ஜாக்கி ஜட்டியானந்தா ஸ்வாமிகளை ஆதரித்து இலக்கிய மஹாசன்னிதானம் சுமோ எழுதிய வைரல் கட்டுரை.


 

கடந்த சில நாட்களாக ஆன்மீக குருஜி ஜட்டிதேவை எதிர்த்து பல தண்டக்கருமாந்திர தரித்திரங்கள் தட்டச்சு தெரிந்த தேவாங்குகள் நிலைத்தகவல்களை இணையவெளியெங்கும் நிரப்புகின்றன. இது தொடர்பாக என்னிடம் பதில் கேட்டு பதினெட்டாயிரத்து முன்னூற்று ஆறு கேள்விகள் வந்திருக்கின்றன. அதில் பதினெட்டாயிரத்து முன்னூறு கேள்விகள் நானே எழுதியவை. இப்படிப்பட்ட ஒரு ஹிந்து எழுத்தாளனை இந்த மதமாற்ற சக்திகளின் லாபி அங்கீகாரம் கிடைக்கவிடாமல் தடுப்பதால்தான் எனக்கு அல்ப புக்கர் பரிசுகூட கிடைக்கவில்லை. அந்த பரிசு வாங்கிய ஆட்கள் மீது நான் தேசபக்தியோடு காறி உமிழ்ந்தாலும் அவை சில நாட்களுக்கு மேல் என் பிரபல்யத்தை காப்பதில்லை.

ஒரு கல்யாண மண்டபம் கொள்ளும் அளவுக்கு சிஷ்யகோடிகளைக் கொண்ட மஹா இலக்கியவாதியான எனக்கே இத்தகைய நெருக்கடிகளை மதமாற்ற சக்திகளும் வஹாபியிச இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் தர இயலும் என்றால், ஒரு டிவி சேனல்கூட ஆரம்பிக்க வழியில்லாத ஹிந்து சாமியாருக்கு எத்தனை சங்கடங்கள் இருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது. பத்ம விருதை வீசியெறிந்த எனக்கு இத்தனை இடையூறு வந்தால் அதை நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு போய் வாங்கிய அவருக்கு இன்னும் தீவிரமான பிரச்சினைகள் வரும்தான்.

எனக்கு வந்த கேள்விகளில் முதலாவது ஒரு இஸ்லாமியருடையது. ”ஜாக்கி பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன என்று தயவு செய்து சொல்லவும்” என கேட்டிருந்தார். இங்கிருக்கும் வஹாபியிச இயக்கங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணத்தை வாங்கிக்கொண்டு முஸ்லீம் மக்களை மூளைச்சலவை செய்து எழுத்தாளர்கள்மீது வன்முறையை ஏவுகின்றன. அதன் விளைவாகவே மேற்ச்சொன்ன இஸ்லாமியர் வன்முறை தெறிக்கும் இந்தக் கேள்வியை எனக்கு அனுப்பியிருக்கிறார். அதனை நிராகரிக்க எனக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தபோதிலும் அவர் ஒரு இஸ்லாமியர் எனும் ஒற்றைக் காரணத்தின் அடிப்படையில் அக்கேள்வியை நான் நிராகரித்தேன்.

அவர்கள் அடிப்படையிலேயே இறுக்கமானவர்கள். என் இளம் வயதில் சந்தித்த முஸ்லீம் நண்பர்கள் பிரியாணியை சாப்பிடக்கொண்டுவந்து கொடுப்பார்கள். ஆனால் ஒருவர்கூட பிரியாணி சமைக்க வா என அழைத்ததில்லை. காலப்போக்கில் நான் சந்தித்த எல்லா நண்பர்களும் இதையே சொன்னார்கள். ஒன்றுக்குள் ஒன்றாக இருந்த எளிய ஹிந்து சமூக அமைப்பிற்கு தீண்டாமையை அறிமுகம் செய்ததே இந்த வஹாபியிசவாதிகள்தான். பிரியாணி சமைப்பதை ஒளித்து ஒளித்து செய்து, அதனை வெளிப்படையாக விணியோகித்து மக்களை அடிமையாக்கித்தான் தீண்டாமையை இங்கே நிலைநிறுத்தினார்கள். வாணியம்பாடி பக்கம் ஒருமுறை பயணித்த போது சாலையோர கடையொன்றில் சமைக்கப்பட்டுக்கொண்டிருந்த பிரியாணியை யாரும் திறந்து பார்க்கக்கூடாது என்பதற்காக அவர்கள் அதன் மூடிமீது தீக்கங்குகளை கொட்டியிருந்தார்கள். இத்தகைய வன்முறை மனோபாவம் கொண்டோர் எழுப்பும் கேள்விகளை புறந்தள்ளுவதே நீதியானது என மூதிசங்கரர் எழுதிய முஸ்லி பிராஷ் நூல் சொல்கிறது. ஒரு கலவரத்தைக்கூட சகித்துக்கொள்ள முடியாமல் உடனே ஆர்ப்பாட்டம் செய்யக்கிளம்பும் இந்த வஹாபியிஸ்டுக்கள் கேள்விகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

பிறரிடம் அத்துமீறுவது சரியா என சகாயராஜ் என்பவர் கேட்டிருந்தார். அவரிடம் நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என கேட்டேன். முதுகலைப் பட்டம் என்றார். தென் மாவட்டத்தில் இருக்கும் வறிய கிராமம் ஒன்றில் இருந்து வந்து அங்கிருக்கும் அப்பாவி ஹிந்துக்கள் எல்லாம் வயற்காட்டில் கஷ்ட்டப்படும்போது இவர் மட்டும் முதுகலை பட்டம் வாங்கி சொகுசாக வாழ்கிறார். இந்து மதத்தின் ஞான மரபு மிகவும் அப்பாவியானது அதனை இந்த மதமாற்ற சக்திகள் எளிதில் ஏமாற்றி அதன் வாய்ப்புக்களை பறித்தெடுக்கின்றன. குரு வீட்டு மாட்டைக் குளிப்பாட்டி அவர் துணியை துவைத்து கல்வி கற்ற தெய்வீக அனுபவத்தை ஒழிக்க பள்ளிகளை திறந்தது ஆபிரஹாமிய மதம். உடம்பு வணங்காத ஹிந்து மத பிரச்சாரகர்களுக்கு சேவகம் செய்த தாழ்த்தப்பட்ட மக்களை வஞ்சகமாக தன் பக்கம் திருப்பி பாரத பண்பாட்டை சிதைத்தது அவர்கள் மதம். ஆகவே அவருக்கும் கேட்கும் உரிமை இல்லை என பதில் சொன்னேன்.

இன்னொரு கேள்வியை எழுப்பியவர் ப்ரொஃபைல் படம் அவரது கருப்பு நிறத்தை மறைக்க இயலாமல் தவித்தது. சுண்டினால் ரத்தம் வரும் அளவுக்கு சிகப்பு நிறம் கொண்ட பிராமணர்கள் தம் மீதான சாதீய ஒடுக்கு முறையை சகித்துக்கொண்டு இருக்கையில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும் அதனை ஒரு தகுதியாக்கி உரிமை கோருகிறார்கள். ஹிந்து மதம் பிக்‌ஷையை தர்மம் என்கிறது, அது சம்பளத்தை பாபம் என்கிறது. ஆனால் இவர்கள் தர்மத்தை புறந்தள்ளி பாபத்தைக் கேட்டு போராடுகிறார்கள். ஹிந்து உயர்சாதி சாமியார்கள் மீது இவர்களுக்கு ஒரு உள்ளார்ந்த வெறுப்பு இழையோடுகிறது. என்னுடன் வேலை செய்த பிராமண அதிகாரியொருவர் தலப்பாகட்டு ஓட்டலில் தயிர்சாதம் கேட்டபோது கிண்டல் செய்து திருப்பி அனுப்பப்பட்டார். எப்படிங்க இதையெல்லாம் சகிச்சுக்கிறீங்க என கேட்டேன், பழகிடுத்து என்றார். என் மகன் சமஸ்கிருதன்கூட ஏன் அப்பா நம் மக்கள் ஐயர்களை இப்படி அலைகழிக்கிறார்கள் என கண்களில் கண்ணீர் முட்ட கேட்டான். ஆம், இதுதான் இந்த தேசத்தின் சாபம் இதனை நீ உன் வாழ்வில் செய்துவிடாதே என்றேன். நிச்சயமாக அப்பா எனறு பதில் சொன்ன அவன் தன் கையில் இருந்த மிகக்காரமான மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் பொட்டலத்தை தூர எறிந்தான். நீங்களும் உங்கள் கையில் உள்ள பிராமண துவேஷம் எனும் காரமான சிப்ஸ் பொட்டலத்தை தூர எறியுங்கள் என்றேன் அவரிடம்.

இப்படியாக எல்லா கேள்விகளையும் ஒதுக்கிவிட்டு பார்த்தால் பட்டாபி எனும் வாசகர் அறம் நிறைந்த கேள்வியை எழுப்பியிருந்தார்.

ஏன் இந்து மத சாமியார்கள் மட்டும் இளைஞர்களால் தூற்றப்படுகிறார்கள்? ஒரு சாதாரண கவுன்சிலருக்கு உள்ள உரிமைகளைக்கூட அவர்கள் அனுபவிக்க இயலாமல் துவேஷம் கக்கும் இந்த இணைய உலகம் நம்மை எங்கே கொண்டுபோய் நிறுத்தும்? நம் பண்பாடும் நெறியும் நம் கண் முன்னே அழிவதைக் கண்டு அழுவதைத்தவிர வேறு வழியே இல்லையா? தேவாதி தேவரெல்லாம் பிறன் மனை நோக்கி வாழவில்லையா? சிவனடியார்கள் சமணர்களுக்கு மோட்சம் அருளவில்லையா? தமிழகத்தின் எல்லா கோயில்களும் ஏதோ ஒரு மிருகத்தின் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டவைதானே? அமெரிக்காவில்கூட மடம் கட்டி மதம் பரப்ப முடிகிறது. இங்கோ ஒரு கற்பழிப்பு குற்றச்சாட்டு வந்த உடன் ஒரு யோகியை திட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். லோகமே பகவானுடையது எனும்போது அதில் அவன் அலுவலகத்தையும் கெஸ்ட் ஹவுசையும் கட்டுவது எப்படி ஆக்கிரமிப்பாகும்? புளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என்பதை கேட்டு சென்றமுறை கடிதம் எழுதியிருந்தேன். அதற்கான உங்கள் பதில் என் இதயத்தில் ஒரு புதிய வெளிச்சத்தை பாய்ச்சிற்று. அதேபோல  என்னுடைய இந்த கேள்வியையும் உங்கள் கேள்வியாக நினைத்து பதிலளிக்கவும்.

அன்பின் பட்டாபி,

உங்கள் கவலையை முழுமையாக புரிந்துகொள்கிறேன். இந்து மதம் என்பது ஒரு நிறுவனம் அல்ல, அது பண்பாட்டின் தொகுப்பு. இங்கே அடக்குபவனுக்கும் இடம் உண்டு. அடங்குபவனுக்கும் இடம் உண்டு. அது வாசகமானதல்ல, சூசகமானது. புறவயமானதல்ல அகவயமானது. பல நூறுகோடி ஆண்டுகளாக ரிஷிகளும் ஞானிகளும் தம் தவ வலிமையால் விந்தை மண்டைக்கு அனுப்பி குண்டலினியை தொண்டைக்குள் இறக்கி கொண்டுவந்த மதம் இந்து மதம். அமைதியான மதம் ஆகையால் அவர்கள் தமக்குள் உரையாடகளைக்கூட வைத்துக்கொள்ளவில்லை. அஹிம்சா மார்க்கமாகையால் அவர்கள் எழுத்தானியைக்கூட இடையூறு செய்ய விரும்பாமல் எழுதியும் வைக்கவில்லை. பற்றற்ற வாழ்வின் உச்சத்தை காண நீங்கள் வட இந்தியாவில் இருக்கும் அகோரி சாமியார்களை சந்திக்க வேண்டும்.

இந்து சாமியார்கள் இப்போதுதான் வாடிகனின் வடிவத்தை ஒத்த சாம்ராஜ்யத்தை நிறுவ முயல்கிறார்கள். அதற்கான பயணம் மிகவும் கடினமானது. இந்த எழுச்சியை கண்டு நடுங்கும் மதமாற்ற இயக்கங்கள் இந்து யோகிகளின் அப்பாவித்தனத்தை சாதகமாகக்கிக்கொண்டு அவற்றை அவதூறு பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகின்றன. ரகசிய கேமரா எனும் பொருள் கண்டுபிடிக்கப்படதன் நோக்கமே ஹிந்து ஞானமரபின் தொடர்ச்சியை சிக்கலுக்குள்ளாக்குவதுதான். பாதிரிகள் மற்றும் இஸ்லாமிய மதகுருமார்கள் படுக்கையறையில் வேலை செய்யாத ரகசிய கேமராக்கள் ஹிந்து ஸ்வாமிகள் யோகிகள் அறைகளில் தெளிவாக வேலை செய்கின்றன. அகவயமான ஆராய்ச்சி கொடுக்கும் அயற்சியை சரிசெய்ய அவர்கள் எடுக்கும் புறவயமான யோகத்தை ஸ்கேண்டல் வீடியோவாக்கி அவமானப்படுத்துகின்றன பெரியாரிய மற்றும் அம்பேத்காரிய இயக்கங்கள்.

மதமாற்ற கிருஸ்தவ அமைப்புக்கள் வெளிப்படையாக எழுப்புதல் கூட்டம், வெளிப்படுத்துதல் கூட்டம், இளைஞர் எழுச்சி கூட்டம் எனும் பெயரில் கூடுகைகள் நடத்துகின்றன. அவை அப்பாவி ஹிந்து ஸ்வாமிகளுக்கு தவறான மன எழுச்சியை உருவாக்கிவிடுகின்றன. இவற்றை கண்டிக்காத கபடதாரி பெரியாரிஸ்ட்டுக்கள் அதனால் தவறாக வழிநடத்தப்படும் யோகிகளை கண்டிக்கின்றனர். உலகம் முழுவதும் அதிகம் பார்க்கப்படுவது ஆபாச வீடியோக்கள்தான். அதில் யோகிகளது வீடியோக்கள் லட்சத்தில் ஒரு பங்குகூட இருக்காது. இந்தியாவில் 65கோடிக்கும் மேலான பெண்கள் இருக்கிறார்கள். ஜட்டியானந்தா மீது புகார் சொன்னது ஒரே ஒரு பெண். வெளியானது ஒரேயொரு வீடியோ. இதனைக்கொண்டு ஒட்டுமொத்த ஹிந்து நிறுவனங்களையும் அவதூறு செய்கின்றனர்.

இல்வாழ்வு சலித்துப்போய் மனைவியுடன் பிணக்கு கொண்ட என் வாசகர் ஒருவரை ஜாக்கியை தொடர்புகொள்ளும்படி பரிந்துரைத்தேன். சில நாட்களுக்குப் பிறகு என்னை சந்திக்க வந்த அவர் இப்போ ஒரு பிரச்சினையும் இல்லஜி, இன்னும் ரெண்டு மூனு கல்யணம்கூட பண்ணிக்கலாம்னு இருக்கேன் என்றார். ஜட்டியானந்தாவை சந்தித்தீர்களா என்றபோது இல்லை, ஆனால் அவர் வீடியோக்களை பார்த்தே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன் என்றார். திராவிர கம்யூனிச சோம்பேறிகளால் இந்த உள் ஒளியை உணர இயலாது. உண்மையில் இதயத்தின் கதவுகளினூடே சென்று அகவயமான ஒரு போர்ன் வீடியோவை ஓடவிடும் வல்லமைகொண்ட பல பல பாசுரங்கள் நம் ஹிந்து பாரம்பர்யத்தில் இருக்கிறது. அவற்றை நாம் ருசித்துவிடக்கூடாது என்பதால்தான் கிருஸ்தவ பல்கலைக்கழகங்கள் வீடியோ கருவிகளை கண்டு பிடித்தன.

ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்குமா, அய்யப்பன் கதை அறிவியலுக்கு பொருந்துமா என தன் வழக்கமான பல்லவியை கருஞ்சட்டை கும்பல் ஒன்று திருநெல்வேலி ஜங்ஷன் அருகே எக்காள தொனியில் கேட்டுக்கொண்டிருந்தது. வழக்கம்போலவே எல்லா இந்துக்களும் அமைதியாக கடந்துபோகையில் ஒரு இளைஞன் மட்டும் எழுந்து “டேய் மூடுங்கடா ங்கோத்தா…” என்றான். திராவிட கும்பல் பதில் இல்லாமல் திகைத்து நிற்க அங்கிருந்த ஹிந்துக்கள் எல்லோரும் ஆனந்தக் கண்ணீர் உகுந்தார்கள். அந்த ஞான ஒலியின் பரவசத்தில் இருந்து மீள இயலாமல் நான் அங்கேயே நின்றுவிட்டேன். கஞ்சா போதையில் கவட்டையை விரித்து தூங்கிய அவன் கண்விழிக்கும்வரை அங்கேயே காத்திருந்து “இந்த திறப்பு உனக்குள் எப்படி நிகழ்ந்தது? என கேட்டேன். ஒரே ஒரு நாள் குருஜியுடன் ஒரு ஆனந்த அனுபவம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அங்கே பிரசாதம் அருந்திக்கொண்டே கேட்டதை இங்கே சொன்னேன் அவ்வளவுதான் என பவ்யமாக பதில் சொன்னார். இத்தகைய கலாச்சார போராளிகளை உருவாக்குவதால்தான் ஜாக்கி குறிவைக்கப்படுகிறார்.

ஜட்டியானந்தா சரச சல்லாபங்களில் ஈடுபடவில்லையா, கஞ்சா விணியோகிக்கவில்லையா, காட்டை ஆக்கிரமிக்கவில்லையா என்றால் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஒரு ஆன்மீக தரிசன பயணத்தில் சில அஜால் குஜால் சமாச்சாரங்களை கடந்துபோகத்தான் வேண்டும். அதனை கோர்ட்டுக்குப் போய் தீர்த்துக்கொள்ளலாம் அல்லது கோர்ட்டுக்கு வெளியே தீர்த்துக்கொள்ளலாம். ஆனால் அதை வைத்து ஆன்மீகத்தையோ நிறுவனத்தையோ தாக்குவது தவறு. மேலும் மேற்கத்திய ஆதிக்கத்தால் சீர்கெட்ட சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள் உறவு சார்ந்தவை. அவற்றை யோகிகள் அனுபவித்துப்பார்க்காமல் எப்படி தீர்வு சொல்ல இயலும்? பக்தன் இன்பத்தை நுகர்ந்துவிட்டு பிறகு ஆன்மீக அனுபவத்தைப் பெறுகிறான். மெய்ஞானியோ ஆன்மீகத்தை அடைந்துவிட்டு இன்பத்தை பரீட்சித்துப் பார்க்கிறார்.

மதம் ஒரு போதை என்று சொன்ன கம்யூனிஸ்ட்கள் கஞ்சாவைப் பற்றி புலம்புவது வேடிக்கையாக இருக்கிறது. காட்டை ஆக்கிரமித்தால் அதனைப்பற்றி புகார் சொல்ல வேண்டியது காட்டெருமையும் யானைகளும்தான். இதனைப்பற்றி என்னுடைய வெளிர்நீல மலைக்குரங்கு எனும் நாவலில் தெளிவாக விளக்கியிருக்கிறேன். காட்டில் உடைத்துப்போடும் ஐரோப்பிய கண்டுபிடிப்பான சாராய பாட்டில்களைவிட கசக்கி வாயில்போடும் ஆன்மீக பிரசாதம் கஞ்சா மேலானது என்றே சொல்வேன்.

எனக்கு ஜாக்கி ஜட்டியானந்தா மீது பெரிய நம்பிக்கை இல்லை, அவரை நம்புபவர்கள்மீதும் நம்பிக்கை இல்லை. அவர்களை எதிர்ப்பவர்கள் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை. ஆனால் என்ன செய்ய எதிர்ப்பவர்களை எதிர்த்தால்தான் என் வண்டி ஓடும். எனக்கு இருக்கும் பக்தர்கள் இன்னும் என் பக்தர்களாகத்தான் இருக்கிறார்களா என அறியவே இந்த எதிர்குரல்களை எதிர்க்க வேண்டியிருக்கிறது.

நன்றி,

சுமோ.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s