கெழவி செத்துருச்சி, நாம நீதியை நிலைநாட்டிருவோம்.


கருவாட்டை தொலைத்த பாப்பாத்தி கவலைப்படலாம் அல்லது பயப்படலாம். கருவாட்டை செரித்த பாப்பாத்தி கவலைப்பட தேவையில்லை அல்லது பிரயோஜனம் இல்லை. ஜெயா வைகுண்ட பிராப்தம் அடைந்த விவகாரமும் தாம்ப்ராஸ் போராளிகளுக்கு அப்படியானதே. ஜெ இருந்தவரைக்கும் ஊழல் குறித்த விவாதங்களில் 2ஜி வழக்கில் மட்டும் வீரம் காட்டிய அஃபிஷியல் சைவ அறிவுஜீவிகள் ஜெ மரணத்தை தொடர்ந்து ஊழலை ஒழிச்சுபுடனும் என தம் நூலையே வாளாக்கி போருக்கு புறப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனீய புத்ரி அப்பல்லோவில் இழுத்துக்கொண்டிருந்தபோதுகூட வீரத்தை வாடகைக்கு விட்டிருந்த கமல், புத்ரியின் கருமாதி முடிந்த கையோடு வீரத்தை மூட்டு ட்விட்டரில் காட்சிக்கு வைத்திருக்கிறார்.

பாஜக குண்டர்கள் கள்ளக்காதலி வீட்டில் இருந்துகொண்டே கற்புநெறி பற்றி கும்பி கிழிய வகுப்பெடுப்பவர்கள். இப்போது பப்பிம்மாவும் இல்லை, கேட்க வேண்டுமா என்ன? நீதி வென்றது என்கிறது ஒரு வாய். இனி திராவிட கட்சிகள் ஒழிந்தது என்கிறார் பொன் ராதா. ஜெயா வழக்கில் இருந்து விலகிக்கொள்ளும்படி பாஜக என்னை மிரட்டியது என ஆச்சார்யா வாக்குமூலம் கொடுக்கும்போதுகூட இவர்கள் இப்படிப் பேசுமளவுக்கு நமது முட்டாள்த்தனமும் அவர்கள் திமிர்த்தனமும் உச்சத்தில் இருக்கிறது. ஜெ பிணமான சேதி உலகிற்கு கிடைப்பதற்கு 24 மணிநேரம் முன்பே அவர் பூத உடலை பாதுகாக்க வந்த கட்சி, அருணாசல பிரதேசத்தின் முதல்வர் என ஆசைகாட்டி கடைசியில் சிவலோக பதவியை கலிக்கோ புல் எம்.எல்.ஏவுக்கு கொடுத்து அழகுபார்த்த கட்சி, அமைச்சர் பதவியோடு பீகாரில் இருந்திருக்க வேண்டிய ஜிதன்ராம் மாஞ்சியை வீட்டோடு உட்காரவைத்த கட்சிக்கு அதிமுகவை கடத்துவது சாதாரண வேலை.

தைரியலட்சுமி பெங்களூர் சிறையில் கால்வைத்தபோதே போயஸ்கார்டன் வாசலில் பாஜக எனும் மூதேவி கால்வைத்துவிட்டது. ஆனாலும் அது உயர்சாதி மூதேவி என்பதால் சீக்கில் துன்பப்பட்ட தெய்வத்துக்கு சங்கடம் ஏதும் இருக்கவில்லை. ஆனால் தெய்வம் டயாபடீஸ் வந்து செத்தபிறகும் அப்படி இருக்க முடியுமா? கோயிலுக்குள் சூத்திரன் நுழைவதையே அபச்சாரமாக கருதும் பாஜகவுக்கு தமிழக அரசியலின் சங்கர மடமான போயசில் சூத்திரச்சி அரசாள்வதை தாங்குவது எங்ஙனம் சாத்தியம்!!

ஆகவே மம்மியின் பாடி குழிக்குள் போனவுடன் அழுது அரற்றாமல் அறச்சீற்றம் கொண்டார்கள் மயிலை மாமாக்கள். காணாமல்போனதாக சொல்லப்படும் ஜெயாவின் கால்களுக்காக அல்ல, சிகிச்சை நடந்ததா இல்லை மம்மியை மம்மியாக மாற்றும் எம்பாமிங் நடந்ததா என அறிவதற்காக அல்ல. மாறாக அவர் உட்கார்ந்திருந்த நாற்காலிக்காக சீற்றம் கொண்டார்கள். வழக்கமாக அண்டர்பிளே அரசியல் செய்யும் பிறவி பாஜக உறுப்பினர்கள் இந்த முறை ஜெயாவின் நாற்காலியுடைய புனிதத்தைக் காக்க முதல்வரிசை போர்வீரனாக களம் கண்டார்கள். ராஜாக்கள் காலத்திலேயே உட்கார்ந்த இடத்தில் இருந்து போர்செய்தவர்கள் இல்லையா?. ஆகவே இம்முறையும் போரை சமூக ஊடகங்களில் இருந்து துவங்கினார்கள். பூணுலை கழற்றிப்போட்ட கமல் ஒரு பக்கம் இலக்கியத்தரத்துடன் கொந்தளிக்க பூணூலை மதிக்க மாட்டேன் என்கிறார்கள் என புலம்பிய பத்ரி சேஷாத்ரி நரசிம்மாவதாரம் எடுத்து ஸ்டேட்டஸ் போர் தொடுக்கிறார்.

//சசிகலா, ஜெயலலிதா கல்லறையில் ஓங்கி மூன்றுமுறை அடித்துச் சபதம் செய்த காட்சியைப் பார்த்தேன். என்னவொரு வெறி. திருட்டுப் பொறுக்கிகளுக்கு இருக்கும் தெனாவெட்டு! இத்தனை செய்து, இத்தனை பட்டும் இந்தக் கூட்டத்துக்கு என்னவொரு ஆங்காரம்? இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த யாரும் காலாகாலத்துக்கும் பொதுப் பதவி எதற்கும் வராத அளவுக்குச் செய்யாவிட்டால் நாமெல்லாம் மனிதர்களே அல்ல.- பத்ரிஜி//

வெகு மக்கள் சசிகலாவின் சபதத்தை ஒரு நகைப்புக்குரிய செய்கையாக நினைக்கையில் பத்ரி வகையறா அதனை தேசத்தின் அச்சுறுத்தலாக சித்தரிக்கிறது. அவர் வம்சமே அரசியலுக்கு வராதபடிக்கு விரட்டப்பட வேண்டும் எனுமளவுக்கு ஆத்திரம் கொப்புளிக்கிறது அவர்களது வரிகளில். தமிழனென்றால் ஷேர் செய்யவும் எனும் காவிகளின் உசுப்பல் செய்திகளைப்போலக்கூட பத்ரி சொல்லவில்லை. மனிதன் என்றால் ஷேர் செய்யவும் எனும் ரேஞ்சுக்கு இறங்கி அடிக்கிறார்.

இப்படி புலம்பும் இன்னொரு கும்பல் பிறவி பாஜகவினர் அல்லாத அடையாள அரிப்பெடுத்த மனிதர்கள். இவர்களது புகலிடம் பாஜகதான் என்றாலும் அவர்கள் தம்மை கட்சி சார்பற்றவர்கள் என்றே சொல்லிக்கொள்கிறார்கள். ”நான் பாஜக ஆதரவாளன் இல்லை, இருந்தாலும்…” என்றவாறு ஒருவர் பேச ஆரம்பித்தால் அவரை இந்தப்பிரிவில் தயங்காமல் சேர்க்கலாம். கனவுக்கன்னியை நினைத்து கைமைதுனம் செய்யும் மனிதனைப்போல பார்ப்பனரைப்போல சிந்தித்தால் நாமும் பார்ப்பனர் ஆகிவிடலாம் எனும் கற்பனையான நம்பிக்கை இவர்களது அரசியல் பண்பாட்டு கருத்துக்களை உற்பத்தி செய்கிறது. தாம்ப்ராஸ் லெவல் அமைப்பாக இருந்திருக்க வேண்டிய தமிழக பாஜகவுக்கு ஒரு இந்து அமைப்பு எனும் முகத்தை கொடுப்பது இந்த கும்பல்தான்.

இவர்கள் இருப்பதாலேயே சசி கும்பல் மீதான வெறுப்பு வெள்ளமென பாய்ந்துவிடுமா என்றால் இல்லைதான். இங்கே பார்ப்பனர்கள் எல்லோரும் அறிவுஜீவிகளாகவே அறியப்படுகிறார்கள். அவர்களை பின்பற்றும் கற்பனைப் பார்ப்பனர்கள் தங்கள் அடையாளப்பசிக்காக மயிலை சிந்தனையை நகலெடுத்துப் பரப்பி தங்களையும் ஒரு ஆல் பர்ப்பஸ் பார்ப்பஸ் ஆக அங்கீகரிக்கக் கோருகிறார்கள். ஊடகங்களின் பிடி பெருமளவுக்கு ”அவா”க்கள் வசம் இருப்பதால் அவர்கள் தமது அடிமைகளின் குரலுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இவ்வாறாகவே இந்த குரல்கள் ஒரு சாதிச்சார்பில் இருந்து லாவகமாக தப்பிக்கின்றன.

இவர்கள் பகிர்வதற்கென்றே சில மீம்ஸ், மெசேஜ் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்து தள்ளுகின்றன. அதனை நம்பி ஃபார்வேட் செய்யும் கூமுட்டைகள் குரூப்பிற்கு இருவராவது இருந்து தொலைக்கிறார்கள். பசு ஆக்சிஜனை வெளியிடும் ஒரே உயிரினம் எனும் தகவலை ஒரு எம்ஃபில் பட்டதாரி பகிர்கிறார். மோடி ஆட்சிக்கு வந்த உடன் உலக நாடுகள் எல்லாம் இந்தியாவைப் பார்த்து பயப்படுகின்றன எனும் அண்டப்புளுகை ஒரு பாதிரியார் ஃபார்வேர்ட் செய்கிறார். நீ இந்தியன் என்றால் நாளை முதல் கக்கூசில் இருந்து கால்கழுவாமல் வா என மெசேஜ் வந்தாலும் தேசபக்தி குறையாமல் ஃபார்வேர் செய்யும் இந்த கூட்டம்தான் மீம்ஸ் தொழிற்சாலைகளின் மூலதனம்.

இந்த மூன்று அணிகளும் சேர்ந்து பன்னீருக்கு திடீரென ஞானஸ்நானம் செய்துவைத்தன. பன்னீரை கொண்டாட மாம்பலம் தேசபக்தர்களுக்கு என்ன தேவை வந்தது? தீபா தூங்கி விழித்து களத்துக்கு வரும்வரை அவர்களுக்கு ஒரு நைட் வாட்ச்மேன் தேவைப்பட்டார். இரண்டு மாதங்களாக பாஜகவின் செல்லப்பிள்ளையாகிவிட்ட பன்னீர் அதற்கு பொருத்தமானவர் என்பதால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். எப்படி சசியின் வருகை வரைக்குமான ஏற்பாடாக எடப்பாடி இருக்கிறாரோ அப்படியே தீபா வரும்வரைக்குமான ஏற்பாடாக பன்னீர் இருக்கிறார்.

ஓராண்டில் எம்.பி.ஏ முடிக்கலாம் என விளம்பரங்களைப் பார்த்திருக்கிறோம். பத்து நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் கிடைப்பதைப் பார்த்திருக்கிறோம். அரைமணிநேர பீட்சா உத்திரவாதங்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால் 40 நிமிடத்தில் யோக்கியனாகிவிடும் உபாயத்தை கற்றவர் பன்னீரைத்தவிர யாருமில்லை. மீசையை சிரைத்துவிட்டு மரு ஒட்டினால் யாருக்கும் அடையாளம் தெரியாமல் வேறு நபராக மாறிவிடும் சினிமா நாயகனைப்போல அரசியல் நாயகனாகிவிட்டார் பன்னீ. 40 நிமிட சுடுகாட்டு பூஜையில் தன் பழைய பாவங்கள் யாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு புதிய பன்னீர் உடலுக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட நவீன மந்திரவாதி பன்னீர்தான். ராம நாராயணன் உயிரோடு இருந்திருந்தால் இந்த சம்பவத்தை வைத்து ஒரு சாமிபடமே எடுத்திருப்பார். என்ன செய்ய திடீர் யோக்கியர் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

ஓபிஎஸ்சை மெரினா போராட்டத்தின்போது கழுவி ஊற்றிய சமூகத்தில் அவரை பரம யோக்கியனாகவும் பிறவிப் போராளியாகவும் முன்னிருத்தும் துணிச்சல் எப்படி பசுமூத்திர பிராண்ட்அம்பாசிடர்களுக்கு வந்தது எனும் சந்தேகம் வாசிப்பவர்களுக்கு எழலாம். ஆனால் நாம் அவ்வாறு சந்தேகம் கொள்ள அவசியம் இல்லை. பிடிக்காத அதிகாரி முகத்தில் ஆசிட் வீசிய தெய்வத்தாயை மக்கள் தலைவர் என நிறுவ முடியும்போது, குன்ஹா தீர்ப்பை கேட்டு சர்வமும் ஒடுங்கி மாதக்கணக்கில் வீட்டில் ஒளிந்துகொண்டவரை தைரியலட்சுமி என நம்பவைக்க முடியும்போது, கொழுப்பெடுத்துப்போய் நூலகத்தையே சிதைத்து ரசிக்கும் மனநோயாளியை சிறந்த நிர்வாகி என கால் நூற்றாண்டுகாலம் பிரச்சாரம் செய்ய முடியும்போது பன்னீரை தற்காலிக திடீர் யோக்கியராக அறிவிப்பதில் அவர்களுக்கு என்ன தயக்கம் இருக்கப்போகிறது. அம்மா கொடுத்த சீட்டின் பவித்ரம் குறையாதிருக்க அதில் தன் சீட்டைக்கூட பட்டும்படாமல் வைத்த மனிதனுக்கு செய்யும் உபகாரம் இது.

பன்னீரை முன்னிருத்தி பார்ப்பன லாபிக்கள் ஒரு முக்கியமான செய்தியை மற்ற தலைவர்களுக்கு சொல்கின்றன. ஜெயாவைப்போல திருடு அது உன் சமர்த்து, ஆனால் திருடி-ஜெயாவைப்போன்ற தலைவர் ஆக முயலாதே என்பதுதான் அவர்கள் சசிகலாவுக்கும் அதன் வாயிலாக ஏனைய தலைவர்களுக்கும் விடுக்கும் செய்தி. நீ ஒன்றும் ஜெயலலிதா அல்ல என்பதை உணர்த்தவே சசிகலாவுக்கு அவர்கள் பல்முனை எச்சரிக்கை கொடுக்கிறார்கள். சசிகலா முந்தாநாள் முளைத்த தீய அவதாரம் போலவும் அதனை நேற்றுதான் இந்த வெள்ளைத்தோல் போராளிகள் கண்டுபிடித்ததுபோலவும் பேசுவது அசிங்கம் பிடித்த சாதிவெறியின் திமிர்த்தனமான வெளிப்பாடு. ஜெயா உயிரோடு இருந்தவரை, சட்டப்படி நடப்பவை பற்றி கேள்வி எழுப்பாதே என முழங்கிய வாய்கள் இப்போது சட்டம் கிடக்கட்டும் மக்கள் கருத்துதான் முக்கியம் என பேசுகின்றன. பூனூல் அணிந்தவனின் அபானவாயுவையும் தெய்வீகம் என கருத ஆளிருக்கையில் அவர்களுக்கு என்ன கவலை??

சசி கும்பலை அம்பலப்படுத்தும் எல்லா நடவடிக்கைகளையும் நாம் ஆதரிக்க வேண்டும்தான். ஆனால் அதனை ஒழிக்கவந்த மாமனிதனாக பன்னீரை நம்பச்சொல்வதும் சோம்பேறி தீபாவுக்கு பட்டாபிஷேகம் செய்ய முனைவதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இன்னொரு ஜெயலலிதா என்பது அக்ரஹாரங்களின் கனவாக இருக்கலாம் ஆனால் அது ஏனையோருக்கு ஒரு தண்டனை.

ஜெயா சாவு என்பது பல தளங்களில் நல்விளைவுகளை உருவாக்கியிருக்கிறது. ஊடகங்கள் சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளியை பற்றி பேசுகின்றன, மக்கள் கருத்து, ஊழல் ஒழிப்பு பற்றியெல்லாம் பார்ப்பனர்கள் பேசுகிறார்கள். சசிகலா ஒரு கொள்ளைக்காரி எனும் ஞானோதயம் குருமூர்த்தி கும்பலுக்கு உதிக்கவே ஜெயா மண்டையைப் போட வேண்டியிருக்கிறது. நக்கிப்பிழைப்பதையே வாழ்க்கையாகக்கொண்ட சினிமாக்காரர்கள் அரசியல் பேசுகிறார்கள். பாட்டிம்மா சிறை சென்றபோது தமிழகத்தை நிலைகுலையவைத்த அதிமுக இப்போது சசிகலா சிறை சென்றபோது அமைதியாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம்கூட நீதி நியாயம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறது. இவையெல்லாம் நடக்க அக்ரஹாரத்தால் அருளப்பட்ட ஒரு தலைவர் செத்துத் தொலைய வேண்டியிருக்கிறது.

பார்ப்பனர்களை சமூக அக்கறையுள்ளவர்களாக பார்க்க வேண்டுமானால் இங்கே பார்ப்பன தலைமை இல்லாமல் இருப்பது அவசியம் இல்லையா?. ஆகவே அவர்கள் பரிந்துரைக்கும் பன்னீர், தீபா போன்ற நபர்களை புறக்கணியுங்கள். ஏற்கவே கேன்சர் இருக்கிறது என்பதற்காக எயிட்ஸ் நோயும் இருந்துவிட்டுப் போகட்டும் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? சசி கும்பல் முற்றாக ஒழிக்கப்பட வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை. அதனை பன்னீரை மகிமைப்படுத்தி செய்வதுதான் ஆபத்து. பன்னீரும் அவரை இயக்கும் காவிகளும் எப்போது வேண்டுமானாலும் கூட்டு சேரலாம். ஊழல் ஒழிப்பு என்பது நாம் எல்லோரும் ஒன்றினைந்து செய்யவேண்டிய வேலை. அதற்கு தலைமையேற்க திருடர்கள் பரிந்துரைப்பவர்களை நம்பாதீர்கள்.

Advertisements

3 thoughts on “கெழவி செத்துருச்சி, நாம நீதியை நிலைநாட்டிருவோம்.”

  1. அதிமுக ஒரு பார்ப்பன தலைமையாக இருந்தவரை மென்மையாக அல்லது அதனை அச்சத்துடன் அணுகியவர்கள் எல்லோருமே இப்போது போட்டு தாக்குகின்ற வேலையை முழு நேரப் பணீயாக செய்து வருவதை எல்லோருமே உணர்கின்றனர்.ஆனால் அதில் நமது இடம் என்ன என்பதில் தான் பலரும் தவறு செய்கின்றனர்.பார்ப்பன சூழ்ச்சியை பாசாங்குகளின்றி எதிர்கொள்ளும் அறிவையும் நுட்பத்தையும் பெரியார் இந்த மண்ணில் செம்மையாக விதைத்து விட்டு சென்றிருக்கிறார்.அதில் நமக்கு போதிய தெளிவு இருக்கிறது.ஆனால் பார்ப்பனர்களால் அல்லது கருப்பு பார்ப்பனர்களால் எதிர்க்கப்படும் தூற்றப்படும் ஒரு மக்கள் விரோத கும்பலை நாம் எங்கனம் எதிர்கொள்வது என்பதை வீரமணியும் கூட சந்தர்ப்பவாதமாக எதிர்கொள்கிறார்.முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான ‘தமிழர்’ அல்லது ஒரு சூத்திரன் தனது முறைகேடுகளுக்காக தண்டிக்கப்படும் நிலை வந்த போது அவரை தற்காக்கும் வேலையை வீரமணீயாரின் திக தோள்தட்டி நின்றதை விமர்சித்திருக்கிறோம்.இப்போது பார்ப்பன கனவான்கள் சசி கும்பலை நெருக்கி வருகின்ற வேளையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளாமல் அவாளின் அவாவை விமர்சிக்க இறங்க கூடாது.திராவிட இயக்கங்களின் தாய்க்கழகம் எனும் ஒரு பெரும் தகுதியை தான் பெற்றிருப்பதாக நியமித்துக் கொண்டு வீரமணி மற்றும் அவரது கட்சியினர் சசிகலாவை காவி எதிர்ப்பு போராளீயாக உருவகம் செய்கின்ற வேலையை செய்து வருவதையும் தமிழகம் அருவருப்போடு பார்த்து வருகிறது.இந்த நிலையில் சசிகலா கும்பல் ஒரு சூத்திர பெண் என்பதாலேயே ஜெயாவை சகித்தவர்கள் சசிகலாவை எதிர்க்கிறார்கள் எனும் ‘உண்மையை’ நாம் வெளிப்படுத்தும் போது அதை கவனமாக செய்ய வேண்டும்.ஒருவகையில் நாம் பார்ப்பன காவி கும்பலால் சசி குறிவைக்கப்படுகிறார் எனும் செய்தியை சொல்லும் போது அதற்கு எதிரான ஒரு துருவமாக சசிகலாவை கற்பிதம் செய்து கொள்பவர்களூக்கு வசதி ஏற்படுத்தி தந்தவர்களாகி விடுவோம் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

    அதிமுக எனும் கட்சி திமுகவைப்போல திராவிட வாசனைகள் கூட இல்லாத குப்பை எனும் போது அது அவர்களாகவே அடித்துக் கொண்டு அழிந்து போவதில் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.ஒரு அதிசயமாக உச்ச நீதிமன்றமும் ஜெயா மற்றும் சசி கும்பலை தண்டித்து இருக்கும் வேளையில் ஜெயா என்கிற பிம்பத்தை தூக்கி வைத்து கொண்டாடும் இரு பிரிவுகளையும் (தீபா ஒரு பிரிவு இல்லை என்பதும் சொத்து பிரச்சினை தீர்ந்தால் அது இல்லாமல் போகும் என்பதும் எனது கணிப்பு.) ஒரு சேர எதிர்க்கும் நிலையே சரியானதாகவும் வலுவானதாகவும் இருக்க முடியும் என்பதுமே எனது கருத்தாக இருக்கிறது. எனவே சசி கும்பலை பார்ப்பன கும்பல் வெறுத்தொதுக்க ஒரு காரணம் இருக்கிறதென்றால் நமக்கும் ஏராளமான காரணங்கள் இருக்கின்றனவே? காவி குரூப் நாளையே சசி குரூப்பிற்கு ஞானஸ்தானம் செய்து வைத்தாலும் நாம் எதிர்ப்பதற்கான காரணங்கள் அப்படியே இருக்கும்.

    பத்ரியின் கருத்தோடு எனக்கு உடன்பாடு இருந்ததில்லையெனினும் சசிகலா சபதத்தை அவர் பிரதிபலித்தது சரியானதாகவே இருக்கிறது. நிச்சயமாக அதனை நகைச்சுவையாக மக்கள் பார்க்கவில்லை.

    //”இவையெல்லாம் நடக்க அக்ரஹாரத்தால் அருளப்பட்ட ஒரு தலைவர் செத்துத் தொலைய வேண்டியிருக்கிறது”//
    (கமலைத் தவிர) தனது பட வெளியீட்டிற்கான பாதிப்பின் போது கூட அதனை வெளிப்படையாக பொது வெளீயில் பகிர்ந்து கொள்ள தயங்கியவர்களான சூரப்புலிகளான கதாநாயகர்கள் இப்போது அரசியல் அறம் பற்றி பேசுவதற்கு எப்படி துணிந்தனர் என்பதற்கு அதற்கு ஜெயாவின் மரணம் மட்டும் காரணமா இல்லை மெரினா எழுச்சியும் சமூக ஊடகங்களில் அது பிரதிபலித்த தாக்கமுமா என்பதை விவாதத்திற்கு முன் வைக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s