தப்பட்டுதான் அவர் மகன் சென்னை பல்கலைக்கழக பதிவாளராகியிருக்கிறார். ம.ந.கூ உருவான பிறகு நடந்த டி.வி விவாதத்தில் தி.முக எங்கள் கொள்கைவிரோதி என ஆவேசமாக அறிவிக்கிறார் முத்தரசன், அதிமுக குறித்து சத்தமே எழவில்லை. நம்பகமான கூட்டணியின் 25% பங்குதாரரது லட்சணம் இது.

இவர்கள் ஊழலை ஒழித்துவிடுவார்கள் என்பதைவிட பெரிய மூட நம்பிக்கை இருக்கவே முடியாது. எல்லா கட்சிகளும் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில் ஊழல் செய்துகொண்டிருக்கின்றன. மதிமுகவின் செஞ்சி ராமச்சந்திரன் மத்திய அமைச்சராக இருக்கையில் அவரது தனிச்செயலர் லஞ்சம் வாங்கி சிக்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் கோவிந்தசாமியின் சொத்துக்குவிப்பை அக்கட்சி சகித்துக்கொண்டுதான் இருந்தது, அவராகவே திமுகவுக்கு போகும்வரை இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பினரயி விஜயன் (கேரள மார்க்சிஸ்ட் கட்சி) மீது ஊழல் குற்றசாட்டுக்கள் அவரது கட்சியினராலேயே வைக்கப்படுகிறது. விடுதலை சிறுத்தை கட்சியின் வெற்றிச்செல்வன் படுகொலையின் பிண்ணனி அவரிடம் மிகையாக குவிந்திருந்த பணம்தான்.

கட்சி சொத்தை அடிமாட்டு விலைக்கு விற்ற குற்றச்சாட்டு தா.பாண்டியன் மீது இருக்கிறது. அக்கட்சியின் மன்னார்குடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவபுண்ணியத்தின் சொத்து மதிப்பு கணிசமாக கூடியிருகிறது. அடிமட்ட கட்சியமைப்பில் உள்ள கவுன்சிலர்கள் கட்சி பாரபட்சமின்றி ஊழல் செய்கிறார்கள், அதில் எல்லா கட்சிகளும் சிண்டிகேட் போட்டு ஊழல் செய்கின்றன. கட்சிக்கு அப்பாற்பட்டு அரசின் எல்லா அமைப்புக்களும் ஊழலில் புரையோடிப்போயிருக்கின்றன. நேர்மையான தாசில்தார், கலெக்டர், பொறியாளர் என அரசுத்துறையின் நேர்மையாளர்களை பட்டியலிட்டால் அது ஒரு ஏ4 பேப்பரை நிறைக்கக்கூட காணாது.

ஊழலானது இந்திய முதலாளித்து அரசமைப்பின் ஒரு தவிர்க்க இயலாத அங்கம். ஒருவேளை ம.ந.கூவில் யாரேனும் நேர்மையாளர்கள் இருந்தாலும் அவர்களால் தங்களை மட்டும் லஞ்சத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள முடியும். நேர்மையான அரசியல்வாதி எனும் பட்டியலில் மிச்சமிருப்பவராக கருதப்படும் நல்லக்கண்ணு தா.பாவின் ஊழலை சகித்துக்கொண்டுதான் கட்சியில் இருக்கிறார். இந்தியாவின் மிக மோசமான ஊழல்கள் தனக்கென எந்த சொத்தையும் சேர்த்துக்கொள்ளாத மன்மோகன் ஆட்சியில்தான் நடந்தது. நம் அரசு எந்திரம் மக்களுக்கு எதையும் செய்ய முடியாத ஒரு பிணம், தேர்தல் என்பது அதன் நாற்றம் வெளியே வராமல் இருக்க தெளிக்கப்படும் வாசனை திரவியம். ம.ந.கூ ஒரு புது செண்ட் பாட்டில் அவ்வளவுதான். அதன் வாசனை எப்படியிருக்கும் என்பது குறித்த ஹேஷ்யங்கள்தான் இப்போது திடீர் நடுநிலையாளர்களால் சொல்லப்படுவது.

அடுத்ததாக திமுக ஒரு ஈழதுரோக கட்சி எனும் பிரச்சாரம். காங்கிரசுடன் கைகோத்ததால் இனி இப்பிரச்சாரம் பெரிதாகும். ஆனால் ஈழவிவகாரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் அதிலுள்ள எல்லா கட்சிகளும் குற்றவாளிகளே, தமிழ்தேசிய இயக்கங்கள் உட்பட. 1991 -96 ல் தமிழக ஈழ ஆதரவாளர்கள் மீது கொடூர யுத்தத்தை தொடுத்தவர் ஜெயா. அவற்றை தந்திரமாக மறைத்துவிட்டு 2009ல் மக்கள் போராட்டங்களை ஜெயா ஆதரவு எனும் தளத்துக்கு கொண்டு சென்றன தமிழ்தேசிய இயக்கங்கள். புலிகளின் குறிப்பிடத்தக்க நகர்வாக இருந்திருக்க வேண்டிய யாழ்பாண முற்றுகையை அச்சுறுத்தி கைவிட வைத்தார் வாஜ்பாய். அதனை கபடத்தனமாக மறைத்து வாய்பாஜை ஈழ ஆதரவாளராக சித்தரித்து மோடிக்கு வால்பிடித்தவர் வைகோ. வைகோ போன்ற ஈழ ஆதரவு நபர்கள்தான் புலிகளின் சரணடையும் திட்டத்தை ஒத்திவைக்க அறிவுறுத்தினார்கள் .(பாஜக ஆட்சிக்கு வந்ததும் போர் முடிவுக்கு வரும் என நம்பிக்கையூட்டி) என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது.

முத்துக்குமார் உடலை எடுக்கவிடாமல் மாணவர்கள் தடுத்தபோதும் அவர் உடலை எரியூட்டி வைத்து இந்திய அரசுக்கு சேவகம் செய்தவர்கள் தா.பா உள்ளிட்டோர். ஈழம் குறித்த கருத்து சுப்ரமணிய சாமிக்கும், மார்க்சிஸ்ட் டி.கே.ரங்கராஜுக்கும் ஏறத்தாழ ஒன்றுதான். பிரபாகரன் வருவார் வருவார் என தொடர் பிரச்சாரம் செய்த எல்லா தமிழ்தேசிய குழுக்களும் மெல்ல அந்த வாக்கியங்களை தங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டன. ஈழ துரோகிகள் பட்டியலில் நம் எல்லோருக்கும் இடம் உண்டு. வெற்று உசுப்பேற்றலைத்தவிர நாம் அவர்களுக்கு எதையும் செய்யவில்லை. உள்ளூரில் உள்ள ஈழ அகதிகளை பிச்சைக்காரர்களைப் போல நடத்துகிறது இந்தியா. கியூ பிரான்ச் எனும் போலீஸ்துறை அவர்களை கிரிமினல்களாகவே நடத்துகிறது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல்தான் நாம் பிரபாகரன் பஜனையை தொடர்ந்தோம். இப்போது அவரை வீரவணக்கத்துக்குகூட நாதியற்றவராக்கிவிட்டு ஒதுங்கிக்கொண்டுவிட்டோம்.

ஈழம் எனும் கனவை அழித்ததில் காங்கிரசின் தனிப்பட்ட விருப்பமும் அதில் திமுகவின் பங்கும் இருந்ததில் எனக்கு எள்முனையளவும் கருத்து வேறுபாடில்லை. ஆனால் அதனை சாக்கிட்டு ம.ந.கூவை ஆதரிப்பது அயோக்கியத்தனம், அடிமுட்டாள்தனம். அவர்கள் எதிரில் நின்று ஒழித்தார்கள் என்றால் வைகோ, தா.பா இன்னபிற தமிழ்தேச அமைப்புக்கள் கூட இருந்து ஒழித்தார்கள். (ஈழ அழிப்பில் உள்ள சர்வதேச அரசியல் இன்னுமொரு விவாதம், அதனை விவரிக்க என் அறிவு போதுமானதல்ல).

ஒரு மாநாடு நடத்தவே மாதக்கணக்கில் உண்டியல் குலுக்குகிறது மகஇக போன்ற அமைப்புக்கள். ஆனால் மஞ்சள் நிற போஸ்டருக்கு மட்டும் கோடிக்கணக்கில் கொட்டி பிரச்சாரம் செய்ய முடிகிறது அன்புமணியால். சீமானின் நிதி ஆதாரம் என்ன? அவர் எப்படி எல்லா தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிக்கிறார்? ஜெயிக்க வழியே இல்லாதவர்களே பணத்தை இறைப்பதன் அடிப்படை என்ன? இந்திய அரசியலில் பணம் எத்தகைய செல்வாக்கு செலுத்துகிறது என்பதற்கான ஒரு பருக்கை உதாரனம்தான் இவை.

சகாயத்துக்கு ஒத்துழைக்க மறுத்தது ஓரிரு அரசு ஊழியர்கள் மட்டுமல்ல, டைப்பிஸ்ட் முதல் கலெக்டர் வரை அரசு எந்திரத்தின் ஒவ்வொரு அங்குலமும் சேர்ந்தே அவரை சுடுகாட்டில் காவல் இருக்க வைத்தன. அவர்கள் தங்கள் சுயவிருப்பத்தோடும்தான் அதனை செய்திருப்பார்கள். ஊழல் அரசின் எல்லா அங்களிலும் பிரிக்க இயலாதவாறு கலந்திருக்கிறது. குரூப் 2வில் தேறுபவர்களின் விருப்பத் தெரிவு பத்திரப்பதிவுத்துறை. காரணம் அதுதான் பணம் கொட்டும் துறை. லஞ்சம் வாங்குபன் மீதான அசூயை சமூகத்தில் பலரிடம் இருந்தும் விடைபெற்றுவிட்டது.

அதனை மநகூ மாதிரி ஒரு புதிய கூட்டணியால் சரி செய்ய முடியும் என என நினைப்பதைவிட ஆபத்தான பாமரத்தன் வேறொன்று இருக்க முடியாது. ஊழல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என ம.நகூ முழங்கியிருக்கிறது. அது சட்டபூர்வமாகவே இனி சாத்தியமில்லை, ஜெயலலிதா அதனை போன வருடமே நிரூபித்துவிட்டார். ஏன் அவ்வளவு தூரம் போகவேண்டும்… கிரானைட் கொள்ளையர் தளி ராமச்சந்திரனுக்கு இந்த முறை சீட் இல்லை என வைகோ கூட்டணி சொல்லிப் பார்க்கட்டும், ம.ந.கூவை தாபாவே சிதைத்துவிடுவார். இக்கூட்டணியின் முகமான நல்லக்கண்ணு விஜயகாந்த் பற்றிய கேள்வியை கவனமாக தவிர்க்கிறார். இருக்கும் ஒற்றை யோக்கியரும் சமரசத்துக்கு தயாராக உள்ள கூட்டணி ஊழலை ஒழிக்கும் நல்லாட்சி தரும் என்றெல்லாம் நம்புவது… விடுங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை.

யார் எவ்வளவு வேண்டுமாலும் சொத்து சேர்க்கலாம் என அனுமதித்துவிட்டு நன்னடத்தையை ஒரு ஆப்ஷனாக நம் அமைப்பு வைத்திருக்கிறது. இது இன்னும் தீவிரமான சீரழிவை நோக்கியே செல்லும். எட்டாயிரம் கோடி ரூபாய் ராணுவ முகாம்களின் பாதுகாப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டதாக செய்தி வந்த அன்றுதான் 20 ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு பதான்கோட் முகாமுக்குள் எல்லோரும் அனுமதிக்கப்படுகிறார்கள் எனும் செய்தி வெளியானது. இதுதான் கள யதார்த்தம், கண்காணிப்புக்கு கோடிகள் செலவானால் ஊழல் இருபது ரூபாயில் வென்றுவிடுகிறது.

அரசு நிர்வாகமும், தேர்தல் நடைமுறைகளும் முற்றாக ஊழல்மயமாகிவிட்டன. முதலாளித்துவ ஜனநாயகம் தன்னை எல்லா வழிகளிலும் அம்பலப்படுத்திக் கொண்டுவிட்டது. இனி அது போலீசையும் ராணுவத்தையும் நம்பியே உயிர்வாழும் நிலைக்கு வந்திருக்கிறது. அந்த சூழலை தள்ளிப்போடவே ம.ந.கூ போன்ற அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு ஆராதிக்கப்படுகின்றன. சாராயத்தின் தீமைகளில் இருந்து விடுபட குடியை விடுவதுதான் வழி. சுலபமாய் இருக்கிறது என பிராண்டை மாற்றுவது கூமுட்டைத்தனம், அறிவுஜீவிகள் பரிந்துரைத்தாலும் அது கூமுட்டைத்தனம்தான்.

Advertisements

“நீங்கள் ம.ந.கூவையும் ஆதரிக்கக் கூடாது.. ஏன்?” இல் 14 கருத்துகள் உள்ளன

 1. உங்களது முந்திய கட்டுரையில் கருணாநிதியை ஆதரித்து எழுதியிருந்தீர்கள். இக்கட்டுரையில் ம.ந.கூவை ஆதரிக்க வேண்டாம் என்றிருக்கிறீர்கள் ?
  சரி. அப்போது யாரைத் தான் ஆதரிப்பது ? அதைப் பற்றிய ஒரு வழிகாட்டுதல், எதிர்காலப் பார்வையை ஏன் நீங்கள் வைக்கவில்லை ?

 2. பத்ரி தான் ஆதரிப்பதை குறிப்பிட்டுள்ளார். ஆனால் நீங்கள் யாரை ஆதரிக்க வேண்டுமென்று கடைசி வரை உங்கள் கருத்தை சொல்லவேயில்லையே.

 3. //தமிழை எழுதிப்பழகுவதற்காக ஒரு வலைப்பூவை வைத்திருக்கிறேன் என்பது மட்டும்தான் என்னைப்பற்றி இப்போதைக்கு சொல்லிக்கொள்ளும்படியான தகவல்//

 4. பத்ரியின் திடீர் பாசம் ம ந கூட்டணியின் பால் தற்சமயம் நிலை கொண்டிருப்பதன் காரணம் என்ன என்பது புதிரல்ல. அவரது பதிவில் எனது பின்னூட்டத்தில் விரிவாக அதுபற்றி விமர்சித்திருக்கிறேன்.பொருத்தம் கருதி ஒரு பகுதியை இங்கு பதிகிறேன்.

  //”ம ந கூட்டணியின் கொள்கைகளையும் அவர்கள் வெளியிட்டிருக்கின்ற குறைந்த பட்ச செயல் திட்டத்தையும் விவாதித்து அதில் எதுவெல்லாம் தனக்கு உடன்பாடு என்று அறிவிக்காமலே அல்லது பெரும்பகுதி ஏற்கிறேன் என்று பொத்தாம் பொதுவாக கூட அறிவிக்காமலே அதன் 4 தலைவர்கள் வரை ஒரு நம்பிக்கை இருப்பதாக சொல்வது பத்ரி போன்ற அறிவு ஜீவிகளுக்கு பொருத்தமாக இருக்கிறதா? இந்த 4 பேர் மீது நம்பிக்கை இருப்பதாக சொல்வதென்றால் ஏற்கனவே பலரும் ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த் என ஆளாளுக்கு நம்பி தொலைக்கின்ற பாமரத்தனமல்லவா? அந்த பாமரத்தனத்தையா பத்ரி போன்ற அறிவு ஜீவிகளும் முன்மொழிவது? ஆக ம ந கூட்டணியின் குறைந்த பட்ச செயல் திட்டத்தையும் ஆதரிக்காமல் அவர்களை மனசார புகழ்வதற்கும் ஒத்திசைவு இல்லாத நிலையில் ஒரு பிஜேபி, ஆதரவாளராகவும், பிறப்பால் ‘’உயர்’’ சாதி இந்துவாகவும் இருக்கும் ஒரு அறிவு ஜீவி வழங்குகின்ற இந்த ஆதரவு என்பது திமுக எனும் அரைகுறையாகவேனும் திராவிடம் பேசும் கட்சியை ஒழிக்கும் உத்தியாகவே பார்க்கப்படும்.இது ஆரிய சூழ்ச்சி என்று சொன்னால் நம்புவதற்கு முகாந்திரம் அமைந்து விடுகிறது”//

  பொதுவாக மக்கள் கம்யூனிஸ்டுகளை அவர்கள் ஓட்டு பொறுக்கும் இடதா, வலதா, மகஇக போன்ற ஓட்டரசியலை நம்பாத இயக்கமா என்கிற வேறுபாடுகள் அதிகம் தெரியாமலே மதிக்கிறார்கள்.இங்கே நீங்கள் குறிப்பிடும் தளி ராமச்சந்திரனும் கோவிந்தசாமியும் இன்னும் கணிசமான எண்ணிக்கையில் அதிகரிக்காத நிலையில் வெகுசனங்களின் பிரச்சினைகளில் பங்கெடுக்கின்ற அணிகளை கொண்டிருக்கின்ற கம்யுனிஸ்டுகளை பத்ரி பெயர் சொல்லி ஆதரிக்க முடியும்.பத்ரி வரித்துக் கொண்டிருக்கின்ற பிம்பத்திற்கு அது பொருத்தமாக இருந்திருக்கும்.ஆனால் பத்ரி கொள்கை நடைமுறை என்று எதனையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமலே 4 முகத்தையும் அதன் நம்பகத்தன்மையையும் மட்டுமே ஒரு ஆட்சி தேர்வுக்கு போதுமானதாக முன்வைக்கிறார்.(உங்களது நம்பிக்கை, நாணயம், கைராசி என நகைக்கடை விளம்பர வரிசை மிகவும் ரசித்தேன்)அவருடைய நோக்கம் ஒரு அரைகுறை திராவிட கட்சியை ஒழிக்க ஒரு அரைகுறை கம்யூனிஸ்ட் கட்சியை அது தோற்றுப் போகும் என்கிற நம்பிக்கையில் முன்னிறுத்த வேண்டும்.ஆனால் அந்த கட்சியை, அதன் அமைப்பு முறையை, அது செல்வாக்கு செலுத்தி வெளியிட்டிருக்கும் செயல் திட்டத்தை என்று எதையுமே ஒரு வார்த்தையும் புகழ்ந்து விடக்கூடாது. ஏனென்றால் ஒரு போலி கம்யூனிஸத்தை வாயளவில் கூட பாராட்ட கூடாது என்கிற வைராக்கியம் தான்.முகங்களின் அரசியலாக இருந்தால் தான் பெரியார் மண்ணில் பிஜெபியின் காவி சிந்தனையையை பின்னிறுத்தி மோடியின் முகத்தை அல்லது வேறு முகத்தைசொல்லி விற்க முடியும்.

  உங்களது எழுத்து நடை என்னை வசீகரிக்கிறது.பாராட்டுக்கள்!!

 5. // SPrabhakaran சொல்லுகின்றார்:
  11:58 முப இல் பிப்ரவரி 16, 2016 (மேம்படுத்து)
  உங்களது முந்திய கட்டுரையில் கருணாநிதியை ஆதரித்து எழுதியிருந்தீர்கள். இக்கட்டுரையில் ம.ந.கூவை ஆதரிக்க வேண்டாம் என்றிருக்கிறீர்கள் ?
  சரி. அப்போது யாரைத் தான் ஆதரிப்பது ? அதைப் பற்றிய ஒரு வழிகாட்டுதல், எதிர்காலப் பார்வையை ஏன் நீங்கள் வைக்கவில்லை ? //

  https://villavan.wordpress.com/2014/04/29/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87/

 6. //பிரபாகரன் வருவார் வருவார் என தொடர் பிரச்சாரம் செய்த எல்லா தமிழ்தேசிய குழுக்களும் மெல்ல அந்த வாக்கியங்களை தங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டன.//
  அப்படியல்ல.
  பிரபாகரன் உயிரோடு உள்ளார் மீண்டும் ஈழப்போர் தொடங்கும்: பழ.நெடுமாறன் -19/02/2016
  http://www.vikatan.com/news/tamilnadu/59390-prabhakaran-alive-again-start-eelam-war-nedumaran.art
  ஸோ வில்லவவனின் ஈழம் எனும் கனவு நிறைவேற போகிறது. ஈழம் என்பது ஸ்டாலின் லெனின் கொள்கைபடி பிரபாகரன் உருவாக்கும் ஒரு நாடாக்கும்!

 7. நாட்டாண்மை வில்லவன் வேகநரி உங்கள் கனவு நாட்டை உங்கள் நாட்டில் தாராளமாக உருவாக்கி கொள்ளுங்கள். ஈழம் கனவு என்று உங்களது கனவை எங்கள் மீது திணித்து எங்களை பலியிடாதீர்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s