கலைஞானி கமல், தீவிரவாதத்தை கண்டு மனம் வெறுத்து அதை களைய எண்ணும் ஒரு சாமான்யனின் பாத்திரத்தில் நடித்திருப்பதாக சொன்னதாலும் நான் இந்தியில் வந்த ” புதன்கிழமை ” படத்தை நான் பார்க்காததாலும் உ.போ.ஒ படம் பார்க்க போனேன். அதற்கான எனது விமர்சனம்தான் மேலே உள்ள வரிகள்.
கதை எல்லோரும் அறிந்ததே, அதற்க்குள் நாம் போகவேண்டாம். ஆனால் அதில் அவர் சொல்லும் நீதி முட்டாள்தனமானது, அராஜகமானது. எப்படி தீவிரவாதம் உடனடியாக மக்களை கொல்லுகிறதோ அப்படியே தீவிரவாதத்தில் ஈடுபடுவோரும் கொல்லப்படவேண்டும் என்பதுதான் படம் சொல்லும் பச்சையான செய்தி. கொஞ்சம் நிதானமாக யோசனை செய்து பாருங்கள், இதே கருத்தைத்தான் மத வேறுபாடு இல்லாமல் எல்லா தீவிரவாதிகளும் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் ஏதோ ஒரு கோபத்தின் எதிர்வினை என்றுதான் அவர்கள் செயலுக்கும் ஒரு நியாயம் கற்பிக்கிறார்கள். ஒன்று இந்த கதையின் நாயகன் ஒரு வில்லனாக கருதப்படவேண்டும் இல்லவிட்டால் எல்லா தீவிரவாதிகளும் அவரளவில் ஒரு ஹீரோ என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும் ( படத்தில் வரும் வசனத்தைப்போல இதற்கும் பைனரியாகத்தான் பதில் சொல்ல முடியும் ).
சரி கமல் விரும்பி ஒரு படம் பண்ணும்போது அது அவர் விரும்பிய கருத்தைத்தான் கொண்டிருக்கும். அதில் நீ எப்படி தலையிடலாம் என்று கேட்கிறீர்களா? நியாயமான கருத்தாகத்தான் இருந்திருக்கும்., கமல்ஹாசன் ஒரு நடிகனாக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தால். தான் ஒரு முற்போக்குவாதி, மதச்சார்பற்றவர் என காட்டிக்கொள்கிற கமல்தான் நம்மை கேள்வி கேட்கத்தூண்டுகிறார். அதெப்படி சகல தீவிரவாத செயலையும் பட்டியல் போட்டு பேசிவிட்டு வெறுமனே இசுலாமிய தீவிரவாதிகளை மட்டும் கொல்வது காமன்மேன் செய்யும் காரியமா அல்லது ஸ்டுப்பிட்மேன் செய்யும் காரியாமா ?? ( ஒரு இந்துவை கூட கொல்லுகிறாரே என்று படத்தின் கதாநாயகனை போலவே சொல்லாதீர்கள், அந்த பாத்திரமும் மற்ற மூன்று தீவிரவாதிகளுக்கு உதவுபவராகத்தான் சித்தரிக்கப்படுகிறது).
வழக்கமான தமிழ் சினிமாக்களைபோல இந்தப்படமும் தீவிரவாதி என்பவன் முஸ்லீமாகத்தான் இருக்கமுடியும் என்பதை மறைமுகமாக பார்ப்பவர் மனதில் பதியவைக்கிறது. தன் மனைவியும் குழந்தையும் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டதை சொல்லும் காட்சியில் கூட அது அவன் மூன்றாவது மனைவி என குறிப்பிட்டு கலவரத்தின் வீரியத்தை குறைப்பதை எதேச்சையானது என்று எடுத்துக்கொள்ள முடியுமா ? ( ” அதான் மீதி ரெண்டு பொண்டாட்டி இருக்கே.” என்கிற வசனம் மூலம் இதை ஒரு நகைச்சுவைக் காட்சியாக கவனமாக நிறம் மாற்றுகிறார்கள் )
கமல் மற்ற தமிழ் படைப்பாளிகள் மாதிரி இந்து தீவிரவாத்தை முற்றிலும் புறக்கணிக்கவில்லை, ஆனால் அதை நாசூக்காக தொட்டுக்காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார். அதனால்தான் அவர் பாத்திரம் குஜராத் கலவரத்திற்க்கு கண்ணீர் மட்டும் வடிக்கிறது ஆனால் கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிக்கோ மரணதண்டனை வழங்குகிறது. இந்துத்துவா சக்திகளை விமர்சனம் செய்ய பயப்படும் இந்த சினிமாக்காரர்கள்தான் இஸ்லாமிய தீவிரவாதிகளை படத்திற்க்கு படம் துவைத்து காயப்போடுகிறார்கள், இதிலிருந்தே நாம் எந்த தீவிரவாதம் மிகவும் ஆபத்தானது என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம்.யாரேனும் இது ஒரு ரீமேக் படம்தானே என்று சொன்னால், மன்னிக்கவும் ஹிந்திக்காரன் கொடுத்ததை வாந்தி எடுக்க உலகநாயகன் தேவையில்லை. மேலும் எடுத்த வாந்தியை சுத்தம்தான் செய்ய வேண்டும்… அது உலகநாயகனுடையதாக இருந்தாலும்.
படத்தில் நாம் குறிப்பிட ஒரு விசயம் உண்டு. நாயகனால் கொல்லப்படும் ஒரு தீவிரவாதி சொல்வார் , பெஸ்ட் பேக்கரியில் என் மனைவியும் பிள்ளையும் கொல்லப்பட்டபோது எந்த சாமியும் வரவில்லை என்று. படத்தில் அது வெறும் கேள்வியாக மட்டுமே முடிந்துவிடுகிறது. உண்மையில் அந்த கேள்விக்கான நம்முடைய நியாயமான பதிலில்தான் தீவிரவாத்திற்கான தீர்வும் இருக்கிறது.
கலைஞானி கமல், தீவிரவாதத்தை கண்டு மனம் வெறுத்து அதை களைய எண்ணும் ஒரு சாமான்யனின் பாத்திரத்தில் நடித்திருப்பதாக சொன்னதாலும் நான் இந்தியில் வந்த ” புதன்கிழமை ” படத்தை நான் பார்க்காததாலும் உ.போ.ஒ படம் பார்க்க போனேன். அதற்கான எனது விமர்சனம்தான் மேலே உள்ள வரிகள். கதை எல்லோரும் அறிந்ததே, அதற்க்குள் நாம் போகவேண்டாம். ஆனால் அதில் அவர் சொல்லும் நீதி முட்டாள்தனமானது, அராஜகமானது. எப்படி தீவிரவாதம் உடனடியாக மக்களை கொல்லுகிறதோ அப்படியே தீவிரவாதத்தில் ஈடுபடுவோரும் கொல்லப்படவேண்டும் என்பதுதான் படம் சொல்லும் பச்சையான செய்தி. கொஞ்சம் நிதானமாக யோசனை செய்து பாருங்கள், இதே கருத்தைத்தான் மத வேறுபாடு இல்லாமல் எல்லா தீவிரவாதிகளும் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் ஏதோ ஒரு கோபத்தின் எதிர்வினை என்றுதான் அவர்கள் செயலுக்கும் ஒரு நியாயம் கற்பிக்கிறார்கள். ஒன்று இந்த கதையின் நாயகன் ஒரு வில்லனாக கருதப்படவேண்டும் இல்லவிட்டால் எல்லா தீவிரவாதிகளும் அவரளவில் ஒரு ஹீரோ என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும் ( படத்தில் வரும் வசனத்தைப்போல இதற்கும் பைனரியாகத்தான் பதில் சொல்ல முடியும் ). சரி கமல் விரும்பி ஒரு படம் பண்ணும்போது அது அவர் விரும்பிய கருத்தைத்தான் கொண்டிருக்கும். அதில் நீ எப்படி தலையிடலாம் என்று கேட்கிறீர்களா? நியாயமான கருத்தாகத்தான் இருந்திருக்கும்., கமல்ஹாசன் ஒரு நடிகனாக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தால். தான் ஒரு முற்போக்குவாதி, மதச்சார்பற்றவர் என காட்டிக்கொள்கிற கமல்தான் நம்மை கேள்வி கேட்கத்தூண்டுகிறார். அதெப்படி சகல தீவிரவாத செயலையும் பட்டியல் போட்டு பேசிவிட்டு வெறுமனே இசுலாமிய தீவிரவாதிகளை மட்டும் கொல்வது காமன்மேன் செய்யும் காரியமா அல்லது ஸ்டுப்பிட்மேன் செய்யும் காரியாமா ?? ( ஒரு இந்துவை கூட கொல்லுகிறாரே என்று படத்தின் கதாநாயகனை போலவே சொல்லாதீர்கள், அந்த பாத்திரமும் மற்ற மூன்று தீவிரவாதிகளுக்கு உதவுபவராகத்தான் சித்தரிக்கப்படுகிறது). வழக்கமான தமிழ் சினிமாக்களைபோல இந்தப்படமும் தீவிரவாதி என்பவன் முஸ்லீமாகத்தான் இருக்கமுடியும் என்பதை மறைமுகமாக பார்ப்பவர் மனதில் பதியவைக்கிறது. தன் மனைவியும் குழந்தையும் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டதை சொல்லும் காட்சியில் கூட அது அவன் மூன்றாவது மனைவி என குறிப்பிட்டு கலவரத்தின் வீரியத்தை குறைப்பதை எதேச்சையானது என்று எடுத்துக்கொள்ள முடியுமா ? ( ” அதான் மீதி ரெண்டு பொண்டாட்டி இருக்கே.” என்கிற வசனம் மூலம் இதை ஒரு நகைச்சுவைக் காட்சியாக கவனமாக நிறம் மாற்றுகிறார்கள் ) கமல் மற்ற தமிழ் படைப்பாளிகள் மாதிரி இந்து தீவிரவாத்தை முற்றிலும் புறக்கணிக்கவில்லை, ஆனால் அதை நாசூக்காக தொட்டுக்காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார். அதனால்தான் அவர் பாத்திரம் குஜராத் கலவரத்திற்க்கு கண்ணீர் மட்டும் வடிக்கிறது ஆனால் கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிக்கோ மரணதண்டனை வழங்குகிறது. இந்துத்துவா சக்திகளை விமர்சனம் செய்ய பயப்படும் இந்த சினிமாக்காரர்கள்தான் இஸ்லாமிய தீவிரவாதிகளை படத்திற்க்கு படம் துவைத்து காயப்போடுகிறார்கள், இதிலிருந்தே நாம் எந்த தீவிரவாதம் மிகவும் ஆபத்தானது என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம்.யாரேனும் இது ஒரு ரீமேக் படம்தானே என்று சொன்னால், மன்னிக்கவும் ஹிந்திக்காரன் கொடுத்ததை வாந்தி எடுக்க உலகநாயகன் தேவையில்லை. மேலும் எடுத்த வாந்தியை சுத்தம்தான் செய்ய வேண்டும்… அது உலகநாயகனுடையதாக இருந்தாலும். படத்தில் நாம் குறிப்பிட ஒரு விசயம் உண்டு. நாயகனால் கொல்லப்படும் ஒரு தீவிரவாதி சொல்வார் , பெஸ்ட் பேக்கரியில் என் மனைவியும் பிள்ளையும் கொல்லப்பட்டபோது எந்த சாமியும் வரவில்லை என்று. படத்தில் அது வெறும் கேள்வியாக மட்டுமே முடிந்துவிடுகிறது. உண்மையில் அந்த கேள்விக்கான நம்முடைய நியாயமான பதிலில்தான் தீவிரவாத்திற்கான தீர்வும் இருக்கிறது.
கதை எல்லோரும் அறிந்ததே, அதற்க்குள் நாம் போகவேண்டாம். ஆனால் அதில் அவர் சொல்லும் நீதி முட்டாள்தனமானது, அராஜகமானது. எப்படி தீவிரவாதம் உடனடியாக மக்களை கொல்லுகிறதோ அப்படியே தீவிரவாதத்தில் ஈடுபடுவோரும் கொல்லப்படவேண்டும் என்பதுதான் படம் சொல்லும் பச்சையான செய்தி. கொஞ்சம் நிதானமாக யோசனை செய்து பாருங்கள், இதே கருத்தைத்தான் மத வேறுபாடு இல்லாமல் எல்லா தீவிரவாதிகளும் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் ஏதோ ஒரு கோபத்தின் எதிர்வினை என்றுதான் அவர்கள் செயலுக்கும் ஒரு நியாயம் கற்பிக்கிறார்கள். ஒன்று இந்த கதையின் நாயகன் ஒரு வில்லனாக கருதப்படவேண்டும் இல்லவிட்டால் எல்லா தீவிரவாதிகளும் அவரளவில் ஒரு ஹீரோ என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும் ( படத்தில் வரும் வசனத்தைப்போல இதற்கும் பைனரியாகத்தான் பதில் சொல்ல முடியும் ).
சரி கமல் விரும்பி ஒரு படம் பண்ணும்போது அது அவர் விரும்பிய கருத்தைத்தான் கொண்டிருக்கும். அதில் நீ எப்படி தலையிடலாம் என்று கேட்கிறீர்களா? நியாயமான கருத்தாகத்தான் இருந்திருக்கும்., கமல்ஹாசன் ஒரு நடிகனாக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தால். தான் ஒரு முற்போக்குவாதி, மதச்சார்பற்றவர் என காட்டிக்கொள்கிற கமல்தான் நம்மை கேள்வி கேட்கத்தூண்டுகிறார். அதெப்படி சகல தீவிரவாத செயலையும் பட்டியல் போட்டு பேசிவிட்டு வெறுமனே இசுலாமிய தீவிரவாதிகளை மட்டும் கொல்வது காமன்மேன் செய்யும் காரியமா அல்லது ஸ்டுப்பிட்மேன் செய்யும் காரியாமா ?? ( ஒரு இந்துவை கூட கொல்லுகிறாரே என்று படத்தின் கதாநாயகனை போலவே சொல்லாதீர்கள், அந்த பாத்திரமும் மற்ற மூன்று தீவிரவாதிகளுக்கு உதவுபவராகத்தான் சித்தரிக்கப்படுகிறது).
வழக்கமான தமிழ் சினிமாக்களைபோல இந்தப்படமும் தீவிரவாதி என்பவன் முஸ்லீமாகத்தான் இருக்கமுடியும் என்பதை மறைமுகமாக பார்ப்பவர் மனதில் பதியவைக்கிறது. தன் மனைவியும் குழந்தையும் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டதை சொல்லும் காட்சியில் கூட அது அவன் மூன்றாவது மனைவி என குறிப்பிட்டு கலவரத்தின் வீரியத்தை குறைப்பதை எதேச்சையானது என்று எடுத்துக்கொள்ள முடியுமா ? ( ” அதான் மீதி ரெண்டு பொண்டாட்டி இருக்கே.” என்கிற வசனம் மூலம் இதை ஒரு நகைச்சுவைக் காட்சியாக கவனமாக நிறம் மாற்றுகிறார்கள் )
கமல் மற்ற தமிழ் படைப்பாளிகள் மாதிரி இந்து தீவிரவாத்தை முற்றிலும் புறக்கணிக்கவில்லை, ஆனால் அதை நாசூக்காக தொட்டுக்காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார். அதனால்தான் அவர் பாத்திரம் குஜராத் கலவரத்திற்க்கு கண்ணீர் மட்டும் வடிக்கிறது ஆனால் கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிக்கோ மரணதண்டனை வழங்குகிறது. இந்துத்துவா சக்திகளை விமர்சனம் செய்ய பயப்படும் இந்த சினிமாக்காரர்கள்தான் இஸ்லாமிய தீவிரவாதிகளை படத்திற்க்கு படம் துவைத்து காயப்போடுகிறார்கள், இதிலிருந்தே நாம் எந்த தீவிரவாதம் மிகவும் ஆபத்தானது என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம்.யாரேனும் இது ஒரு ரீமேக் படம்தானே என்று சொன்னால், மன்னிக்கவும் ஹிந்திக்காரன் கொடுத்ததை வாந்தி எடுக்க உலகநாயகன் தேவையில்லை. மேலும் எடுத்த வாந்தியை சுத்தம்தான் செய்ய வேண்டும்… அது உலகநாயகனுடையதாக இருந்தாலும்.
படத்தில் நாம் குறிப்பிட ஒரு விசயம் உண்டு. நாயகனால் கொல்லப்படும் ஒரு தீவிரவாதி சொல்வார் , பெஸ்ட் பேக்கரியில் என் மனைவியும் பிள்ளையும் கொல்லப்பட்டபோது எந்த சாமியும் வரவில்லை என்று. படத்தில் அது வெறும் கேள்வியாக மட்டுமே முடிந்துவிடுகிறது. உண்மையில் அந்த கேள்விக்கான நம்முடைய நியாயமான பதிலில்தான் தீவிரவாத்திற்கான தீர்வும் இருக்கிறதுகலைஞானி கமல், தீவிரவாதத்தை கண்டு மனம் வெறுத்து அதை களைய எண்ணும் ஒரு சாமான்யனின் பாத்திரத்தில் நடித்திருப்பதாக சொன்னதாலும் நான் இந்தியில் வந்த ” புதன்கிழமை ” படத்தை நான் பார்க்காததாலும் உ.போ.ஒ படம் பார்க்க போனேன். அதற்கான எனது விமர்சனம்தான் மேலே உள்ள வரிகள்.
கதை எல்லோரும் அறிந்ததே, அதற்க்குள் நாம் போகவேண்டாம். ஆனால் அதில் அவர் சொல்லும் நீதி முட்டாள்தனமானது, அராஜகமானது. எப்படி தீவிரவாதம் உடனடியாக மக்களை கொல்லுகிறதோ அப்படியே தீவிரவாதத்தில் ஈடுபடுவோரும் கொல்லப்படவேண்டும் என்பதுதான் படம் சொல்லும் பச்சையான செய்தி. கொஞ்சம் நிதானமாக யோசனை செய்து பாருங்கள், இதே கருத்தைத்தான் மத வேறுபாடு இல்லாமல் எல்லா தீவிரவாதிகளும் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் ஏதோ ஒரு கோபத்தின் எதிர்வினை என்றுதான் அவர்கள் செயலுக்கும் ஒரு நியாயம் கற்பிக்கிறார்கள். ஒன்று இந்த கதையின் நாயகன் ஒரு வில்லனாக கருதப்படவேண்டும் இல்லவிட்டால் எல்லா தீவிரவாதிகளும் அவரளவில் ஒரு ஹீரோ என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும் ( படத்தில் வரும் வசனத்தைப்போல இதற்கும் பைனரியாகத்தான் பதில் சொல்ல முடியும் ).
சரி கமல் விரும்பி ஒரு படம் பண்ணும்போது அது அவர் விரும்பிய கருத்தைத்தான் கொண்டிருக்கும். அதில் நீ எப்படி தலையிடலாம் என்று கேட்கிறீர்களா? நியாயமான கருத்தாகத்தான் இருந்திருக்கும்., கமல்ஹாசன் ஒரு நடிகனாக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தால். தான் ஒரு முற்போக்குவாதி, மதச்சார்பற்றவர் என காட்டிக்கொள்கிற கமல்தான் நம்மை கேள்வி கேட்கத்தூண்டுகிறார். அதெப்படி சகல தீவிரவாத செயலையும் பட்டியல் போட்டு பேசிவிட்டு வெறுமனே இசுலாமிய தீவிரவாதிகளை மட்டும் கொல்வது காமன்மேன் செய்யும் காரியமா அல்லது ஸ்டுப்பிட்மேன் செய்யும் காரியாமா ?? ( ஒரு இந்துவை கூட கொல்லுகிறாரே என்று படத்தின் கதாநாயகனை போலவே சொல்லாதீர்கள், அந்த பாத்திரமும் மற்ற மூன்று தீவிரவாதிகளுக்கு உதவுபவராகத்தான் சித்தரிக்கப்படுகிறது).
வழக்கமான தமிழ் சினிமாக்களைபோல இந்தப்படமும் தீவிரவாதி என்பவன் முஸ்லீமாகத்தான் இருக்கமுடியும் என்பதை மறைமுகமாக பார்ப்பவர் மனதில் பதியவைக்கிறது. தன் மனைவியும் குழந்தையும் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டதை சொல்லும் காட்சியில் கூட அது அவன் மூன்றாவது மனைவி என குறிப்பிட்டு கலவரத்தின் வீரியத்தை குறைப்பதை எதேச்சையானது என்று எடுத்துக்கொள்ள முடியுமா ? ( ” அதான் மீதி ரெண்டு பொண்டாட்டி இருக்கே.” என்கிற வசனம் மூலம் இதை ஒரு நகைச்சுவைக் காட்சியாக கவனமாக நிறம் மாற்றுகிறார்கள் )
கமல் மற்ற தமிழ் படைப்பாளிகள் மாதிரி இந்து தீவிரவாத்தை முற்றிலும் புறக்கணிக்கவில்லை, ஆனால் அதை நாசூக்காக தொட்டுக்காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார். அதனால்தான் அவர் பாத்திரம் குஜராத் கலவரத்திற்க்கு கண்ணீர் மட்டும் வடிக்கிறது ஆனால் கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிக்கோ மரணதண்டனை வழங்குகிறது. இந்துத்துவா சக்திகளை விமர்சனம் செய்ய பயப்படும் இந்த சினிமாக்காரர்கள்தான் இஸ்லாமிய தீவிரவாதிகளை படத்திற்க்கு படம் துவைத்து காயப்போடுகிறார்கள், இதிலிருந்தே நாம் எந்த தீவிரவாதம் மிகவும் ஆபத்தானது என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம்.யாரேனும் இது ஒரு ரீமேக் படம்தானே என்று சொன்னால், மன்னிக்கவும் ஹிந்திக்காரன் கொடுத்ததை வாந்தி எடுக்க உலகநாயகன் தேவையில்லை. மேலும் எடுத்த வாந்தியை சுத்தம்தான் செய்ய வேண்டும்… அது உலகநாயகனுடையதாக இருந்தாலும்.
படத்தில் நாம் குறிப்பிட ஒரு விசயம் உண்டு. நாயகனால் கொல்லப்படும் ஒரு தீவிரவாதி சொல்வார் , பெஸ்ட் பேக்கரியில் என் மனைவியும் பிள்ளையும் கொல்லப்பட்டபோது எந்த சாமியும் வரவில்லை என்று. படத்தில் அது வெறும் கேள்வியாக மட்டுமே முடிந்துவிடுகிறது. உண்மையில் அந்த கேள்விக்கான நம்முடைய நியாயமான பதிலில்தான் தீவிரவாத்திற்கான தீர்வும் இருக்கிறது.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...