என்னைப்பற்றி

பிறந்தது வளர்ந்தது மற்றும் பள்ளிப்படிப்பு எல்லாம் தஞ்சாவூரில். பட்டயப்படிப்புகளுக்காக புதுக்கோட்டையிலும் சென்னையிலும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். பிறகு எட்டு ஆண்டுகளாக குப்பை கொட்டியது திருப்பூரில் (அதாவது நல்லதை ஐரோப்பாவுக்கு அனுப்பிவிட்டு குப்பையை திருப்பூரில் கொட்டும் வேலை என்று பொருள்). இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.  தமிழை எழுதிப்பழகுவதற்காக ஒரு வலைப்பூவை வைத்திருக்கிறேன் என்பது மட்டும்தான் என்னைப்பற்றி இப்போதைக்கு சொல்லிக்கொள்ளும்படியான தகவல்.

பெரிய வாசிப்புப் பழக்கம் இல்லாதவன். தொடர்ந்து பணியிடங்களையும் வசிக்குமிடத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பதால் பல மனிதர்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது . முற்றிலும் நேரெதிரான இயல்புடைய நபர்களை அடிக்கடி சந்திப்பதுதான் எனது எழுத்துக்களை கொஞ்சமேனும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

வினவில் சில கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன என்பது வலையுலகின் எனக்கான முதல் அங்கீகாரம்.  என்னைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ள மேலதிக தகவல்கள் இப்போதைக்கு இல்லை.

எனது மின்னஞ்சல் முகவரி : villavan.r@gmail.com

முகநூல் : http://www.facebook.com/villavan.ramadoss

ட்விட்டர் : http://twitter.com/#!/villavanvr

Advertisements

“என்னைப்பற்றி” இல் 33 கருத்துகள் உள்ளன

 1. வில்லவன்

  தங்கள் ‘நடிகைகள் சிலரை விபச்சாரியென்றது தினமலர். நாங்கள் எல்லோருமே அதைவிட கீழ்தரமானவர்கள் என்பதை பகிரங்கப்படுத்தியது நடிகர்சங்கம்’ கட்டுரை சிறப்பாக உள்ளது. அதை எங்கள் தளத்திலும் மீளப் பிரசுரிக்க விரும்புகிறோம். அனுமதிக்காக இந்த மின்னஞ்சல்

  நன்றி.
  Envazhi.com

 2. சாட்சி கதை நல்லா இருக்குதுங்க, பேருந்து நிலையம் பின்புறம் , ஜெய்வாபாய் பள்ளி தள்ளி ஆமா நமக்கு (திருப்பூர்) ராயபுரம் பக்கங்களா?? டைம் கிடைச்சா பக்கத்துல பெரியார் தி.க நூலகம் இருக்கு படியுங்கோ

 3. சாட்சி கதை நல்லா இருக்குதுங்க, பேருந்து நிலையம் பின்புறம் ஆமா நமக்கு (திருப்பூர்) ராயபுரம்(, ஜெய்வாபாய் பள்ளி தள்ளி ) பக்கங்களா?? டைம் கிடைச்சா பக்கத்துல பெரியார் தி.க நூலகம் இருக்கு படியுங்கோ

 4. நான் ராயபுரத்துக்கு ரொம்பவும் பக்கத்தில்தான் வசிக்கிறேன்( கல்லூரி சாலையில் ). அனேகமாக இன்னும் ஒரு மாதம் தஞ்சையில் இருப்பேன் அதன் பிறகு திருப்பூர்தான். அப்போது நேரம் கிடைக்கும்போது(எல்லாம்) நூலகம் வருகிறேன்.

  நன்றி.

 5. sorry for writing in english to good tamil person villavan. i know well since you are in thanjavur you got good tamil i think so. great tamil “UCHARIPU”. your comment about tamil people is well. i know and learn more about our indian government. but you scold our kalam that is i cant tolerate villavan sir. please continue your writing with respect to our good indian leaders except wrong leaders

 6. Hi villavan Best wishes. really after a long time i found a pearl i.e villavan.worldpress.com.
  Thank you so much. Keep it up. Really your words are coming without any colour of politics, it will inspire the youngsters, so kindly continue your social work to clean the dirty politics.

 7. /பிரதான குற்றவாளியை சுட்டுக்கொன்றதன் மூலம் இவர்கள் வழக்கை மொத்தமாக மூடிவிட்டார்கள். முன்விரோதமோ அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறோ இந்த கொலைகளுக்கு காரணமாக இருந்திருப்பின் அதில் தொடர்புடைய குற்றவாளிகள் இனி சுதந்திரமாக நடமாடலாம். இந்த அழகில் இந்த என்கவுண்டர் குற்றவாளிகளை அச்சுறுத்தும் என்று எப்படிக் கருதமுடியும்?//

  அருமையான அலசல் உங்களது எழுத்து

  வாழ்த்துகள்

 8. நானும் திருப்பூர்தான் என்னுடைய கைபேசி எண் 90259 63391. அழையுங்கள் உங்கள் எழுத்துக்கள் உங்களுடன் பேச தூண்டுகின்றது.

  நன்றி

  தமிழ் உதயன்

 9. உமது கட்டுரைகளில் சிறிதளவேனும் மாறுபாடற்ற எனது உடன்பாடுகள். தெளிந்த குழப்பமற்ற சிந்தனைகள். சென்னை வந்தால் தங்களுடன் உரையாட விருப்பம். எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
  puthiyapaaamaran@gmail.com
  -புதிய பாமரன்.

 10. உங்கள் கட்டுரைகளை வினவில் தான் படித்து வந்தேன். உங்கள் வலைதளத்தை இன்றுதான் பார்த்தேன். ஆரம்பத்திலிருந்து இப்போதுதான் படித்து வருகிறேன். மிகவும் அருமை. தங்கத்தை பற்றிய கட்டுரை மிக நன்றாக இருந்தது.

 11. இணைய வாசிப்பில் நீங்கள் முக்கியமானவராகப் படுகிறீர்கள். இன்றுதான் முதன் முறை வருகிறேன்; தொடர்கிறேன்

  மிகுத்துச் செறிந்த வாஞ்சையுடன்,

 12. தங்களது விஸ்தாரமான எழுத்து நடை நன்று. உங்கள் எழுத்து பத்திரிகைகளில் வந்தால் இன்னும் நலம்.
  அல்லது வந்துவிட்டதா…?

  வாழ்த்துகள் நன்பரே!

 13. நான் உளவியல் துறை சார்ந்தவன்! திடீரென்று எப்படியோ உங்கள் வலைத் தளம் இப்போது தான் கண்டேன்! எங்கோ உங்கள் பெயரை கேள்விப் பட்ட நினைவு உண்டு. ‘மீனவர் பாண்டியன் படுகொலை’ கட்டுரை..அப்படியே எனது (பல நல்லவர்களின் )மன நிலையைப் பிரதி பலித்து உள்ளீர்கள்! வளமான எழுத்துக்கள். நான் அத்தகைய புலமை உடையவன் அல்லன். மிகுந்த மகிழ்ச்சி. மீண்டும் உங்கள் வலைத் தளம் அடிக்கடி வருவேன்!
  visit my web site: http://www.yozenmind.com My blog http://www.yozenbalki.blogspot.com http://www.yozenmind.blogspot.com

 14. வணக்கம்,நண்பரே இன்று தான் தங்கள் வலைதலத்திற்கு வந்தேன்.மிகச்சிறப்பான இடுகைகள் .

 15. “நல்லதை ஐரோப்பாவுக்கு அனுப்பிவிட்டு குப்பையை திருப்பூரில் கொட்டும் வேலை ”

  Excellent…..I really appreciate that quote for thirupur……….

 16. இடது சார்பு எழுத்தாளர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் தாங்கள் தான். பிறர் மனம் நோகாதபடி, மிக நாகரீகமாக நையாண்டி செய்கிறீர்கள். நிறைய எழுதவும். பொது மக்கள் ஊடகங்களிலும் முயற்சி செய்யவும். வாழ்த்துக்கள்

 17. ஒரு மாதகாலமாக அலைச்சல் அதிகமாக இருக்கிறது தோழர்.

  நேரம் கிடைத்து எழுத உட்கார்ந்தால் செய்தி பழசாகிவிடுகிறது. அல்லது வேறொரு கட்டுரை நான் திட்டமிட்ட பாணியில் வெளியாகிவிடுகிறது.

  அடிக்கடி ஏற்படும் பெரிய இடைவெளிகளுக்கு மன்னிக்கவும்.

  விரைவில் என் மூளையும் முதுகும் தொடர்ந்து கட்டுரை எழுத ஒத்துழைக்கும் என நம்புகிறேன்.

  உங்கள் தொடர்ச்சியான வாசிப்புக்கு நன்றி.

 18. வாழ்த்துகள் வில்லவன். ஆனந்த விகடனில் பார்த்து வந்தேன். சிறப்பு. தொடருங்கள். பகத்சிங், சூலூர்

 19. தற் செயலா தட்டுப் பட்டுது. படிச்சுப் பாத்தா பின்னி இருக்கிறீங்க நிறைய எதுகை மோனையோட கவர்ச்சியாக வாழ்த்தணும் எண்டு விருப்பம் ஆனால் உணர்ச்சி மேலீட்டால் சொற்கள் வர மறுக்கின்றன

  தொடர்ந்து வாசித்தபின் மீண்டும் புகழ்கிறேனே. ” நல்லா வருவடா” (நெல்லை கண்ணன் ஸ்டைலில் படிக்கவும் )

 20. Dear Villavan,
  I am inspired by your articles.
  Very interesting, deep thinking and well researched articles.
  I enjoy reading.

  Thank you for your time and efforts in writing.

  Regards
  Izzath
  Dubai
  UAE

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s