ஜெமோ – இளிச்சவாயனா பார்த்து அடிக்கிறதுக்கு பேருதாண்டா இந்துத்துவா!


ஃபேஸ்புக் மொக்கையாக போகும்போதோ அல்லது தனது பிரபல்யம் மொக்கையடிக்கும்போதோ ஜெமோஜிக்கு உள்ளே இருக்கும் அன்னியன் அவதாரமெடுத்துவிடுவான். எப்படி சங்கரின் அன்னியன் பெரிய தலைகளை விட்டுவிட்டு பெட்டி கேஸ்களை போட்டுத்தள்ளினாரே அவ்வாறே ஜெமோவும் எலைட் குடிகளுக்கு ரெமோவாகவும் சாதாரண மக்களுக்கு அன்னியனாகவும் காட்சியளிப்பார். காட்டை அழித்து யானைகள் சாவது அவரது பிரச்சினையாக இருக்காது, ஆனால் அந்த கோபத்தின் பலனை விட்டுத்தரவும் அவரது மனம் ஒப்பாது. ஆகவே காட்டில் குடித்துவிட்டு பாட்டிலை போட்டுவைக்கும் மக்களை ”மட்டும்” வில்லனாக்கிவிட்டு தனது புரட்சி முகத்தையும் பெரிய இடத்து விசுவாச முகத்தையும் அவர் காபந்து செய்துகொள்வார்.

வங்கி ஊழியர் ஒருவர் பற்றிய அவரது பதிவு (https://thetimestamil.com/2016/10/26/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/) அதற்கான இன்னொரு உதாரணம்.

அவர் சொல்வது போல அரசுப் பணியாளர்கள் அலட்சியமாகவும் பொறுப்பின்றியும் நடந்துகொள்கிறார்களா… ,முழுக்க ஆம் என்றோ முழுக்க இல்லை என்றோ நாம் மறுக்க முடியாது. ஆனால் இவ்விடயத்தில் கட்டமைக்கப்படும் பொதுபுத்தியானது குற்றத்தின் அடுக்கில் தமக்கு கீழேயுள்ள மனிதர்கள் மீது மட்டும் ஆத்திரம் கொள்ளும்படியாக இருக்கிறது. ஒரே பிரச்சினைக்காக ஊழியரிடம் அடாவடியாகவும் மேலாளரிடம் பவ்யமாகவும் உரையாடும் இந்திய இயல்பு ஜெமோ மாதிரியான கருத்து சொல்லிகள் மூலமே உற்பத்தியாகிறதோ என சந்தேகமாக இருக்கிறது.

முதலில் பரவலாக உள்ள இந்த அரசு ஊழியர் மீதான வெறுப்பு வெறுமனே அவர்களது பணித் திறனை அடிப்படையாக கொண்டு உருவாவதில்லை. பி.எஸ்.என்.எல் இணைப்பில் சில பிரச்சினைகள் வந்தால் ஏனைய தனியார் சேவைகளில் வேறு வகையான பிரச்சினைகள் எழுகின்றன. தாமதம், அலட்சியம், எடுத்தெறிந்து பேசுவது ஆகிய சிக்கல்கள் தனியார் வங்கிகளிலும் இருக்கின்றன. எல்லாவற்றையும் தாண்டி வீட்டுக்கு அடியாளை அனுப்பும் வங்கிகளும் இருக்கின்றன. இவற்றை எல்லா இடங்களிலும் ஊழியர்கள்தான் செய்கிறார்கள். ஆனால் சமூகத்தில் நிலவும் இந்த அரசாங்கத்துறை ஊழியர்கள் மீதான வெறுப்பு அடிப்படையில் பொறாமையில் இருந்து துவங்குகிறது. நிச்சயமற்ற மற்றும் போதிய வருவாய் இல்லாமல் உழலும் பெரும்பான்மை மக்களுக்கு ஓரளவுக்கு (ஆம், இப்போது ஓரளவுக்குத்தான்) பாதுகாப்பாகவும் வசதியாக வாழவும் வாய்ப்புள்ள அரசு ஊழியர்கள் மீது பொறாமை வருவது இயல்பே.

இன்னொன்று நாம் மிக எளிய இலக்குகளையே முதலில் குறிவைப்போம். ரேஷன்கடை ஊழலில் விற்பனை செய்யும் ஊழியரின் பங்கு மிகவும் குறைவானது மற்றும் இறுதி நிலையில் இருப்பது. ஆனால் பரவலான புரிதல் ரேஷன் ஊழல் என்பது கடை விற்பனையாளருடன் தொடர்புடையது அவ்வளவே. எந்த மோட்டலில் பேருந்து நிற்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது போக்குவரத்து நிறுவன உயரதிகாரிகள்தான் ஆனால் மட்டமான மோட்டல்களில் பேருந்து நிறுத்தப்படுவதன் கோபம் ஓட்டுனர் நடத்துனரைத் தாண்டி நகர்வதில்லை. மின்சார வாரியம், தொலைத்தொடர்புத்துறை போன்ற நிறுவனங்களில் நடக்கும் ஊழல் பல்லாயிரம் கோடிகள், அதற்கு இடைஞ்சல் வராமல் இருக்கவே கீழ்மட்ட ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை அவர்கள் அனுமதிக்கிறார்கள். மக்களின் கோபம் கீழ்மட்டத்துடன் கரைந்துபோவதால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்த இயல்பை தக்கவைக்கவே ஜெமோ போன்ற பார்ப்பனீய அடிவருடிகள் இத்தகையை கருத்துக்களை பரப்புகிறார்கள். பார்ப்பன ஊடகங்கள் இந்த மனோநிலையை உருவாக்குகிற மற்றும் வலுப்படுத்துகிற வடிவில் பல்லாண்டுகாலமாக கார்ட்டூன்களையும் நகைச்சுவை துணுக்குகளையும் வெளியிட்டு வருகின்றன.

பொறாமை ஒரு சாதாரண மனித இயல்பு, அது புரிந்துகொள்ளக்கூடியது மற்றும் புரியவைத்தால் சரி செய்யக்கூடியது. ஆனால் இன்னொரு தரப்பு வெறுப்பு சரிசெய்ய இயலாதது, ஆபத்தானது. ஒரு காலத்தில் எல்லா அரசுப்பணிகளையும் கையில் வைத்திருந்த பார்ப்பன மற்றும் அதையொத்த சில வர்க மக்கள் தங்கள் இடத்தை தமக்கு சேவகம் செய்ய பணிக்கப்பட்ட மக்கள் கைப்பற்றும்போது உருவாகும் வன்மம்தான் ஜெமோ வகையறா வெளிப்படுத்துவது. புதிய கல்விக்கொள்கை பற்றிய விவாதம் ஒன்றில் பாஜக ராகவன் சொன்னார் “யார் எந்த வேலையையும் செய்யலாம்தான், ஆனால் தச்சர் போன்ற வேலைகளை நம்மால் செய்ய முடியுமா… (அந்த வலுவும் நேர்த்தியும் நமக்கு வராது எனும் பொருளில் குறிப்பிடுகிறார்)” இதில் உள்ள மறைபொருள் கீழ்மட்டத்தில் இருப்பவனால் எங்கள் வசம் உள்ள வேலையை திறம்பட செய்ய இயலாது என்பதே.

ஜெமோ தண்டிக்க விரும்பிய அந்த பெண் ஊழியரின் மோசமான உடல்நலம் பற்றிய விவரங்கள் இணையத்தில் பரவலாகிவிட்டது. ஆனால் அதையும் தாண்டி இதில் நாம் சில விவரங்களை பார்க்க வேண்டியிருக்கிறது. வாடிக்கையாளராக நமக்கு எளிதில் தெரிவது ஒரு காசாளரின் நடவடிக்கைதான். அந்த கூண்டுக்கு உள்ளே இருப்பவரின் பிரச்சினைகள் வேறு.

சில ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததைக் காட்டிலும் பெரும் அளவிலான பணம் வங்கிகளில் புழங்குகிறது. நாம் பத்தாயிரம் ரூபாயையே பலமுறை எண்ணித்தான் கொடுக்கிறோம். அங்கே ஒருவர் லட்சங்களை கையாளும்போது அது விவரிக்க முடியாத ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும். கொடுப்பதும் வாங்குவதுமான வேலை இன்னும் கடினமானது.

மனிதர்களை கையாள்வது, மற்றும் கணக்குகளை கையாள்வது இரண்டும் முற்றிலும் வேறான திறமைகள். காசாளர்கள் இரண்டையும் சரியாக செய்தாகவேண்டும். வெளியில் நிற்பவரை நம்பவும் வேண்டும் சந்தேகிக்கவும் வேண்டும்.

நாள் முடிவில் பணம் குறைந்தாலும் கூடினாலும் ஒரு காசாளருக்கு சிக்கல்தான். குறைந்தால் அதனை கையில் இருந்து கொடுக்கவேண்டும், பத்தாயிரத்துக்குமேல் பணம் குறைந்தால் அது கிரிமினல் குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு சிறிய கவனப்பிசகுகூட பத்தாயிரத்தை விழுங்கவல்லது.

4 மணிவரையான பரிமாற்றங்களை கணக்கு பார்த்து கையிருப்பை அவர் 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். 5 மணிக்கு மேல் கவுண்டரில் திருடப்பட்டாலோ அல்லது கொள்ளைபோனாலோ காப்பீடு கிடைக்காது. (நாலு மணின்னா 4 மணிக்கே நிறுத்திருவீங்களா என அறச்சீற்றம் கொள்வோருக்காக)

கள்ள நோட்டுக்கள், கிழிந்த மற்றும் அழுக்கான நோட்டுக்களின் ரிஸ்க் பெருமளவு காசாளரை சேரும்.

பல அரசு வங்கிகளின் இணைய சேவை நுட்பங்கள் அரதப்பழசானவை. ஐஓபி வங்கி போன வருடம்வரை DOS அடிப்படையிலான செயலியையே பயன்படுத்தியது. சர்வர் பிரச்சினை, தொடர்பு அறுபடுவது ஆகியவை அடிக்கடி ஏற்படும் இதையும் காசாளர் கையாள வேண்டும்.

வங்கியில் கையிருப்புக்கு ஒரு வரம்பு உண்டு, அதனை கணக்கிட்டு மறுநாளின் தேவையை உத்தேசித்து திட்டமிடுவதும் காசாளரின் பணியே. பெரிய பரிமாற்றங்களுக்கு வாடிக்கையாளர்கள் (நிறுவனங்கள்) முன்கூட்டியே பேசி இதனை திட்டமிடுவார்கள். ஆக நம்மை பதறவைக்கும் காரணியான பணம் அவர்கள் சிந்தனையை எப்போதும் சூழ்ந்திருக்கிறது என்பதை நினைவில் வைக்கவும்.

ஜெமோவுக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்பது எனது விருப்பமல்ல, அவரது கருத்து ஒரு தூண்டுதல் மட்டுமே. அரைகுறை புரிதலால் உருவாகும் நமது பொதுக்கருத்தும் சமூகக்கோபமும் எப்படி பெரிய குற்றவாளிகளை பாதுகாக்கிறது என்பதை விவரிப்பதே பதிவின் நோக்கம். எல்லா வேலைகளிலும் இருப்பதைப்போல ஒரு காசாளருக்கும் அவருக்கே உரித்தான சிரமங்களும் எல்லா மனிதர்களிடமும் இருக்கும் பலவீனமும் இருக்கும். நாம் எந்திரத்தில் பணத்தை கட்டினாலும் நமக்கு 2 நிமிடங்களுக்கு மேல் ஆகலாம். ஆனால் மக்களின் இத்தகைய புரிதல் குறைபாடுகளை ஜெயமோகன் போன்றவர்கள் கையாளும் நோக்கம் வேறு. முப்பது வினாடிகள் தாமதிப்பவருக்கும் லட்சக்கணக்கான கோடி வராக்கடனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. 30 வினாடியை இழப்பதால் நாம் ஒரு குற்றவாளியை உருவாக்கிவிடமாட்டோம். ஆனால் வராக்கடன் என்பது ஏராளமான கிரிமினல்களை உருவாக்கி மக்களின் உழைப்பில் உருவான பணத்தை களவாடுகிறது. ஜெமோ பின்னால் போனால் உங்கள் கோபத்துக்கு வடிகால் கிடைக்கலாம், பிரச்சினைகள் ஒருபோதும் தீராது.

கம்யூனிசம், தொழிற்சங்கம் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான மேட்டுக்குடிகளின் வெறுப்புக்கு வலு சேர்க்க அவர் இந்த காணொளியை பயன்படுத்துகிறார். தம் கண்மூடித்தனமான பக்தர்களுக்கு அந்த பார்வையை பயிற்றுவிக்கிறார். பரவலான நமது எதிர்ப்பை அடுத்து அவர் அப்பதிவை நீக்கிவிட்டார், ஆக நமது எதிர்வினைகள்தான் அவர் தன் பதிவை தவறானது என ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறது. இதோடு விட்டுவிடாமல் இத்தகைய பொதுக்கருத்துக்களை வாய்ப்புள்ள போதெல்லாம் நாம் விவாதித்தாகவேண்டும். எதையும் முழுமையாக புரிந்துகொள்ளாமல் முடிவெடுப்பது என்பது மனித இனத்தின் ஒரு இயல்பு. ஆனால் முயற்சி செய்தால் எதையும் சரியாக புரிந்துகொள்ளும் இயல்பும் அதே மனித மூளைக்கு உண்டு.

அறிவுப்பூர்வமான புரிதல் இருப்பவர்கள் சரியான எதிரிகளோடு சண்டையிடுவார்கள், இலகுவான இலக்குகளிடம் மோதி திருப்தியடைய மாட்டார்கள். ஜெமோ கும்பலை எதிர்கொள்கையில் நாம் இதை மறந்துவிடக்கூடாது.

Advertisements

“ஜெமோ – இளிச்சவாயனா பார்த்து அடிக்கிறதுக்கு பேருதாண்டா இந்துத்துவா!” இல் 2 கருத்துகள் உள்ளன

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s